Tuesday 26 April 2011

எலி மருந்து



வீட்ல கொஞ்ச நாளா வீட்ல எலித்தொல்லை ஜாஸ்தியாயிடுச்சு (உன் தொல்லையை விடவுமா? ) . எலி அடிக்கிறதும் நமக்கு நமக்கு Set ஆகாது. (புலி அடிக்கிரவனுக்கு எலி அடிக்க சொன்னா?)  ஏன்னா? நமக்கு குழந்தை மனசு!!!!! எலித்தொல்லைக்கு முடிவு கட்ட என்ன பண்ணலாம்’னு யோசித்த வேலை, ஒரு புண்ணியவான் ‘ரன் ரெட் (Run Rat)னு ஒரு எலி மருந்து இருக்கு, அதை எலிக்கு வச்சா, சாப்பிட்ட உடனேயே செத்துப் போயிரும்’னு ஒரு ஐடியா குடுக்க, அதை வாங்க நானும் ஒரு கடைக்கு போனேன்.

நான் : அய்யா!!  Run Rat இருக்கா?

கடைக்காரர்: ஆமா தம்பி, இங்கிலாந்து 30 ஓவர்’ல 200 ரன், 4 விக்கட் போயிடுச்சு...

என்னது? இங்கிலாந்து, 30 ஓவர், 4 விக்கட்’ஆ...  ஆஹா!!! Run Ratஐயும் run Rate'ஐயும் போட்டு குழப்பிட்டாரே!!!! மறுபடியும் முயற்ச்சிக்கலாம்’னு நினைத்து,

 நான்: இல்லங்க....  RUN RAT?????

கடைக்காரர்: என்னது? இலங்கை RAN RATE'ஆ? (ஆஹா!!! அதே வட்டதுக்குள்ளேயே   இருக்கானே இந்த ஆளு) தம்பி, இலங்கை விளையாடிய போட்டி நேற்றே முடிஞ்ச்சு. (ரொம்ப முக்கியம்) விவரம் தெரியாத பையனா இருக்கியே!!!! (இது வேறயா? இந்த அவமானம் உனக்கு தேவையா?)

இவர் தொல்லைய விட, எலித்தொல்லையே பரவாயில்லை போல இருந்துச்சு. அப்படியே வீடுக்கு நடயை காட்டினேன்.

டவுட்டு: மனிதன் மருந்து சாப்பிட்டா பிழைத்துக் கொள்கிறான், எலி மருந்து சாப்பிட்டா செத்து போயிடுது. ஏன்?




Wednesday 20 April 2011

ஊர்க் கோப்பை - இது உலகக் கோப்பைக்கு Equal'ஆன நம்ம ஊர் கிரிக்கட் பகுதி 3

முன்னைய பதிவு பதிவு1, 2



எதிரணி 4 ஓவரில் (ஒரு ஓவரில் நான்கு பந்துகள் மாத்திரமே) அடித்த ஓட்ட எண்ணிக்கை 36. அதுல நம்ம Account’ இருந்து 20 ரன்கள்..ஹிஹி…..

நம்ம ஆளுங்க ரொம்ப திறமையான ஆளுங்கதான். ஆனாலும் விதி விளையாடிடுச்சு. எதிரணி பசங்க சின்ன ஆளுங்க, மைதானத்துல எந்த எடத்துல எவன் இருக்கான்னு புரியவே இல்லை. எங்கு பந்தை அடித்து விட்டு, ஓட்டம் எடுக்க முயற்சித்தாலும் அங்கிருந்து ஒருத்தன் பந்தை எடுத்து வீசி, ஆட்டமிழக்க செய்து, நம்மாளுங்களை பார்சல் பண்ணிக் கொண்டிருந்தானுங்க. கிரிக்கட்’லயும் கொரில்லாதாக்குதல் நடத்தினானுங்க..  கடைசியாக எது நடக்க கூடாதுன்னு நான் நினைத்தேனோ, அது நடந்து விட்டது. ஆம். நான் துடுப்பெடுத்தாட வேண்டிய தருணம்……
நன்றி பவன் (எரியாத சுவடிகள்)

கடைசி ஓவர், 4 பந்துகளில் 12 ரன்கள் எடுக்க வேண்டும், நான் கேப்டனிடம்மச்சி, 4 பந்துல எப்பிடிய்யா 12 ரன்கள் எடுக்குறது?னு கேற்க, ரொம்ப கடுப்பில் இருந்தவன்நீ 4 பந்துல 20 ரன்கள் குடுக்கலையா? அது போலதான்னு கத்த, மறுபடி என் மானம், மரியாதை கப்பலேற்றப் பட்டது.
ஒரு மேட்டர் இறங்க முன்னாடி 10, 000 தடவை யோசிக்கனும், இறங்கிட்டா, ஒரு தடவை கூட யோசிக்க கூடாதுனு முடிவெடுத்து களத்தில் ஏறினேன்.

முதல் பந்து
பந்து என் பக்கமாகவே வரஆஹாஇந்த பந்தை வாண்டட் வைட்(Wide) வேண்டியதுதான்னு நானும் கொஞ்சம் முன்னாடி நகர, அந்த பந்துல என்ன மாயம் பண்ணினானோ? அது என்னை cross பண்ணி, எனக்கு முன்னாடி போயிடுச்சு.
முதல் பந்தே ரொம்ப கேவலமா முகம் கொடுத்ததில், என் பேட்டிங் திறமை எதிரணிக்கு நன்கு விளங்கிவிட்டது.

இரண்டாம் பந்து
இந்த பந்தை ஆறு ரன்கள் ஆக்கியே ஆக வேண்டும் என்ற வெறியில் துடுப்பை முடியுமான அளவு சுழற்றியதில் பந்து எல்லையை தாண்டி இருக்க வேண்டும், ஆனால் துடுப்பில் படலையே!!!!

மூன்றாம் பந்து
இந்த பந்து துடுப்புல பட்டாலே பெரிய விசயம் என்றெண்ணி, வருகின்ற பந்துக்கு துடுப்பை காட்ட, அது எனக்கு ரொம்ப பக்கதுல இருந்தவன் கையில விழ, விடுவானா அவன்?

நான்காம் பந்து
ஹி..ஹிமூன்றாம் பந்துடனேயே, மேட்ச் முடிஞ்சுடுச்சு……
இப்படியே கூட்டத்துக்குள் நுழைந்த்தால், பல முட்டைகள், தக்காளிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வருமென்பதால் மைதானத்தின் பிற் பகுதியில் உள்ள புதருக்குள் ஓடி ஒளிய வேண்டியதாயிடுச்சு

நன்றி பவன் (எரியாத சுவடிகள்)
.

மேட்ச் முடிவில் கேட்கப்பட்ட கேள்விகளும், நான் கொடுத்த பதில்களும்

ஏன்யா? ஒரு ரன் கூட எடுக்க முடியலயா?
ஒரு ரன் எடுக்கத்தான் வைட்(wide) விடலாம்’னு பார்த்தேன். ஜஸ்டு மிஸ்ஸு…. (ஆத்தீ கல்லை தூக்குறானே!!!)

ஊரே கூடி பார்க்கும் போது மானத்தை வாங்கிட்டியே!!!
ஆமா!!! ஊரே கூடி பார்த்துடு இருந்த்தா எப்படிய்யா விளையாடுரது? நாம தோட்டதுகுள்ள கிரிக்கட் விளையாடும் போது யாரும் பார்த்து இருக்காங்களா?
மைதானத்துல நிழலுக்கு கூட ஒரு மரம் இல்லை. நம்ம மைதானத்துல, batsman'க்கு ஒன்னு பந்து வீசுரவனுக்கு ஒன்னு, பந்து பொறுக்குறவன் கூட ஒவ்வொரு மரத்து நிழலுல, எவ்வளவு COOl’ஆ சூப்பரா விளையாடுவோம். மைதானமாய்யா இது? (மறுபடி கல்லை தூக்கிறுவானோ!!!)

COVER DRIVE’ல அடிக்க சொன்னேனே!!! ஏன்யா அடிக்கல?
ஆமா!!!! COVER DRIVE, COVER DRIVE’னு பல முறை சொன்னியே!! அப்படின்னா என்ன’னு ஒரு முறையாலும் சொன்னியா?
நம்ம மைதானத்துல, ”நேரா அடிச்சா ஆறு, பக்கது தோட்டதுக்குள்ள அடிச்சா ரன் கிடையாது, பலா மரம் இரண்டுக்கும் நடுவுல அடிச்சா 2 ரன், பந்து காட்டுல விழுந்து காணாமல் போனா ஆள் அவுட்டு” இதுதான்யா எனக்கு தெரியும். இத விட்டுடு புதுசு புதுசா ஏதாச்சும் சொன்னா எனக்கு என்னையா தெரியும்?

இதுக்கு பிறகும் அந்த இடத்தில் இருப்பது நம் உடல் நலத்துக்கு ஆகாது என்பதால்…… ESCAPE…..

Saturday 16 April 2011

ஊர்க் கோப்பை - இது உலகக் கோப்பைக்கு Equal'ஆன நம்ம ஊர் கிரிக்கட் பகுதி 2

இந்த சதிவலையில் நான் எப்படி சிக்கினேன் என்ற சோகக் கதையை அறிய இங்கே கிளிக்கவும்.



போட்டி ஆரம்பம் ஆனது. நேரம் பற்றாக்குறையால் 4 ஓவர் போட்டியில் ஒவ்வொரு ஓவரிலும் 4 பந்துகளே வீசப்படும் என் முடிவு செய்யப்பட்டது. நமக்கு அந்த கவலையே இல்லாததால், ஒரு ஓரமாக பந்து வராத ஏரியாவுல போய் செட்டில் ஆகியாச்சு. (அப்போ, நீ விக்கட் காப்பாளரா?)

நன்றி பவன் (எரியாத சுவடிகள்)


இரண்டு ஓவர் முடிந்தது. எதிரணியினர்,  சின்ன பசங்க என்று சொல்ல முடியாத அளவுக்கு சுமாராக ரன்கள் சேர்த்திருந்தார்கள். அப்போதுதான் என் நன்பனும், நம் அணியின் கேப்டன், அந்த துரோகத்தை செய்தான். அது எனக்கு மட்டுமில்லை, நம் அணிக்கே செய்த துரோகம். ஆம்....... பந்து வீச சொல்லி, என் கையில் பந்தை தந்துவிட்டான். (spot Fixing என்பது இதுதானா?) முழு ஊரே திரண்டு வந்து பார்த்துக் கொண்டிருப்பதால் முடியாதுடா’னு கதறி அழ முடியாத நிலை. எவ்வளவோ சைலண்ட்’ஆ சொல்லிப் பார்த்தேன். முடியல......
நன்றி பவன் (எரியாத சுவடிகள்)

சரி... நாமளும் ஒரு ஓவர போட்டு பாப்போமே!!!! என்ன நடக்க போகுது? ஸ்ரீசாந்த்’ஏ தன்னை பந்து வீச்சாளர்’னு சொல்லிக் கொல்லும் போதும்,விக்கட் வீழ்த்தும் போதும், நமக்கு முடியாதா? அப்பிடின்னு பந்தை கையில் வாங்கியாச்சு...

முதல் பந்து...
சின்ன பயதானே!!! என்ன அடிக்க போரான்னு..... மெதுவா போட்டேன். விட்டான் பாரு ஒரு சிக்ஸர். (அதை விட பெரிய ரன் இல்லையே!!!!)
(வாழ்க்கை’னா இரு சில அடிகள் விழத்தானே செய்யும். அடுத்த பந்துல உன்னை கவனிக்கிறேண்டீ....)

இரண்டாம் பந்து
கொஞ்சம் பில்ட் அப் காட்டினா, பய புல்ல பயந்துராலாம்’னு ஒரு குருட்டு நம்பிக்கை’ல மைதானத்தில் எல்லை வரை சென்று வேகமாக ஓடி வந்ததுல, பந்து வீச வேண்டிய இடம் வரும் போது ஏற்பட்ட களைப்புல பந்து ரொம்ப மெதுவாகவே வீச வேண்டியதாகிடுச்சு...
விட்டான் பாரு ஒன்னு...... கடவுள் புண்ணியத்துல வெறும் நான்கு மாத்திரம்தான் (தூ....) போச்சு...
நன்றி பவன் (எரியாத சுவடிகள்)

மூன்றாம் பந்து..
இது முந்தியவை போல் விபரீதம் ஆகி விடக் கூடாது என்பதால் ரொம்ப திட்ட மிட்டு, போட்டேன் பாருங்க ஒரு பால்...... துடுப்புடன் பந்தை எதிர் கொள்ள இருந்த பையன் சடார்’னு விலகிட்டான்.
அந்த பயம்!!!’னு ஒரு லுக்கு விட்டுடு தில்’லா திரும்பினா, நடுவர் சோளக் காட்டு பொம்மை போல கைகள் இரண்டையும் ”பெப்பெர்பே”’னு விரிச்சு வெச்சிட்டு இருக்காரு.... என்னா’னு கேட்டா அது அகலப் பந்து’ங்குறாரு.... ஆஹா... இதுக்குதான் பயபுள்ள ஒதுங்கி வழிவிட்டானா?
அதே போல இன்னுமொன்று......இன்னுமொன்று....
மொத்தம் 3 அகலப் பந்து தொடர்ந்து போட்டாச்சு.....
அப்புறம், ஒரு மாதிரி ஒருபந்து (தவறுதலாக) நேராக போக, அது தவறுதலா துடுப்புல எங்கயோ பட்டு, விக்கட் காப்பாளர் கையில் விழ, ஐ!!!! நாமளும் ஒரு விக்கட் எடுத்தாச்சு....

நான்காம் பந்து
இன்னொரு அகலப் பந்து.....
கடைசிப்பந்து, இதை எப்படியாலும் போட்டு, ஓவர முடிச்சுர வேண்டியதுதான்னு, போட்டால். வழமை போல, ஈவு இரக்கம் இல்லாமல் விட்டான் பாருங்க... பந்து தாழ்வாக நான்கு ரன்களை நோக்கி பறத்து கொண்டிருக்க,நம்ம ஆளு ஒருத்தன்,  கேட்ச் பிடிக்கிறேன் பாரு’னு கையை போட, பந்து அவன் கையில் பட்டு ஆறு ஓட்டமாகிடுச்சு.....

ஒரே ஓவர்.. வெறும் நான்கு பந்து.... 20 ரன்கள்......

நாம் குடுத்த பதிலடி.....அடுத்த பதிவில்.......






Thursday 7 April 2011

ஊர்க் கோப்பை - இது உலகக் கோப்பைக்கு Equal'ஆன நம்ம ஊர் கிரிக்கட் பகுதி 1


 அன்று ஒரு பிரபல பதிவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, (அவரு உன் கூட பேசினாரா?) எப்படி பிரபலமாகலாம்’னு கேட்க, (நல்லா... போர்த்தி தூங்கினால் கனவுல ஆகலாம்) அந்த சீசன்’ல எந்த மேட்டர் சூடாக இருக்கோ, அதை பற்றி எழுதுப்பா’ன்னு சொன்னாரு. (எரிமலையை பற்றி எழுதலாமே!!!)  நானும் ஏதாவது சூடா கிடைக்காதா’ன்னு தேடிக் கொண்டு இருந்தப் போ, (ஆயா கடைக்கு போயிருந்தா, சூடா பாயா கெடச்சிருக்கும்ல..) வந்திச்சீ பாருங்க உலகக் கோப்பை. (நீ தேடாவிட்டாலும் உலகக் கோப்பை வந்திருக்கும்பா) விடுவோமா நாங்க?????? நாமளும் நம்ம அனுபவத்தை எழுதி, கொமண்ட்ஸ், ஓட்டும் கொட்டோ கொட்டுனு கொட்ட, ஒரெ ராத்திரில பிரிபல பதிவர் ஆகிரலாம்’னு (வழமை போல 6 ஓட்டு மட்டுமே விழுந்தா?) முடிவு பண்ணி களத்தில் இறங்கியாச்சு.... (களம் எவ்வளவு ஆழம் என்றெல்லாம் கேட்க கூடாது)

உலகத்துல உள்ள முக்கியமான கிரிக்கட் அணியெல்லாம் விளையாடினா, அது ”உலகக் கோப்பை” ( கனடாவெல்லாம் முக்கியமான அணியா?னு கேக்க கூடாது.... சொல்லிபுட்டேன்). ஊர்ல உள்ள முக்கியமில்லாத பசங்கலெல்லாம் ஒன்னு கூடி விளையாடினால், அது ”ஊர் கோப்பை”.
(ஐ!!!!! தலைப்புக்கு லாஜிக்’கா விளக்கம் குடுத்தாச்சு......)


நன்றி பவன் (எரியாத சுவடிகள்)
ஒவ்வொரு வருடமும் பெருநாள் முடிய நம்ம ஊருல, கிரிக்கட் போட்டி நடக்கும். நாம எப்பவுமே கம்யூட்டர் கேம்’ல சொந்த அணி உருவாக்கி அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா’னு பெரிய பெரிய அணியெல்லாம் மண் கவ்வ வைக்கிறதுல கில்லாடி ஆச்சே!!! அதனால இதை போல சின்ன போட்டிக்கு போவது கிடையாது. (கூப்பிட்டாதானே போகனும்!!!). 

சுமார் 3 வருசதுக்கு முன்னாடி, கிரிக்கட் போட்டி நடந்து கொண்டிருந்த சமையம் அந்த ஏரியாக்கு போக வேண்டியதாகி விட்டது. (ஏதாவது ஃப்ரீயா குடுத்திருப்பாங்களோ!!!) போட்டி அதன் போக்கில் நடந்து கொண்டிருக்க, நாமளும் நம்ம நன்பர்களோடு ,மொக்கை போட்டுக் கொண்டிருந்தோம். அந்த நேரம் பார்த்து, ஒருத்தனுக்கு ஒரு விபரீத ஆசை மனதில் முலைத்து விட்டது. நாமளும் ஒரு அணி உருவாக்கி விளையாடலாமே’ன்னு (உன் மொக்கை தாங்க முடியாம இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பான்..) ஒரு பிட்டு போட, எல்லோரும் தயாராகிட்டானுங்க..

நமக்கு எதுக்கு பொல்லாப்பு, நாம நழுவிடலாம்’னு பார்த்தா, ஒரே அமுக்கா அமுக்கி நம்மளையும் அணியில் சேர்த்துட்டானுங்க. ( ஹி ஹி.... சொந்த செலவுல சூனியம் வெச்சிருக்கானுங்க..). வேணாம்’யா எதுக்குப்பா, இந்த வில்லங்கம்’னு கெஞ்சினேன், கதறினேன். விதியை யாரால் மாற்ற முடியும்? ஆனாலும், எவ்வளவு அடி வாங்கினாலும் நாம பாதுகாப்பாக இருக்கனும் என்பதற்காக ஒரு கண்டிஷன் போட்டேன். அது,  “நான் கடைசியாகத்தான் பெட் பண்ணுவேன். (ஆனாலும் ஓட்டம் எடுக்க மாட்டேன்) பந்து வீச மாட்டேன். (கேட்டாலும், எவனும் குடுக்க மாட்டானுள்ள...) (இது அவனுங்க போட்ட கண்டிஷன்’ஆ இருக்குமோ)


நன்றி பவன் (எரியாத சுவடிகள்)

அப்போ, கொஞ்சம் திருப்தியான ஒரு செய்தி கிடைத்தது, நாம விளையாட வேண்டியது, மொத்த அணிகளிலும் இருந்த சின்ன பசங்க & பலவீனமான அணியுடன். ( அதிர் அணியும் இதையேதான் சொல்லுதுப்பா...) அப்பாடா’னு ஒரு பெருமூச்சு விட்டேன்.

டாஸ் ( Toss)  போட போய் வந்த நம்ம அணியின் கேப்டன் “ நாம டாஸ்’ல தோற்று போய் விட்டோம்டா’னு சொல்ல, ப்ப்ப்பூ.... க்ரிக்கெட்’ன்றது இவ்ளோதானா? நாம தோற்று விட்டோமுள்ள... நான் கிளம்பவா’னு போக பார்க்க, மறுபடியும் விட்ட பாடில்லை. (எதிர் அணியிடம் பணம் வாங்கியிருப்பானுங்களோ!!!)

எதிரணி முதலில் துடுப்பெடுத்தாட களம் ஏற நாமளும் feilding பண்ண களம் ஏறினோம் (மைதானம் மேட்டில் இருந்ததால், களம் இறங்காமல் ஏற வேண்டியதாகிவிட்டது)

அனல் பறக்கும் ஒரு போட்டி அடுத்த பதிவில்.................

Tuesday 5 April 2011

பிட் புகைப் பட போட்டி - ஏப்ரல் மாதம்

இந்த மாத பிட் புகைப்பட போட்டியின் தலைப்பு, “சிவப்பு”. என்னிடம் இருந்த சிவப்பு நிறம் சார்ந்த போட்டோக்களை போட்டிருக்கிறேன். உங்கள் கருத்துகளையும் தெரிவுகளையும் எதிர் பார்க்கிறேன்.


1. மஸ்ஜிதுல் கிப்லதைன். சவூதி அரேபியா.

2. என் பழைய வேலைத் தளம். - அபூதாபி

3. இப்னு பதூதா மால் - ஜபெல் அலி-துபாய்

4. இப்னு பதூதா மால் - ஜபெல் அலி-துபாய்

5. ரொலக்ஸ் டவர் - டுபாய். (பழைய வேலைத் தளம்)

6.அபூ தாபியின் ஒரு ஈச்ச மரம்.


7. தரை விரிப்பு. மதீனா முனவ்வரா மஸ்ஜிதில்.... - சவூதி அரேபியா

8. புர்ஜ் கலீபா - டுபாய்

9.அபூ தாபியின் ஒரு ஈச்ச மரம்

10. ஒரு சந்தையில் கை பேசியால் எடுத்தது. - இலங்கை

11. புர்ஜ் கலீபா - டுபாய்

12. புர்ஜ் கலீபா - டுபாய்

13. இது நம்ம Trade Mark. போட்டி’னு வந்துட்டா, இரத்தம் பார்க்காம போக மாட்டோமுள்ள...

14. இது நம்ம ஊரு. கிராபிக்ஸ் இல்லை. கல்லின் இயற்கை நிறமே சிவப்பு

15. ஒரு மாலை பொழுது- நுவரெலியா

16.தரை விரிப்பு. மதீனா முனவ்வரா மஸ்ஜிதில்.... - சவூதி அரேபியா 
எவராவது 18வது, 19வது புடிச்சிருக்குனு சொன்னீங்கன்னா...வீட்டுக்கு ஆட்டோ அனுப்பப் படும்.

Saturday 2 April 2011

Burj Khaleefa Lake


புர்ஜ் டுபாய், டுபாய் மால் இற்கு பின் பக்கத்தில் இருக்கும் மிகப்பெரிய நீர்தடாகம். .
30 ஏக்கர் பரப்பளவை கொண்டது.
உலகின் மிகப் பெரிய Dancing Fountain
500 அடி( 150 மீட்டர்) நீரை பீய்ச்சி அடிக்கக் கூடியது. இது 50 மாடி கட்டிடத்தின் உயரத்திற்கு சமனானது.
900மீட்டர் சுற்றலவை கொண்டது.
25 வண்ணங்களை வெளியிடக் கூடிய, 6 600 நீர் புகா ஒளிர் விளக்குகளை கொண்டது. இதனால் வெளியிடப்படும் ஒளி வானில் 25 மைல்களுக்கு அப்பால் இருந்தும் பார்க்கக் கூடியது.

இங்கு நடக்கும் Water dance Show மிகவும் பிரபலம். இதை பார்க்கவே திரளான மக்கள் குவிகின்றனர். நான் எதேச்சையாக அப்பக்கம் சென்ற போது, அந்த அற்புதமான காட்சியை பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
(போட்டோக்கள் அனைத்தும் என்னால் எடுக்கப்பட்ட்வையே.....)