Monday 10 October 2011

ஈர லுங்கியுடன் 20 கி.மீ பயணம்...


ஒரு விடுமுறை நாள்`ல வீட்டுல ஏதோ வேலையில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறேன், தொலை பேசி குத்தாட்டம் போடுது (எவ்ளோ நாளைக்குத்தான் தொலைபேசி சினுங்கிகிட்டே இருக்குரது...) யார்`னு பார்த்தா, நம்ம நண்பன் “க்ரேஸி”.

“மச்சான்!! நாமெல்லாம் பக்கத்துல உள்ள அருவிக்கு குளிக்க போகலாம்`னு இருக்கோம். ரெடியா இரு. கொஞ்ச நேரத்துல வந்துர்ரோம்.”

”டேய்!! குளிச்சு 3 மாசம் கூட ஆகல.. எனக்கு நீச்சலும் தெரியாது. ஏற்கனவே ஒரு முறை நீ எம்மோடு குளிக்க வந்து வாங்கி கட்டியிருக்கே!!! ( ரணகளத்திலும் ஒரு கிலுகிலுப்பு ) மறுபடி எதுக்குடா??? அருவிக்கு போறதுக்கு வண்டியும் கிடையாதே!!”
நாம குளிக்கப் போன அருவியோட போட்டோ கிடைக்கல. இது பக்கத்துல உள்ள அருவி


”மச்சான்!! நம்ம ஊர்ல இருந்து உறவுக்கார பையன் ஒருத்தன் வந்திருக்கான்!! 6 மாசத்துக்கு முன்னாடிதான் புதுசா வண்டி (Van) எடுத்திருக்கான். அதனால, நம்மள கூட்டிக் கொண்டு எங்காவது வெளில போகனும்`னு ஆசைப் படுரான். பயபுள்ள இதுவர அருவில குளிச்சதே இல்லையாம். அதனாலதான் இப்படி ஒரு ப்ளான். நம்ம பயளுக பொப், காமராசு, புள்ளிராஜா`னு எல்லானும் வர்ரானுங்க. நீயும் ரெடியா இரு”னு போனை வைத்து விட்டான்.

அருவி சார்ந்த பகுதி
“சரி.. விருந்தாளியா வந்த பையனாச்சே, புதுசா வண்டி வேறு எடுத்திருக்கான். ட்ரீட்`னு சொல்லி ஓ.சி`ல பிரியானி கிடைக்காவிட்டாலும் ஒரு முட்ட கோஸ்`ஆவது கிடைக்க சான்ஸ் இருக்கு`ங்குர நப்பாசை`ல நானும் குளிக்க போக தயாரானேன்.

 வண்டி வர, நானும் ஏறிக் கொள்ள, கொஞ்ச நேரத்துல வண்டி பக்கத்து ஊரை அடையும் போது வண்டிக்கு டீசல் (Diesel) இட வேண்டும்`னு ஒரு Fuel shed'ல வண்டியை நிறுத்தினோம். பொதுவாக நம்ம ஊர் Fuel shed'ல “ஓட்டோ டீசல் (Auto Diesel) அப்படினு எழுதி இருக்கும். (Automobile Diesel அப்படின்னும் நினைக்கிறேன்). அவ்வளவு நேரமும் நல்ல உறக்கத்தில் இருந்த நண்பன் க்ரேஸி திடீரென விழித்தவன் “டேய்!! எவண்டா அது ஆட்டோ டீஸல்(Auto Diesel)`ஐ வானுக்கு(Van) இடுரது, அத ஆட்டோ`க்குதானே இடனும்”னு கலாய்க்க ஆரம்பிச்சுட்டான். அங்கு வேலை பார்த்த பயலுக எப்படியெல்லாம் மனசால திட்டியிருப்பானுங்க`னு கடைசிலதான் புரிந்தது.

ரொம்ப கஷ்டப் பட்டு தேடின போட்டோ. பெரிதாக்கிப் பார்த்தால் Auto Diesel தெரியும். இல்லாவிடில் பக்கத்துல உள்ள Fuel Shed`க்கு போய் பார்த்துகங்க..

ஒரு வழியாக அருவியை சென்றடைந்து குளிக்க தயாரான போது, கைத் தொலைபேசி, பர்ஸ், கடிகாரங்கள் என்பன நம்மிடம் இருந்ததால் குளிப்பத்ற்காக உடுத்த லுங்கிய தவிர மற்றைய எல்லாவற்றையும் வண்டிக்குள் வச்சு பூட்டி விடலாம்`னு க்ரேஸி ஒரு உருப்படியான ஐடியா குடுக்க, அதே போல் செய்து விட்டோம்.

அருவியில் நீர் பயங்கரமாக கொட்டிக் கொண்டிருந்தது. பயபுள்ளக குதிச்சு கும்மாளமிட தொடங்கினானுங்க.. நீச்சல் தெரியாத என்னைய போல ஆளுங்க குளிக்க நீரே இல்லாத ஒரு அருவி இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்`னு சொன்னேன். அவனுமே சிரிக்கல. எனக்கு முன்னாடியே எல்லா சர்தார்ஜி ஜோக்`ஐயும் படிச்சிருப்பானுங்க போல....

கொஞ்ச நேரம் குளித்திருப்போம். அந்த நேரம் பார்த்து, அந்த ஏரியாவுக்கு சம்பதமே இல்லாத ஒரு நபர் வந்து நம்ம குரூப்`ல உள்ள ஒருத்தன் கையில ஏதோ ஒரு கவரை குடுத்துவிட்டு ஓடி மறைந்தார்.

அந்தக் கவர்ல என்னதான் இருக்கு`னு பார்த்தா, ஒரு லெட்டர் இருந்தது. அந்த லெட்ட்ர்`ல

“டேய் பக்கிகளா... ஃபைனான்ஸ்`ல வான் (van) வாங்கிடு சரியான நேரத்துல பைசா`வ பைசல் பண்ணாம இருந்தா, பைசா குடுத்தவன் பொட்டு வச்சிடு பொங்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பான்`னு நெனச்சீங்களா..????? நாங்க வண்டிய எடுத்துட்டு போறோம். முடிஞ்சா பைசா`வ குடுத்துடு வண்டிய எடுத்துக்க... கோட்டுல(Court) சந்திப்போம்”னு எழுதி இருக்கு.”

அருவி சார்ந்த பகுதி
இதைப் பார்த்ததும் ஓடிப் போய் வான் நிறுத்திய இடத்தை பார்த்தால், வானைத் தவிர மற்றையதெல்லாம் இருந்தது. க்ரேஸியோட உறவுக்காரப் பையனோ வாய்லயும் வயித்துலயும் அடிச்சுக் கொண்டு அழ ஆரம்பிச்சுட்டான். நாமளும் சமாதானப் படுத்தலாம்`னு முயற்சி பேச்சுக் கொடுத்தோம்...

அண்ணே!!! எவ்வளவு காலமா பைசா கட்டலண்ணே!!!

ஜஸ்டு ஒரு 6 மாசம்தான் தம்பி.. அதுக்கு இப்படி பண்ணிட்டானுங்களே!!!

அண்ணே!! நீங்க வண்டி வாங்கியே 6 மாசம்தானே ஆகுது...

ஹி..ஹி...

அப்போ ஒரு தவணை கூட கட்டலையா...????

ஹி...ஹி...

நல்ல வேலை நம்மளையும் போட்டுத் தள்ளாம வான்`ஐ மட்டும் எடுத்துடு போனானுங்க`னு மனதால் நினைத்துக் கொண்டேன்.

க்ரேஸி குடுத்த ஐடியாவுல, மொபைல் போன், பர்ஸு, ட்ரஸ்`னு எல்லாத்தையும் வானுக்குள்ளையே வச்சிருந்ததால, உடுத்திருந்த ஈர லுங்கியை தவிர வேறெதுவும் இல்லை. வீட்டுக்கு போக வண்டியும் இல்லை.

 அருவி அமைதுள்ள ஏரியா, வாகங்கள் அதிகம் வராத, மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதி. அந்தக் காலத்துல இப்பொழுது போல் எல்லோரிடமும் மொபைல் போனும் இருக்கல.

என்ன பண்ணலாம்`னு யோசிச்சு கொண்டே அந்தப் பக்கமாக 2,3 பேரை மடக்கி வீட்டுக்கு அறிவிக்க முயற்சி செய்தோம். வந்தவன் எவனிடமும் போன் இருக்கல.. போன் இருந்தா அது பைசா இருக்கல. 5,6 மணித்தியால அவஸ்தைக்கு பின் ஒருத்தன் வர அவன் போனிலிருந்து வீட்டுக்கு அறிவித்து, ஊரிலிந்து வண்டி வந்து நம்மல கூட்டிப் போகும் போது, ஊரெல்லாம் செய்தி பரவி, நம்மல ஈர லுங்கியோடு பார்த்து ரசிக்க கூட்டம் சேர்ந்துடுச்சு..

விடுப்பா.. விடுப்பா..... நாம பார்க்காத அவமானமா???
 

டிஸ்கி 1:- ஃபைனான்ஸ்`ல வண்டி எடுத்துவிட்டு சரியான தவணையில் பைசா குடுக்கா விட்டால் வண்டியை கடத்திக் கொண்டு வருவதற்கு, ஒரு கூலிப்படைய பைனான்ஸ் கம்பனிகள் வைத்திருக்கும். வண்டியை கடத்தியதற்கான கூலியையும் கூலிப்படைக்கு வண்டியின் உரிமையாளரே குடுக்க வேண்டும். அது ஒரு பெரும்தொகையாக இருக்கும்.

 டிஸ்கி 2:- அந்தக் கூலிப் படை வண்டிக்காரரை பின் தொடர்ந்து, வண்டிக்காரர் அசர்ர நேரம் பார்த்து, ஆட்டையப் போட்டுவிடுவார்கள். சில வேலை கைகலப்பில் முடியும் சந்தர்ப்பங்களும் உண்டு.

டிஸ்கி 3:- இது இலங்கையில் மட்டும்தானா? இல்லை, பொதுவாக எல்லா இடத்திலும் நடக்கும் நிகழ்வுதானா`னு தெரியல...

டிஸ்கி 4:- உண்மையிலேயே வீட்டுக்கான தூரம் 20 கிமீ அல்ல.. வெறும் 7-8 கி.மீ. தலைப்பு கொஞ்சம் கவர்ச்சியா இருக்கட்டுமே`னு போட்டிருக்கேன்.

சிறிது நாட்களின் பின் அந்த அண்ணனை சந்தித்தேன்...

அண்ணே!! வழக்கு என்னாச்சு???

வழக்குல நான் ஜெயிச்சுட்டேன் தம்பி..

சந்தோசம்னே.. வண்டி கிடைச்சுடுச்சா???

இல்ல தம்பி.. வண்டி கெடக்கல...

அப்போ உங்க பைசா....???

அதுவும் கிடைக்கல தம்பி.... அதுக்காக இன்னொரு வழக்குப் போட்டிருக்கேன்..







24 comments:

  1. ஹா ஹா செம காமடிதான்.. பர்ஸ் போன் எல்லாத்தையும் வானுக்குள்ள வைக்கச்சொன்ன உங்க நண்பர் நல்ல ரைமிங்காத்தான் ஐடியா தந்திருக்கிறார்.

    ReplyDelete
  2. // டிஸ்கி 4:- உண்மையிலேயே வீட்டுக்கான தூரம் 20 கிமீ அல்ல.. வெறும் 7-8 கி.மீ. தலைப்பு கொஞ்சம் கவர்ச்சியா இருக்கட்டுமே`னு போட்டிருக்கேன். //

    என்னா பில்-டப்பு..?

    அப்ப 40 கி.மீன்னு சொல்லி இருந்தா..
    படு கவர்ச்சியா இருந்து இருக்குமோ..?!!

    ReplyDelete
  3. @ மதுரன் said...

    //ஹா ஹா செம காமடிதான்.. பர்ஸ் போன் எல்லாத்தையும் வானுக்குள்ள வைக்கச்சொன்ன உங்க நண்பர் நல்ல ரைமிங்காத்தான் ஐடியா தந்திருக்கிறார்.//

    ஆமா... அவரு இந்த மாதிரி நிறைய ஐடியா குடுப்பாரு...

    ReplyDelete
  4. @ வெங்கட் said...

    // // டிஸ்கி 4:- உண்மையிலேயே வீட்டுக்கான தூரம் 20 கிமீ அல்ல.. வெறும் 7-8 கி.மீ. தலைப்பு கொஞ்சம் கவர்ச்சியா இருக்கட்டுமே`னு போட்டிருக்கேன். //

    என்னா பில்-டப்பு..?

    அப்ப 40 கி.மீன்னு சொல்லி இருந்தா..
    படு கவர்ச்சியா இருந்து இருக்குமோ..?!!///

    அப்போ, 80 கிமீ போட்டிருந்தா,,...
    ஏனுங்க... ஏன்..??? என் ப்லாக்`அ ச்சின்ன பசங்களும் படிக்கிரது புடிக்கலையா???

    ReplyDelete
  5. சூப்பர் காமெடி பாஸ்

    ReplyDelete
  6. @ வைரை சதிஷ் said...

    ///சூப்பர் காமெடி பாஸ்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்

    ReplyDelete
  7. இது இலங்கையில் மட்டும்தானா? இல்லை, பொதுவாக எல்லா இடத்திலும் நடக்கும் நிகழ்வுதானா`னு தெரியல...

    இந்தியாவில் பலருக்கு இதுதான் தொழில்

    ReplyDelete
  8. ஈர லுங்கியுடன் 20 கி.மீ பயணம்...
    செம காமடி..-:)

    ReplyDelete
  9. அருவியில் குளிப்பது ஒரு ஆனந்தம்தான் பாஸ்

    ReplyDelete
  10. அவ்ளோ நேரமும் லுங்கி ஈரமாவா இருந்துச்சு?

    ReplyDelete
  11. குளிக்கிற ஆசையில மண் அள்ளிப் போட்டுட்டாங்களே..

    ஹே..ஹே..
    ரசித்தேன் பாஸ்.

    ReplyDelete
  12. // அந்தக் கூலிப் படை வண்டிக்காரரை பின் தொடர்ந்து, வண்டிக்காரர் அசர்ர நேரம் பார்த்து, ஆட்டையப் போட்டுவிடுவார்கள். சில வேலை கைகலப்பில் முடியும் சந்தர்ப்பங்களும் உண்டு//
    இப்பிடியா பாஸ் நடக்குது? புதுசா இருக்கு! :-)

    ReplyDelete
  13. வண்டி கெடக்கல..பைசா கெடக்கல...ஆனா வழக்கு ஜெயிச்சுடுச்சு...செம காமெடி இதுதான்...

    ReplyDelete
  14. @ மு.ஜபருல்லாஹ் said...

    ///இது இலங்கையில் மட்டும்தானா? இல்லை, பொதுவாக எல்லா இடத்திலும் நடக்கும் நிகழ்வுதானா`னு தெரியல...
    இந்தியாவில் பலருக்கு இதுதான் தொழில் ///

    எல்லா இடத்திலும் இதுதானா நடக்குது..??

    ReplyDelete
  15. @ ரெவெரி said...

    /// ஈர லுங்கியுடன் 20 கி.மீ பயணம்...
    செம காமடி..-:)//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  16. @ K.s.s.Rajh said...

    //அருவியில் குளிப்பது ஒரு ஆனந்தம்தான் பாஸ்///

    ஆமா பாஸ்.. அந்த சுகமே தனி..

    ReplyDelete
  17. @ பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //அவ்ளோ நேரமும் லுங்கி ஈரமாவா இருந்துச்சு?///

    இது ஒரு நல்ல கேள்வி ... (மீ எஸ்கேப்...)

    ReplyDelete
  18. @ நிரூபன் said...

    ///குளிக்கிற ஆசையில மண் அள்ளிப் போட்டுட்டாங்களே..

    ஹே..ஹே..
    ரசித்தேன் பாஸ்.//

    குளிச்சு முடிஞ்சதுக்கப்புறம்தான் எல்லாமே நடந்தது பாஸ்..

    ReplyDelete
  19. @ ஜீ... said...

    ///// அந்தக் கூலிப் படை வண்டிக்காரரை பின் தொடர்ந்து, வண்டிக்காரர் அசர்ர நேரம் பார்த்து, ஆட்டையப் போட்டுவிடுவார்கள். சில வேலை கைகலப்பில் முடியும் சந்தர்ப்பங்களும் உண்டு//
    இப்பிடியா பாஸ் நடக்குது? புதுசா இருக்கு! :-)//

    ம்ம்.. இப்படிப்பட்ட ஏராளமான சம்பவங்கள் இருக்கு.

    ReplyDelete
  20. @ C.P. செந்தில்குமார் said...

    ///வண்டி கெடக்கல..பைசா கெடக்கல...ஆனா வழக்கு ஜெயிச்சுடுச்சு...செம காமெடி இதுதான்...///

    ம்ம்ம். ஆனாலும் அவருக்கு வழக்குல ஜெயிச்ச சந்தோசத்த பாக்கனுமே!!! ஷப்ப்பா...

    ReplyDelete
  21. இன்டர் நெட் காலை வாரிச்சி....
    இருங்க வாசிச்சுட்டு வர்றேன்

    ReplyDelete
  22. இலங்கையில் இருக்கும் காலத்தில் மத்திய மலைநாட்டு அருவி அழகுகளை ரசிக்காமல் விட்டு விட்டேன் எண்ட கவலை இன்னமும் இருக்கிறது

    ReplyDelete