Thursday, 6 October 2011

அசர அசர ஆப்படித்த ஆசிரியர் தின விழா..

இது ஒரு மீள் பதிவு. போன மாசம் ஆசிரியர் தினம்`னு அரசல் புரசலாக செய்தி வர அவசரமாக எழுதிய பதிவு. பிறகுதான் தெரிந்தது, இலங்கையில் ஆசிரியர் தினம் ஒக்டோபர் 6ம் திகதி`னு... எனவே போன பதிவில் தவறாக குடுத்த திகதிகளை மாற்றி மீள் பதிவிட்டிருக்கிறேன்.



இன்று ஆசிரியர் தினம்`னு இப்போதுதான் தெரிந்தது. சரி, நாமளும் வழமை போல நம்ம வண்டவாலத்தையே தண்டவாளம் ஏற்றலாம்`னு முடிவு பண்ணி எழுதுகின்ற ஒரு அவசர பதிவு இது. (சரக்கில்லாம இருக்குரதால, இந்த மாதிரி ஒரு சந்தர்ர்ப்பத்தை தவற விடக் கூடாது`னு ஒரு உத்வேகம்..)

நம் பாடசாலைகளில் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினம் கொண்டாடப் படும். அதன் போது மேல் வகுப்பு மாணவர்களால் விழாக்கள் ஏற்பாடு செய்யப் பட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப் படும்.

நாம உயர் வகுப்புல இருக்கும் போதும் (2003), வரலாறு காணாத ஒரு விழாவை நடத்தனும்`னு தீர்மானிச்சு, தடபுடலாக ஆசிரியர் தின விழா நடத்த  தயாரானோம். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வகுப்பு வாரியாக மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப் பட்டு நிகழ்ச்சிக்காக பயிற்சியும் அளிக்கப் பட்டது.


பொதுவாக நம்ம ஒடிடோரியம் கட்டடித்தில்தான் விழாக்கள் நடக்கும். நாம மிகப் பெரிய விழா நடத்துரதால அந்த கட்டடம் போதாது`னு சொல்லி வெளில மேடை அடிப்பதாகவும் மேல் வகுப்பு மாணவர் அனைவரும் செப்டம்பர் 4ம் திகதி இரவு, ஒன்று சேர்ந்து மேடை அமைப்பதாகவும் முடிவாச்சு.

திட்டமிட்டது போல, விழாவிற்கு (ஒக்டோபர், 05) முந்தைய இரவில் அனைவரும் ஒன்று கூடி, வகுப்புகளில் இருந்த மேசைகளையெல்லாம் ஒன்று சேர்ந்த்து மேடை அமைக்கும் பணி ஆரம்பிக்க லேசாக மழை தூர ஆரம்பித்து, மேடை அமைக்க இருந்த மைதானத்தை சகதியாக்கி விட்டது.

இதற்கு என்ன பண்ணலாம்`னு யோசிச்சா, ஒருத்தன் “மச்சீ.. மரத்தூள் கொண்டுவந்து போட்டா, சும்மா காங்ரீட் போட்டது போல இருக்கும்`டானு சொல்ல, பக்கத்திலுள்ள மரம் கிழிக்கும்  ஆலைக்கு சென்று மரத்தூள் கேட்க ஒரு மூடை மாத்திரம் எடுத்துக் கொள்ள அனுமதி கிடைத்தது. நாமும் ஒவ்வொருத்தரும்!!! ஒவ்வொரு!!! மூடை மாத்திரமே (50-60 பேர் இருந்தோம்) எடுத்துக் கொண்டு போய் மேடை அமைக்க இருந்த மைதானத்தை சரி செய்ய ஆரம்பிக்க, மழை கணமாக பெய்ய ஆரம்பித்தது.


ஆஹா!!! இப்போ என்ன பண்ணலாம்`னு யோசிக்க, மழை விடும் வரை பொறுமையாக இருக்கலாம்`னு முடிவு பண்ணினோம். அந்த நேரம் பார்த்து ஒருத்தன் எங்கிருந்தோ ஒரு ரேடியோவை தூக்கிக் கொண்டு வந்தான். அந்த கால கட்டத்தில் பாய்ஸ் திரைப்படம் வெளிவந்த புதுசு. எவனோ ஒருத்தன் பாய்ஸ் பாடல் கேசட்டையும் எடுத்து வர, அன்று பாடசாலை அதிபரும் குவார்டஸில் இல்லாமல் வெளியே சென்றிருக்க, இரவு பூரா ஏரியாலயே எவனும் தூங்க முடியாத படி ஆட்டம், பாட்டம், குத்தாட்டம்தான்.

மழை எப்போதோ முடிந்திருந்தாலும் நம்ம கூத்தும் கும்மாளமும் முடிய அதிகாலை 5.00 மணி இருக்கும். சாதாரண சகதியாக இருந்த நிலம், நாம் போட்ட மரத்தூளுடன் சேர்ந்து எருமை கூட பக்கத்தில் கூட போக முடியாத சகதியாகி இருந்தது.

இதன் பின் மேடை அமைப்பது முடியாத காரியம் என்பது தெரிந்தவுடன், மறுபடி ஒடிடோரியம் கட்டிடம் வந்து, அதை தயார் செய்ய முயற்சித்த போது விடிந்து விட்டது. எப்படியாவது சமாளிக்கலா`னு யோசிச்சுடு ஒவ்வொருத்தனும் தங்கள் அறைகளுக்கு போக நானும் போய் குளிச்சுடு வரலாம்`னு போய் கட்டில்`ல உட்கார்ந்தவன் எழுந்து பார்க்கும் போது கடிகாரத்தில் 12.00 மணி பல்லிலித்தது.


கண்ணை கசக்கிக் கொண்டு, பல்லும் விளக்காமல் பாடசாலைக்கு ஓடிப் போனால், நம்ம பசங்க பேந்த பேந்த விழிக்கிறானுங்க.. கேட்டால் விழா நடக்கவே இல்லையாம். அது போக மொத்த பாடசாலையும் நம் மீது கொலை வெறியுடன் இருந்தது. நம் மீது இருந்த குற்றச்சாட்டுக்கள்....

* மொத்த விழாவையும் மேடை அமைக்கிறேன் பேர்வழி`னு குழப்பி, எதுவுமே நடக்காமல் பண்ணியது

* இரவு பூராக குத்தாட்டம் போட்டு, அயலவர்கள் தூக்கத்தை கெடுத்தது.

* மாணவர்களின் மேசை கதிரைகளை கொண்டு போய் சகதியிலும், மழையிலும் நனைத்தது

*மேடை அமைப்பதற்க சொல்லி பள்ளி மைதானத்தை சகதியாக்கியது.

*மரத்தூள் திருடியது.
 
இவற்றயெல்லாம் பேசி சமாளிக்கும் போது நம் ஆசிரியர் தின விழா வரலாறு காணாத விழாவாகவே மாறி விட்டிருந்தது.

19 comments:

  1. ஆசிரியர் தினம் எப்பன்னு தெரியாத அருமை மாணவரை உடனே பார்க்கணும்...:)

    ReplyDelete
  2. //
    இவற்றயெல்லாம் பேசி சமாளிக்கும் போது நம் ஆசிரியர் தின விழா வரலாறு காணாத விழாவாகவே மாறி விட்டிருந்தது
    //

    செம காமெடி போங்க

    ReplyDelete
  3. அவ்வளவு தான் குற்றசாட்டுகளா முஹமட்...ரொம்ப நல்ல பையன் போல...Brings back a lot of school day memories...

    ReplyDelete
  4. அடப் பாவமே...
    இவ்ளோ கொல வெறியோடு ஒரு மேடை போட முடியாம திண்டாடியிருக்கிறீங்களே.

    ReplyDelete
  5. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..

    இது ஒரு மீள் பின்னூட்டம்..

    ReplyDelete
  6. இது ஒரு மீள் பதிவு.///////

    முன்னாடியே சொன்னதுக்கு தேங்க்ஸ்!

    ReplyDelete
  7. பிறகுதான் தெரிந்தது, இலங்கையில் ஆசிரியர் தினம் ஒக்டோபர் 6ம் திகதி`னு... ////////

    அப்போ, ஸ்கூலில் படிக்கும் போது ஒருவாட்டியும் ஆசிரியர் தினம் கொண்டாடினதுல்ல?????

    ReplyDelete
  8. இவற்றயெல்லாம் பேசி சமாளிக்கும் போது நம் ஆசிரியர் தின விழா வரலாறு காணாத விழாவாகவே மாறி விட்டிருந்தது.///////////

    இந்தப் பதிவை போனமாசமே படிச்சு கமெண்டும் போட்டுட்டேன்! ஹி ஹி ஹி !!!! ஞாபகம் இருக்கா???

    ReplyDelete
  9. பாய்ஸ் படம் உங்க வாழ்கையில இப்பிடியும் சம்பந்தப்பட்டிருக்கா?

    ReplyDelete
  10. @ ரெவெரி said...

    /// ஆசிரியர் தினம் எப்பன்னு தெரியாத அருமை மாணவரை உடனே பார்க்கணும்...:)///

    இலங்கையில் மாத்திரம்தான் ஒக்டோபர் 6. மற்றைய இடங்களில் செப். 5. அதுதான் ச்சின்ன கன்பியூசன்

    ReplyDelete
  11. @ "என் ராஜபாட்டை"- ராஜா said...

    //
    இவற்றயெல்லாம் பேசி சமாளிக்கும் போது நம் ஆசிரியர் தின விழா வரலாறு காணாத விழாவாகவே மாறி விட்டிருந்தது
    //

    செம காமெடி போங்க//

    ஆமா பாஸ்.. வருகைக்கும் கருத்டுக்கும் நன்றி

    ReplyDelete
  12. @ ரெவெரி said...

    ///அவ்வளவு தான் குற்றசாட்டுகளா முஹமட்...ரொம்ப நல்ல பையன் போல...Brings back a lot of school day memories...///

    ஆமா...நான் ரொம்ப ரொம்ப நல்ல பையன்.. ஆனா இந்த உலகத்துக்கு புரியுது இல்லையே!!

    ReplyDelete
  13. @ நிரூபன் said...

    /// அடப் பாவமே...
    இவ்ளோ கொல வெறியோடு ஒரு மேடை போட முடியாம திண்டாடியிருக்கிறீங்களே.///

    என்ன செய்ய பாஸ்.. சின்ன பசங்க அப்படித்தான்...

    ReplyDelete
  14. @ Riyas said...

    ///ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..

    இது ஒரு மீள் பின்னூட்டம்..///

    மறுபடி வந்ததுக்கு, மறுபடியும் நன்றிகள்/..

    ReplyDelete
  15. @ Powder Star - Dr. ஐடியாமணி said...

    ///பிறகுதான் தெரிந்தது, இலங்கையில் ஆசிரியர் தினம் ஒக்டோபர் 6ம் திகதி`னு... ////////

    அப்போ, ஸ்கூலில் படிக்கும் போது ஒருவாட்டியும் ஆசிரியர் தினம் கொண்டாடினதுல்ல?????///

    தெரியும் பாஸ். செப். 5ம் ஆசிரியர் தினம்`னு சொல்ல கொஞ்சம் கன்பியூசன் ஆகிடுச்சு..

    ReplyDelete
  16. @ Dr. Butti Paul said...

    ///பாய்ஸ் படம் உங்க வாழ்கையில இப்பிடியும் சம்பந்தப்பட்டிருக்கா?///

    இதை விடவும் சம்பதப்பட்டிருக்கு... அதெல்லம் இங்க எதுக்கு...

    ReplyDelete
  17. // வரலாறு காணாத ஒரு விழாவை நடத்தனும்`னு தீர்மானிச்சு, //

    நிஜமாவே வரலாறு காணாத விழா தான்
    போல.. ஹா., ஹா., ஹா..!!

    ReplyDelete
  18. ஏணிகளை மறக்காத தங்கள் பண்புக்கு பெரும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete