Friday, 21 October 2011

பய(ங்கர) டேட்டா தயாரிப்பது எப்படி..

கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்னால், நான் பதிவுலகத்துக்கு வந்த புதுசுல 3 நாளுக்கு ஒரு பதிவு வீதம் எழுதி வந்தேன். அதிகமாக சொந்த அனுபவங்களையே பதிவாக எழுதி வருகிறேன். இப்படியே போனால், கொஞ்ச  நாள்ல சரக்கு முடிஞ்சிடுமோ`னு பயந்து கொஞ்ச நாட்களுக்கு பின்னரோ வாரம் ஒரு பதிவு என்று எழுத ஆரம்பித்தேன்.

இப்போது நிலமையை பார்த்தால், தினம் ஒரு பதிவு எழுதலாம் போலிருக்கு.. ஆமாங்க... ஒவ்வொரு நாளும் ஒரு பைத்தியத்து கிட்ட சிக்கி சின்னா பின்னமாகிட்டு இருக்கேன். எப்படித்தான் நம்மள தேடி வர்ரானுங்க`னே புரியல..

நேற்று ஆபீஸ்`ல வேலை பண்ணிடு இருக்கேன்`னு சொன்னா நீங்க நம்பவா போரீங்க.. அதனால அபீஸ்`ல இருக்கேன்`னு வச்சுக்குவோம். அப்போ, நம்ம கூட வேலை பாக்குர இராக் நாட்டு பையன் வந்து,

அண்ணே, நான் புது வேலை தேடிட்டு இருக்கேன். எனக்கொரு BIO DATA பண்ணிக் குடுப்பீங்களா? அப்டின்னான்..

நானும் “டேய்!! இது ஆபீஸ் நேரம்`டா... இப்போ முடியாது (பக்கத்துல டெமேஜர்..அதுதான் இந்த பில்ட் அப்பு...) மாலை`ல வா`னு அனுப்பி வச்சுட்டேன்..

மாலைல ஆள காணல.. அடுத்த நாள் காலைலயே வந்து,

அண்ணே!!! BIO DATA தயாரா??

டேய்!! நான் எப்படிடா தயார் பண்ரது???? நீ வரனுமுல்ல...

அப்போ!!! நேற்று மாலை பண்ணி வக்கிரதா சொன்னீங்களே!!

ஷப்பா!!! டேய்! தம்பி... உன் முழுப் பேரு எனக்கு தெரியுமா?

தெரியாது...

உன் ஊரு, முகவரி தெரியுமா???

தெரிந்திருக்க வாய்ப்பில்லை....

உன் வயசு என்ன`னு எனக்கு தெரியுமா???

அதுவும் தெரியாது..

நீ என்ன தொழில் பண்ணுராய்`னாவது எனக்கு முழு விபரம் தெரியுமா??

அதுவும் உங்களுக்கு தெரியாது`னு  நினைக்கிறேன்..

அப்புறம் எப்படிடா நான் உனக்கு BIO DATA தயாரிக்கிறது..

இதுக்கு பின்னாடி கேட்டான் பாருங்க ஒரு கேள்வி... ஷப்பா....

அண்ணே!! எனக்கொரு டவுட்டு....BIO DATA பண்றதுக்கு இந்த டீடெய்ல்`லாம் வேணுமா`னே????

டேய்!!! எப்படிடா என்னையே தேடி வர்ரீங்க..எனக்கு கொல வெறி வர்ரதுக்குள்ள இந்த இடத்த விட்டு ஓடிடு..

இப்படித்தாங்க என் ஒவ்வொரு நாளும் க(கி)ழியுது.. இதாவது பரவாயில்ல.. போன வாரம் நேபால்காரன் ஒருத்தன் கிட்ட மாட்டினேன். அது இதை விடக் கொடும.. அது அடுத்த பதிவுல வரும்...
24 comments:

 1. எனக்கொரு டவுட்டு....BIO DATA பண்றதுக்கு இந்த டீடெய்ல்`லாம் வேணுமா`னே????
  அந்த ஈராக் பையன் பாவம்ப்பா

  ReplyDelete
 2. @ மொக்கராசு மாமா said...

  /// எனக்கொரு டவுட்டு....BIO DATA பண்றதுக்கு இந்த டீடெய்ல்`லாம் வேணுமா`னே????
  அந்த ஈராக் பையன் பாவம்ப்பா///

  அதவிட நான் பாவங்க...

  ReplyDelete
 3. //
  டேய்!!! எப்படிடா என்னையே தேடி வர்ரீங்க..எனக்கு கொல வெறி வர்ரதுக்குள்ள இந்த இடத்த விட்டு ஓடிடு//

  எங்களுக்கும் தான்

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும்,

  :) :)

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 5. ஹா.ஹா.ஹா.ஹ...

  பாஸ் ஒரு பயோடேட்டா செய்துதரமுடியுமா?

  ReplyDelete
 6. சலாம் சகோ....

  நீங்க ரொம்பப் பாவம்...
  உங்களுக்குள்ள இவ்வளவு சோகக்கதையா..?????

  ம்...
  நேபால் காரனின் கொடுமையை தொடருங்கோ...!!!!

  ReplyDelete
 7. மீண்டும் பயங்கர டேட்டாவா! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 8. ஹி ஹி ஹி... உங்க முகத்தில இங்கே Bio Data இலவசமாக தயார் செய்து தரப்படும்னு ஏதும் எழுதி இருக்குமோ.....

  ReplyDelete
 9. பய(ங்கர) டேட்டா தயாரிப்பது எப்படி..///////

  தலைப்பை பார்த்து சத்தியமா பயந்தேன்..

  ReplyDelete
 10. அண்ணே!! எனக்கொரு டவுட்டு....BIO DATA பண்றதுக்கு இந்த டீடெய்ல்`லாம் வேணுமா`னே????

  சூப்பர் கேள்வி...

  ReplyDelete
 11. @ "என் ராஜபாட்டை"- ராஜா said...

  //
  டேய்!!! எப்படிடா என்னையே தேடி வர்ரீங்க..எனக்கு கொல வெறி வர்ரதுக்குள்ள இந்த இடத்த விட்டு ஓடிடு//

  எங்களுக்கும் தான்//

  உங்களுக்கு எதுக்குங்க வெறி வரனும்?? என்ன பார்த்தா பாவமா இல்ல..

  ReplyDelete
 12. @ Aashiq Ahamed said...

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 13. @ K.s.s.Rajh said...

  //ஹா.ஹா.ஹா.ஹ...

  பாஸ் ஒரு பயோடேட்டா செய்துதரமுடியுமா?///

  அதுக்கு கொஞ்சம் செலவாகுமே பாஸ்... பரவாயில்லையா???

  ReplyDelete
 14. @ Riyas said...

  /// மீண்டும் பயங்கர டேட்டாவா! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்////

  இன்னும் நிறைய பயங்கர டேட்டா நீங்க பாக்க இருக்கு.. இதுக்கே அலுத்துகிட்டா எப்படி....

  ReplyDelete
 15. நல்ல சிரிப்பு பய டேட்டா ...தலைப்பு பாத்து மறுபடியுமா-ன்னு வந்தேன் ...நேபாளின் கூத்தை படிக்க ஆவல்....

  ReplyDelete
 16. நல்ல லூசிட்டமாட்டிடிங்க போல

  ReplyDelete
 17. இதுவே பயங்கர டேட்டாவா இருக்கும் போல?

  ReplyDelete
 18. இன்ட்லி பத்தி ஒரு பயங்கர டேட்டா எழுதணும் பா..... கொஞ்சம் உதவுவின்களா ?????????????

  ReplyDelete
 19. பாவம் பிரதர் நீங்க. ஆனாலும் செம காமெடி பதிவு இது. ரொம்பவே ரசித்தேன்.

  ReplyDelete
 20. சும்மா சொல்லக்கூடாது உங்களைவிட பய்யன் படு படு .... புத்திசாலிதான் ... கேட்டaனே ஒரு கேள்வி படித்த என்னையே தூக்கிவாரிப்போட்டிசே உங்க நிலைமை உண்மையிலே...

  ReplyDelete
 21. //அண்ணே!! எனக்கொரு டவுட்டு....BIO DATA பண்றதுக்கு இந்த டீடெய்ல்`லாம் வேணுமா`னே???//
  பயங்கர டேட்டா தான்....

  ReplyDelete
 22. அடடா, ஒரு கொலை வெறியோடு அலையுறாங்க போலிருக்கே.

  ReplyDelete