Friday, 14 October 2011

கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடி வைக்கிராங்கப்பா....

ஒரு நாள் மாலை நேரம் வீட்டுல வெட்டியா உக்காந்துட்டு இருக்கேன் (முழு நாளும் வெட்டியாத்தானே இருக்கே) , பக்கத்து வீட்டு "மலை" தலை தெறிக்க ஓடி வர்றான். பொதுவா, நம்மள பாத்துத்தான் இப்படி ஓடுவானுங்க. இவன் என்னன்னா நம்ம கிட்ட வர்றானே'னு யோசிக்கும் போதே வந்து சேர்ந்துட்டான்.
இதுதான் நம்ம மலையோட Mouse Pad . இதை பார்த்தாலே மலை எப்படிப்பட்டவர்'னு புரியும்.

"அண்ணே!! எனக்கொரு பிரச்சனைனே!!"

ஷப்பா... ப்ளாக் ஆரம்பிச்சததுல இருந்து நம்மள செம்பே இல்லாத நாட்டமையாகிட்டானுன்கப்பா'னு நினைத்துக் கொண்டே, தம்பி என்ன பிரச்சனைன்னு சொல்லுடா'ன்னேன். (நீதான்யா, எல்லா இடத்திலும் பிரச்சன..) 

அண்ணே!! என் "key  Board "க்கு எவனோ சூனியம் வச்சிட்டான்னே!!னு ஒரே ஒப்பாரி.....

ஆஹா... இவன் ரொம்ப அப்பாவியாச்சே!! ஒரு நம்மளுக்கு வைக்க வேண்டியத்தான் இவனுக்கு மாறிடுச்சோ'னு யோசிச்சுக் கொண்டே மேலும் பேச்சுக் குடுத்தேன்.
தம்பி.. ப்ளாக் (blog )ஏதாவது எழுதிரியாப்பா?

இல்லைண்ணே... அது White colour   key  board 'ண்ணே...

இல்ல தம்பி, நன் கேக்குறது  blog .. blog .. 

இல்லைண்ணே!! நன் எதையுமே block  பண்ணலையே !!

ஆஹா.. ரொம்ம்ம்ப அப்பிராணியா இருக்கனே!!!  சரிப்பா... உன் key  board 'ல என்ன பிரச்சனை'னு சொல்லு...
அத ஏன் கேக்குறீங்கண்ணே!!  B 'ஐ தட்டினால் X  வருதுண்ணே!!  A ' ஐ  தட்டினால் Q  வருதுண்ணே!!!!
N 'ஐ தட்டினால் F  வருதுண்ணே!! S 'ஐ தட்டினால் L  வருதுண்ணே!!

ஆகா ரொம்ப கை தேர்ந்த சூனியக் காரணா இருப்பான் போலிருக்கே!! சரி, என்ன நடந்திருக்கு'னு பாக்கலாம்'னு நானும் மலை கூடவே போனேன்.  அங்க போய் Key  Board 'ஐ பார்த்த இப்படித்தாங்க இருந்தது... 

....................................


....................................


.........................................................................................................

அந்த சமயத்துல போட்டோ எடுக்க முடியல. இது கூகுள்'ல  இருந்து ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்தது..
என் தலைல மின்சாரமே இல்லாமல் 100000 வால்ட் பல்பு, நெருப்பே இல்லாமல் எரிந்தது..

டேய்!! என்னடா பண்ணி வச்சிருக்கே!!

பன்னி வைக்கலண்ணே. Key  Board 'ஐ தானே வச்சிருக்கேன்.

ஷப்பா.... டேய்.. என்னடா செஞ்சி வச்சிருக்கே!! 


அண்ணே!! என் தம்பி Key  Board 'ஐ கீழே தள்ளி விட்டான்னே... எல்லா keys 'ம் கழண்டு விழுந்துடுச்சு.. அப்புறம்  எதுக்கு தேவையில்லாம குழப்பி போடணும்'னு இப்படி Alphabet Order'ல  பண்ணிட்டேன். என்ன ஆச்சுண்ணே தெரியல.. அப்போதிலிருந்து Key  போர்டு'ல B 'ஐ தட்டினால் X  வருதுண்ணே!!  A ' ஐ  தட்டினால் Q  வருதுண்ணே!!! N 'ஐ தட்டினால் F  வருதுண்ணே!! S 'ஐ தட்டினால் L  வருதுண்ணே!!

முதல்ல.. உன்ன 4  தட்டு தட்டியிருந்தா என் நேரமாவது மிச்சமாயிருக்கும்டா... நான் போய் வர்றேன். அவ்வவ்வ்வ்வ்...

அண்ணே!!! Key  Board ....

டேய்... இனிமேல் இதுக்கு Key  Board 'னு சொன்னா, பெற்றோல ஊத்தி கொளுத்திடுவேன்..  ஜாக்ரத... 

சே... செ.. எப்படித்தான் நம்மளையே தேடி வர்றானுங்க'னு புரியலப்பா...

25 comments:

 1. ФИСВУАПРШОЛДТТЩЗЙКІЕГМЦЧНЯюююю


  என்ன பாக்குரிங்க ? என்ட கீ போர்ட் ல

  ABCD
  இப்படி தான் வரும்

  ReplyDelete
 2. உக்ரேன் குப்பைல இருந்து கீ போர்ட்`ஐ கிளரி எடுத்துடு வந்தா அப்படித்தான் இருக்கும்...

  ReplyDelete
 3. //
  ப்ளாக் ஆரம்பிச்சததுல இருந்து நம்மள செம்பே இல்லாத நாட்டமையாகிட்டானுன்கப்பா'னு நினைத்துக் கொண்டே, தம்பி என்ன பிரச்சனைன்னு சொல்லுடா'ன்னேன். (நீதான்யா, எல்லா இடத்திலும் பிரச்சன..) //

  மனசாட்சி உண்மைய சொல்லிட்டா ?

  ReplyDelete
 4. யோவ் இந்த வேலைய பண்ணினது நீதான?

  ReplyDelete
 5. @ "என் ராஜபாட்டை"- ராஜா said...

  /// //
  ப்ளாக் ஆரம்பிச்சததுல இருந்து நம்மள செம்பே இல்லாத நாட்டமையாகிட்டானுன்கப்பா'னு நினைத்துக் கொண்டே, தம்பி என்ன பிரச்சனைன்னு சொல்லுடா'ன்னேன். (நீதான்யா, எல்லா இடத்திலும் பிரச்சன..) //

  மனசாட்சி உண்மைய சொல்லிட்டா ?///

  லூஸ்`ல விடுங்க பாஸ்.. அதாவது உண்மைய சொல்லட்டும்...

  ReplyDelete
 6. @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  ///யோவ் இந்த வேலைய பண்ணினது நீதான?///

  அப்டியே நாம பண்ணினாலும் வெளில சொல்லவா போரோம்???

  ReplyDelete
 7. வாய்ப்பே இல்லைங்க :) உண்மைல ரொம்ப நல்லா சிரிச்சேன்! இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்!

  அதிலும் முதல்ல இருந்தே //(முழு நாளும் வெட்டியாத்தானே இருக்கே//

  இப்படி சிவப்புக்கலர்ல நீங்க போட்டிருக்கிறது ரொம்ப நல்லா இருக்கு:))

  ReplyDelete
 8. செம ஜோக் பாஸ்.......அதிலும் கீபோட் மொக்கை சூப்பர்......சந்தேகமே இல்லை நீங்கள் சிறந்த மொக்கை பதிவர்தான்...........பதிவுலகில் என்றுமே மொக்கைபோடும் பதிவர் தோற்றது இல்லை நீங்களும் கலக்குவீங்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. //(முழு நாளும் வெட்டியாத்தானே இருக்கே) , //

  என்னைப் பார்த்து கேட்கிறமாதிரி இருக்கே??

  ReplyDelete
 10. @ கோமாளி செல்வா said...

  ////வாய்ப்பே இல்லைங்க :) உண்மைல ரொம்ப நல்லா சிரிச்சேன்! இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்!

  அதிலும் முதல்ல இருந்தே //(முழு நாளும் வெட்டியாத்தானே இருக்கே//

  இப்படி சிவப்புக்கலர்ல நீங்க போட்டிருக்கிறது ரொம்ப நல்லா இருக்கு:))///

  உங்க கருத்துக்கள்தான் எங்களூக்கு உற்சாக டானிக்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 11. யோ பாய் அது கீபோட் இல்ல தட்டச்சு இயந்திரம் விதிபடத்தில்ப்மோகன் பாவிச்சது உங்களிடம் இடம் மாறி வந்து விட்டது என்ன அனுப்புங்கோ போரிச்சம்பழம் சாப்பிடனும் அதைக் கொடுத்து!ஹீ

  ReplyDelete
 12. @ K.s.s.Rajh said...

  //செம ஜோக் பாஸ்.......அதிலும் கீபோட் மொக்கை சூப்பர்......சந்தேகமே இல்லை நீங்கள் சிறந்த மொக்கை பதிவர்தான்...........பதிவுலகில் என்றுமே மொக்கைபோடும் பதிவர் தோற்றது இல்லை நீங்களும் கலக்குவீங்க வாழ்த்துக்கள்...///

  இது ஒவ்வோண்ணூம் நான் பட்டு வாங்கினது பாஸ். வெறும் மொக்கை மாத்திரம் இல்ல...

  ReplyDelete
 13. @ C.P. செந்தில்குமார் said...

  /// //(முழு நாளும் வெட்டியாத்தானே இருக்கே) , //என்னைப் பார்த்து கேட்கிறமாதிரி இருக்கே??///

  அட நீங்களும் நம்ம க்ரூப்பா???

  ReplyDelete
 14. @ .தனிமரம் said...

  ///யோ பாய் அது கீபோட் இல்ல தட்டச்சு இயந்திரம் விதிபடத்தில்ப்மோகன் பாவிச்சது உங்களிடம் இடம் மாறி வந்து விட்டது என்ன அனுப்புங்கோ போரிச்சம்பழம் சாப்பிடனும் அதைக் கொடுத்து!ஹீ///

  அதுக்கு பேரீச்சம் பழமாவது கெடக்கும்னா சந்தோசமா குடுத்தனுப்பிருவேன்...

  ReplyDelete
 15. கோமாளி செல்வா said...

  வாய்ப்பே இல்லைங்க :) உண்மைல ரொம்ப நல்லா சிரிச்சேன்! இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்!

  அதிலும் முதல்ல இருந்தே //(முழு நாளும் வெட்டியாத்தானே இருக்கே//

  இப்படி சிவப்புக்கலர்ல நீங்க போட்டிருக்கிறது ரொம்ப நல்லா இருக்கு:))//

  அப்போ மிச்சதெல்லாம் படு கேவலமா இருக்கா செல்வா?

  ReplyDelete
 16. வணக்கம் பாஸ்,
  நலமா?

  சூப்பரான நகைச்சுவைகள்.

  ஆமா நீங்க இப்பவும் ப்ளாக் எழுதுறீங்களா;-)))

  ஹே....ஹே...

  ஒரு நாட்டாமையாகிட்டா இப்படி எதிர்பாராத இடத்தில செம்பை நெளிச்சுக்கனுமாம்.


  ஹே....ஹே....

  ReplyDelete
 17. @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  ////கோமாளி செல்வா said...

  வாய்ப்பே இல்லைங்க :) உண்மைல ரொம்ப நல்லா சிரிச்சேன்! இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்!

  அதிலும் முதல்ல இருந்தே //(முழு நாளும் வெட்டியாத்தானே இருக்கே//

  இப்படி சிவப்புக்கலர்ல நீங்க போட்டிருக்கிறது ரொம்ப நல்லா இருக்கு:))//

  அப்போ மிச்சதெல்லாம் படு கேவலமா இருக்கா செல்வா?///

  மிச்சமெல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு`னு சொல்ல வர்ராரு...

  ReplyDelete
 18. @ நிரூபன் said...

  // வணக்கம் பாஸ்,
  நலமா?///

  ரொம்ப நலம் நண்பா...

  ///சூப்பரான நகைச்சுவைகள்.///

  நன்றி

  //ஆமா நீங்க இப்பவும் ப்ளாக் எழுதுறீங்களா;-)))

  ஹே....ஹே...//

  ஆமா.. நான் ப்லாக் எழுதுர ரகசியத்த அடுத்த பதிவுல சொல்றேன்..

  /// ஒரு நாட்டாமையாகிட்டா இப்படி எதிர்பாராத இடத்தில செம்பை நெளிச்சுக்கனுமாம்.


  ஹே....ஹே....///

  அதுதான் செம்பே இல்ல`னு சொல்டேனே.... அப்புறம் எங்க நெளிக்கிறது....

  அதென்னங்க உங்க சிரிப்பு கர்ண கொடூரமா இருக்கு...

  ReplyDelete
 19. பன்னி வைக்கலண்ணே. Key Board 'ஐ தானே வச்சிருக்கேன்.


  இப்படியும் ஒரு அப்பாவியா....????
  உங்கள் குசும்பு வர வர அதிகமாகுது....
  ம்...
  எழுதுங்க...எழுதுங்க....

  ReplyDelete
 20. உக்ரேன் குப்பைல இருந்து கீ போர்ட்`ஐ கிளரி எடுத்துடு வந்தா அப்படித்தான் இருக்கும்... //

  adapaawi nan 2 nalaa alanju thirinju wangina KB yaa ithu

  ReplyDelete
 21. @ HajasreeN said...

  /// உக்ரேன் குப்பைல இருந்து கீ போர்ட்`ஐ கிளரி எடுத்துடு வந்தா அப்படித்தான் இருக்கும்... //

  adapaawi nan 2 nalaa alanju thirinju wangina KB yaa ithu//

  குப்பை தொட்டில அவ்ளோ சீக்கிரம் கிடைக்காது.. கொஞ்சம் அலைந்து திரியனும்.. ஹி..ஹி..

  ReplyDelete
 22. ஃஃஃஃஃஎன் தலைல மின்சாரமே இல்லாமல் 100000 வால்ட் பல்பு, நெருப்பே இல்லாமல் எரிந்தது..ஃஃஃஃ

  அட ஏம்பா மழைக்குள்ள போய் மின்னல்ல மாட்டுப்படுறே...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

  ReplyDelete