Wednesday 5 October 2011

செவ்வாய், சனிமற்றும் புளூட்டொவில் நீர் இருப்பது 100% உறுதி. படங்கள் இணைக்கப்பட்டுள்ளது



உலக வரலாற்றை படித்துப் பார்க்கும் போது ஒன்று மட்டும் தெளிவாக தெரியும். (அப்போ 2,3,4 எல்லாம் மங்களாகவா தெரியும்??) அதாவது நிலைத்து நிற்க வேண்டுமாயின் ( இரண்டு காலும் நல்லா இருக்கனும்) காலத்திற்கு ஏற்ப எங்களை நான் மாற்றிக் கொள்ள வேண்டும். அதாவது “தக்கன பிழைத்தல்”னு சொல்வாங்க..

இது பதிவுலகத்திற்கு ரொம்ப பொருந்தும். (யோவ்.. கில்மா பதிவு போட்டாலே நிலைச்சுடலாம்யா...) பதிவுகில் கடந்த காலங்களில் அதிக மாற்றங்கள் நடந்து வருவதும் பாராட்டத்தக்கதும் சந்தோசத்துக்குரியதுமாக இருக்கின்றது.

மொக்கை மன்னனும் கக்கா போரதுல இருந்து காபி போட்ரது வரை எழுதிய திரு. பன்னிக்குட்டி ராமசாமி அவர்கள் ”பூமியை தேடி”னு அட்டாகாசமான ஒரு தொடர் பதிவை எழுதி ஒரு அசத்த அசத்தினார். சிரிப்பு போலீஸ் கூட அப்ப சிந்திக்கிர போலீஸ்`ஆ மாறிடுராரு...

காணாமல் போயிருந்த அருன் ப்ரசாத் கூட அப்ப அப்ப மொரீஸியஸ்`ல உள்ள எரிமலைகளை கிளரி விடுராரு.. கொம்மண்ட்ஸ் மட்டுமே போட்ட டெரர் பாண்டியன் அவர்களே ஒட்டகத்துக்கெல்லாம் லீவு விட்டுடு ப்லாக்`ஐ தூசி தட்டி விழிப்புணர்வுப் பதிவெழுதி நம்ம பெண்ட நிமிர்திட்டாரு..

தன்னைத் தானே  கலாய்த்துக் கொண்டிருந்த வெங்கட் கடந்த ஒரு மாதமாக ப்லாக்`இல் செய்த புரட்சி செய்து வருகிறார். இந்தக் காலம் அவர் ப்லாக்கின் பொற்காலம்`னு சொல்லலாம்.

சரி இவ்வளவு மேட்டர் நடக்கும் போது, நாமளும் எதாவது உருப்பட்டியா பண்னனுமே`னு மனசுல ஒரே குடைச்சல்.. அதனாலதான் செவ்வாய் (Mars), சனி (Saturn) , புளூட்டோ (Pluto)`னு உங்கள கூட்டிட்டு போக போகிறேன்.


செவ்வாயில் நீர் இருக்கா இல்லையா`னு விஞ்ஞானிகளுக்கு இன்னும் முடிவு எடக்க முடியாமலும், மற்றைய கோள்களில் நீர் இருப்பது பற்றி எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் இருந்து வருவதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் தற்போது கிடைத்துள்ள போட்டோக்களின் படி சனி (Saturn) , புளூட்டோ (Pluto) போன்றவற்றில் நீர் இருக்கும் தெளிவான போட்டோக்கள் இப்போது கிடைத்துள்ளது.

அது போக, செவ்வாயில்ருந்து (Mars) பல கோணங்களில் இருந்து எடுக்கப் பட்ட போட்டோக்கள் மட்டுமல்ல இதுவரை மனிதனுக்குகிடைத்த பகுதிகளை வைத்து ஆராய்ச்சி செய்த போது அதில் 40-60 % நீர் இருப்பது 100% உறுதியாக்கப் பட்டதை கண்டு ஆச்சரியம் அடந்துள்ளனர். நீர்போக வேறு என்ன என்ன மூலக் கூறுகள் மற்றும் கட்டமைப்பை  பட்டியலிட்டு உள்ளனர்.


" is made of chocolate-malt nougat topped with a layer of caramel and covered with milk chocolate embedded with "crispies" (whose main ingredients are wheat flour and sugar"
என்கிறது விக்கிபீடியா.


இன்னொரு ஆராய்ச்சி


”Milk Chocolate, (Sugar, Cocoa Butter, Chocolate, Lactose, Skim Milk, Milkfat, Soy Lechithin, Artificial Flavor), Almonds, Corn Syrup, Sugar, Partially Hydrogenated Soybean Oil, Skim Milk, Less than 2% - Butter, Milkfat, Lactose, Salt, Egg-Whites, Soy Protein, Artifical Flavor” என்கிறது


ஆராய்ச்சிக்காக பாவித்த செவ்வாயின் (mars) சிறிய துண்டொன்றையும் , செவ்வாய் (Mars), சனி (Saturn) மற்றும் புளூட்டோ (Pluto) நீர் இருப்பதை காட்டும் பல கோணங்களில் பெறப்பட்ட புகைப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை உங்கள் பார்வைக்கு..


..............................






..............................



..............................


ஆராய்ச்சிக்காக பாவித்த செவ்வாயின் (mars) சிறிய துண்டுகள்

ஆராய்ச்சிக்காக பாவித்த செவ்வாயின் (mars) சிறிய துண்டுகள்

 

இங்கு செவ்வாயின் (Mars)  மேற்பரப்பில் நீர் இருப்பதை தெளிவாக காண முடியும்.


இன்னொரு கோணத்தில் எடுக்கப்பட்ட செவ்வாயின் (Mars) புகைப்படம். இந்நீர் குடி நீருக்கு உகந்தது என்று நினைக்கிறேன். 
இதில் செவ்வாய் மட்டுமில்லாது, சனி (Saturn) , புளூட்டோ (Pluto) ஆகிவற்றின் நீர் இருப்பதை காட்டும் தெளிவான போட்டோ.. (படத்தை கிளிக்கி பெரிதாக்கை பார்க்கவும்)

இதுக்கு பிறகு நான் எதாஅவ்து சொன்னாலும் நீங்க கேக்குற மூட்`அல் இருக்க மாட்டீங்கனு எனக்கு தெரியும். எனவே, அடுத்த பதிவுல சந்திப்போம். வரட்டா....


47 comments:

  1. இனிய மாலை வணக்கம் பாஸ்!

    நல்லத் தானே போய்க் கிட்டிருந்திச்சு;-)))

    ReplyDelete
  2. உலக வரலாற்றை படித்துப் பார்க்கும் போது ஒன்று மட்டும் தெளிவாக தெரியும். (அப்போ 2,3,4 எல்லாம் மங்களாகவா தெரியும்??) அதாவது நிலைத்து நிற்க வேண்டுமாயின் ( இரண்டு காலும் நல்லா இருக்கனும்) காலத்திற்கு ஏற்ப எங்களை நான் மாற்றிக் கொள்ள வேண்டும். அதாவது “தக்கன பிழைத்தல்”னு சொல்வாங்க..//


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
    விஞ்ஞானத்தையும் மொக்கையினையும் எப்படி நம்ம தலைவர் ஒப்பிடுறார் பாருங்கள் ஜனங்களே!

    இவர் தான் உலக மகா விஞ்ஞானி!

    அண்ணன் பாயிக் வாழ்க

    ReplyDelete
  3. இது பதிவுலகத்திற்கு ரொம்ப பொருந்தும். (யோவ்.. கில்மா பதிவு போட்டாலே நிலைச்சுடலாம்யா...) பதிவுகில் கடந்த காலங்களில் அதிக மாற்றங்கள் நடந்து வருவதும் பாராட்டத்தக்கதும் சந்தோசத்துக்குரியதுமாக இருக்கின்றது. //

    அண்ணன் ஐடியாமணியின் டவுசரை உருவிய தல வாழ்க;-)))

    எப்பூடி கோர்த்து விடுவமில்லே.

    ReplyDelete
  4. அடப் பாவிங்களா...செவ்வாயிற்கு உள்ள ஆங்கில அர்த்தத்தை வைச்சு சாக்கிலேட்டிற்கு மேல தண்ணீர் குவளையை வைச்சு கொல வெறியோட
    வாறீங்களே;-)))

    ஹா...ஹா...

    ReplyDelete
  5. @ நிரூபன் said...

    ///இனிய மாலை வணக்கம் பாஸ்!///

    இனிய மாலை வணக்கம் பாஸ்..

    ///நல்லத் தானே போய்க் கிட்டிருந்திச்சு;-)))///

    அதுல என்ன சந்தேகம்??

    ReplyDelete
  6. ///அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
    விஞ்ஞானத்தையும் மொக்கையினையும் எப்படி நம்ம தலைவர் ஒப்பிடுறார் பாருங்கள் ஜனங்களே!

    இவர் தான் உலக மகா விஞ்ஞானி!

    அண்ணன் பாயிக் வாழ்க ////

    நன்றி அய்யா.. நன்றி..
    இதுக்கே இப்படி புகழ்ந்தா எப்படி??? இன்னும் எவ்வளவு ஆராய்ச்சி பண்ணி வச்சிருக்கேன்..

    ReplyDelete
  7. @ நிரூபன் said...

    ///இது பதிவுலகத்திற்கு ரொம்ப பொருந்தும். (யோவ்.. கில்மா பதிவு போட்டாலே நிலைச்சுடலாம்யா...) பதிவுகில் கடந்த காலங்களில் அதிக மாற்றங்கள் நடந்து வருவதும் பாராட்டத்தக்கதும் சந்தோசத்துக்குரியதுமாக இருக்கின்றது. //

    அண்ணன் ஐடியாமணியின் டவுசரை உருவிய தல வாழ்க;-)))

    எப்பூடி கோர்த்து விடுவமில்லே.//

    ஆஹா..!!! அவர் இப்போத்தான் சபதம் எடுத்திருக்காரு.. இனிமேல் சண்டையெல்லாம் பிடிக்க மாட்டாராம்...

    ReplyDelete
  8. ///நிரூபன் said...

    அடப் பாவிங்களா...செவ்வாயிற்கு உள்ள ஆங்கில அர்த்தத்தை வைச்சு சாக்கிலேட்டிற்கு மேல தண்ணீர் குவளையை வைச்சு கொல வெறியோட
    வாறீங்களே;-)))

    ஹா...ஹா...
    ////

    என்ன செய்ய... நம்மளுக்கும் டைம் பாஸ் ஆகனுமுள்ள...

    ReplyDelete
  9. அப்போ நம்ம அடுத்த ஜெனரேசன் செவ்வாய்லதான்னு சொல்லுங்க

    ReplyDelete
  10. hey loose !! y u r wasting our time to put this kind of worst postings !!! I impressed with ur title but I abused after read !!

    ReplyDelete
  11. நேத்து வரைக்கும் நல்லாதான்யா போய்ட்டு இருந்துச்சு?

    ReplyDelete
  12. @ வைரை சதிஷ் said...

    //// அப்போ நம்ம அடுத்த ஜெனரேசன் செவ்வாய்லதான்னு சொல்லுங்க///

    ஆமா.. போயிட வேண்டியதுதான்... குடி நீர் இருக்குல்ல.. அதுவும் கிளாஸ்`லயே ஊற்றி வெச்சிருக்கே!!!

    ReplyDelete
  13. @ KOPURAM RAJA said...

    /// hey loose !! y u r wasting our time to put this kind of worst postings !!! I impressed with ur title but I abused after read !!//

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. நீங்க வலையுலகுக்கு புதுசு`னு நினைக்கிறேன். இப்படியெல்லாம் தலைப்பு வைக்காம இருந்தா நாம எப்படி முன்னுக்கு வர்ரது??

    ReplyDelete
  14. @ சி.பி.செந்தில்குமார் said...

    // நேத்து வரைக்கும் நல்லாதான்யா போய்ட்டு இருந்துச்சு?////

    ஆமா அண்ணா.. ஒரு சண்டை இல்ல, சச்சரவு இல்ல... ரொம்ப போரடிக்குது...

    ReplyDelete
  15. என்லாமே நல்ல தான் இருக்கு, ஆனா டேஷ்போர்ட் ல தலைப்பு பாத்துட்டு யாரோ விஞ்ஞானி எழுதினது எண்டு ஸ்கிப் பண்ணிட்டு போயிட்டேன் அப்புறம் ப்ளாக் பெயர் பாத நம்ம உள்ளூர் விஞ்ஞானி எழுதி இருக்காரு,


    சிபி ய தாளிக்காம விடுடின்களே:( வருத்தமா இருக்கு


    நான் இண்டைக்கு நான்ஜில் மனோ வா தாளிக்க போறேன் வந்து பாருங்க

    ReplyDelete
  16. யோவ்..முட்டை ஆப்பம் படம் போட்டுட்டு ப்ளுடோவா...?

    ReplyDelete
  17. ஐயா.,

    அப்படியே தங்கள் ஆராய்ச்சியை
    விரிவு படுத்தி.. இந்த சூரியன்., Venus,
    Mercury, Jupitor இதிலெல்லாம் கூட
    தண்ணீர் இருக்கிறதா என்று கண்டுபிடித்து
    சொல்லவும்..

    இப்படிக்கு.,

    உங்கள் அறிவை கண்டு மெய்மறந்து
    தன் பெயரையே மறந்து போன
    ஒரு அப்பாவி..!!

    ReplyDelete
  18. யோவ்..முட்டை ஆப்பம் படம் போட்டுட்டு ப்ளுடோவா...? //

    எப்படி கண்டுபிடிச்சிங்க பாஸ்

    ReplyDelete
  19. @ KOPURAM RAJA said...

    // hey loose !! y u r wasting our time to put
    this kind of worst postings !!! I impressed
    with ur title but I abused after read !! //


    சார்.. சொல்றேன்னு தப்பா
    நினைக்காதீங்க..

    கண்ணுக்கு முன்னாடி ஒரு நல்ல
    காமெடி இருக்கு.. அதை ரசிக்காம
    எங்கேயோ இருக்குற நிலாவுல
    தண்ணி இருக்கான்னு தெரிஞ்சிக்கிட்டு
    என்ன சார் பண்ண போறீங்க..?!

    ReplyDelete
  20. இதுதான் எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே...... (நாங்கதான் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனின்னு எல்லா கெழமைலேயும் தண்ணி அடிச்சிருக்கோமே.....)

    ReplyDelete
  21. என்னவோ...ஏதோன்னு பதரியடிச்சு ஓடி வந்தால்...
    இப்படி கவத்துட்டீங்களே boss
    sorry...
    கலக்கிட்டீங்களே....

    ReplyDelete
  22. ப்லூடோவா மறுபடியும் யாருய்யா கெரகத்துல சாரி கிரகத்துல சேத்ததுன்னு கும்மிட்டு போக வந்தா சப்புன்னு ஆயிரிச்சு. மொக்க போடுறதுன்னு ஆரம்பிச்சிட்டீங்க, இனி சொன்னா கேக்கவா போறீங்க, வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  23. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //இதுதான் எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே...... (நாங்கதான் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனின்னு எல்லா கெழமைலேயும் தண்ணி அடிச்சிருக்கோமே.....)//

    சனி மட்டும்னுல்ல நெனச்சேன்..

    ReplyDelete
  24. இதான் விஞ்ஞான மொக்கையோ பாஸ்

    ReplyDelete
  25. என்னா அறிவு என்னா அறிவு.... மொத்தல்ல சுத்தி போட சொல்லுங்க

    ReplyDelete
  26. இது தான் அறிவியல் ....
    இது தான் கண்டுபிடிப்பு ....
    நோபல் பரிசு என்ன ஆகபோவுதோ ????

    ReplyDelete
  27. @ HajasreeN said...

    // என்லாமே நல்ல தான் இருக்கு, ஆனா டேஷ்போர்ட் ல தலைப்பு பாத்துட்டு யாரோ விஞ்ஞானி எழுதினது எண்டு ஸ்கிப் பண்ணிட்டு போயிட்டேன் அப்புறம் ப்ளாக் பெயர் பாத நம்ம உள்ளூர் விஞ்ஞானி எழுதி இருக்காரு,///

    நாங்கெல்லாம் வில்லேஜ் விஞ்ஞானி'னு ஒரு தனி பதிவே இட்டிருக்கேனே!! பார்க்கலையா..

    ReplyDelete
  28. @ ரெவெரி said...

    //யோவ்..முட்டை ஆப்பம் படம் போட்டுட்டு ப்ளுடோவா...//

    ப்ளூட்டோ'வ வச்சி என்ன பண்ண போறீங்க.. முட்டை ஆப்பம்'ந சாப்டவாலும் முடியுமுள்ள..

    ReplyDelete
  29. @ வெங்கட் said...

    /// ஐயா.,

    அப்படியே தங்கள் ஆராய்ச்சியை
    விரிவு படுத்தி.. இந்த சூரியன்., Venus,
    Mercury, Jupitor இதிலெல்லாம் கூட
    தண்ணீர் இருக்கிறதா என்று கண்டுபிடித்து
    சொல்லவும்..

    இப்படிக்கு.,

    உங்கள் அறிவை கண்டு மெய்மறந்து
    தன் பெயரையே மறந்து போன
    ஒரு அப்பாவி..!!//

    என் ஆராய்ச்சிக்கு இவ்வளவு ஆதரவு இருக்கும்'நு தெரிஞ்சிருந்தா கட்டாயம் முயற்சி பண்ணி இருப்பேன்.

    ReplyDelete
  30. @ வெங்கட் said...

    /// @ KOPURAM RAJA said...

    // hey loose !! y u r wasting our time to put
    this kind of worst postings !!! I impressed
    with ur title but I abused after read !! //


    சார்.. சொல்றேன்னு தப்பா
    நினைக்காதீங்க..

    கண்ணுக்கு முன்னாடி ஒரு நல்ல
    காமெடி இருக்கு.. அதை ரசிக்காம
    எங்கேயோ இருக்குற நிலாவுல
    தண்ணி இருக்கான்னு தெரிஞ்சிக்கிட்டு
    என்ன சார் பண்ண போறீங்க..?!//

    கரக்டா சொன்னீங்க தல... ரொம்ப நன்றி...

    ReplyDelete
  31. @ "என் ராஜபாட்டை"- ராஜா said...

    // Super//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  32. @ பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ///இதுதான் எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே...... (நாங்கதான் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனின்னு எல்லா கெழமைலேயும் தண்ணி அடிச்சிருக்கோமே.....)///

    இப்படி வேறு இருக்கா... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..

    ReplyDelete
  33. @ Dr. Butti Paul said...

    //ப்லூடோவா மறுபடியும் யாருய்யா கெரகத்துல சாரி கிரகத்துல சேத்ததுன்னு கும்மிட்டு போக வந்தா சப்புன்னு ஆயிரிச்சு. மொக்க போடுறதுன்னு ஆரம்பிச்சிட்டீங்க, இனி சொன்னா கேக்கவா போறீங்க, வாழ்த்துக்கள்.///

    இருந்தாலும் உங்க அளவுக்கு நம்மளால முடியாதப்பூ...

    ReplyDelete
  34. @ K.s.s.Rajh said...

    ///இதான் விஞ்ஞான மொக்கையோ பாஸ்///

    ஆமா... ஏற்கனவே, கணிதம், வரலாறு'னு போட்டாச்சு.. இப்போ வானியல்..

    ReplyDelete
  35. @ அருண் பிரசாத் said...

    /// என்னா அறிவு என்னா அறிவு.... மொத்தல்ல சுத்தி போட சொல்லுங்க///

    மண்டைல'யா?

    ReplyDelete
  36. @ NAAI-NAKKS said...

    /// இது தான் அறிவியல் ....
    இது தான் கண்டுபிடிப்பு ....
    நோபல் பரிசு என்ன ஆகபோவுதோ ???//

    ஆமா பாஸ்.. இந்த வருடம் நோபல் பரிசா என்னைத் தவிர வேறு யாருக்களும் குடுத்திருக்கணும்... நடக்குறதே வேற..

    ReplyDelete
  37. //சரி இவ்வளவு மேட்டர் நடக்கும் போது, நாமளும் எதாவது உருப்பட்டியா பண்னனுமே`னு மனசுல ஒரே குடைச்சல்.. //

    எங்கேயோ ஆரம்பிச்சு, எங்கேயோ போயிட்டீங்களே
    அறிவியல் சம்பந்தமான பதிவுனு நம்பி வந்தா டகால்டி வேலைய காட்டிட்டிங்களே நன்பா...
    anyhow i enjoyed it...

    ReplyDelete
  38. உலக விஞ்ஞானிகளெல்லாம் இப்ப உங்க வீட்டு வாசலில கியூவாமே...

    ReplyDelete
  39. ஆஹா இப்படியொரு மொக்கையா,, ஏதோ அறிவியல பத்தித்தான் அண்ணன் சொல்லப்போறாருன்னு வந்தா,,

    but very interesting.. keep it up

    ReplyDelete
  40. @ விஜயன் said...

    //சரி இவ்வளவு மேட்டர் நடக்கும் போது, நாமளும் எதாவது உருப்பட்டியா பண்னனுமே`னு மனசுல ஒரே குடைச்சல்.. //

    //// எங்கேயோ ஆரம்பிச்சு, எங்கேயோ போயிட்டீங்களே
    அறிவியல் சம்பந்தமான பதிவுனு நம்பி வந்தா டகால்டி வேலைய காட்டிட்டிங்களே நன்பா...
    anyhow i enjoyed it...///

    வருகைக்கு நன்றி நண்பா.. உங்கள் பதிவுகளை படித்திருக்கிறேன். அருமையான பதிவுகள். அந்தளவு சூப்பரா எழுத முடியும்`னா நாம எதுக்கு மொக்கை போடுறோம்???

    ReplyDelete
  41. @ த. ஜார்ஜ் said...

    ///உலக விஞ்ஞானிகளெல்லாம் இப்ப உங்க வீட்டு வாசலில கியூவாமே...///

    ஆமா... கைல ஆயுதங்களோட...

    ReplyDelete
  42. @ Riyas said...

    ///ஆஹா இப்படியொரு மொக்கையா,, ஏதோ அறிவியல பத்தித்தான் அண்ணன் சொல்லப்போறாருன்னு வந்தா,,

    but very interesting.. keep it up//

    நம்ம பதிவுல அறிவியல????
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  43. வணக்கம் மாப்பிள
    நானும் ஏதோ செவ்வாயில தண்ணியடிச்சிட்டிங்களோன்னு ஓடி வந்தேங்க இப்படி பல்பு குடுக்கிறீங்களே நல்லாவா இருக்கையா..? 

    ReplyDelete
  44. அட இவ்வளவு காலமும் உங்கள கவனிக்காம விட்டுட்டேனே பின்ன மைனஸ் ஓட்டெல்லாம் வாங்கி இருக்கீங்க அப்ப நீங்க ரெம்ப பெரிய ஆளுதான் போங்க...ஹி ஹி 

    ReplyDelete
  45. தமிழ் மணம்10 ஹி ஹி இப்பிடி சொன்னாதான் விளங்குமாம் உண்மையா மாப்பிள...!!??

    ReplyDelete
  46. @ காட்டான் said...

    /// வணக்கம் மாப்பிள
    நானும் ஏதோ செவ்வாயில தண்ணியடிச்சிட்டிங்களோன்னு ஓடி வந்தேங்க இப்படி பல்பு குடுக்கிறீங்களே நல்லாவா இருக்கையா..? ///

    முதல் முதலா வந்திருக்கீங்க.. தண்ணி கூட குடுக்காம அனுப்ப முடியுமா????

    ReplyDelete
  47. @ காட்டான் said...

    //அட இவ்வளவு காலமும் உங்கள கவனிக்காம விட்டுட்டேனே பின்ன மைனஸ் ஓட்டெல்லாம் வாங்கி இருக்கீங்க அப்ப நீங்க ரெம்ப பெரிய ஆளுதான் போங்க...ஹி ஹி ///

    ஆமா பாஸ்.. அந்த மைனஸ் ஓட்ட பாத்ததும்தான் நாமளும் பிரபல பதிவராயிட்டோமோ`னு ஒரு பெருமை வந்திருக்கு...

    ReplyDelete