இன்றைய தினத்துல இலங்கைல ”புன்னகையே வாழ்க்கை” ப்லாக் ஓனருக்கு அடுத்த படியாக ஒரு பிரபல்யமான பெற்ற, எல்லா பத்திரிகைகளிலும் பெயர் அடி படக்கூடிய, எல்லோரும் தேடக்கூடிய ஒரு நபர் இருப்பாரு`னு சொன்னா, அது மஹிந்த ராஜபக்சயோ அல்லது குமார் சங்கக்காரவோ கிடையாது. இந்த எல்லா புகலும் “கிரீஸ் கள்ளனையே” சேரும்.சிங்களவர்கள் மத்தியில் கிரீஸ் பேய் என அறிமுகம் ஆகியுள்ளது.
ஒவ்வொருத்தரும் பீதியில் வெடவெடத்துக் கொண்டிருக்க, நமக்கும் பயத்துக்கும் ரொம்ப தூரம்`குறதால, நமக்கு திருடன் பிடிக்க போன அனுபவமும் இருப்பதால (இரும்புக் கோட்டை கோழித் திருடன்), நாமும் கிரீஸ் கள்ளன் பற்றிய நம்ம அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம்னு....... (வெளி நாட்ல போய் குந்தினதும் எப்படிய்யா உங்களுக்கு இவ்ளோ தில் வருது??)
கிரீஸ் கள்ளன் பற்றிய கதைகள் இலங்கையில் ஒரு புதிய விடயமல்ல. கிரீஸ்`னு ஒரு Item இருக்கு, அது கருப்பா(பாவித்தது), வழுவழுப்பா இருக்கும்`னு தெரிஞ்ச காலத்துல இருந்து இது போன்ற கதைகளும் இருந்து வருகின்றன.
சுமார் 6 வருடத்துக்கு முன்னாடி கிரீஸ் கள்ளன் பீக் (Peak)'ல இருந்த சமயம், நானும் க்ரேஸியும் வீட்டு முன்னாடி இருந்து பேசிட்டு இருக்கோம்.(எவன் வீட்டுல ஆட்டைய போடலாம்னா???) தூரத்துல நம்ம நன்பன் டோலா வருவது தெரிந்தது. இவன் ”இன்று வெள்ளிக் கிழமை”னா கூட கலண்டர கண்ணால பாத்து கன்பார்ம் பண்ணாம நாம நம்புரது கிடையாது. அவ்ளோ பெரிய அண்டப் புழுகன். பாடசாலை வளாகத்தில் சுற்றிய ஏகப்பட்ட கட்டுக் கதைகளுக்கு இவனும், க்ரேஸியும்தான் ஏக போக உரிமையாளர்கள்.
செவ்வனே`னு வந்தவன் நம்மள பார்த்ததும் உஷாராகி
”மச்சி... மேட்டர் தெரியுமா????.. நம்ம ஏரியால ஒரு கிரீஸ் கள்ளனை புடிச்சிருக்கோம்ல... கருப்புனா அப்படி ஒரு கருப்புடா.... ”
”டேய்!! புழுகாத.. உண்மைய சொல்லு”
இதுக்கு பின்னாடி ஒரு கத சொன்னாங்க... ஷப்பா... முடியல....
”நான் எதுக்குடா புழுகனும்.. சும்மா இல்லடா... அடிச்சா கூட வலிக்குதே இல்லடா.. (உனக்கு எப்படிய்யா வலிக்கும்????.அவனுக்குள்ள வலிக்கும்)பப்பர் பந்து மாதிரி Bump ஆகுராண்டா”னு விட்டான் பாருங்க ஒரு பீலா......
நாம மேலும் கீழுமா, கேவலமா ஒரு லுக்கு விட, அவன் பாச்சா நம்ம கிட்ட பலிக்காது`னு புரிஞ்சுடுச்சு.. பிறகு,
”சரிடா மச்சி, சும்மாத்தான் சொன்னேன். அதுக்காக நீங்களும் ச்சும்மா இருக்காம நாலு பேரு கிட்ட போயி சொல்லுங்கடா.... அப்போதானே கதை காட்டுத்தீ போல பரவும்”
அடப்பாவிகளா!!!! இப்படி எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்கடா????
ஓட்டமாவடியில் பிடிக்கப் பட்ட கிரீஸ் கள்ளன் (அடின்னா அடி உஙக் வீட்டு எங்க வீட்டு அடி இல்ல...) |
இது போல்தான் சின்ன சின்ன விடயங்களும் மக்கள் வாய் பேச்சு மூலமாகவே பெரிதாக்கப் படுகின்றது. அதில் பாதி கட்டுக் கதைகளாகவே இருக்கும். இன்னும் சிலர் இந்தக் கட்டுக் கதைகளை, மக்களின் பீதியை சாதகமாக பாவித்து கொள்ளையடிக்க கிளம்பி விடுவர்.
இந்த கிரீஸ் கள்ளன் பெயரை பாவித்து தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வோரும், பகைகளை தீர்த்துக் கொள்வோருமே அதிகமாக இருப்பர்.
கண்டியில் பிடிக்கப்பட்ட கிரீஸ் கள்ளன் |
இன்னொரு இடத்தில், பிடிக்கப் பட்ட கிரீஸ் கள்ளனை பார்த்தால், அவன் பக்கத்து வீட்டுக் காரனாக இருந்திருக்கிறான். வீட்டை விட்டு விரட்ட, இன்னும் பல தேவைகளுக்காகவும் கிரீஸ் பேய்கள், கள்வர்கள் உருவாகிறார்கள்.
இதே போல் சில கையில் வினோதமான கூரிய ஆயுதத்துடன் வருவதாகவும், பெண்களையே தாக்குவதாகவும் செய்திகள் பரவுகின்றன. இதைக் கேட்டு சாதாரண திருடன் கூட, கூரிய ஆயுதங்களை பாவித்து கிரீஸ் கள்ளன் வேடத்திலே திருட இதை சந்தர்ப்பமாக பயன்படுத்தலாம்.
மலையத்தில் சில இடங்களில் கொலைகளும் நடந்திருக்கின்றன என்பதும் மறைக்க முடியாத உண்மையே!! இப்போது அனேகமான ஊர்களில் முன்ஜாக்கிரதையாக இருப்பதால், கிரீஸ் கள்ளன் வேடமிட்டு வந்த அனேகமானோர் நையப் புடைக்கப் பட்டுள்ளனர். சில இடங்களில் மாட்டியவர்களை போட்டு கும்மியதில் On the spot ஆள் Out.
இது போக, FaceBook`லயும் நிறைய கிரீஸ் கள்ளன்கள் உருவாகி காமெடி பண்ண்ட்டு இருக்கானுங்க..
கடைசியா நான் என்ன சொல்ல வர்ரேன்னா, உங்களுக்கும் யார் மீதாலும் கோவம், கடுப்பு இருந்தா, பக்கத்து வீட்டு கொடில காயுர நல்ல ஷர்ட்`அ, ஜீன்ஸ்`அ ஆட்டைய போடனும்னு ஆச இருந்தா, உங்க போட்டோ உயிருடனோ, பிணமாகவோ, பத்திரிகைல வரனும்னு ஆச இருந்தா இந்த சந்தர்பத்தை நன்கு பயன் படுத்திக் கொள்ளுங்கள். இப்போதே பக்கத்திலுள்ள ஒரு மெக்கானிக் ஷாப்`கு போய் பழைய கிரீஸ் டப்பா`வ வாங்கி வந்து வேலைய ஆரம்பிங்க... (ஹி..ஹி... வெளி நாட்டுல இருக்கோம்`ல... அந்த தில்லு...)
பதிவு நகைச்சுவை ததும்பக் கூடியதாக இருந்தாலும், காத்திரமாகவுள்ளது, பாராட்டுக்கள்.
ReplyDeleteரசனையான பதிவு. வாழ்த்துக்கள்
ReplyDelete/இவன் ”இன்று வெள்ளிக் கிழமை”னா கூட கலண்டர கண்ணால பாத்து கன்பார்ம் பண்ணாம நாம நம்புரது கிடையாது. //
ReplyDeleteROFL :))
கிரீஸ் கள்ளன்னா யாரு ?
ReplyDeleteஎப்படியோ ரொம்ப ரசிச்சுப் படிச்சேங்க.. நல்லா இருக்கு..
நல்ல பதிவு நண்பரே வாழ்த்துகள்
ReplyDeleteகள்ள பதிவு அருமை
ReplyDeleteகிரீஸ் கள்ளனை பற்றி உங்கள் பதிவு மூலமா நிறைய அறியகூடியதாக இருந்தது.
ReplyDeleteநண்டு நொரண்டு என்பவரின் பதிவில் உங்கள் கருத்து அருமை. பாராட்டுக்கள்.
வெளிநாட்டுள்ள இருக்கிற....தில்லு....ஐந்து நாட்களாக இவன்ட தொல்லையால..... அச்சத்திலேயே மூழ்கி கிடக்கு எங்கள் பிரதேசம்....பாஸ்......
ReplyDeleteவணக்கம் பாஸ்,
ReplyDeleteகிரிஸ் கள்ளனை வைத்து செம காமெடி பண்ணியிருக்கிறீங்க.
நம்ம ஊருக்கு வெள்ளைவேன் பீதி முடிஞ்ச பின்னாடி,
இவங்க வருவாங்க என்று பார்த்தா..
இன்னமும் காணலை பாஸ்.
கிழக்கு மாகாணத்தையும், மலையகத்தையும் இம் முறை பட படக்க வைப்போம் என்று கிரீஸ் பேய்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.
கிரீஸ் கள்ளன் பற்றி புட்டு புட்டு வைத்திருக்கிறீங்க! தெளிவான பதிவு.
ReplyDeleteMHM Nimzath said...
ReplyDeleteவெளிநாட்டுள்ள இருக்கிற....தில்லு....ஐந்து நாட்களாக இவன்ட தொல்லையால..... அச்சத்திலேயே மூழ்கி கிடக்கு எங்கள் பிரதேசம்....பாஸ்......//
யாழ்ப்பாணத்தில சும்மா கள்ளனுக்கே விழிப்பு குழு போட்டு முழிச்சிருந்த நாங்கள். உங்க பயம் விளங்குது.
மத்திய மாகாண மக்கள் ரொம்பும் பாதிக்கப்பட்ட ஒரு விடயம் இந்த மர்ம மனிதன். இதில் பாதி வதந்திய்யேயனாலும் பல உண்மையன் சம்பவங்களும் உள்ளன. அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது தான் மக்கள் மத்தியில் இன்னம் குழப்பம் உண்டாக காரணமாக உள்ளது.
ReplyDeleteKANA VARO said...
ReplyDeleteபுரிந்து கொண்டால் சரி.
@ ஈழவன் said...
ReplyDelete//// பதிவு நகைச்சுவை ததும்பக் கூடியதாக இருந்தாலும், காத்திரமாகவுள்ளது, பாராட்டுக்கள்///
உண்மைதான்... பாதிக்கப் பட்டவர்களின் நிலமை ரொம்ப மோசம். ஒரு சில அப்பாவி உயிர்களும் இழக்கப் பட்டுள்ளது.
@ கோமாளி செல்வா said...
ReplyDelete///கிரீஸ் கள்ளன்னா யாரு ?////
அதுதானே எங்களுக்கும் புரியல... மொத்த இலங்கையர்களும் தேடிட்டு இருக்காங்க...
@ நிலாரசிகன் said...
ReplyDelete//// நல்ல பதிவு நண்பரே வாழ்த்துகள்////
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@ கவி அழகன் said...
ReplyDelete/// கள்ள பதிவு அருமை////
நன்றி கவிஞரே!!!
@ baleno said...
ReplyDelete//// கிரீஸ் கள்ளனை பற்றி உங்கள் பதிவு மூலமா நிறைய அறியகூடியதாக இருந்தது.///
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
/// நண்டு நொரண்டு என்பவரின் பதிவில் உங்கள் கருத்து அருமை. பாராட்டுக்கள்.////
என்ன செய்ய.. பதிவு`னு நெனச்சதயெல்லாம் எழுதி கடுப்பேத்துராணுங்க...
@ MHM Nimzath said...
ReplyDelete///வெளிநாட்டுள்ள இருக்கிற....தில்லு....ஐந்து நாட்களாக இவன்ட தொல்லையால..... அச்சத்திலேயே மூழ்கி கிடக்கு எங்கள் பிரதேசம்....பாஸ்......///
கேள்விப் பட்டேன். கள்ளன் அகப்பட்டா சும்மா விட்ராதீங்க....
@ நிரூபன்..
ReplyDeleteமலையக மக்களுக்கும் ஏதாவது த்ரில் வேணுமுள்ள... அதுதான் அரசாங்கமே ஏற்பாடு பண்ணியிருக்கு போலும்...
@ KANA VARO
ReplyDelete//கிரீஸ் கள்ளன் பற்றி புட்டு புட்டு வைத்திருக்கிறீங்க! தெளிவான பதிவு. ///
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
///யாழ்ப்பாணத்தில சும்மா கள்ளனுக்கே விழிப்பு குழு போட்டு முழிச்சிருந்த நாங்கள். உங்க பயம் விளங்குது. ////
இப்படி ஒரு விசயத்துலயாலும் ஊர் ஒன்னு சேரட்டுமே!!
@ MSham said...
ReplyDelete///அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது தான் மக்கள் மத்தியில் இன்னம் குழப்பம் உண்டாக காரணமாக உள்ளது.///
செய்வதே அரசாங்கமாக இருக்கும் போது, நடவடிக்கை எடுப்பது எப்படி/???
கிரிஸ் கள்ளன் யார்ன்னு தெரியல, ஆனா பதிவு நன்றாக இருந்தது.
ReplyDeleteதெளிவான பதிவு.
ReplyDeleteஓ க்ரீஸ் தடவி கொள்ளை அடிக்கிறவந்தா கிரீஸ் கள்ளனா.... நகைச்சுவை நடையில் உங்கள் பதிவி க்ரீஸ் கள்ளர்கள் உலா வந்தனர் வாழ்த்துக்கள்
ReplyDeleteMohamed Faaique
ReplyDelete// கேள்விப் பட்டேன். கள்ளன் அகப்பட்டா சும்மா விட்ராதீங்க....//
பிடி பர்ரானே இல்ல....பிடி பட்டா......On the spot ஆள் Out தான்... ஏன் என்றால் எத்தனை நாட்களாக எங்கட கண்களில் விரல் விட்டுஆட்டி இருக்காரு .....இவர பிடிச்சா சும்மாவா விடுவோம்........
பதிவு காமெடியா இல்லையா எண்டது இருக்கட்டும்..
ReplyDelete//
இன்றைய தினத்துல இலங்கைல ”புன்னகையே வாழ்க்கை” ப்லாக் ஓனருக்கு அடுத்த படியாக ஒரு பிரபல்யமான பெற்ற, எல்லா பத்திரிகைகளிலும் பெயர் அடி படக்கூடிய, எல்லோரும் தேடக்கூடிய ஒரு நபர் இருப்பாரு`னு சொன்னா, //
செம காமெடி பாஸ்...
கிறீஸ் மனிதனே ஒரு டுபாக்கூர் அவனுக்கு ஈகுவலா உங்களையும் சொன்னீங்க பாருங்க... ஹி ஹி உங்கை நேர்மை பிடிச்சிருக்கு பாஸ்..
>நாங்களும் சீரியசா சில விசயங்கல் பேசிரிக்கோம்<
http://aiasuhail.blogspot.com/2011/08/25.html
@ Ahamed Suhail said...
ReplyDeleteஅட வாங்க சார்... நான் லின்க் குடுத்துடு வந்தா, இங்க நிங்க லின்க் குடுத்திருக்கீங்க...
//கிறீஸ் மனிதனே ஒரு டுபாக்கூர் அவனுக்கு ஈகுவலா உங்களையும் சொன்னீங்க பாருங்க... ஹி ஹி உங்கை நேர்மை பிடிச்சிருக்கு பாஸ்..///
அரசியல்`ல இதெல்லாம் சகஜமப்பா.....
ஆமா சார் நாங்க அப்பவே வந்துட்டு போயிட்டம்..
ReplyDeleteநீங்க நம்பமாட்டீங்க எண்டுதான்... தடையங்களையும் விட்டுட்டு போயிருந்தம்
@ Ahamed Suhail said...
ReplyDelete//நீங்க நம்பமாட்டீங்க எண்டுதான்... தடையங்களையும் விட்டுட்டு போயிருந்தம்///
தடயங்களை விட்டுடு போயிருந்தா பரவால்ல.. கும்மு கும்மு`னு கும்மிடுள்ள போயிருக்கீங்க...
நல்ல தெளிவான பதிவு
ReplyDeleteவணக்கம் மச்சி,
ReplyDeleteஎன் டாஷ்போர்ட்டில் உங்கள் பதிவு இன்று வெளியானது போன்று காட்டுகிறது.
தமிழ் மணமும் இப்போ உங்கள் பதிவுகளுக்கு ஒர்க் ஆகிறது.
அழகான நகைசுவை பதிவு
ReplyDeleteதமிழ்மணம் 2 ed vote
ReplyDelete///வணக்கம் மச்சி,
ReplyDeleteஎன் டாஷ்போர்ட்டில் உங்கள் பதிவு இன்று வெளியானது போன்று காட்டுகிறது.
தமிழ் மணமும் இப்போ உங்கள் பதிவுகளுக்கு ஒர்க் ஆகிறது///
அதுதான் எனக்கும் புரியல...
@ "என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDelete///அழகான நகைசுவை பதிவு///
//தமிழ்மணம் 2 ed vote ////
வருகைக்கும் கருத்துக்கும், ஓட்டுக்கும் நன்றி
Tamilmanam 3rd vote
ReplyDeleteநல்ல நகைச்சுவையாகவும் அருமையாகவும் இருந்தது..
ReplyDeleteகொய்யாலே நக்கல பாரு..
ReplyDelete