இன்றைய தினத்துல இலங்கைல ”
புன்னகையே வாழ்க்கை” ப்லாக் ஓனருக்கு அடுத்த படியாக ஒரு பிரபல்யமான பெற்ற, எல்லா பத்திரிகைகளிலும் பெயர் அடி படக்கூடிய, எல்லோரும் தேடக்கூடிய ஒரு நபர் இருப்பாரு`னு சொன்னா, அது மஹிந்த ராஜபக்சயோ அல்லது குமார் சங்கக்காரவோ கிடையாது. இந்த எல்லா புகலும் “கிரீஸ் கள்ளனையே” சேரும்.சிங்களவர்கள் மத்தியில் கிரீஸ் பேய் என அறிமுகம் ஆகியுள்ளது.
ஒவ்வொருத்தரும் பீதியில் வெடவெடத்துக் கொண்டிருக்க, நமக்கும் பயத்துக்கும் ரொம்ப தூரம்`குறதால, நமக்கு திருடன் பிடிக்க போன அனுபவமும் இருப்பதால (
இரும்புக் கோட்டை கோழித் திருடன்), நாமும் கிரீஸ் கள்ளன் பற்றிய நம்ம அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம்னு.......
(வெளி நாட்ல போய் குந்தினதும் எப்படிய்யா உங்களுக்கு இவ்ளோ தில் வருது??)
கிரீஸ் கள்ளன் பற்றிய கதைகள் இலங்கையில் ஒரு புதிய விடயமல்ல. கிரீஸ்`னு ஒரு Item இருக்கு, அது கருப்பா(பாவித்தது), வழுவழுப்பா இருக்கும்`னு தெரிஞ்ச காலத்துல இருந்து இது போன்ற கதைகளும் இருந்து வருகின்றன.
சுமார் 6 வருடத்துக்கு முன்னாடி கிரீஸ் கள்ளன் பீக் (Peak)'ல இருந்த சமயம், நானும் க்ரேஸியும் வீட்டு முன்னாடி இருந்து பேசிட்டு இருக்கோம்.
(எவன் வீட்டுல ஆட்டைய போடலாம்னா???) தூரத்துல நம்ம நன்பன் டோலா வருவது தெரிந்தது. இவன் ”இன்று வெள்ளிக் கிழமை”னா கூட கலண்டர கண்ணால பாத்து கன்பார்ம் பண்ணாம நாம நம்புரது கிடையாது. அவ்ளோ பெரிய அண்டப் புழுகன். பாடசாலை வளாகத்தில் சுற்றிய ஏகப்பட்ட கட்டுக் கதைகளுக்கு இவனும், க்ரேஸியும்தான் ஏக போக உரிமையாளர்கள்.
செவ்வனே`னு வந்தவன் நம்மள பார்த்ததும் உஷாராகி
”மச்சி... மேட்டர் தெரியுமா????.. நம்ம ஏரியால ஒரு கிரீஸ் கள்ளனை புடிச்சிருக்கோம்ல... கருப்புனா அப்படி ஒரு கருப்புடா.... ”
”டேய்!! புழுகாத.. உண்மைய சொல்லு”
இதுக்கு பின்னாடி ஒரு கத சொன்னாங்க... ஷப்பா... முடியல....
”நான் எதுக்குடா புழுகனும்.. சும்மா இல்லடா... அடிச்சா கூட வலிக்குதே இல்லடா..
(உனக்கு எப்படிய்யா வலிக்கும்????.அவனுக்குள்ள வலிக்கும்)பப்பர் பந்து மாதிரி Bump ஆகுராண்டா”னு விட்டான் பாருங்க ஒரு பீலா......
நாம மேலும் கீழுமா, கேவலமா ஒரு லுக்கு விட, அவன் பாச்சா நம்ம கிட்ட பலிக்காது`னு புரிஞ்சுடுச்சு.. பிறகு,
”சரிடா மச்சி, சும்மாத்தான் சொன்னேன். அதுக்காக நீங்களும் ச்சும்மா இருக்காம நாலு பேரு கிட்ட போயி சொல்லுங்கடா.... அப்போதானே கதை காட்டுத்தீ போல பரவும்”
அடப்பாவிகளா!!!! இப்படி எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்கடா????
 |
ஓட்டமாவடியில் பிடிக்கப் பட்ட கிரீஸ் கள்ளன் (அடின்னா அடி உஙக் வீட்டு எங்க வீட்டு அடி இல்ல...) |
இது போல்தான் சின்ன சின்ன விடயங்களும் மக்கள் வாய் பேச்சு மூலமாகவே பெரிதாக்கப் படுகின்றது. அதில் பாதி கட்டுக் கதைகளாகவே இருக்கும். இன்னும் சிலர் இந்தக் கட்டுக் கதைகளை, மக்களின் பீதியை சாதகமாக பாவித்து கொள்ளையடிக்க கிளம்பி விடுவர்.
இந்த கிரீஸ் கள்ளன் பெயரை பாவித்து தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வோரும், பகைகளை தீர்த்துக் கொள்வோருமே அதிகமாக இருப்பர்.
 |
கண்டியில் பிடிக்கப்பட்ட கிரீஸ் கள்ளன் |
இலங்கையின் பொலிஸ் மா அதிபர் வழங்கிய பேட்டியில், ஒரு பெண் கிரீஸ் பேயால் கழுத்து மிதிக்கப் பட்டதாக போலீஸில் புகார் குடுக்க, தீர விசாரித்ததில் தன் கனவனே குடித்து விட்டு கழுத்தை மிதித்ததாகவும், வெளியே சொல்ல முடியாததால் கிரீஸ் பேய் மிதித்தாக புகார் குடுத்தாகவும் வாக்களித்து இருக்கிறார்.
இன்னொரு இடத்தில், பிடிக்கப் பட்ட கிரீஸ் கள்ளனை பார்த்தால், அவன் பக்கத்து வீட்டுக் காரனாக இருந்திருக்கிறான். வீட்டை விட்டு விரட்ட, இன்னும் பல தேவைகளுக்காகவும் கிரீஸ் பேய்கள், கள்வர்கள் உருவாகிறார்கள்.
இதே போல் சில கையில் வினோதமான கூரிய ஆயுதத்துடன் வருவதாகவும், பெண்களையே தாக்குவதாகவும் செய்திகள் பரவுகின்றன. இதைக் கேட்டு சாதாரண திருடன் கூட, கூரிய ஆயுதங்களை பாவித்து கிரீஸ் கள்ளன் வேடத்திலே திருட இதை சந்தர்ப்பமாக பயன்படுத்தலாம்.
மலையத்தில் சில இடங்களில் கொலைகளும் நடந்திருக்கின்றன என்பதும் மறைக்க முடியாத உண்மையே!! இப்போது அனேகமான ஊர்களில் முன்ஜாக்கிரதையாக இருப்பதால், கிரீஸ் கள்ளன் வேடமிட்டு வந்த அனேகமானோர் நையப் புடைக்கப் பட்டுள்ளனர். சில இடங்களில் மாட்டியவர்களை போட்டு கும்மியதில் On the spot ஆள் Out.
இது போக, FaceBook`லயும் நிறைய கிரீஸ் கள்ளன்கள் உருவாகி காமெடி பண்ண்ட்டு இருக்கானுங்க..
கடைசியா நான் என்ன சொல்ல வர்ரேன்னா, உங்களுக்கும் யார் மீதாலும் கோவம், கடுப்பு இருந்தா, பக்கத்து வீட்டு கொடில காயுர நல்ல ஷர்ட்`அ, ஜீன்ஸ்`அ ஆட்டைய போடனும்னு ஆச இருந்தா, உங்க போட்டோ உயிருடனோ, பிணமாகவோ, பத்திரிகைல வரனும்னு ஆச இருந்தா இந்த சந்தர்பத்தை நன்கு பயன் படுத்திக் கொள்ளுங்கள். இப்போதே பக்கத்திலுள்ள ஒரு மெக்கானிக் ஷாப்`கு போய் பழைய கிரீஸ் டப்பா`வ வாங்கி வந்து வேலைய ஆரம்பிங்க...
(ஹி..ஹி... வெளி நாட்டுல இருக்கோம்`ல... அந்த தில்லு...)