சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல் வருமா? (அப்போ நரகத்துக்கு போய் பாரு...) என்பார்கள். வெளியூரில் இருந்து கொண்டு ஈத் பெருநாள் கொண்டாடும்???? இன்று நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. வெளியிடத்தில் ஈத் பெருநாள் கொண்டாடுவது??? இது மூன்றாவது முறை. முன்பு நன்பர்களுடன் இருந்ததால் தனிமை அவ்வளவாக புரியவில்லை (அந்த நன்பர்கள் ரொம்ப பாவம்..) . ஆனால் இந்த முறை வேலை விடயமாக குவைட் எல்லை பகுதிக்கு வந்து தனியாக மாட்டிக் கொண்டதில் ஊர் போக முடியவில்லை.
ஒவ்வொரு முறையும் பெருநாள் தினம் கொஞ்சம் நீளமாக இருந்தால் நல்லா இருக்குமே`னு நினைக்கும்.(அதுக்கு காலையிலேயே எழுந்திருக்கனும் ) இந்த முறை மட்டும் அவசரமாக முடிந்து மறந்து போய் விடக்கூடாதா?னு நினைக்கும் அளவு கொடுமையாக இருக்கிறது. (விடு..விடு ..ஊர்க்காரனாவது நிம்மதியா இருப்பானே!!!)
புத்தாடையில் குதூகளிக்கும் ஊர் மக்கள்,(எந்த வீட்டுக் கொடில எந்த dressஅ சுடலாம்`னு அன்றுதானே ப்ளான் பண்ணுவே!!) அனைவரினதும் புன்முறுவல் பூத்த முகங்கள், (ஊரே உன்ன பாத்து சிரிக்கும்`ங்குரத எப்படி சொல்ரான் பாரு..) எல்லோரிடமும் நட்பு பாராட்டி சுகம் விசாரித்தல்,(நீ கடன் வாங்கினத மறந்துட்டாங்களோ???) வருடக் கணக்கில் காண முடியாத முகங்களை காணக்கிடைத்தல், (மற்றைய நாட்களில் அவங்க முகமில்லாத முண்டங்களா`னு கேக்க கூடாது..) சொந்தங்களின் வருகை, நன்பர்களின் வருகை, (நீ இருக்குரது தெரிஞ்சும் வர்ராங்களா??? ) நம்மை நீங்கிச் சென்றவர்களின் கப்ருஸ்தான் சென்று நினைவு கூறுதல், (இறந்து போனவங்கள கூட நிம்மதியா இருக்க விட மாட்டியா????) பெருநாள் அன்பளிப்பு கேட்டு துரத்தும் உறவுக்காக குழந்தைகள் (நீதான் இது வர 5 பைசா குடுத்தது இல்லையே.. இன்னுமா துரத்துதுங்க..????) போன்ற நிறைய விடயங்களை இந்த வருடம் இழந்து விட்டேன்.
சார்! உங்களுக்கு ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்! இப்படியான ஃபெஸ்டிவல் டைம்ல ஊர்ல இருக்குற மாதிரி வருமா? உங்க ஆதங்கம் புரியுது சார்! மறுபடியும் ஈத் முபாரக் சார்!
ReplyDelete///சார்! உங்களுக்கு ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்! இப்படியான ஃபெஸ்டிவல் டைம்ல ஊர்ல இருக்குற மாதிரி வருமா? உங்க ஆதங்கம் புரியுது சார்! மறுபடியும் ஈத் முபாரக் சார்! ///
ReplyDeleteநன்றி அய்யா நன்றி...
இனிமேல் எப்பாடு பட்டாவது ஊருக்கு போயிடனும்`டு முடிவு பண்ணியிருக்கேன்.
வருகைக்கு நன்றி
உங்களுக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்புடன்
ஆ.ஞானசேகரன்
@ ஆ.ஞானசேகரன் said...
ReplyDelete/// உங்களுக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்!
அன்புடன்
ஆ.ஞானசேகரன்///
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பா...
நண்பருக்கு ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteரமலான் மற்றும் ஈகை திருநாள் வாழ்த்துகள்
ReplyDeleteகூகுள் மேப்பின் மூலம் உலகின் எந்த பகுதிக்கும் கார் ஓட்டலாம்
நண்பா.. ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்,,,
ReplyDeleteநம்ம கடையும் காலையிலயோ ஓபன்..
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
ReplyDeleteஇனிய ஈத் பெருநாள் வாழ்த்துக்கள் மொஹமது
இழப்புக்கள் நிரந்தரமல்லவே...
ReplyDeleteஇன்றைய கண்ணீர் நாளைய
ஆனந்தக் கண்ணீர்...
இதுதான்
என் மொழி...
புது மொழி...
Belated ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்...நண்பா...
ReplyDeleteஉங்கள் RSS feed சரி பண்ணுங்கள்...என் டஷ்போர்டில் நீங்கள் வரவில்லை...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteஎதிர்பார்ப்புகள் இருந்தால் தான் வாழ்க்கை வசந்தமாக இருக்கும் சகோதரா!
இனிய ஈதுல் ஃபித்ரு நல்வாழ்த்துக்கள்!!
@ baleno said...
ReplyDelete/// நண்பருக்கு ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.///
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி
@ stalin said...
ReplyDelete/// ரமலான் மற்றும் ஈகை திருநாள் வாழ்த்துகள் //
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி. உங்க பதிவு சூப்பர்
@ Riyas said...
ReplyDelete// நண்பா.. ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்,,,//
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி
’ //நம்ம கடையும் காலையிலயோ ஓபன்..//
இங்கு தனியாக இருந்து வேறு என்ன பண்ண???
@ கவி அழகன் said...
ReplyDelete/// சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
இனிய ஈத் பெருநாள் வாழ்த்துக்கள் மொஹமது//
சோதனைகளின் பின் சந்தோசம் இருக்கும்`னு நம்புவோம்..
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி
@ ரெவெரி said...
ReplyDelete/// Belated ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்...நண்பா..///
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
///உங்கள் RSS feed சரி பண்ணுங்கள்...என் டஷ்போர்டில் நீங்கள் வரவில்லை... //
என்ன`னு எனக்கும் புரியல.. பாக்குரேன்,
///அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteஎதிர்பார்ப்புகள் இருந்தால் தான் வாழ்க்கை வசந்தமாக இருக்கும் சகோதரா!
இனிய ஈதுல் ஃபித்ரு நல்வாழ்த்துக்கள்!! ///
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரரே!!
எதுக்கு 3 கலர்ல பதிவு. ஒரு வேளை உங்களுக்கு எல்லாமே 3 தானோ?
ReplyDeleteதாமதமான வருகைக்கு மன்னிக்கவும் மச்சி,
ReplyDeleteஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த ரம்ஸான் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,
ஈத் முபாரக் பாஸ்,
உண்மையில் சொந்தங்களைப் பிரிந்திருப்போர் பண்டிகைக் காலத்தில் படும் வேதனை கொடுமை தான் பாஸ்..
ReplyDeleteகவலை வேணாம் பாஸ், நிச்சயம் உங்களுக்கும் ஓர் நாளில் சொந்தங்களோடு இணைந்து கொண்டாடி மகிழும் வாய்ப்புக் கிடைக்கும்.
ஊரை விட்டுப் பிரிந்திருந்து நோன்பைக் கொண்டாடுவது, தொல்லைகள் பலவற்றிலிருந்து விடுபடுவதற்கு ஏற்றாற் போல அமைந்திருந்தாலும்,
ReplyDeleteஉறவுகளுடன் இணைந்திருந்து ஒரு விழாவினைக் கொண்டாடுவதில் வரும் சுகம் கிடைக்காது தானே பாஸ்?
வணக்கம் பாஸ்...!
ReplyDeleteஎனக்குத் தெரிந்து இப்போதெல்லாம் அனைவருக்கும் பின்னுாட்டும் பதிவர் நீங்கள்தான் என்று. எந்த பதிவுக்குச் சென்றாலும் உங்களைக் காண முடிகிறது. அதற்கு முதலில் வாழ்த்துக்கள்.
எனக்கு ரம்ஜான் என்றால் ஏக இறைவன் மீதான நம்பிக்கையும்- சகோதரத்துவமுமே ஞாபகத்துக்கு வரும். எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுடனான நட்பில் சகோதரத்துவமே அதிகமிருக்கிறது.
அதுதவிரவும், கூடியிருந்து பிரியாணி சாப்பிடுவதற்கும் நான் அடிமை. ஹிஹிஹி.
மீண்டும் வணக்கம் நண்பா,
ReplyDeleteஎன் பதிவில் இன்று உங்களை ஏனைய புதிய பதிவர்களுக்காக அறிமுகம் செய்திருக்கிறேன்.
ஓய்வாக இருக்கும் போது வாங்க.
மிகவும் பிந்திவந்து வாழ்த்துச் சொல்கின்றேன்! உறவுகளுடன் கொண்டாடும் ரம்லான் பண்டிகை சிறப்பு மிக்கது என்ன செய்வது கடமைகள் முக்கியம் என்பதால் தானே இடம் மாறியிருக்கிறீங்கள் கவலை வேண்டாம் இன்னொரு பண்டிகை உறவுகளுடன் கொண்டாடுங்கள்!
ReplyDeleteமிகவும் பிந்திவந்து வாழ்த்துச் சொல்கின்றேன்! உறவுகளுடன் கொண்டாடும் ரம்லான் பண்டிகை சிறப்பு மிக்கது என்ன செய்வது கடமைகள் முக்கியம் என்பதால் தானே இடம் மாறியிருக்கிறீங்கள் கவலை வேண்டாம் இன்னொரு பண்டிகை உறவுகளுடன் கொண்டாடுங்கள்!
ReplyDelete