Saturday, 28 May 2011

எங்கேயும் பல்பு


நமக்கு பல்பு வாங்குறது ஒன்னும் புதுசுல்ல... (அதுதான் உலகத்துக்கே தெரியுமே)
ஆனால், சின்ன பசங்க கிட்ட பல்பு வாங்கினா 
எப்படி இருக்கும்????? (வாங்குரதே பல்பு!!! அதுல சின்னது என்ன பெருசு என்ன???) எப்பவுமே அடுத்தவன் காலை வாரி விடுரதுல உள்ள இன்பமே தனி (நல்ல கொள்கை) . ஆனால், சமயத்துல பூமராங் போல் நம்மளுக்கு திரும்பி வந்து போட்டு தாக்கிடுது.... (எப்பவுமே அப்படிதானே நடக்குது??)


பல்பு I
தம்பியிடம் முகத்தை கர்ண கொடூரமாக வைத்துக்கொண்டு...(இயற்கையிலேயே அப்படித்தானே!!!)
(அப்படி பண்ணினால்தான் கொஞ்சமாலும் பயப்படுராணுங்க...)
நான்: ஏன்யா? அந்த இடத்துக்கு போனே???

தம்பி: என் ப்ரண்டு போனான், அதுதான் நானும் போனேன்.

நான்: ஆமா....அவன் கிணற்றுல பாய்ந்தால் நீயும் பாய்வாயா???
(வார்த்டையாலேயே மடக்கிய இருமாப்புடன் ஒரு லுக்கு.....ஹி..ஹி...) 

தம்பி: அமா!!! பாய்வேன்....

நான்: டேய்!!! என்னடா சொல்றே!!!!!

தம்பி: ஆமா!!!!! ஃப்ரண்டை காப்பாற்ற நானும் பாய்வேன்.

நான்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........................................


பல்பு II

இன்னொரு சமயம் தம்பியிடம்...
நான்: யோவ்!!! மூனு கழுதை வயசாகுது..... இப்படியா வேலை செய்யுரது????

தம்பி: அப்போ ஒரு கழுதையோட வயசு நாலு வருசமா????
                (அப்போது தம்பிக்கு 12 வயசு)

நான்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........................................

ஹி..ஹி...நம்ம பதிவு படிச்சா அறிவு வளரும்.....


இரண்டு பல்பு வாங்கின சம்பவங்களை போட்டுடா, இதுக்கு மேல பல்பு வாங்கியே இல்ல’னு நம்பிருவோமா???’னு வரும் கொம்மண்ட்’கள் மக்கள் பார்வைக்கு (இதையெல்லாம் எவன் பாக்குறான்???) வருமுன் வாண்டட்’ஆக அழிக்கப்படும்...


12 comments:

  1. // தம்பியிடம் முகத்தை கர்ண கொடூரமாக
    வைத்துக்கொண்டு... (அப்படி பண்ணினால்தான்
    கொஞ்சமாலும் பயப்படுராணுங்க...) //

    அதுக்கு ஏன் இவ்ளோ சிரமப்படறீங்க..
    லைட்டா ஒரு Romantic Look விட்டா
    போதுமே..!

    ReplyDelete
  2. @ வெங்கட் said...

    // தம்பியிடம் முகத்தை கர்ண கொடூரமாக
    வைத்துக்கொண்டு... (அப்படி பண்ணினால்தான்
    கொஞ்சமாலும் பயப்படுராணுங்க...) //

    அதுக்கு ஏன் இவ்ளோ சிரமப்படறீங்க..
    லைட்டா ஒரு Romantic Look விட்டா
    போதுமே..!///

    உங்க போட்டோல நீங்க விட்ரீங்களே ஒரு லுக்கு.. அது போலவா???? அதெல்லாம் டூ மச்.. என்ன இருந்த்தாலும் தம்பியாச்சே!!!

    ReplyDelete
  3. // யோவ்!!! மூனு கழுதை வயசாகுது.....
    இப்படியா வேலை செய்யுரது???? //

    ஒரு சின்ன பையனை பாத்து
    ஏழு கழுதை வயசாகுற ஆள்
    கேக்கற கேள்வியா இது..?

    ReplyDelete
  4. // உங்க போட்டோல நீங்க விட்ரீங்களே
    ஒரு லுக்கு.. அது போலவா???? //

    முதல்ல அந்த கருப்பு கண்ணாடியை
    கழட்டிட்டுங்க... அப்புறம் என் போட்டோவ
    பாருங்க.. அப்ப தான் ஒரு சாந்தமான.,
    அமைதியான., சிரிச்ச முகம் இருக்குறது
    உங்களுக்கு தெரியும்..!

    ReplyDelete
  5. @ venkat

    என்னுங்க... சின்ன பையன் ஏதோ, தெரியாத்தனமா 2 வார்தை பேசிட்டான்னு மன்னிச்சு விடாம, U-Turn அடிச்சு வந்து கும்முரதா??? 15 கழுதை வயசாகுதுள்ள......

    ReplyDelete
  6. ப்ரண்டை காப்பாற்ற நானும் பாய்வேன்.//

    அவ்.........நண்பேண்டா,

    நகைச்சுவைகள் அனைத்துமே டாப் சகோ.

    ReplyDelete
  7. >>இதுக்கு மேல பல்பு வாங்கியே இல்ல’னு நம்பிருவோமா???’னு வரும் கொம்மண்ட்’கள் மக்கள் பார்வைக்கு (இதையெல்லாம் எவன் பாக்குறான்???) வருமுன் வாண்டட்’ஆக அழிக்கப்படும்...

    பல்பை விட இது டாப்பு

    ReplyDelete
  8. நல்லாதான் வான்கியிருகிங்க

    ReplyDelete
  9. //அதுக்கு ஏன் இவ்ளோ சிரமப்படறீங்க..
    லைட்டா ஒரு Romantic Look விட்டா
    போதுமே//
    miratta sonna neenga faaique kolai case la ulla poga vazhi solreenga :D

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. ஃஃஃஃசமயத்துல பூமராங் போல் நம்மளுக்கு திரும்பி வந்து போட்டு தாக்கிடுது.ஃஃஃஃ

    அட அதுக்குள்ள ஒரு சீரியசான சொல்லும் வந்திருக்கே அருமை அருமை...

    ReplyDelete