Monday 9 November 2015

மைனர் குஞ்ச சுட்டுட்டேன்...



ஊருக்கு ஊர் கல்யாண ப்ரோக்கர் இருந்தாலும்,காதல் கத்தரிக்கானு எத்தன ஜோடு ஊர விட்டு ஓடிப் போனாலும் எரும வயசாகியும் (எருமைக்கு எத்தன வயசு?னு கேக்கப்பாடாது) கல்யாணம் ஆகாத மைனர் குஞ்சுங்க நாலு பேரு கட்டாயம் ஒவ்வொரு ஊருலயும் இருப்பானுங்க. நம்ம ஃப்ரெண்டு க்ரேஸியோட ஃப்ரெண்டு லிஸ்ட்,லயும் இதுல பலபேரு இருந்தானுங்க. (எவன்யா அது என்ன உத்து பாக்குறது??? - மைண்ட் வாய்ஸ்)

அன்று ஒரு நாள் நான் க்ரேஸிய சந்திக்க போக,க்ரேஸி ஒரு மைனர் குஞ்சு வீட்டுக்கு போக ரெடியா இருக்க, எனக்கும் அவன் கூட போக வேண்டியாகிடுச்சு.

வீட்டுக்குள்ள போய் ஒரு ரூம்ல ஒரு கதிரையும் கட்டிலும் இருந்தது (ரூமுக்குள்ள மைதானாமா இருக்க போகுது????).  நான் கட்டிலில் உட்காரப் போக க்ரேஸி, டேய்!! கட்டில்லயா உக்காரப் போற???  இண்டீஸ்ண்ட் ஃபெலோவ்!!! எங்க போனாலும் இன்னொருத்தர் கட்டில்ல உக்காரக்கூடாது.. யூ நோ???? நு மானத்த வாங்கின பிக்காளிப் பய (ஆமா... இவரு அசிங்கப்பட்டதே இல்லையாக்கும்...) அங்கிருந்த கம்ப்யூட்டருக்கு பக்கத்துல இருந்த புது adjustable chairல போய் உக்கார, அது வரை சரியாக இருக்கப் படாமல் இருந்த கதிரை சர்ரென் கீழே வழுகிச் செல்ல, க்ரேஸியின் அந்தரத்தில் பரந்த கால்கள் கம்யூட்டர்மேசையின் அடியில் சென்று மோத, அதிலிருந்த ஆணியொண்று க்ரெஸியின் பெரு விரலை பதம் பார்த்தது. காலில் தக்காளிச் சட்னியுடன் விழுந்த க்ரேஸியை மல்லாக்கா தூக்கி வந்து கட்டிலில் குப்புர படுக்க வைத்தோம்.

அசிங்கப்பட்டான் க்ரேஸி.. இனிமே அடங்கிப் போவான்னு நீங்க நெனச்சா, வாயில பினாயில் ஊத்தி கழுவனும். கட்டில்லகிடந்த க்ரேஸி, மை. குஞ்ச பாத்து “அண்ணே!!! உங்க கட்டில்ல இருக்குறது பீச்ல இருக்குறது மாதிரி இருக்குண்ணே!!னு சொல்ல, மை. குஞ்சுடன் பெருமிதத்துடன் “ஏன் தம்பி அவ்ளோ காத்தோட்டமாவா இருக்கு’’னு கேட்க, இல்லண்ணே!!! கட்டில்ல அவ்ளோ மணலா இருக்கு..அதுதான் கேட்டேன். இத தட்டி சுத்தப்படுத்தவே மாட்டீங்களா??? னு சொல்ல மை. குஞ்சுவின் மூஞ்சுல ஈயாடல. அது எப்படியோ க்ரேஸியோட பேச்ச கேட்டு எனக்கு வயித்த கலக்கிடுச்சு. சந்தைக்கு போன அண்ணன் சண்டையோட வருவான்னு ஒரு வடிவேல் டையலாக் இருக்கு....அது எப்படியோ, க்ரேஸியோட போற எவனா இருந்தாலும் கிழிசலோடத்தான் வந்து சேருவாங்குறது நாம் அனுபவத்துல கண்ட உண்மை.

தன்னை சுதாகரித்துக் கொண்ட மை. குஞ்சு “ தம்பி.. நான் ஒரு ஒண்டிக் கட்ட.. என் வேலைகளை செய்யவே நேரமில்ல. இதெல்லாம் எப்போ செய்ரது??’னு மை.குஞ்சு ஃபீல் பாண்ண, கல்யாணம் ஒண்ண பண்ண வேண்டியதுதானே? நான் சொல்ல, கடந்த இருபது வருஷமா .. சாரி கடந்த இரண்டு வருஷமா நானும் பாக்குறேன். எதுவுமே சரியா அமையல. இப்பொழுதுதான் ஒரு சம்பந்தம் வந்து எல்லாம் நல்ல படியா முடியப் போகுது. நாளைக்கும் பொண்ணு வீட்ல இருந்து வர்ராங்க.. எல்லாம் சரியா இருந்தா நாளைக்கு Date fix பண்ணிடுவாங்க.. எப்டியும் ஒரு வாரத்துல கல்யாணம் ஆயிடும் தம்பி. நாளை பொண்ணு வீட்டாரை கவர்ரதுக்கு எதாவது பண்ணனுமே!! அதுதான் அங்க இங்கனு ஓடியாடிட்டு இருக்கேன். ஏதாவது நல்ல ஐடியா இருந்தா சொல்லுங்க தம்பி’னு க்ரேஸிஐ பார்த்துக் கேட்டாரு. சில பேருக்கு நல்ல நேரம் வந்தாலும் தன் வாயால அதை விரட்டி விட்ருவாங்க.. மை. குஞ்சும் அதுல ஒருத்தர்தான்.

க்ரேஸிக்கும், மை.குஞ்சுக்கும் நடந்த உரையாடல்...

அண்ணே!! இரண்டு வருசமா பொண்ணு பாத்து வேல ஆகுமா??? என்னய பாருங்க.. இரண்டு வயசுல இருந்து பாக்குரேன். இன்னும் ஒண்ணு கூட திரும்பிப் பாக்கவுமில்ல.(இதுக்கு பிறகும் யாரும் பாக்கப்போறதில்ல.... - மைண்ட் வாய்ஸ்) ஆமா... உங்களுக்கு எத்தன வயசாகுது??

எனக்கு 25 வயசு தம்பி

கிரிரிரிர்கிர்.) அண்ணே!! எங்களுக்கே 24தாண்ணே!! ஒரு பொய் சொல்லும் பொது அதுல கொஞ்சம் உண்மையும் இருக்கணும்ணே!!! சரி.. வர்ர பொண்ணு வீட்டாளுங்களூக்கு என்ன பலகாரம் வைக்க போரீங்க....

மை. குஞ்சுவும் சில பல சிங்களப் பலகாரங்களை எடுத்து விட க்ரேஸி டென்ஷன் ஆகிட்டான்.
அண்ணே!! உங்களுக்கு வயசு 40க்கு மேலாகுது.. நான் சொல்ரது சரிதானே???

எப்படி தம்பி சரியா கண்டுபுடிச்சீங்க...???

இந்த மாதிரி போர்த்துக்கீசர் காலத்து பலகாரங்கல வச்சாலே உங்க வயசு தெரிஞ்சுராதா??? கொஞ்சம் புதுசா யோசிங்கண்ணே!!!! நான் சொல்ர ஐடங்களை வாங்கி வச்சு பாருங்க.. ஒரு கிழமைல நீங்க மாப்லயா இருப்பீங்க’னு புதிய ஐட்டங்கள் சிலவற்றை எடுத்து விட்டான் க்ரேஸி.

கடைசியா அண்ணே!!! வர்ரவங்களுக்கு குடிக்க என்ன குடுப்பீங்க’னு கேக்க, மை. குஞ்சும் டீ குடுக்கலாம்னு இருக்கேன்னு சொல்ல க்ரேஸி Again Tension.....


அண்ணே!!! புதுசா யோசிங்கணு சொண்ணேன்ல...

தம்பி.. பழைய டீயையா குடுக்க முடியும்.. புதுசாத்தான் ரெடி பண்ணி குடுப்போம்ல..

யோவ்!! அத சொல்லலையா... டீக்கு பதில் வேறேதாவது குடுக்கலாம்.. ம்ம்... ஒண்ணு பண்ணலாம்.. டீக்கு பதில் ஐஸ்கிரீம் வைக்கலாம்.

சூப்பர் தம்பி.. நாளைக்கே போய் ஐஸ் கிரீம் வாங்கிட்டு வந்துர்ரேன்.

நாளைக்கா??? 40 வருஷம் லேட் ஆகினது போதாதா??? இப்பொழுதே போய்வாங்கிட்டு வாங்க... (மை.குஞ்சு ஏதோ பேச முயல)“அண்ணே!! கல்யாணம் நல்ல படியா நடக்கனும்னா எதிர் பேச்சு பேசாம நான் சொல்ரத மட்டும் செய்ங்க...

மைனர் குஞ்சுவும் கடைக்குச் செல்ல நாமளும் க்ரேஸியை கைத்தாங்களாக பிடித்துக் வந்து சேர்ந்தேன்.

******

அடுத்த நாள் இரவு க்ரேஸி கிட்ட இருந்து போன். மிஸ் கால் மட்டுமே அடிக்கிரவன் இன்னைக்கு என்னடா விடாம கால் அடிக்கிறானேனு பார்த்தா, மச்சி.. ரெண்டு நாள் உங்க வீட்ல ஒழிஞ்சிக்கலாமா??”னு அலர்ரான்..ஏண்டா’னு கேட்டதுக்கு, மச்சி.. மைனர் குஞ்சு கல்யாணம் நிண்டு போனதுக்காக ஆளுங்களோட என்ன அடிக்கிறதுக்கு விரட்ராண்டா... கால்ல வேற காயம். வழமை மாதிரி என்னால ஓடித் தப்பிக்கவும் முடியல, என்ன காப்பாத்து மச்சி’னு ஒரே ஒப்பாரி....

டேய்... நீதானே பெரிய இவன் மாதிரி ஐடியா குடுத்தே!!!! என்னாச்சுடா???

நேற்று ஐஸ்கிரீம் வாங்க சொன்னோமே!!!! அந்த நாதாரி,அவன் வீட்ல ஃப்ரிட்ஜ் இல்லைனு ஒரு வார்த்த சொன்னானா??? இல்லைல..(நீ எங்கடா அவன சொல்ல விட்டே??? - மைண்ட் வாய்ஸ்) அவன் ஐஸ்கிரீமைவாங்கி வந்து அப்ப்டியே வீட்ல வச்சிருக்கான். அடுத்த நாள் நாரிப்போன அதே ஐஸ்கிரீமை பொண்ணு வீட்டாருக்கு குடுக்க, கல்யாணம் கென்சல் ஆயிடுச்சு...

என்னது?? ஃப்ரிட்ஜ் இல்லையாமா???

யோவ்!! கரண்டே இல்லையாம்யா.... பில்லுலி கட்டாததால கரண்டு லைனை வெட்டி 2 வருஷமாகுதாம். அந்த கம்ப்யூட்டரும் டேபிளும் கூட பக்கத்தூட்டுல வாங்கின செட்டப்,பாம்யா...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்



2 comments:

  1. Ni oru nesamani vadivel faaique.

    Ethana warusam ponalum un elutthu bore adikkala bro. Miss u.

    ReplyDelete