வெளிநாட்டில் தனியாக இருப்பது என்பது கொடுமை. நம்ம நண்பன் சாக்கட சாமிலுடன் இருப்பது அத விட கொடுமை.
சாக்கட சாமில் டுபாய் வந்து ஒரு மாதம் கூட இருக்காது, தனியாக வெளியே கிளம்பிட்டான், சாக்கடையுடன் எவனும் வெளியே போக தயாரில்லை என்பதும் ஒரு காரணம்.
போய் கொஞ்ச நேரத்துல போன்ல சாக்கடை,
டேய் மச்சான், சேர்ட் வாங்கலாம்னு ஒரு புடவைக் கடைக்கு வந்தேண்டா, ஒரு பாகிஸ்தான்காரன் கொடுக்க முடியாது’னு வம்புக்கிழுக்கிறான், அவன நான் கொல்லாம விடமாட்டேன்... டேய்!!
டேய்!! சாக்கட..கொஞ்சம் பொறுடா நான் வர்ரேன்.. எங்கடா இருக்கே????
மச்சி நான் Industrial Area'ல இருக்கேண்டா...
உடனே போன கட் பண்ணிட்டு வெளியே கிளம்பினேன்.. என் மனவோட்டம் சுழல ஆரம்பிச்சது..
“Industrial Areaல ஒரு துணிக் கடையா?????? சாக்கடைக்கு ஹிந்தி/ உருது எல்லாம் கணக்கு பாடம் மாதிரியே.. சுத்தமா தெரியாதே!!!
சாக்கடை பாகிஸ்தான் காரண புடிச்சு வக்கிரதா??? நிச்சயமா பாகிஸ்தான் காரன்,தான் சாக்கடைய புடிச்சு வச்சிருபான்..- மைண்ட் வாய்ஸ்
அங்கு சென்று பார்த்தபோது என் மைண்ட் வாய்ஸ் சரியாகத்தான் இருந்தது, அங்கு ரெண்டு பட்டாண் (பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியை சேர்ந்தவர்கள்) சாக்கடையை அமுக்கி வைத்திருந்தார்கள்.
டேய்!!! சாக்கட, இங்க எதுக்குடா வந்தே... என்னடா பிரச்சனை???
ஒரு சேர்ட் வாங்கலாம்னு இந்தப் பக்கம் வந்தேன்,இவன் கடை முன்னாடி நிறைய சேர்ட் வச்சிருந்தானுங்க, நான் போய் கேட்டதும் நிறைய சேர்டை எடுத்து முன்னாடி வச்சான், அப்புறமா நான் எனக்கு பிடிச்சத தேடி குடுத்த புரட்டி புரட்டி பாத்துட்டு, தர முடியாதுங்குறான். இவன இன்னைக்கு விடக் கூடாதுடா...
கர்ர்ர்..த்த்தூ.... டேய் வெண்ண... இது Laundry Shop'டா பக்கி...உனக்கு உருது தெரியல,அவனுக்கு தமிழ், ஆங்கிலம் தெரியல. நீ Laundry'ல குடுத்த சேர்டை எடுக்க வந்ததா நெனச்சு உன் முன்னாடி சேர்ட்களை வச்சிருக்கான், நீ ஒரு சேர்ட்ட எடுத்ததும், அதன் நம்பர பாத்துட்டு, வேறொருத்தோரடதுனு எடுத்து வச்சிருக்கான். அது புரியாம நீ அவன் கூட மொக்குத்தனமா சண்ட போட்டிருக்கே!!! கொஞ்சம் விட்டிருந்தா உன் கால கைய வெட்டி ”கபாப்” பண்ணியிருப்பான்டா பக்கி.
அப்புறம் பாகிஸ்தானியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியே வந்தோம். இனிமே சாக்கடய எங்கயும் தனியா அனுப்பக் கூடாதுனு நெனச்சேன். அடுத்த வாரமே அதுக்கும் வச்சான் பாருங்க ஆப்பு... அது அடுத்த பதிவில்....

No comments:
Post a Comment