Tuesday, 14 July 2015

தலைவா - Time to ESCAPE

காலேஜ்ல,
ஒருவாறு கீழ் வகுப்புல இருந்து மேல் வகுப்புக்கு போய் சேர்ந்தாச்சு. மேல்வகுப்புக்கு வந்து பார்த்தா, நம்ம பழைய நண்பர்களில் டட்ஸனும், பாப்’ம் மட்டும்தான் இருக்கானுங்க. மத்தவனுங்க எல்லாம் புதிய பசங்க. க்ரேஸி, புள்ளி ராஜா வேற வகுப்பு.

மேல் வகுப்புக்கு வந்தா Prefect (மாணவர் தலைவர்) தேர்வு செய்வாங்க. நம்ம வகுப்புல டட்ஸனும், பாப்’ம் ஆல்ரெடி மாணவர் தலைவர், மத்தவுங்க எல்லானும் புதுசு, காலேஜ் மெனேஜ்மெண்ட்டுக்கு வேற வழியே இல்லாம நம்மளையும் மாணவர் தலைவனாக்கிட்டாங்க. நக்கலா சிரிக்காதீங்க... க்ரேஸிஐயோ, புள்ளி ராஜாவையோ மாணவர் தலைவராக்கல.. Note the Point...

நாம சும்மாவே உருவத்துல சிறிசு, அது போக திருட்டு முழி வேற கூடவே பொறந்தது. நாமெல்லாம் மா. தலைவர்னு அம்மா சத்தியம் பண்ணினாத்தான் நம்புவனுங்க. அதனால Senior Prefectஇடம் கெஞ்சி கூத்தாடி சின்ன வகுப்புக்கு என்னை நானே நியமித்துக் கொண்டாச்சு..

சும்மா சொல்லக் கூடாது, அந்த க்ளாஸ்ல ஒரு பத்து, பதினைஞ்சு பேரு நம்ம கிட்ட அடி வாங்குறதுக்கே அளவெடுத்து செஞ்ச மாதிரி இருந்தானுங்க. அப்புறம் என்ன?? இதுவர மா. தலைவர்களிடம் நாம் பட்ட அதேஅவஸ்தைய நம்ம கிட்ட அந்தப் பசங்க பட்டு மாஞ்சானுங்க....

நம்ம காலேஜ்ல முக்கியமான ஒரு சட்டம் இருக்கு, அதாவது டவுசர் போடாம வந்தா கூட உள்ள விட்ருவானுங்க. ஸ்கூல் பேட்ஜை சட்டைப் பைல தைக்காம வந்தா கேட்டைக் கூட தொட விடமாட்டானுங்க. பேட்ஜை நாலு பக்கமும் நல்ல முறைல தச்சிருக்கனும், ஆனா, சில பசங்க அவசரத்துல பேட்ஜை வைத்து பின்’னால குத்திட்டு வருவானுங்க. சில பேரு லைட்டா தச்சுட்டு வருவானுங்க. அத புடிங்கி அவனுங்க கைல குடுத்து, நாளை வரும் போது, சரியா தச்சுட்டு வர சொல்லி எச்சரிக்கனும்.நீங்க காரித் துப்பினாலும் பரவால ஒரு உண்மைய சொல்ரேன், மா. தலைவர் வேலைலயே எனக்கு புடிச்சது இந்த வேலதான்..

அடையாளப் படம்
பேட்ஜை பிடுங்கும் போது சில வேளை, பேட்ஜுடன் சேர்ந்து பாக்கட்டும் கைக்கு வந்துடும். அப்புறம் நம்ம உச்ச கட்ட அதிகாரத்த பிரயோகித்து அவனை அடக்க வேண்டி இருக்கும். சில வேளை, உச்ச கட்ட அதிகாரம்னு சொல்ரது வெள்ளைக் கொடியாகவோ, அதை விட கீழ்த்தரமாகவோ இருக்கும். அவ்வ்....விட்ரா விட்ரா நீ படாத அவமானமா?? பார்க்காத அசிங்கமா?? கேக்காத கெட்ட வார்த்தையா???

ஒரு நாள் டியூட்டில இருக்கேன், அம்மாஞ்சியா ஒருத்தன் வர்ரான். அவன் மூஞ்ச பாத்தா முசுப்புக்கே(அலுப்பு) மூஞ்சில மூனு குத்து குத்தலாம் போல இருக்கும். இவன வச்சு நாம ரவுடி ஆகிடலாம்னு அவன நல்லா நோட்டம் விட்டேன், நம்ம கிட்ட இருந்து அவ்ளோ ஈஸியா எஸ்கேப் ஆகலாமா?? அவனோட ஸ்கூல் பேட்ஜ் ரெண்டு பக்கம் தைக்காம இருக்குறது என் கண்ணுல பட்டிடுச்சு.

டேய்!!! இங்க வாடா????னு கூப்டதும் பம்மிகிட்டு வந்தான், என்ன நடக்க போகுதுனு எதிர் பார்த்திருப்பான் போலும், பேட்ஜை ஒழுங்கா தைக்கலல’னு சேர்ட்டை புடிச்சு அவன் பேட்ஜை இழுக்க, அவனும் என்னவோ சொல்ல முயல, அவன் பேட்ஜ் என் கைல வந்தது...

பேட்ஜ் மட்டும் வந்திருந்தா பரவால...பாக்கெட்டும்.....


பாக்கெட் மட்டும் வந்திருந்தாலும் கூட பரவால.....அவ்வ்வ்வ்

அவனோட ஷேர்ட்டும் சேர்ந்து கிழிந்து என் கைக்கு வந்துடுச்சு....

சனியன் அன்னக்கி பனியனும் போட்டில்ல.. நெஞ்சுப் பகுதி அப்டியே வெளியே தெரிய, உடனே அழ ஆரம்பிச்சுட்டான்.

சாரிடா தம்பி.. தவறுதலா ஆச்சுடா...

போங்கண்ணே!!! இது எங்க மூத்த அண்ணன் போட்ட சேர்ட்டு.. கிழிச்சுட்டீங்களே!!!

அடப்பாவி நான் புதுசோ’னு நெனச்சு பயந்துட்டேண்டா.... ஆமா, நீ உன் குடும்பத்துல எத்தனையாவது ஆளு???

7வது...

அடப்பாவி. கவர்மெண்ட்  ஃப்ரீயா சட்டைப் புடவை குடுக்க, நீ ஒரே சேர்ட்ட ஏழு தலைமுறையாவா உடுக்குறே???? மவனே இந்த சேர்ட்டோட சேர்த்து, உன்னையும் மியூசியத்துல வச்சிருவேன் பாரு...ஓட்ரா.....

வெளிய வா... என் ஆறு அண்ணனையும் கூட்டி வர்ரேன்.

அடுத்த மூனு நாளா நான் காய்ச்சல் காரணமா காலேஜ் போகல, நான் ஏன் இத இங்க சொல்ரேண்ணா, நான் அவன் அண்ணன்ங்களுக்கு பயந்து காலேஜ் போகலனு நீங்க யாரும் தப்பா நெனக்க கூடாது பாருங்க...

1 comment: