Thursday 28 July 2011

எங்க ஊரு நல்ல ஊரு..ஜூலை 28ம் திகதி என் ப்லாக்`கின் (இதெல்லாம் ஒரு ப்லாக்`ஆ) முதலாவது பிறந்த நாள். எனவே, என்ன பண்ணலாம்`னு யோசிச்சுடு இருந்தப்போ, (ப்லாக்`அ இழுத்து மூடிடு. பிறந்த நாளுல சமூக சேவை செய்ததாகிடும்) நன்பர் ரியாஸ் "எங்க ஊரு நல்ல ஊரு" தொடர் பதிவு எழுத அழைத்திருக்கிறார். நாம ஊருக்காக இதுவர எதுவுமே செஞ்சதில்ல... (இதுக்கு பிறகும் செய்ய போறதில்ல...) இந்தப் பதிவையாலும் எழுதழாம்னு........(ஆமா... இதுதானே நோகாம நோம்பு கும்புடுர வேலை)எங்க ஊரு பேரு "நிககொள்ள (Nikagolla)" (வாய்ல நுலையலனா விட்ருங்க..அதுக்காக வாழைப்பழம்`னு பெயர் வைக்க முடியாது..) இது இலங்கையின் மத்திய மலை நாட்டில் மாத்தளை மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். எமது மாவட்டத்தில் மிகப் பழைய ஊர்களில் ஒன்றும் கூட. சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட ஒரு சமவெளி என்று கூட சொல்லலாம். ஊரின் குறுக்கே ஒரு சிறிய ஆறும் ஓடுகின்றது. (ஆத்துல தண்ணி ஓடுதா`னு கேட்டா எனக்கு கெட்ட கோவம் வரும்????)

எனது வீட்டின் முற்புற தோற்றம்
 மாத்தளை - குருனேகல, மாத்தளை - கலேவல, கண்டி - யாழ்ப்பாணம் இந்த மூன்று பாதையையும் இணைக்கும் ``பைபாஸ்`` பாதையிலேயே எங்க ஊரு அமைந்துள்ளது.(பாதையில ஊர் இருந்தா வண்டி எப்படி போரது`னு யோசிக்க கூடாது) மாத்தளை நகரத்திலிருந்து "செலகம" பஸ்ஸில் குருனேகல வீதியில் 15 கி.மீ தூரம் பிரயாணம் செய்வதன் மூலம் எங்க ஊரை வந்தடையலாம்.

பொன் மாலை பொழுது

கிட்டத்தட்ட 600 குடும்பங்கள் இருக்கலாம். இதில் 100% தமிழ் பேசும் முஸ்லீம்களே வசிக்கிறோம். இருந்தாலும் சுற்றிலும்  தேயிலை, மற்றும் இரப்பர் தோட்டங்களில் வசிக்கும் இந்திய பழங்குடி தமிழ் பேசும் ஹிந்துக்களும் உள்ளனர்.

வயல் வெளி
முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. முக்கியமாக நெல் பயிரிடப்பட்டாலும், இதர காலங்களில் மற்றும் சேனைகளில் தக்காளி, பாவற்காய், கத்தரி, வெண்டிக்காய், மிளகாய், மரவள்ளி போன்ற மரக்கரிகளும் பயிரிடப் படுகின்றன. முன்பு அதிகமானோர் புகையிலை பயிரிட்டனர். இப்போது ஒரு சிலரே புகையிலை பயிரிடுவது சந்தோசமான விடயெமே. ஆங்கிலேயர் காலத்தில் நம் ஊர் முழுவதும் இரப்பர் தோட்டங்களாக இருந்ததாக தந்தையிடம் இருந்து கேள்விப்பட்டிருக்கிறேன். ஆங்கிலேயர் வசித்த பங்களா`க்களும் ஊருக்குள் இருக்கின்றது. இப்போது இரப்பர் தோட்டங்கள் அழிக்கப் பட்டுவிட்டன. அனைத்தும் தென்னந் தோட்டங்கள் ஆகிவிட்டன. முன்பு அதிகமாக இருந்த கொக்கோ மரங்களும் இப்போது காண்பது ரொம்ப அரிதாகிவிட்டது. ஒவ்வொரு தோட்டங்களிலும் மிளகு, கோப்பி, கராம்பு போன்றவை கட்டாயமாக இருந்து வருகிறது. இப்போது அரசாங்கத்தால் கருவா, ஏலம், சாதிக்காய் போன்றவை பயிரிட உதவியும் ஆர்வமூட்டவும் படுகிறது.

தக்காளி (பொது அறிவு வளர்ச்சிக்காக...)

மக்களில் அதிகமானோர் வெளி மாவட்டங்களில் தொழில் செய்பவர்களே. ஊரில் உள்ள அனைவைரையும் பெருநாள் தினங்களிலேயே பார்க்க முடியும். இது போக சிறு கைத்தொழில்களும், கால் நடை வளர்ப்பு போன்றவையும் உண்டு.


50 வயதையும் தாண்டிய மாவட்டத்தில் முக்கிய இடத்தை வகிக்கின்ற, உயர் தரம் வரை படிக்கக் கூடிய வசதியுடன் மின்ஹாஜ் மஹா வித்தியாலயம் எனும் பெயருடைய பாடசாலையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. பாடசாலை மட்டத்தில் நடக்கும் முக்கிய போட்டிகளில் நம்ம ஊர் பாடசாலை பெயரை கேட்டாலே அடுத்த பாடசாலைகளுக்கு பேஸ்மண்ட் வீக்காயிடும். அவ்வளவு திறமையான மாணவ, மாணவிகளை கொண்ட பாடசாலையாகும்.
காலை வேளை (ஊர் சார்ந்த பகுதி)

ஒவ்வொருவரும் அந்த ஊர்களில் பிறந்த பெரியவர்களை பற்றி எழுதி இருக்கின்றனர். எனக்கும் எழுதும் ஆசை இருந்தாலும்,  என் ஊரில் எந்தப் பெரியவருமே பிறந்ததில்லை என்பதும் எல்லாம் குழந்தைகளாகவே பிறக்கின்றனர் என்பதும் முக்கிய விடயமாகும். (விடுப்பா.. விடுப்பா... மனிதன்னு  பொறந்தா மண்டைய போடுரதும் பதிவுனு வந்துட்டா மொக்கைய போட்ரதும் சகஜமப்பா...)

குடி நீர் வசதிக்காக ஒரு சில திட்டங்கள் போடப்பட்டாலும், திட்டம் போட்டவர்களை தவிர எவருக்கும் நன்மை பயக்காததால், அனைவரும் கிணற்றையே நம்பி உள்ளனர். விவசாயத்திற்கு சிறியதொரு குளம் இருந்தாலும், மழை மற்றும் ஆற்று நீரே பயன்படுகிறது.

மக்களில் அனேகமானோர் நடுத்தர வர்க்கத்தினரே வாழ்கின்றனர்.  திருமண பந்தங்கலை பொறுத்தவரை ஊருக்குள் கலப்புத் திருமணங்கள் அரிதாகவே நடக்கின்றன. அனேகமானோர் ஊரை அண்டிய வெளியூர்களிலும் சிலர் தூர ஊர்களில் திருமணம் செய்துள்ளனர்.

விளையாட்டை பொறுத்த வரை இளைஞர்களில் ஒரே தெரிவு கிரிக்கட்`ஆகவே இருக்குறது. சில காலங்களில் உதைப் பந்தாட்டமும் விளையாடப்படும்.

இன்னும் ஊரைப் பற்றி நிறைய சொல்ல முடியுமாக இருந்தாலும் பதிவின் நீளம் எண்ணி இத்தோடு முடிக்கிறேன்.

Tuesday 19 July 2011

வசூல் ராஜா Vs புள்ளி ராஜாநான் படித்த பாடசாலையில் (நீ எப்படா படிச்சே’னு யோசிக்கிரவங்க நான் சென்று வந்த பாடசாலை’னு வாசிக்கவும்) நிறைய வெளியூர் மாணவர்கள் படித்தனர். பாடசாலையை சுற்றியுள்ள அனேகமான வீடுகளில் மாணவர்கள் தங்கியிருந்தனர். வீடு வாடகைக்கு விடுவதன் முலம் வீட்டுக்காரர்களுக்கு சிறு  வருமானம் வந்து கொண்டிருந்தது. அவர்களுக்கு வருமானம் வருதோ இல்லையோ, நமக்கு கட்டப் பஞ்சாயத்து (ராகிங்) மூலம் வருமானம் வந்து கொண்டிருந்தது. நம்ம ஏரியாவுக்கும் புதுசா ஒருத்தன் எண்ட்ரி ஆனாலும் நாமளும் அங்கு எண்ட்ரி ஆகி நமக்கு வர வேண்டியதை ஷார்ப்பா கரந்துடுவானுங்க நம்ம பயலுங்க.


இலங்கையின் எல்லா பகுதியில் இருந்து மாணவர்கள் வந்தாலும், வடக்கு, கிழக்கிலிருந்து வரும் பார்ட்டி’தான் ரொம்ப விஷேசம். கொஞ்சம் உலுக்கினா பைசாவும் கொட்டோ கொட்டுனு கொட்டும். சிங்களம் தெரியாமலும் இருக்குறதால ஈஸியா மடக்கிடலாம்.

இப்படி காலம் போய் கொண்டிருக்கையில், கிழக்கிலிருந்து வந்த ஒரு பையன் தங்கியது நம்ம நன்பன் க்ரேஸி வீட்டுல. பயபுள்ள ரொம்ப பெரிய பார்டி’னு பார்த்தாலே புரிஞ்சுது. ஆனாலும் க்ரேஸி வீட்டுல இருந்தால ஒன்னும் பண்ண முடியல. பார்ட்டி புதுசா இருக்கும் போதே கறந்துடனும்  பழசாயிட்டான்னா, அப்புறம் வேலைக்காகாது.

அதுகாக நாம ரெடி பண்ணின ஆளுதான் “புள்ளி ராஜா”. பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல.... யாரும் பயந்துடாதீங்க. அவன் பேரு ராஜா. நம்ம கேங்’ல ஒரு முக்கிய புள்ளிங்குரதால “புள்ளி ராஜா”னு செல்லமா கூப்பிடுவோம். (இப்படி கூப்பிட்டால்தான் பயளுக மிரளுரானுங்க....)


புள்ளி ராஜா பற்றிய ஒரு சிறிய விளக்கம், இவர் கண்டி நகரத்துக்கு பக்கதுல உள்ள ஒரு சிற்றூர்ல இருந்து வர்ரதாலயும், கண்டியிலுள்ள ரௌடிகளுடைய பெயர்களை மனப்பாடம் பண்ணி வச்சிருப்பதாலயும் இவரும் ஒரு மிகப் பெரிய ரௌடி’னு வாண்டட்’ஆ காலேஜ் பூரா கதை பரப்பியிருந்தோம். அதனால நம்ம ஆளைக் கண்டாலே காலேஜ் நடுங்கும்.

நம்ம ஆபரேஷன் ஆரம்பமானது (செய்யுர கேப்மாரி வேலைக்கு இவ்ளோ பில்ட்-அப்’ஆ???). நாம டார்கெட் பண்ணின ஆளு, எப்போ வெளியே போறான், எப்போ வாறான்’னு க்ரேஸியிடம் இருந்து நியூஸ் வந்துகொண்டிருக்க சரியான தருணத்தில் நாம போட்ட திட்டத்தின் படி புள்ளி ராஜா களத்தில் இறங்கி ஆளை மடக்கி, உருட்டி, மிரட்டி பெரிய  அமௌண்ட் கரந்தாச்ச்சு. அடுத்த ஒரு வாரம் நம்ம கேங்’க்கு திருவிழா கொண்டாட்டம்தான்.


அந்தப் பையன் நம்மிடமே வந்து “ஒரு ரவுடி அவன ராகிங் பண்ணினதா சொல்லி அழுததும், நாம அவனுக்கு ஆறுதல் சொன்னதும் வேறு கதை.


டிஸ்கி 1: என் கதைகளில் வரும் நன்பர் “க்ரேஸி” குறிப்பிட்ட ஒரு நபரை குறிப்பதல்ல.. சில வேலை அது நானாகவும் இருக்கலாம்.(அதுக்காக இந்தக் கதைல வரும் க்ரேஸியும் நானாக இருக்கும்’னு நம்பக் கூடாது)


Sunday 10 July 2011

ரண களத்திலும் ஒரு கிளு கிளுப்பு....


நம்ம Gang’ல முக்கியமான ஒரு ஆளுதான் (உன்ன தவிர எல்லானுமே முக்கியமான ஆள்தான்யா..) நம்ம “காமராசு”. நாம எல்லா நன்பர்கள் வீட்லயும் ஓசி  சோறு சாப்பிட்டாலும் இந்தப் பய புள்ள மட்டும் ரொம்ப நாளா தண்ணி காட்டிக் கொண்டே இருந்தான். அதற்கு காரணம், இவன் வீடு ரொம்ப தொலைவுல இருந்ததுவே(அப்பாடா தப்பிச்சான்). அனுராதபுரத்துக்கு அடுத்து இருக்கும் ஒரு சிறிய கிராமமே காமராசு’வின் ஊராகும்.(உன்னைய நம்பி எப்படியா Address குடுத்தான்)

மழை காலத்தில் ஊருக்கு போகலாமா’னு (நீ போனா, வார மழையும் திரும்பி போயிடுமே!!!!) கேட்டா, ”போகலாம், ஆனா மழை காலம் என்பதால, குளத்துல உள்ள முதலையெல்லாம் மூனு மாசம் பசியோட ஊருக்குல உலா வரும். அது ஒன்னும் பிரச்சனை இல்ல, முதலை குரல் வளையை கடிக்கும் போது, கிச்சு கிச்சு மூட்டினால் விட்டுடும்’னு நம்ம Basement;ஐ வீக் ஆக்கிடுவான்.

வெயில் காலம் வரும் வரை காத்துடு இருந்து “மச்சி இந்த முறை ஓசி சோறு போட்டே ஆகனும். வெயில் காலமுள்ள’னு சொன்னா, ”வரலாம், ஆனால் யானையெல்லாம் தண்ணீர் தேடி வந்து ஊருக்குள்ளதான் குடும்பம் நடத்துது. அது மேட்டரே கிடையாது, யானை விரட்டும் போது, யானையின்இரண்டு காலுக்கும் நடுவால ஒடிராம்’னு ஆறுதல் சொல்ல, நம்ம  Basement weakness பில்டிங் பூரா பரவி நடுக்கமெடுத்து விடும்.

சரி, இரண்டுக்கும் நடுப்பட்ட காலம் போகலாம்’னு முடிவெடுத்தா “இப்போ வாரதுல எந்தப் பிரச்சனையும் இல்ல (நீயே ஒரு பிரச்ச்னைதானே!!!) ,ஆனால் ஊருக்குள்ள புலித்தொல்லை (இரண்டு கால், வால் இல்லாத புலி) இருக்கு’னு சொல்ல, ஆஹா!!!! கரடி கூட கக்கூஸ் போக சொன்னாலும், சிங்கம் கூட சீட்டாட சொன்னாலும், முதலைக்கு முதுகு சொறிந்து விட சொன்னாலும் ரெடி.  புலித்தொல்லை வேணவே வேணாம்’னு ஆசையை அடக்கிக் இருக்க வேண்டியதாகிடுச்சு.

இப்படியே நாட்கள் ஓடிக் கொண்டிருக்க, ஒரு மேட்டர்’ல நம்ம காமராசு வசமா நம்ம கிட்ட மாட்டிக்கிட்டான். விடுவோமா நாங்க??????  அந்த மேட்டர்க்கு கை, கால், மூக்கு வச்சு பூதகரமாக்கி, “மவனே ஓ.சி சோறு போடல.... உன்ன போட்டு குடுத்துருவோம்டீ”னு மிரட்டி, அவன் ஊருக்கு பொட்டி கட்டினோம்.


ஊர் எல்லையை அடைந்த போது, அங்குள்ள ஒரு கிணற்றில் “இங்கு குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது”னு (அது குடி நீர்க் கிணறு) போர்டு மாட்டியிருப்பதை பார்த்த க்ரேஸி “இந்த ஊர்ல யாருமே குளிக்க மாட்டானுங்களா??? அப்போ, ஊரே நாருமே”னு சத்தமாக சொல்ல, மொத்த ஊரும் நம்மை கொலை வெறியுடன் பார்க்கத் தொடங்கியது. நம்ம கதைல Starting நல்லாயிருக்கும்  Finishing’தான் ஆப்படிக்கும். இந்த கதைல ஆரம்பத்துலயே சனியன் சிக்னல் குடுத்துடுச்சு...

காமராசு வீட்டில் ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துடு, அடுத்த நாள் எங்கே போகலாம்’னு யோசித்த வேளை, குளத்துக்கு குளிக்கப் போகலாம்’னு க்ரேஸி ஐடியா குடுக்க, அனைவரும் பின் வாங்கினோம். (நீ குளிச்சா உலக அதிசயமே!!!) முதலை இருக்குமோ’னு எல்லோருக்கும் பயங்கர பயம்!!!!! (நீ குளிச்சா குளம் நாரிடுமோ’னு முதலைக்கெல்லாம் பயமாம்!!!) நம்ம கேங்’லயே கடல்’ல குளித்த ஒரே ஆளு’ங்குர தைரியத்துல க்ரேஸி மாத்திரம் குளத்தில் குளிக்கப் போவதில் உறுதியாய் இருந்தான். “டேய்!!! நான் கடல்ல குளிக்கும் போது பார்க்காத முதலையா... இதெல்லாம் சப்ப மேட்டரு”னு சொல்ல கடல்ல முதலை இல்லை’னு தெரியாத நாமளும் அவன் பேச்சை நம்ம்ம்ம்ம்பி குளத்துக்கு போக தயாரானோம்.

போகும் வழியில் ஒரு முதியவர், “தம்பி, எங்கப்பா போரீங்க’னு கேட்க நாமளும் குளத்துக்கு போரோம்’னு சொல்ல, “கிரிக்கட் விளையடவா போரீங்க”னு கேட்க நமக்கெல்லால் “ப்கீர்”னு ஆச்சு.  (கேங்’ல எவனுக்குமே குளிக்கிர பழக்கம் இல்லை’னு புரிஞ்சுடுச்சோ!!!)

என்னது???? குளத்துல கிரிக்கட் ஆடுவீங்களா’னு காமராசுவை உளுக்கு உளுக்கு’னு உளுக்க, “மச்சி, மழை காலத்துல குளம், வெயில் காலத்துல மைதானம். இப்போ வெயில் காலமுள்ள..அதுதான் பெரியவர் அப்படி கேக்குறாரு”னு சொல்ல... “டேய்! இப்போ குளத்துல தண்ணீர் இருக்கா? இல்லையா’னு கேட்க, “இருக்கு ஆனா இல்ல’னு குழப்பினான்.சரி..வந்ததே வந்தாச்சு.. போய் பார்க்கலாம்’னு குளத்தை அடைந்தால் தெளிவான தண்ணீர் இருந்தது. “என்ன பண்ணலாம்’னு யோசித்துக் கொண்டிருக்கும் போதே, தன் திறமையை காட்டும் வெறியுடன் க்ரேஸி ஓடிப் போய் குளத்துல குதித்து விட்டான். பிறகுதான் புரிந்தது, குளத்து நீர், வெளியில் தெளிவாக இருந்தாலும் அடியில் பயங்கர சகதியாக இருந்த மேட்டர்.

அந்த நேரம் பார்த்து அங்கே வந்த ஒரு பெரியவர், “எவன்யா அது??? சகதில புரள்ரவன்??  (அவ்வ்வ்வ்வ்) எருமை மாடே இந்த குளத்தை மோப்பம் புடிச்சுடு  "U" Turn அடிச்சு ஓடுது.. அதுல போய் குதிக்கிரியே!!! கொஞ்சமாவது மூளை இருக்கா???  #&^%#%^#*#(##))##*#&^&*#*(#(#) .....” சரமாரியாக திட்டி விட்டு நம்மளை பார்த்து,
“யோவ்!!! இவன் இவன் உங்க கூட வந்தவனா’??? 
இவர் யாருன்னே தெரியாதுங்க....... (நன்பண்டா....)
முன்ன பின்ன பார்த்து இல்லையா???
சைட்’ல கூட பார்த்தே இல்லை பெரியவரே!’னு சொல்லி நாங்க எஸ்கேப் ஆனோம்.

கொஞ்ச நேரத்துல நன்பன் க்ரேஸி வின்னர் வடிவேலு ஸ்டைல்’ல வீடு வந்து சேர்ந்தான்.

டிஸ்கி 1: என் கதைகளில் வரும் நன்பர் “க்ரேஸி” குறிப்பிட்ட ஒரு நபரை குறிப்பதல்ல.. சில வேலை அது நானாகவும் இருக்கலாம்.(அதுக்காக இந்தக் கதைல வரும் க்ரேஸியும் நானாக இருக்கும்’னு நம்பக் கூடாது)Friday 1 July 2011

"சிங்கப்பூர் நூடுல்ஸ்" அதிரடி செய்முறை விளக்கம்
2004, டிசம்பர்’ சுனாமி வந்து போன சமயம், (அதென்ன விருந்தாளியா?? வந்து போறதுக்கு.....) அதனால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்க்கவென கூட்டம் கூட்டமாக போக ஆரம்பித்த சமயம் (லட்சக்கனக்கான மக்கள் பாதிக்கப் பட்டிருந்தாங்களே.... அவங்க கதி????) நாமளும் போகலாமென, கூட்டத்தோடு கூட்டமா நாமளும் சேர்ந்த்தாச்சு. (எங்கயாவது கூட்டம் சேர்ந்த்தா நாமளும் அங்கு போய் எட்டிப் பார்க்கிறது, நம் கடமை)

போன இடத்தில் சாப்பாடு சமைக்க ஒவ்வொரு நாளும் சமைக்க தெரிந்தவர் ஒருவர், எடு பிடி வேலைக்கு ஒருவர் என இரண்டு பேர் கொண்ட குழுவை (ஜோடி) போடப்பட்டது. எனது குழுவில் க்ரேஸி சமையலுக்கும், என்னை எடு பிடி வேலைக்கும் போடப் பட்டது. நாம சமைக்க வேண்டிய நாள் கடைசியில் இருந்ததால், நாம் அதைப் பற்றி கவலைப் படாம எவர்? எது? எவ்வளவு சூப்பரா சமைத்தாலும், அது நொல்ல, இது நொல்லனு கடுப்பேத்திடு இருக்க, நாம சமைக்க வேண்டிய நாளும் வந்துடுச்சு….. (எல்லானுமே உண்ணாவிரதம் இருந்திருப்பானுங்களோ!!!!)

நாமளும் ரொம்ம்ம்ம்ப யோசித்து, கடைசில, நூடுல்ஸ் செய்ரதா முடிவு பண்ணியாச்சுக்ரேஸி வழமை போல ஒரு கோக்கு மாக்கு வேலை பார்த்துடுவான் என்பதால, அவன் மீது ஒரு கண் வைத்துக் கொண்டே இருந்த்தேன், க்ரேஸி நூடுல்ஸ் செய்ய, நான் திருகிய தேங்காய் பூவை பிழிந்து விட்டு சக்கையை குப்பையில் போட போக, க்ரேஸிய பராக்கு பார்த்துக் கொண்டே போய், நூடுல்ஸ் கொட்டி விட்டேன்

தேங்காய் துருவும் செய்முறை விளக்கம் (என் ப்லாக் படிச்சா அறிவு வளரும்)

இதைப் பார்த்த க்ரேஸிக்கு பல்ஸ் எகிறிடுச்சுதெரிந்த கெட்ட வார்த்தையாலெல்லாம் அபிஷேகம் நடத்தி முடிக்க,(செஞ்ச வேலைக்கு டிக்சனரிய பாத்து திட்டி இருந்த்தா கூட தப்பில்லை) இப்போ என்ன பண்ணலாம்???’னு யோசித்தோம். புதுசா வாங்கி சமைக்க பணமும் இல்லை, நேரமும் இல்லை, ஏற்கனவே நம்ம மேல கடுப்புல இருக்கானுங்க.’னு LOCK இல்லாத டாய்லெட்’ல குந்தினது போல ஒரே டென்சன். என்ன பண்ணலாம்’னு தலையை பிய்த்துக் கொண்டு யோசிக்க, க்ரேஸி ஒரு ஐடியா சொல்ல, என் முகத்துல ஆயிரம் மின்னல்கள்(இப்போ மின்னல்.. கொஞ்ச நேரத்துல இடி விழப் போகுதுல்ல....) அப்படியே பண்ணலாம்’னு முடிவு பண்ணியாச்சு… (அது என்ன ஐடியானு இங்கேயே சொல்லிடா கதைல ஒரு டுவிஸ்டு இருக்காதுல்ல....) (கதையே இல்ல...அதுல டுவிஸ்டு கேக்குதா????)

சாப்பாட்டு நேரம் ஒவ்வொருத்தரும் வந்து அமரும் நேரம் பார்த்து, நான் ஒரு மூலையிலும், க்ரேஸி அடுத்த மூலையிலும் அமர்ந்து கொண்டு (ஓடுரதுக்கு வசதியா இருக்குமே!!!!) நம் திட்டத்தை அமுல் படுத்த ஆரம்பித்தோம்

தேங்காய் துருவலில் இருந்து பால் பிழியும் செய்முறை (என் ப்லாக் படிச்சா அறிவு வளரும்)


நூடுல்ஸ்ஸை பார்த்து ஒவ்வொருத்தர் முகமும் டெரர் ஆகும் நேரம் பார்த்து, க்ரேஸி சத்தமாகமச்சி, "சிங்கப்பூர் நூடுல்ஸ்" சூப்பரா வந்துருக்குல்ல…”னு சவுண்டு விட,  நாம யாரு??? எங்க மாமா சிங்கப்பூர் 5 ஸ்டார் ஹோட்டல் Chief Cook ஆச்சேஅவர் கிட்ட இருந்து படிச்ச வித்தைடா இது.. பின்னிடோமுள்ள..”னு சவுண்டு விடடெரர் ஆகின மூஞ்செல்லாம் சிங்கப்பூர் நூடுல்ஸ் சாப்பிடுர ஆரவம் வந்துடிச்சு....

சாப்பிட்டு முடிய, சில சாப்பாட்டு ஆர்வலர்கள் செய்முறை விளக்கம் கேட்க, அவர்களை சமாளிக்க பெரும் பாடாகிடுச்சு….