Sunday 30 October 2011

டுபாய் குறுக்குச் சந்து - எதிர்ப் பதிவு

என் கடைசிப் பதிவுல, டுபாய் மெயின் ரோட்டுல மலையாளி’னு டுபாய் ரோட்ட கொஞ்சம் புகழ்ந்து எழுதிவிட்டேன்.  அந்தப் பதிவிற்கு இது எதிர் பதிவு. எங்காவது குறித்து வைத்துக் கொள்ளுங்கள், தன் சொந்தப் பதிவிற்கே எதிர் பதிவு எழுதிய முதல் ஆள் நானாகத்தான் இருக்கும்...





 மேலே உள்ள படங்கள் டுபாய் கிரீக்’னு யாரும் தவறா நினைத்து விட வேண்டாம். இதுவும் டுபாய்’ல உள்ள ஒரு ரோடு’தான். இதில் உள்ள நீர் ஆற்று நீர், அல்லது குள்ளத்து நீர் அல்ல. மலசல கழிவு நீர்.

டுபாய், மற்றும் அபூ தாபியில் இங்கு வேலை செய்யும் தொழிளாழிகள் தங்கவென தனி ஏரியாக்கள் உண்டு. அதில் சோனாபூர் எனும் பகுதியின் புகைப்படங்களே இவையாகும். டுபாயின் மற்றைய பகுதிகளில் செல்வமும் செழிப்பும் கொழித்தாலும் இந்தப் பகுதி சேரியாகவே காணப்படும்.

மது, மற்றும் சூது போன்றவை மலிந்து காணப்படும் இந்தப் பகுதிகளில் போலீஸ், மற்றும் அரசாங்க சேவைகள் அபூர்வமாகவே வரும்.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் மலசல கழிவு நீர் குழாயில் ஏற்பட்ட  பிரச்சனையில் கொஞ்சம் கொஞ்சமாக பாதையில் நிறையத் தொடங்கிய நீர், வாகனங்கள் போக முடியாத அளவு நிறைந்தது. மலசல கழிவு நீர் என்பதால் பயங்கர நாற்றம் வேறு.

ஒரு சில பங்காளிகள், மிஸ்ரிகள் (எகிப்தியர்) இதை பொருட் படுத்தாது, இந்த நீரில் நடந்து செல்வர். சிலர் ஒரு குருட்டு தைரியத்தில் எப்படியும் கடந்து விடலாம்’னு வாகனத்தை இட்டு, அது நடுவில் போய் நின்றவுடன் நடுவில் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருப்பர். அப்போதும் பங்காளிகள் அதை வியாபாரமாக்கி கழிவு நீரில் இறங்கி வாகனத்தை தள்ளிக் கரை சேர்ப்பர்.

இப்படியே  கிட்டத்தட்ட 6 - 8 மாதங்கள் கழிந்தது. குளிர் காலமாதலால் அடிக்கடி மழை வந்து நீர் அதிகமாகி சில கட்டிங்களுக்குள்ளும் பரவ ஆரம்பித்தது. அரசாங்கமோ கண்டு கொள்ளவில்லை... முடிவாக யாரோ ஒரு நல்ல மனிதன் பத்திரிகைக்கு அறிவித்து விட, இந்த செய்திகள் புகைப்படத்துடன் பத்திரிகையில் வர அரசாங்கம் விழித்துக் கொண்டது. பாதை சுத்தமாக்கப்பட்டு பழைய நிலைக்கு வர 3-4 மாதங்கள் ஆனது.


சுத்தமாக்கப் பட்டு பழைய நிலைக்கு திரும்பிய பாதை

இன்னும் சில வெளி உலகுக்கு வராத டுபாயின் கருப்புப் பக்க போட்டோக்கள். 
(கருப்புப் பக்கம்’னு சொல்லிட்டு போட்டோ எல்லாம் கலரா இருக்கே’னு யாராச்சும் சொன்னா எனக்கு கெட்ட கோவம் வரும்.. ஜாக்ரத....)






இந்தத் தொளிலாழிகளின் 6 நாள் 12-14 மணித்தியால வேளையின் பின் ஒரு நாள் சுவர்க்கம் (வெள்ளிக் கிழமை). சிலருக்கு அதுவும் பாதி நாள்தான்.





இதுவும் டுபாய் ரோட்டுத்தான் மாக்காஸ்..... இந்த ரோட்டுல ஒரு பிளேட்டு சோத்த கொட்டி, சாப்பிட்டா எப்படி இருக்கும்????



25 comments:

  1. இதை எலாம் துபாய் என்றாலே ஏதோ சொர்ர்க்கம்னு நெனச்சிக்கு இருக்குற மொக்குகளுக்கும். 800 திர்ஹத்துக்கு 2 லட்சம் வரை செலவளித்து இங்கு வர துடிக்கும் மடையர்களுக்கும் அனுப்பவேண்டும் (((

    ReplyDelete
  2. செம உள்குத்து பதிவுன்னா... முதல்ல போடுற மாதிரி போட்டுட்டு, பின்னாடி வாரி விட்டது சூப்பர் ணா... எதையும் பிளான் பண்ணி செய்வீங்க போல

    ReplyDelete
  3. துபாயின் அவலங்களை போட்டு உடைத்து விட்டீர்கள், ஆமா அந்த பத்திரிக்கைக்கு போட்டு குடுத்தது நீங்கதான்னு போலீஸ் தேடுதாமே உங்களை ஹி ஹி அப்பிடியா...???

    ReplyDelete
  4. டுவாய் ரோடுன்னீங்க, ரோடு எங்கண்ணே?

    ReplyDelete
  5. /////என் கடைசிப் பதிவுல, டுபாய் மெயின் ரோட்டுல மலையாளி’னு டுபாய் ரோட்ட கொஞ்சம் புகழ்ந்து எழுதிவிட்டேன். அந்தப் பதிவிற்கு இது எதிர் பதிவு. எங்காவது குறித்து வைத்துக் கொள்ளுங்கள், தன் சொந்தப் பதிவிற்கே எதிர் பதிவு எழுதிய முதல் ஆள் நானாகத்தான் இருக்கும்...//////

    பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக இப்படி ஓரு உள்குத்து பதுவு.....ஹி.ஹி.ஹி.ஹி....

    படங்கள் அழகு நீங்கள் எடுத்ததா?

    ReplyDelete
  6. @ கறுவல் said...

    /////இதை எலாம் துபாய் என்றாலே ஏதோ சொர்ர்க்கம்னு நெனச்சிக்கு இருக்குற மொக்குகளுக்கும். 800 திர்ஹத்துக்கு 2 லட்சம் வரை செலவளித்து இங்கு வர துடிக்கும் மடையர்களுக்கும் அனுப்பவேண்டும் (((////

    இதைப் பார்த்தாவது 4 பேரு தெரிஞ்சிக்கட்டும்னுதான் போட்டிருக்கேன்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  7. @ suryajeeva said...

    //// செம உள்குத்து பதிவுன்னா... முதல்ல போடுற மாதிரி போட்டுட்டு, பின்னாடி வாரி விட்டது சூப்பர் ணா... எதையும் பிளான் பண்ணி செய்வீங்க போல///

    ப்லான் பண்ணியெல்லாம் செய்யல... ஏதோ நமக்கு அமையுது...

    ReplyDelete
  8. @ MANO நாஞ்சில் மனோ said...

    /// துபாயின் அவலங்களை போட்டு உடைத்து விட்டீர்கள், ஆமா அந்த பத்திரிக்கைக்கு போட்டு குடுத்தது நீங்கதான்னு போலீஸ் தேடுதாமே உங்களை ஹி ஹி அப்பிடியா...???//

    நானும் பேப்பருக்கு குடுத்தேன்.. ஆனால், எந்த பேப்பருமே கண்டுக்கல...

    ReplyDelete
  9. @ பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ///டுவாய் ரோடுன்னீங்க, ரோடு எங்கண்ணே?///

    அதைத்தான் நாமளும் தேடிக்கிட்டு இருக்கோம்...

    ReplyDelete
  10. @K.s.s.Rajh said...
    // /////என் கடைசிப் பதிவுல, டுபாய் மெயின் ரோட்டுல மலையாளி’னு டுபாய் ரோட்ட கொஞ்சம் புகழ்ந்து எழுதிவிட்டேன். அந்தப் பதிவிற்கு இது எதிர் பதிவு. எங்காவது குறித்து வைத்துக் கொள்ளுங்கள், தன் சொந்தப் பதிவிற்கே எதிர் பதிவு எழுதிய முதல் ஆள் நானாகத்தான் இருக்கும்...//////

    பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக இப்படி ஓரு உள்குத்து பதுவு.....ஹி.ஹி.ஹி.ஹி....//

    ஒவ்வொரு தாக்கத்துக்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் இருக்கு’னு நியூட்டன் எப்பவோ சொல்லிட்டாரே!!!

    ReplyDelete
  11. @ K.s.s.Rajh said...

    ///படங்கள் அழகு நீங்கள் எடுத்ததா? ///

    படங்கள் நான் எடுத்தது’னு உண்மைய சொன்னா, நானும் அந்த ஏரியாக்காரன்’ங்குர உண்மை தெரிஞ்சிடும்’னுதான் அதைப் போடாம விட்டேன்.. நீங்க விட மாட்டீங்க போலிருக்கே!!!

    முதல் பாதையிலுள்ள கழிவு நீர் படங்கள் எல்லாமே என் ரூம் வாசலில் இருந்து எடுக்கப் பட்டவையே!!!

    ReplyDelete
  12. படங்கள் அருமை பாயிக்....
    எங்களக்கு நாற்றம் வரவில்லை அதனால்தான்.....

    எங்கு பார்த்தாலும் இந்தக் கதிதான்....
    மின்னுதெல்லாம் பொன்னல்லவே....

    நல்ல பகிர்வு பாயிக்....

    ReplyDelete
  13. ஒரு சில சினிமா அரைவேக்காடுகள் ஓசில வந்து ஓசில தின்னுட்டு அங்க போய் பீத்துரத இன்னும் எத்தனை காலம்தான் நம் மக்கள் நம்புவாங்களோ? :))

    ReplyDelete
  14. டுபாய்க்கு இப்படி ஒரு முகமா....???

    ReplyDelete
  15. மாப்பு அதனால தான் நீங்க இப்போ ஓரிக்க ஊருக்கு எஸ் ஆகிட்டிங்க எண்டு கேள்வி பட்டேன் ???

    ReplyDelete
  16. இப்போ இருக்க *

    ReplyDelete
  17. அப்பா சாமி கப்பு தாங்கமுடியல

    ReplyDelete
  18. ஸலாம் சகோ.ஃபைக்,
    ஒரு பழமொழி தெரியுமா..?
    "ஒய்யாரக் கொண்டையாம்; தாழம் பூவாம்; அதன் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்'"
    இது துபாய்க்கு பொருந்தும். ஏற்கனவே மூட்டை பூச்சிகளுக்கு துபாய் ரொம்ப ஃபேமஸ் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இனி... கொசு..!
    ம்ம்ம்... எதிர்பதிவு அல்ல... அதிரடி பதிவு..! மரண அடி ஃபோட்டோஸ்.

    //மது, மற்றும் சூது போன்றவை மலிந்து காணப்படும் இந்தப் பகுதிகளில்//---ஏனுங்க சகோ. இங்கே இருக்கீக..? வேற நல்ல இடம் பாருங்க.

    ReplyDelete
  19. டுபாய்ல இப்பிடியும் இருக்கா பாஸ்?

    முதன்முதலா நீங்கதான் பதிவு செய்திருக்கீங்க போல!

    இதுவரை நீங்க காட்டிய டுபாய்க்கு அப்பிடியே உல்டாவா...

    சூப்பர் பாஸ்! இதையும் தொடருங்கள்!

    ReplyDelete
  20. அருமையான பதிவு நண்பா....
    உண்மையா சொல்ல போனா இதுல உள்ளது அங்குள்ளத்தில் ஒரு சிறு துரும்பு கூட இல்ல இது ஒரு ரோடுதானே ... உண்மையிலேயே அங்கெ செல்ல கூடிய சகோதரர்கள் மனதளவிலும் இத மாதிரி சூழலாலும் ரொம்பவே பாதிக்கப்படுறாங்க.. அதுதான் நிதர்சன உண்மை.. அதனால பெற்றோர்களே நமது குழந்தைகள் அங்கு சென்று அடிமையாக இருக்காம முடிஞ்சவரை முயற்சி செய்யுங்கள்.

    ReplyDelete
  21. புது மெதட் ... எதிருக்கு எதிர்

    ReplyDelete
  22. வடிவேலும் பார்த்திபனும் சாதிக்காததை ஒரே பதிவுல முடிச்சுட்டீங்க...
    சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப்போல வருமா....

    ReplyDelete
  23. வணக்கம் தல
    நலமா?

    உண்மையில் சுகாதாரச் சீர்கேட்டினை விளைவித்த சாலையினை மூன்று மாதத்தின் பின்னர் திருத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
  24. // எங்காவது குறித்து வைத்துக் கொள்ளுங்கள்,
    தன் சொந்தப் பதிவிற்கே எதிர் பதிவு எழுதிய
    முதல் ஆள் நானாகத்தான் இருக்கும்... //

    அப்ப இந்த அவார்ட்டை நீங்களே
    வந்து வாங்கிக்கறீங்களா..? இல்ல
    நாங்களே வீடு தேடி வந்து தரணுமா..?!!

    ReplyDelete
  25. // இன்னும் சில வெளி உலகுக்கு வராத
    டுபாயின் கருப்புப் பக்க போட்டோக்கள். //

    அட.. இந்த பையனுக்குள்ள என்னமோ
    இருந்துருக்கு பாரேன்..!!

    ReplyDelete