Thursday 27 October 2011

டுபாய் மெயின் ரோட்டுல மலையாளி


கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம நண்பன் ஒருத்தன் டுபாய் வந்தான். அவன் கெட்ட நேரம்’னு நினைக்கிறேன் வரும் போதே எவனோ ஒருத்தன் என் தொலைபேசி இலக்கத்தை அவனிடம் குடுத்துட்டானுங்க... வந்து ஒரு ஹோட்டல்’ல தங்கியதுமே முதல் வேளையா என்னை தொலைபேசியில் அழைக்கிறான்.

மச்சான்...  நான் டுபாய் வந்துட்டேண்டா..... நீ எங்கடா இருக்கே!!!

நான் எங்கே இருக்கே’னு சொன்னா உனக்கு வெளங்கவா போகுது.... நீ எங்க இருக்கே’னு சொல்லுடா.. நான் வர்ரேன்.

மச்சீ.. நான் எங்கே இருக்கேன்’னே தெரியலடா... ஒன்னுமே புரியல...

சரி.. நீ இருக்குர இடத்துல இருக்குர ஒரு Land Mark'ஐ சொல்லுடா....

ம்ம்ம்ம்... நான் ஒரு மெயின் ரோட்’டுக்கு பக்கமா இருக்கேண்டா...

டேய்!! மாவட்டத்துக்கே ஒரே ஒரு மெயின் ரோடு இருக்க, இது உங்க ஊரா??? இங்க எல்லாமே மெயின் ரோட்’தான்.. வேற ஏதாவது சொல்லுடா.....

ம்ம்ம்.. ஆங்.. மச்சி தலைக்கு மேலால கப்பல் பறக்குதுடா...

என்னது??? கப்பல் பறக்குதா?? என்னடா சொல்றே????

நான் சொல்றது பறக்குர கப்பல்’டா...

டேய்!! பிளைட்டு’னு சொல்டா... டுபாய்’ல காக்கா, குருவிய விட பிளைட்டுத்தான் அதிகமா பறக்கும். வேற எதாவது சொல்லு மாப்பூ...

WoW!!! மச்சான் கண்டு புடிச்சிட்டேன்.... ரோட்டு ஓரத்துல  மலையாளி ஒருத்தன்’ட டீக்கடை  வச்சிருக்காண்டா..... அத வச்சி ஈஸியா இடத்த கண்டு புடிச்சிடலாமுள்ள...

அடப்பாவி... ரோட்டு ஒரமா இல்லடா... ரோட்டே (காற்றே) இல்லாத இடத்துல கூட மலையாளி டீக்கடை இருக்கும்டா.....

ஆ!!!! இந்த ரோட்டுல போற பஸ் நம்பர சொல்லவா.....????

வேணாம்.. வேணவே வேணாம்.... அவனுங்க 10 கி.மீ தூரத்த 50 கீ.மீ போவானுங்க.. சந்து பொந்த கூட விட்டு வைக்க மாட்டானுங்க...

மச்சீ.. வேணாம்டா... நீ என்ன சந்திக்கவே வேணாம்.. ஆள விடு...

சரி..சரி.. நான் இருக்குற இடத்துக்கு எப்படி வரனும்’னு சொல்றேன். வாரியா????

ஓ.கே’டா... உன் அட்ரஸ்’ஐ சொல்லு.. எழுதிக்கிறேன்..

எங்கடா எழுதுவே!!! இப்போ ரோட்’லதானே இருக்கே!!!

ஹோட்டல் ரிசப்ஷன்’ல குடுத்த கார்டு இருக்குடா.. அதுல பின்புறமா எழுதிக்கிறேன்.

அடப்பாவி... அத வச்சிகிட்டா இந்த ஓட்டு ஓட்டினே!!! அதுல ஹோட்டல் அட்ரஸ் இருக்கா..??

ஆமா இருக்குடா....

#@#^&*$%#*%$*%$*%$#*%$#*@*#)*)#&#*^&R^^#%^&....
அதப்படிடா முதல்ல......

டிஸ்கி 1: இன்னும் சில இடங்களில் விமானத்துக்கு கப்பல்’னுதான்  சொல்வாங்க... அந்தக் காலத்துல கப்பலையே பாத்துகிட்டு இருந்தவங்களுக்கு, விமானம் வந்ததும், பெயர் தெரியாமல், கப்பல் என்றே அழைத்திருப்பார்களோ!!!

டிஸ்கி 2: தலைப்பில் மலையாளியை சேர்த்திருப்பது, மலையாளிக்கு எதாவது ஏடா கூடமா நடந்தா முதலில் சந்தோசப் படுரது நம்ம ஆளுங்கதான்.
(ஐடியா பை : ரியாஸ்)

டிஸ்கி 3 : என்னடா இவன் டுபாய் ரோட்ட ஓவரா புகழ்ரானே’னு பாக்காதீங்க.. அடுத்த பதிவுல, யாரும் பார்த்திராத டுபாய் ரோட் புகைப்படங்களை பதிவிடுகிறேன் இன்ஷா அல்லாஹ்.


37 comments:

  1. //நான் எங்கே இருக்கே’னு சொன்னா உனக்கு வெளங்கவா போகுது.... நீ எங்க இருக்கே’னு சொல்லுடா.. நான் வர்ரேன்//
    சூப்பர்! :-)

    //வேணாம்.. வேணவே வேணாம்.... அவனுங்க 10 கி.மீ தூரத்த 50 கீ.மீ போவானுங்க.. சந்து பொந்த கூட விட்டு வைக்க மாட்டானுங்க...//
    இது நானும் கேள்விப்பட்டிருக்கேன்!

    கலக்கல் மச்சி! :-)
    அப்புறம் நானும் டுபாய் வந்தா உங்கள காண்டாக்ட் பண்றேன் சரியா?

    ReplyDelete
  2. ஆஹா மலயாளி டீக்கடை மேட்டர் சூப்பர்.. உண்மையும் கூட

    அதெல்லாம் சரி!
    //டிஸ்கி 2: தலைப்பில் மலையாளியை சேர்த்திருப்பது, மலையாளிக்கு எதாவது ஏடா கூடமா நடந்தா முதலில் சந்தோசப் படுரது நம்ம ஆளுங்கதான்.
    (ஐடியா பை : ரியாஸ்)//

    என்னா இது?

    இப்ப மலயாளிகள பத்தியெல்லாம் பதிவு போட்றத நிறுத்தியாச்சு.. அவங்கள பகைச்சிட்டுக்கு இங்கே குப்ப கொட்ட முடியாது.. டேமேஜர்லயிருந்து சுத்தியிருக்கிற எல்லாரும் மலையாளிதான்,அவ்வ்வ்வ்வ்

    சேட்டா ஒரு சாய்!!!!!!!!!1

    ReplyDelete
  3. நல்ல மொக்கை பாஸ் சூப்பர்...........

    ReplyDelete
  4. ஹா ஹா.. இப்பிடியெல்லாமா இருப்பாங்க

    ReplyDelete
  5. // நான் சொல்றது பறக்குர கப்பல்’டா...

    டேய்!! பிளைட்டு’னு சொல்டா... //

    ஓ.. இவரு எஜிக்கேட்டட் பேமிலியாமாம்..!

    6 மாசம் முன்னாடி வரை நீங்களும்
    பிளைட்டை பறக்குற கப்பல்னு
    சொல்லிட்டு இருந்தது எங்களுக்கு
    தெரியாதா.?

    ReplyDelete
  6. // ஹோட்டல் ரிசப்ஷன்’ல குடுத்த கார்டு
    இருக்குடா.. அதுல பின்புறமா எழுதிக்கிறேன்.

    அடப்பாவி... அத வச்சிகிட்டா இந்த ஓட்டு ஓட்டினே!!! //

    அது ஒரு 7 ஸ்டார் ஓட்டல்..!

    அட்ரஸ் குடுத்தாலும் அங்கே எல்லாம்
    உங்களை உள்ளே விடமாட்டாங்கன்னு
    தான் அவரு அட்ரஸ் சொல்லலை.

    ReplyDelete
  7. // நீ எங்க இருக்கே’னு சொல்லுடா.. நான் வர்ரேன்.

    மச்சீ.. நான் எங்கே இருக்கேன்’னே தெரியலடா... ஒன்னுமே புரியல..//
    :D :D :D
    செம காமெடி
    இந்த லிங்க் அந்த நண்பர்க்கு அனுப்பி வைங்க :D
    அப்புறம் இருக்கு உங்களுக்கு

    ReplyDelete
  8. @ ஜீ... said...

    ////
    கலக்கல் மச்சி! :-)
    அப்புறம் நானும் டுபாய் வந்தா உங்கள காண்டாக்ட் பண்றேன் சரியா? ///

    மறுபடியும் முதல்ல இருந்தா?????

    ReplyDelete
  9. @ ரியாஸ்..

    //இப்ப மலயாளிகள பத்தியெல்லாம் பதிவு போட்றத நிறுத்தியாச்சு.. அவங்கள பகைச்சிட்டுக்கு இங்கே குப்ப கொட்ட முடியாது.. டேமேஜர்லயிருந்து சுத்தியிருக்கிற எல்லாரும் மலையாளிதான்,அவ்வ்வ்வ்வ்

    சேட்டா ஒரு சாய்!!!!!!!!!1 ////

    ஹி..ஹி.. உண்மைதான்.. நாம் சொல்ர அளவுக்கு அவங்க மோசமான ஆளுங்களும் கிடையாது...

    ReplyDelete
  10. @ K.s.s.Rajh said...

    //// நல்ல மொக்கை பாஸ் சூப்பர்...........///

    ஹி... ஹி..... எங்க அனுபவம் உங்களுக்கு சூப்பரா தெரியுதா????

    ReplyDelete
  11. @ மதுரன் said...

    ///ஹா ஹா.. இப்பிடியெல்லாமா இருப்பாங்க///

    இது வெறும் ட்ரைலர் சார்..

    ReplyDelete
  12. @ வெங்கட் said...

    // நான் சொல்றது பறக்குர கப்பல்’டா...

    டேய்!! பிளைட்டு’னு சொல்டா... //

    ஓ.. இவரு எஜிக்கேட்டட் பேமிலியாமாம்..!

    6 மாசம் முன்னாடி வரை நீங்களும்
    பிளைட்டை பறக்குற கப்பல்னு
    சொல்லிட்டு இருந்தது எங்களுக்கு
    தெரியாதா.?////

    பப்லிக்..பப்லிக்... கம்பனி சீக்ரெட்’ஐ காப்பாத்துங்க தல...

    ReplyDelete
  13. @ வெங்கட் said...

    //// ஹோட்டல் ரிசப்ஷன்’ல குடுத்த கார்டு
    இருக்குடா.. அதுல பின்புறமா எழுதிக்கிறேன்.

    அடப்பாவி... அத வச்சிகிட்டா இந்த ஓட்டு ஓட்டினே!!! //

    அது ஒரு 7 ஸ்டார் ஓட்டல்..!

    அட்ரஸ் குடுத்தாலும் அங்கே எல்லாம்
    உங்களை உள்ளே விடமாட்டாங்கன்னு
    தான் அவரு அட்ரஸ் சொல்லலை.///

    ஆமா.. தொழில்’ல போட்டி பொறாமை வர்ரது சகஜம்தானே!!!!

    ReplyDelete
  14. // ஆமா.. தொழில்’ல போட்டி
    பொறாமை வர்ரது சகஜம்தானே!!!! //

    ஆச்சரியமா இருக்கே..

    ஆமா., இப்ப கதவு திறந்து விடற
    வாட்மேன்களுக்குள்ள கூட போட்டி.,
    பொறாமை வந்துடுச்சா..?

    ReplyDelete
  15. ஸலாம் சகோ.ஃபைக்...
    ஹா...ஹா...ஹா... செம காமடி கலாட்டா..! இப்படித்தான் தோளில் ஆட்டை போட்டுக்கொண்டு ஊரு முழுக்க ஆட்டைத்தேடி அலைந்த நம்ம கூட்டம் எல்லாம் இப்போது துபாயில் அலையுதுங்க..! வெளங்கிரும்..! இன்னும் நினைச்சு நினைச்சு சிரிப்பு சிரிப்பா வருது சகோ. அடங்கல.

    ReplyDelete
  16. @ வெங்கட் said...

    /// ஆச்சரியமா இருக்கே..

    ஆமா., இப்ப கதவு திறந்து விடற
    வாட்மேன்களுக்குள்ள கூட போட்டி.,
    பொறாமை வந்துடுச்சா..?//

    ஆமா... எத்தனை பேருக்கு வெற்றிக் கதவ திறந்து விட்டிருக்கோம்... ஹி...ஹி...

    ReplyDelete
  17. @ ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...

    /// ஸலாம் சகோ.ஃபைக்...
    ஹா...ஹா...ஹா... செம காமடி கலாட்டா..! இப்படித்தான் தோளில் ஆட்டை போட்டுக்கொண்டு ஊரு முழுக்க ஆட்டைத்தேடி அலைந்த நம்ம கூட்டம் எல்லாம் இப்போது துபாயில் அலையுதுங்க..! வெளங்கிரும்..! இன்னும் நினைச்சு நினைச்சு சிரிப்பு சிரிப்பா வருது சகோ. அடங்கல.///

    சலாம் ஆஷிக்...

    என்ன பண்ண .. நம்ம பொளப்பு இப்படித்தான் போய் கிட்டு இருக்கு....

    ReplyDelete
  18. ////ம்ம்ம்.. ஆங்.. மச்சி தலைக்கு மேலால கப்பல் பறக்குதுடா...///

    ஒருவேள தண்ணிக்கடில இருக்க ஹோட்டலா இருக்குமோ?

    ReplyDelete
  19. //////WoW!!! மச்சான் கண்டு புடிச்சிட்டேன்.... ரோட்டு ஓரத்துல மலையாளி ஒருத்தன்’ட டீக்கடை வச்சிருக்காண்டா..... அத வச்சி ஈஸியா இடத்த கண்டு புடிச்சிடலாமுள்ள...
    /////

    பச்சப்புள்ளையா இருப்பாரு போல?

    ReplyDelete
  20. //////////வெங்கட் said...
    // நான் சொல்றது பறக்குர கப்பல்’டா...

    டேய்!! பிளைட்டு’னு சொல்டா... //

    ஓ.. இவரு எஜிக்கேட்டட் பேமிலியாமாம்..!

    6 மாசம் முன்னாடி வரை நீங்களும்
    பிளைட்டை பறக்குற கப்பல்னு
    சொல்லிட்டு இருந்தது எங்களுக்கு
    தெரியாதா.?///////

    அப்போ அதுக்கப்புறம் நிஜ கப்பலை பாத்துட்டாரா?

    ReplyDelete
  21. // அவன் கெட்ட நேரம்’னு நினைக்கிறேன் வரும் போதே எவனோ ஒருத்தன் என் தொலைபேசி இலக்கத்தை அவனிடம் குடுத்துட்டானுங்க... //

    ஹா ஹா :)) உங்க ப்ளாக்ல எனக்கு அதிகம் பிடிச்சதே இந்த மாதிரி நக்கல்தான் :)) ரொம்ப நல்லா இருக்கு!

    ReplyDelete
  22. /அப்போ அதுக்கப்புறம் நிஜ கப்பலை பாத்துட்டாரா?//

    எங்க பாக்குறது ? தண்டவாளத்துல போறததான் இவர் கப்பலுன்னு நினைச்சிட்டு இருக்காரே..

    ReplyDelete
  23. ஆமாங்க, மலேசியா வில் இருப்பவர்கள் இப்ப கூட 'கப்ப' ல வந்தேன் அப்படின்னு சொல்லுவாங்க

    ReplyDelete
  24. நானும் ஏதோ கரப்பான் பூச்சிய ரோட்ல விட்டு விலயாடுரிங்க எண்டு நெனச்சி ஓடி வந்தேன் .........

    ReplyDelete
  25. மலையாளிக்கு எதாவது ஏடா கூடமா நடந்தா முதலில் சந்தோசப் படுரது நம்ம ஆளுங்கதான்.
    -:)

    துபாய் குறுக்கு சந்து..பார்க்க காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  26. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //// ஹலோ டுபாயா......?//

    ஆமாங்க... டுபாயேதான்.. ஆனால், டுபாய்’ல எங்கனுதான் தெரியல....

    ReplyDelete
  27. @ பன்னிக்குட்டி ராம்சாமி said...

    /// ////ம்ம்ம்.. ஆங்.. மச்சி தலைக்கு மேலால கப்பல் பறக்குதுடா...///

    ஒருவேள தண்ணிக்கடில இருக்க ஹோட்டலா இருக்குமோ?///

    ஆமா... அதுவும் சரியாத்தான் இருக்கு... மலையாளியும் அங்க டீக்க்டை வைத்தாலும் நம்பத்தான் வேணும்..

    ReplyDelete
  28. கோமாளி செல்வா said...

    //// அவன் கெட்ட நேரம்’னு நினைக்கிறேன் வரும் போதே எவனோ ஒருத்தன் என் தொலைபேசி இலக்கத்தை அவனிடம் குடுத்துட்டானுங்க... //

    ஹா ஹா :)) உங்க ப்ளாக்ல எனக்கு அதிகம் பிடிச்சதே இந்த மாதிரி நக்கல்தான் :)) ரொம்ப நல்லா இருக்கு!///

    நன்றி செல்வா... (ஒரு வேல இவர் சொன்னது கூட நக்கலா இருக்குமோ!!!!)

    ReplyDelete
  29. கோமாளி செல்வா said...

    /// /அப்போ அதுக்கப்புறம் நிஜ கப்பலை பாத்துட்டாரா?//

    எங்க பாக்குறது ? தண்டவாளத்துல போறததான் இவர் கப்பலுன்னு நினைச்சிட்டு இருக்காரே..///

    அப்போ அதுக்கு பேரு கப்பல் இல்லையா????

    ReplyDelete
  30. @ suryajeeva said...

    ////ஆமாங்க, மலேசியா வில் இருப்பவர்கள் இப்ப கூட 'கப்ப' ல வந்தேன் அப்படின்னு சொல்லுவாங்க.///

    மலேசியாலயாலயே இந்த நிலமையா???

    ReplyDelete
  31. @ HajasreeN said...

    /// நானும் ஏதோ கரப்பான் பூச்சிய ரோட்ல விட்டு விலயாடுரிங்க எண்டு நெனச்சி ஓடி வந்தேன் .........//

    ஏற்கனவே மலையாளிய கரப்பான் பூச்சி’னு வாங்கி கட்டி இருக்கிறேன்.. மறுபடியுமா???

    ReplyDelete
  32. @ ரெவெரி said...

    ///மலையாளிக்கு எதாவது ஏடா கூடமா நடந்தா முதலில் சந்தோசப் படுரது நம்ம ஆளுங்கதான்.
    -:)

    துபாய் குறுக்கு சந்து..பார்க்க காத்திருக்கிறேன்...///

    அடுத்த பதிவு இன்ஷா அல்லாஹ் அதுதான்...

    ReplyDelete
  33. ///இன்னும் சில இடங்களில் விமானத்துக்கு கப்பல்’னுதான் சொல்வாங்க... அந்தக் காலத்துல கப்பலையே பாத்துகிட்டு இருந்தவங்களுக்கு, விமானம் வந்ததும், பெயர் தெரியாமல், கப்பல் என்றே அழைத்திருப்பார்களோ!!!///

    எனக்குத் தெரிந்த என் பாட்டி கூட அப்படித்தான ்சொல்லியிருக்கிறார்கள்.. !! அதுவும் 'ஏராகப்பல்' என்று விமானத்தை அடிக்கடி கூறுவார்கள்.. நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி..!!

    பதிவும் கலக்கலாக இருந்தது..!! பாராட்டுக்கள்..!!

    ReplyDelete
  34. உங்க வலைப்பூவுல பாலோவாரா ஜாய்ன் பண்ணிட்டேன்.. !!

    ReplyDelete
  35. உங்களைப் பயங்கரமா நோகடிச்சிருக்கானே உங்கள் நண்பன்.
    இது தான் கப்பல் பார்த்த சேவகன் கதையா.

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  36. //அடப்பாவி... ரோட்டு ஒரமா இல்லடா... ரோட்டே (காற்றே) இல்லாத இடத்துல கூட மலையாளி டீக்கடை இருக்கும்டா.....//

    100% true...................

    ReplyDelete