Wednesday 1 July 2015

என் உச்சி மண்டைல....



போன வெள்ளிக் கிழமை,
பகல் வேளை,
மஸ்ஜித்துக்கு போகலாம்னு அவசரமா கடைய மூடிட்டு இருக்கேன் கடைசி கதவை போடும் நேரம் பார்த்து, பக்கத்து ஊர்ல சலூன் நடத்துர நம்ம உலக மகா கஸ்டமர் ஒருத்தன் வந்துட்டான்..

அண்ணே!!! அவசரமா கத்தரி (Scissors) ஒன்னு குடுங்கண்ணே!!

தம்பி, தம்பி கடைய மூடிட்டு இருக்கேன், கோவிச்சுக்காம வேற எங்கயாவது போய் வாங்கிக்கோப்பா..

அதெல்லாம் முடியாதுண்ணே!!! சீக்கிரமா குடுங்க..ரொம்ப அவசரம்..

முடியா..

அண்ணே, பேசிட்டு இருக்குர நேரம் குடுத்திருக்கலாம்ல.. சீக்கிரம்னே....

தொல்ல தாங்க முடியாம போய் கத்தரியை எ டுக்க வேறெதையோ எடுத்தேன். அத கைல வாங்கிட்டு ஓட பார்த்தான்.

டேய்!! அது பென்சில் பாக்ஸ்’டா..அத குடு.. இதோ இருக்கு நீ கேட்டது...

இதோ பணம் இருக்கு...குடு குடு குடு குடு...

டேய்!!! எதுக்கு இப்போ குடுகுடுப்பை காரம் மாதிரி அடிக்குரே.. கொஞ்சம் பொறுடா.. பேக்ல போட வேணாமா....???

போக்;லாம் தேவல. நான் என் பாக்கட்லயே வச்சுக்குறேன். வரட்டா...

ஆமா.. மீதி பணம் வேணாமா?? அத நான் என் பாக்கட்ல வச்சுக்கவா....

சீக்கிரம் குடுங்கண்ணே!!!! அய்யோ!!!! லேட் ஆவுதே!!!

இந்தா மீதி..போய் தொலை. . கத்தரிய டவுசர் பாக்கட்ல போட்டிருக்கே, எங்கயாவது, எதையாவது அறுத்துட போகுதுடா....

அட்வைஸ் பண்ர நேரமாணே இது??? சலூன்ல ஒருத்தன் பாதி முடி வெட்டின நிலமைல இருக்காண்ணே!!!

அடப்பாவி.. இத முதல்லயே சொல்ல வேணாமாடா???


அவன் போனதுமே கடைய சாத்திட்டு ஜும்மாவுக்கு போய்ட்டு, ஜும்மா தொழுகை முடிஞ்சு சாப்டு விட்டு, சுமாரா ரெண்டரை மணித்தியாலத்துக்கு பிறகு கடைக்கு வர்ரேன், கத்தரி வாங்கின பார்ட்டி கடை வாசல்ல குந்திகிட்டு இருக்கான்.

டேய்!! அதுக்குள்ள கடைக்கு போய் வந்துட்டியா???

அழும் தொனியில்...
நான் எங்கண்ணா கடைக்குப் போனேன்???  அவசரத்துல என்னோட பைக் சாவிய உங்க கடைக்குள்ள வச்சுட்டேண்ணே!!!  அவ்வ்.....

கிர்ர்ர்ர்........அப்போ, முடி வெட்டிட்டு பாதிலயே விட்டுட்டு வந்தியே, அந்தாளோட நிலைமை என்னாடா???

யாருக்குண்ணே தெரியும்??? இனிமே நான் சலூன் பக்கம் போனாத்தானே!!!!








7 comments:

  1. ஹாஹாஹா! நல்ல காமெடி!

    ReplyDelete
  2. ஹாஹாஹா! நல்ல காமெடி!

    ReplyDelete
  3. பாவம் முடிவெட்ட வந்தவன் ....

    ReplyDelete
  4. புன்னகை வந்து விட்டது. ரசித்தேன்

    ReplyDelete
  5. தளிர் சுரேஷ்,

    வருகைக்கும், வலைச்சரத்தில் என் பதிவையும் சேர்த்தமைக்கும் ரொம்ப நன்றி

    ReplyDelete
  6. ராஜபாட்டை ராஜா, G.M Balasubramaniam

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  7. ராஜபாட்டை ராஜா, G.M Balasubramaniam

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete