Saturday, 26 November 2011

பனை மரத்துல வௌவாலா?? Face Book'க்குக்கே சவாலா???
ஒரு வாரத்துக்கு முன்னால நம்ம கம்பனி’ல இருந்த ரெண்டு பாகிஸ்தானிங்க, ரெண்டு Lap Top வாங்கிட்டு வந்துட்டானுங்க. ஷப்பா... முடியல.. எந்த பக்கம் திரும்பினாலும் அவனுங்கதான் Lap Top சகிதமாமுன்னாடி நிக்கிறானுங்க.

ச்சும்மா நின்னாலும் பரவாயில்ல. U Tube'ல உள்ள மொத்த வீடியோவையும் டவுன்லோட் பண்ணி இருப்பானுங்க’னு நினைக்கிறேன். எந்த Software இலவசமா கிடைக்குதோ, அதெல்லாம், இவனுங்க Lap Top’ல கட்டாயம் இடம் பிடித்திருக்கும். அந்த Software அவசியமா இல்லையா என்பதெல்லாம் யோசிக்கிரதே இல்ல.

ஒரு, சில நாட்களுக்கு முன்னாடி, நம்ம டேமேஜர் கூப்பிட்டு, ஒரு பாகிஸ்தானியை காட்டி, இவன் Lap Top’ல Password மறந்துடானாம். நானும் கடந்த 2 மணித்தியாலமா எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன். முடியல. நீயாவது முயற்சி பண்ணிப் பாரே’னு வழமை போல தன்னால முடியாத காரியத்தை நம்ம மேல போட்டுட்டு போயிட்டாரு.

எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு காண அதன் ஆரம்பத்திலிருந்தே பார்க்க வேண்டும்’னு நம்ம Physics ஆசிரியர் சொல்லி இருக்காரு (நான் Physics படிச்சிருக்கேன்-விளம்பரம்). எனவே நானும் ஆரம்பத்துல இருந்தே ஆரம்பிக்கலாம்’னு “அண்ணே!!! உண்மைய சொல்லுங்க!! தண்ணி அடிச்சிருக்கீங்களா’னு கேக்க, என் அறிவையும், தூர நோக்கையும் பார்த்து அசந்து போய்ட்டான்’னா பாத்துகங்களே!!!! (விட்ரா விட்ரா... விஞ்ஞானிங்க வாழ்க்கைல இதெல்லாம் சகஞம்- மைண்ட் வாய்ஸ்)

அண்ணே!! உங்க Password என்னதுண்ணே!!’னு கேட்க அவனும் *****’னு ஒரு Password’ஐ சொல்ல, இவன் எப்படியும் தண்ணிய போட்டுடு குப்புறப் படுத்துட்டு எதையாவது மாற்றி  மாற்றி எழுதியிருப்பான்’ன ஒரு ஓவர் கன்ஃபிடன்ஸ்’ல எப்படியெல்லாம் அந்த Password’ஐ மாற்றி அடிக்கலாமோ அப்படியெல்லாம் முயற்சி பண்ணியாச்சு. கிட்டத்தட்ட, நூறு Password எழுதியிருப்பேன். ஆனாலும் திறக்கவே மாட்டேங்குது.

இதுக்கு மேலயும் முடியாது, Format பண்ணிடலாம்’னு முடிவு பண்ணி, Windows 7 CD’ய போட்டு ஒரு மணித்தியாலம்  முயற்சி பண்ணியும் Boot ஆக மாட்டேங்குது. ரொம்ப பேஜார் ஆகிடுச்சு.... அண்ணே!!!!! நல்லா யோசிச்சு பாருங்க... எங்கேயோ தப்பு நடக்குது’னு அவனை குலுக்க, அப்போத்தான் சொன்னான்,

தம்பி..... நான் Language'ஐ Arabic'ஆக மாற்றி வச்சிருக்கேன். அது ஒன்னும் பிரச்சனை இல்லைதானே!!!!!


அட நன்னாரிப் பயலே!!! ... இதை ஏண்டா இவ்வளவு நேரமும் சொல்லல்ல.. அவனுக்கு புரியாத தமிழில் அவனை திட்டி விட்டு (புரிஞ்சா நம்மள கும்மிருவானோ’னு ஒரு பயம்) Language’ஐ English'ஆக மாற்றி விட்டு Password’ஐ குடுக்க, திறந்தது ஜன்னல் (Windows).

ஷப்பா.. பிரச்சனை முடிஞ்சது’னு பார்த்தா, அடுத்த பாகிஸ்தானி வர்ரான்.


தம்பி!!! எனக்கு Face book'ஐ Download பண்ணி குடுப்பா.......

என்னது???? Face book'ஐ Download பண்ணி குடுக்கவா????

ஆமா.. தம்பி... நானும் Face book’ல ஒரு Account திறக்கனும். நீங்க Download பண்ணிகுடுத்துட்டீங்கனா, மத்த வேலையெல்லாம் நான் பாத்துக்குறேன்.

ஆஹா...வந்துட்டான்ய்யா...வந்துட்டான்ய்யா... - மைண்ட் வாய்ஸ்

அண்ணே!! அது Software இல்லண்ணே!!! Website...

ஆமா... அந்த Website’ஐ Download பண்ணி குடுத்துடுங்க....

ச்சே!!! எல்லானுமே கேனயனா இருக்கானுங்களா??? இல்ல, எல்லோர் கண்ணுக்கும் நாம கேனயனா தெரியுரமா’னு தெரியலயே!!! - மைண்ட் வாய்ஸ்

சொன்னா புரிஞ்சுக்கங்க அண்ணே!!! Face book'ஐ Download பண்ணி குடுக்க முடியாது’னா முடியாது.

தம்பி!! உங்களுக்கு நான் எவ்ளோ உதவி பண்ணி இருக்கேன்.

டேய்!!! டெய்!!! நீ எப்படா எனக்கு உதவி பண்ணினே!!

இல்ல.. ஒரு பேச்சுக்கு சொன்னேன் தம்பி... இதுக்கு பிறகு தேவைப்பட்டா.......

அடப்பாவி, தன் சொந்த தேவைக்காக, இறந்த காலத்தையும், எதிர் காலத்தையும் முடிச்சு போடுரியேடா!!!! ஆமா... உனக்கு எத்தனை வயசாகுது??

27 வயசாகுது...

நான் 27 வயசுக்காரனுக்கெல்லாம் Face book'ஐ Download பண்ணி குடுக்குரதில்ல.. மரியாதையோட இடத்தை காலி பண்ணிடு....

ஒரு மாதிரியா முறைச்சிட்டே போனான். அடுத்த ஆப்பை எப்போ தரப்போறானோ!!!!


23 comments:

 1. சூப்பர் பாஸ்! எப்பிடித்தான் டிசைன் டிசைனா உங்களையே தேடி வர்றாங்களோ? அவ்ளோ நல்லவரா பாஸ் நீங்க? :-)

  ReplyDelete
 2. ithu ellame nadanthutha sir, illa konja unga karpanaiyum irukka ethuvaga irunthalum supera irukku

  ReplyDelete
 3. ஹா ஹா என்ன பாஸ் எல்லாரும் உங்களையே தேடி வாறாங்கள்

  ReplyDelete
 4. @ ஜீ... said...

  //// சூப்பர் பாஸ்! எப்பிடித்தான் டிசைன் டிசைனா உங்களையே தேடி வர்றாங்களோ? அவ்ளோ நல்லவரா பாஸ் நீங்க? :-)///

  நல்லவனா இருக்க விட மாட்டேங்குரானுங்க பாஸ்....

  ReplyDelete
 5. ஐயோ... ஐயோ... நமக்கும் அந்த பேஸ்புக்க கொஞ்சம் டவுன்லோடு பண்ணிக்குடுங்க பாஸ்...

  ReplyDelete
 6. @ rampo said...

  /// ithu ellame nadanthutha sir, illa konja unga karpanaiyum irukka ethuvaga irunthalum supera irukku//

  எல்லாம் நடந்ததுதான்.. கொஞ்சம் ரைமிங், டைமிங்’காவும் சொல்லியிருக்கேன்.

  ReplyDelete
 7. @ மதுரன் said...

  /// ஹா ஹா என்ன பாஸ் எல்லாரும் உங்களையே தேடி வாறாங்கள்//

  காய்த்த மரத்துக்குத்தானே கல்லடி...
  நோ..நோ... எதுக்காக கல்ல தூக்குரீங்க...

  ReplyDelete
 8. @ Dr. Butti Paul said...

  /// ஐயோ... ஐயோ... நமக்கும் அந்த பேஸ்புக்க கொஞ்சம் டவுன்லோடு பண்ணிக்குடுங்க பாஸ்...//

  ஆமா... உங்களுக்கு எத்தன வயசாகுது...

  ReplyDelete
 9. //காய்த்த மரத்துக்குத்தானே கல்லடி... //

  எங்க ஊருல கல்லைக்கண்டா எதையோ காணோம்ன்னு ஒரு பழமொழி கூட இருக்கு.

  //ஆமா... உங்களுக்கு எத்தன வயசாகுது...//

  எனக்கு இருபத்தி எழு இல்ல

  ReplyDelete
 10. @ Dr. Butti Paul said...

  ////காய்த்த மரத்துக்குத்தானே கல்லடி... //

  எங்க ஊருல கல்லைக்கண்டா எதையோ காணோம்ன்னு ஒரு பழமொழி கூட இருக்கு.///

  நல்ல வேல, அது எது’னு மரந்துட்டீங்க மை டியர் புட்டிப்பால்..

  // //ஆமா... உங்களுக்கு எத்தன வயசாகுது...//

  எனக்கு இருபத்தி எழு இல்ல//

  இன்னொரு விசயம் சொல்ல மறந்துட்டேன், நான் புதன் கிழமையும் யருக்கும் ஃபேஸ்புக் டவுன்லோட் பண்ணி குடுக்குரதில்ல...

  ReplyDelete
 11. என் கடையில் [browsing center]ஒருத்தர் வந்தார்... youtube வீடியோ பார்க்கனும்னு சொன்னார்... நானும் youtube ஓபன் பண்ணி கொடுத்துட்டு வந்து என் வேலையை பாத்துகிட்டு இருந்தேன்... கொஞ்சம் நேரம் கழித்து என்னை கூப்பிட்டு என்ன கணினி வச்சிருக்க சத்தமே வரல? அப்படின்னார்... ஒரு நிமிஷம் ஒன்னும் புரியல... எங்க தப்பு நடந்திருக்கு அப்படின்னு யோசிச்சேன்... ஹெட் போன் எடுத்து நான் மாட்டி கேட்டா சத்தம் நல்லாவே கேக்குது... அதான் கேக்குதே சார்... அப்படின்னேன்,, எனக்கு கேக்கலியே என்றார்... இந்தாங்க இத போட்டு கேளுங்க... என்றேன்... அத எதுக்கு நான் போடனும்... அப்படியே சத்தம் கேக்கணும் அப்படின்னார்... வந்த வெறிக்கு...

  ReplyDelete
 12. அண்ணே எனக்கு ஆர்குட் டவுன்லோட் பண்ணி குடுங்கண்ணே

  ReplyDelete
 13. பாஸ் எல்லா இடத்திலும் உங்களுக்கு பல்புதான் அவ்..............

  பாஸ் உங்கள் பதிவுகளில் புடிச்சதே ஒரு விடயத்தை நகைச்சுவயாக சுவாரஸ்யமாக ரசிக்கும் படி எழுதுவது...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. @ suryajeeva said...

  /// என் கடையில் [browsing center]ஒருத்தர் வந்தார்... youtube வீடியோ பார்க்கனும்னு சொன்னார்... நானும் youtube ஓபன் பண்ணி கொடுத்துட்டு வந்து என் வேலையை பாத்துகிட்டு இருந்தேன்... கொஞ்சம் நேரம் கழித்து என்னை கூப்பிட்டு என்ன கணினி வச்சிருக்க சத்தமே வரல? அப்படின்னார்... ஒரு நிமிஷம் ஒன்னும் புரியல... எங்க தப்பு நடந்திருக்கு அப்படின்னு யோசிச்சேன்... ஹெட் போன் எடுத்து நான் மாட்டி கேட்டா சத்தம் நல்லாவே கேக்குது... அதான் கேக்குதே சார்... அப்படின்னேன்,, எனக்கு கேக்கலியே என்றார்... இந்தாங்க இத போட்டு கேளுங்க... என்றேன்... அத எதுக்கு நான் போடனும்... அப்படியே சத்தம் கேக்கணும் அப்படின்னார்... வந்த வெறிக்கு...///

  சவுண்ட்’ஐ பார்சல் பண்ணி கேட்டு இருப்பாரோ???
  சவுன்டுக்கு எக்ஸ்ட்ரா சார்ஜ்’னு சொல்லி இருந்தா கம்முனு இருந்திருப்பாரு....

  ReplyDelete
 15. வணக்கம் பொஸ்,
  செம காமெடி....எத்தனை பேர் உங்களிட்ட இப்படி வந்து மாட்டிக்கிறாங்களோ?
  அவ்வ்வ்வ்வ்வ்வ்

  பாஸ்வேர்ட் அரபிக்கிலையா?

  முடியலை பாஸ்...எல்லோருமா சேர்ந்து உங்களை நோகடிக்கிறங்களே...

  பேஸ்புக் டவுண்லோட் பண்ணிக் கொடுக்கிறீங்களா/
  அப்படியே எனக்கும் ஒன்று பாஸ்;-)))

  ReplyDelete
 16. @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  /// அண்ணே எனக்கு ஆர்குட் டவுன்லோட் பண்ணி குடுங்கண்ணே///

  கல்யாணம் ஆகாத ஆளுங்களுக்கு, ஆர்குட் டவுன்லோட் பண்ணி குடுக்குறது கிடையாது..

  ReplyDelete
 17. @ K.s.s.Rajh said...

  ///பாஸ் எல்லா இடத்திலும் உங்களுக்கு பல்புதான் அவ்..............//

  ஆயிரம் பல்பு வாங்கிய அற்புத சிகாமணி’னு பட்டம் வாங்க போறேன் பாஸ்...

  ///பாஸ் உங்கள் பதிவுகளில் புடிச்சதே ஒரு விடயத்தை நகைச்சுவயாக சுவாரஸ்யமாக ரசிக்கும் படி எழுதுவது...வாழ்த்துக்கள்///

  நாம அதுல வீக்குனுல்ல நெனச்சிட்டு இருக்கேன். இந்தப் பையனுக்குள்ளேயும் ஏதோ இருக்கு போல...

  ReplyDelete
 18. கொஞ்ச நாள் கழிச்சு ..ஒரு பாக்கி...இன்னொரு பாக்கிட்ட...
  "சகோ..நம்ம மொஹ்மாடுக்கு பேஸ்புக் வெப்சைட் ன்னு கூட தெரியல...எப்படி தான் இங்க குப்பை கொட்றாரோ..ஹையோ...ஹையோ..."

  எதுக்கும் இப்பவே சொல்லி கொடுத்திருங்க தலைவா...

  ReplyDelete
 19. நல்ல வேலை physics book னு சொல்லல ..

  ReplyDelete
 20. // எல்லோர் கண்ணுக்கும் நாம கேனயனா தெரியுரமா’னு தெரியலயே!!! //

  1 + 1 = 2.

  என்னாது 2-ஆன்னு சந்தேகமா
  கேட்டா எப்படி..?!!

  ReplyDelete
 21. தம்பி!!! எனக்கு Face book'ஐ Download பண்ணி குடுப்பா....
  எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை.

  ReplyDelete