Saturday 19 November 2011

ஐ நோ ஒன்லி பிரிட்டிஷ் இங்லிஷ்



இது 2 நாளைக்கு முன்னாடி நடந்த சம்பவம்,
நல்லா தூங்கிகிட்டு இருக்கேன். (ரெண்டு நாளைக்கு முன்னாடி மட்டும்மா தூங்கினே??? எப்பவுமே அதுதானே பண்றே!!!) நம்ம கூட வேலை பாக்குர (நீ எங்கடா வேலை பார்த்தே??) சூடான் நாட்டு நண்பர் வந்து... தம்பி இங்க கொஞ்சம் வாயே!! அவசரமான ஒரு விசயம்’னு சொல்லி என்னை எழுப்ப, ஆஹா...ஆப்ரிக்கன்’னா ஆபிரிக்கன்’தான்யா... நைட்டுல கூட வேலை பாக்குரான்யா’னு எனக்கு ரொம்ப ஆச்சரியமாயிடுச்சு. நானும் தூக்க கலக்கத்துடனேயே என்ன மேட்டரா இருக்குமோ’னு (ஏதாவது கெடக்குமோ’னு)  ஓடினேன்.

அங்க போயி பார்த்தா, பய புள்ள ஒரு ஃபிகரோட Chat பண்ணிகிட்டு இருக்கான். (பிகரோட இல்லாம, அந்த அர்த்த ராத்திரில அம்மா, அப்பாவோடயா Chat பண்ணிட்டு இருக்க போரான்???)

அண்ணே!! என்ன எதுக்கு’ன்னே கூப்பிட்டீங்க????

தம்பி.. என் Girl Friend ஒரு message பண்ணியிருக்கா.. ஆனால் எனக்கு சரியா புரியல. நீதான் எனக்கு அதை வாசிச்சு வெளக்கமா, வெவரமா சொல்லனும்???
உனக்கு இங்கிலீசு தெரியுமுள்ள..... (வசமா மாட்னியா????)

என்ன அண்ணே.. இப்படி கேட்டுடீங்க.. (உன்ன பார்த்தவுடனேயே உன் இங்கிலிபீசு எப்படி இருக்கும்’னு புரிஞ்சிருக்கும்) நான் இங்கிலீசுல ......MBA... MA.. MBBAS அது வந்து...  அத விடுங்க..எனக்கு நல்லா இங்கிலீசு தெரியும்னே!! பிரிச்சு மேஞ்சிடலாம். (இங்கிலீசு என்ன புல்லு கட்டா??? பிரிச்சு மேடுரதுக்கு...)


அப்புறம்தான் அவன் Girl Friend என்ன எழுதி இருக்கானு பார்த்தேன்..
அய்ய்யோ!!! ச்ச்சே.... ரொம்ப பச்ச பச்சையா (இதுக்கு பச்சை கலர்’னு அர்த்தம் இல்ல...) எழுதி தள்ளி இருக்கா...

தம்பி.. வாசிச்சாச்சா.... இப்ப எனக்கு வெளக்கமா, வெவரமா சொல்லுங்க.....

ஆஹா... இத எப்படிடா  நான் வெளக்கமா சொல்றது... டேய்!!! வசமா மாட்டிகிட்டியேடா.... - மைண்ட் வொய்ஸ்..

நான் பேந்த பேந்த முழிக்கிறத பார்த்துவிட்டு,
தம்பி. உங்களுக்கு இங்க்லீசு தெரியுமா?? தெரியாதா?? ( A,B,C,D எழுதியிருந்தா கூட நீ அப்டிதானே முழிச்சிருப்பே!!!)

தெரியும்ணே..... ஆனால்....... ஹி...ஹி.....

இப்படி நெளிந்து கொண்டிருக்கும் போதே பயபுள்ள ஒரு பிட்;ஐ போட்டான்...

தம்பி.. என் Girl Friend அமெரிக்காவை சேர்ந்தவ தெரியுமா????

ஆஹா.... நல்ல மேட்டர் சிக்கியிருக்கு... இத வச்சே டெவலப் பண்ணிக்கடா’ - - மைண்ட் வொய்ஸ்..

ஹி..ஹி.. அண்ணே...  இது அமெரிக்கன் இங்லீசு. ஐ நோ ஒன்லி பிரிட்டிஷ் இங்லீசு.

ஓஹ்!!! ச்சே!! நம்ம ஆபீஸ்’ல யாருக்கு தம்பி அமெரிக்கன் இங்லீசு தெரியும்???

டேய்!! என் தூக்கத்தை கெடுத்தாய்’ல இருடீ வைக்கிறேன் ஆப்பு... - மைண்ட் வொய்ஸ்..

நம்ம டேமேஜர் கிட்ட காட்டிப் பாருங்கண்ணே!!! சூப்பரா விளக்கம் குடுப்பாரு...

தம்பி, உங்களுக்கு பிரிட்டிஷ் இங்லீசுக்கும் அமெரிக்கன் இங்லீசுக்கும் என்ன வித்தியாசம்’னு தெரியுமா??

அதுவா... எனக்கு புரிஞ்சா அது பிரிட்டிஷ் இங்லீசு. புரியலனா அது அமெரிக்கன் இங்லீசு. அவ்ளோதான் மேட்டர்.

ஆஹா!! சூப்பர். அப்போ, உங்களால வாசிக்கவே முடியலைனா??? (அதுக்கு பேருதான் இங்க்லீசு,...)

அது பிரெஞ்சு’ண்ணே!!!

ஆஹா!! நீங்க ஒரு வாழும் மேதை. தம்பி.. நீங்க எங்கயோ போய்ட்டீங்க.... (அவ்ளோ சீக்கிரமா எங்க போனே!!!!)

நீங்க என்ன ரொம்ப புகழ்றீங்கண்ணே!!!!

எனக்கு தன்னடக்கம் ரொம்ப ஜாஸ்தி என்பதால், அவர் என்னை புகழ்ந்த மற்ற வசனங்களை நான் இங்கு குறிப்பிடவில்லை...அவ்வ்வ்வ்)

டிஸ்கி: இதயத்தில் குறைபாடு உள்ளவர்களுக்கு கடைசி வரிகளை நம்புவது கஷ்டமாக இருக்கும்’னு கஸகிஸ்தானை சேர்ந்த ஒரு கசாயக் கடை டாக்டர் என்னிடம் சொன்னார். உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என சோதித்துக் கொள்ளுங்கள்.





17 comments:

  1. அவ்வ்... நல்ல இங்கிலீஸு

    ReplyDelete
  2. ரூம் போட்டு ஜோசிக்கிறாய்ங்களா...???

    ReplyDelete
  3. //அதுவா... எனக்கு புரிஞ்சா அது பிரிட்டிஷ் இங்லீசு. புரியலனா அது அமெரிக்கன் இங்லீசு. அவ்ளோதான் மேட்டர்.//

    என்னா விளக்கம்... அட போங்கப்பு.. நீங்க //MBA... MA.. MBBAS// இல்ல... அதுக்கும் மேல BADCFEHGJILKNMPORQTSVUXWZY படிச்சிருக்கீங்கன்னு சொல்லவே இல்லையே

    ReplyDelete
  4. ஸலாம் சகோ.ஃபாயிக்,
    பாவம் நீங்க..!

    //எனக்கு புரிஞ்சா அது பிரிட்டிஷ் இங்லீசு. புரியலனா அது அமெரிக்கன் இங்லீசு.//--சூப்பர்..!

    ஐ வான்னா
    கோன்னா
    கிம்மி
    கோச்சா
    கிண்டா
    லோட்டா
    பெட்ச்சா
    அவ்ட்டா
    வான்னாபீ
    கப்பா
    பின்டா
    க்கே..?

    இதெல்லாம் என்னன்னு...

    யு டுன்னோ..!

    காழ்,
    அம்ரீக்கன் எங்லீஷ்..!

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. ஜ நோ ஒன்லி பிரிட்டிஸ் இங்கிலீஸ் சோ ஜ காண்ட் ரீட் யூவர் போஸ்ட் ஜ திங் யுவர் போஸ்ட் இஸ் அமேரிக்கன் இங்லீஸ் ஜம் ரைட்

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....


    ஆஹா!! நீங்க ஒரு வாழும் மேதை. தம்பி.. நீங்க எங்கயோ போய்ட்டீங்க....

    நக்கல் இல்ல நசமாத்தான் சொல்றேன்!!

    ReplyDelete
  8. "அதுவா... எனக்கு புரிஞ்சா அது பிரிட்டிஷ் இங்லீசு. புரியலனா அது அமெரிக்கன் இங்லீசு. அவ்ளோதான் மேட்டர்"

    சூப்பர்.

    நீங்கள் தினமும் பதிவிட்டால் எமது கவலைகள் அனைத்தும் மறந்துவிடும்.

    ReplyDelete
  9. @ மதுரன் said...

    ///அவ்வ்... நல்ல இங்கிலீஸு///

    நன்றி பாஸ்...ஏதோ என்னால முடிஞ்சது...

    ReplyDelete
  10. @ எஸ்.பி.ஜெ.கேதரன் said...

    ///ரூம் போட்டு ஜோசிக்கிறாய்ங்களா...???///

    யோசிக்கிரதா???? அதுக்கெல்லாம் எங்க நேரம் ம் குடுக்குரானுங்க......

    ReplyDelete
  11. @ suryajeeva said...

    ///என்னா விளக்கம்... அட போங்கப்பு.. நீங்க //MBA... MA.. MBBAS// இல்ல... அதுக்கும் மேல BADCFEHGJILKNMPORQTSVUXWZY படிச்சிருக்கீங்கன்னு சொல்லவே இல்லையே///

    ஹி...ஹி.... படிச்சிருந்தாதானே சொல்ரதுக்கு....

    ReplyDelete
  12. @ ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...


    //// ஐ வான்னா
    கோன்னா
    கிம்மி
    கோச்சா
    கிண்டா
    லோட்டா
    பெட்ச்சா
    அவ்ட்டா
    வான்னாபீ
    கப்பா
    பின்டா
    க்கே..?

    இதெல்லாம் என்னன்னு...

    யு டுன்னோ..!

    காழ்,
    அம்ரீக்கன் எங்லீஷ்..!///

    American Englishங்குரது இவ்ளோதனா??? இன்னைக்கே மனப்பாடம் பண்ணிக்கிறேன்...

    ReplyDelete
  13. @ K.s.s.Rajh said...

    ///ஜ நோ ஒன்லி பிரிட்டிஸ் இங்கிலீஸ் சோ ஜ காண்ட் ரீட் யூவர் போஸ்ட் ஜ திங் யுவர் போஸ்ட் இஸ் அமேரிக்கன் இங்லீஸ் ஜம் ரைட்/.//

    ரீட் பண்ணாட்டியும் பரவால.. ஒரு ஓட்ட போட்டுடுங்க பாஸ்

    ReplyDelete
  14. @ மு.ஜபருல்லாஹ் said...

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....


    /// ஆஹா!! நீங்க ஒரு வாழும் மேதை. தம்பி.. நீங்க எங்கயோ போய்ட்டீங்க....

    நக்கல் இல்ல நசமாத்தான் சொல்றேன்!!///

    வாலைக்குமுஸ்ஸலாம்...
    நன்றிங்க நன்றி....
    நாம வளருரோம்’னு நினைக்கிறேன்...ஹி..ஹி..

    ReplyDelete
  15. @ Saja said...

    /// நீங்கள் தினமும் பதிவிட்டால் எமது கவலைகள் அனைத்தும் மறந்துவிடும்.////

    ஏற்கனவே டெமேஜு ரொம்ப ஜாஸ்தி.. தினமும் எவன் கிட்டயாவது மாட்டி கிட்டா உடம்பு தாங்காது...

    ReplyDelete
  16. மீ சபீக் நோ இங்கலிஷ்...ஒன்லி டமில்...
    ரசித்தேன்...
    தொடர்ந்து கலக்குங்க...

    ReplyDelete
  17. // எனக்கு நல்லா இங்கிலீசு தெரியும்னே!!
    பிரிச்சு மேஞ்சிடலாம். //

    நீங்க என்னதான் டகால்ட்டி வேலை
    பண்ணி மறைச்சாலும்., நீங்க மாடு மேய்ச்ச
    மேட்டர் வெளியே வருது பார்த்தீங்களா..?!!

    ReplyDelete