Sunday 6 November 2011

பெருநாள் - கொண்டாட்டமும் திண்டாட்டமும்

அனைவருக்கும் இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்


நம்ம ஊர்கள் பொதுவாக பள்ளி வாயிலுக்கு கட்டுப் பட்டவையாகவே இருக்கும். நான் படித்த ஊர்ல, ஊரிற்கு பாதுகாப்பாக பள்ளிவாயிலால் சில இளைஞர்கள் இருப்பார்கள் . நாம செல்லமா “பள்ளி போலீஸ்”னு அவங்கள கூப்பிடுவோம்.

ஒரு பெருநாள் தினத்தில், சில ச்சின்ன பசங்க ஒரு வீட்டுல தண்ணியடிக்கிறானுங்க’னு ஒரு செய்தி வர, அவர்களை பிடிக்க பள்ளி போலீஸ் விரைந்தது.

நம்ம கூட O/L (Ordinary level)வரைக்கும் படித்தவன் நம்ம நண்பன் ”பப்பாளி”. அவனுக்கு எப்படியோ இந்த செய்தி கேள்விப்பட, அவன் நம்ம நண்பன் க்ரேஸி’யின் காதில் இந்த விசயத்தை போட, “எப்பவுமே நாமதாமே அடி வாங்குறோம். இன்னைக்கு வேறு ஒருத்தன் அடி வாங்றத பாக்கலாம்;னு 2 பேரும் ஆட்டோ பிடித்துக் கொண்டு சம்பவ இடத்தை அடைந்தனர்.

ஏதோ ஒரு கருப்பாடு, பள்ளி போலீஸ் வரும் விசயத்தை அந்தப் பசங்களுக்கு சொல்லிவிட, அவனுங்க எஸ்கேப் ஆகவும், நம்ம க்ரேஸி போய் அந்த இடத்தில் இறங்கவும், பள்ளி போலீஸ் வந்து சேரவும் நேரம் சரியாக இருந்தது.

நம்ம ஆளுங்கட லுக்’கே ஒரு மாதிரியா இருக்கும். பெருநாள் தினம்’ங்குரதால காலை சாப்பாடே செம கட்டு கட்டியிருந்ததால, பாக்குறவனுக்கு மப்புல இருக்குர மாதிரியே இருக்க, அப்படியே இரண்டு பேரையும் தூக்கிப் போட்டு ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து கும்மு கும்மு’னு கும்ம...விஷயம் கேள்விப்பட்டு க்ரேஸியோட அப்பா வந்து காப்பாற்றும் போது, சேதாரம் ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு..

நம்மளுக்கு அடி வாங்குரது புதுசல்ல.... ஆனால், ஆட்டோ புடிச்சு போய் அடி வாங்குரது புது அனுபவம்’னு நீங்க நினைச்சீங்கன்னா அந்த நினைப்ப அடியோட அழிச்சிருங்க..ஏன்னா,..... இதுக்கு முன்னாடியும் ஆட்டோ புடிச்சுடு போயி அடி வாங்கி இருக்கோம். அது வேற பதிவுல வரும்.


[க்ரேஸி என்பது குறிப்பிட்ட நபரை குறிப்பது அல்ல. நம்ம கேங்’ல  (Gang) யாராவது ஒருவராக இருக்கும். சில வேளை அது நானாக கூட இருக்கலாம்.]

அனைவருக்கும் இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

17 comments:

  1. நம்மளுக்கு அடி வாங்குரது புதுசல்ல.... ஆனால், ஆட்டோ புடிச்சு போய் அடி வாங்குரது புது அனுபவம்’னு ,...........
    உண்மையில வாய் விட்டு சிரிச்சிட்டன்

    இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள் பாய்

    ReplyDelete
  2. ஆகா. நல்ல பகிடியான பதிவு.

    ReplyDelete
  3. இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  4. ஆட்டோ புடிச்சு போய் அடி வாங்கு நீங்க
    ரொம்ப நல்லவங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,,,

    இனிய பெருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. @ கவி அழகன் said...

    //// நம்மளுக்கு அடி வாங்குரது புதுசல்ல.... ஆனால், ஆட்டோ புடிச்சு போய் அடி வாங்குரது புது அனுபவம்’னு ,...........
    உண்மையில வாய் விட்டு சிரிச்சிட்டன் ///

    என்ன தைரியமிருந்தா, எங்க கஷ்டத்த பாத்து, வாய் விட்டு சிடிச்சனு சொல்வீங்க???

    //இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள் பாய் ///

    நன்றி நண்பா

    ReplyDelete
  6. @ குலவுசனப்பிரியன் said...

    /// ஆகா. நல்ல பகிடியான பதிவு.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பரே...

    ReplyDelete
  7. @ மாய உலகம் said...

    /// இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பா//

    நன்றி நன்பா...

    ReplyDelete
  8. @ கோகுல் said...

    ///ஆட்டோ புடிச்சு போய் அடி வாங்கு நீங்க
    ரொம்ப நல்லவங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,,,//

    உங்களுக்கு புரியுது.. அடிக்கிரவனுங்களுக்கு புரியலயே....

    /// இனிய பெருநாள் வாழ்த்துக்கள்!///

    நன்றி பாஸ்

    ReplyDelete
  9. இனிய பெருநாள் வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete
  10. இனிய பெருநாள் வாழ்த்துக்கள் பாயிக்

    ReplyDelete
  11. இனிய தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  12. இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. வணக்கம் நண்பா,

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஈத் திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

    ReplyDelete
  14. வம்பைப் பார்க்கப் போயி, வம்பை விலை கொடுத்து வாங்குவதென்பது இது தானோ;-))))

    ReplyDelete
  15. அடி வாங்குறதுல 'வடிவேலுவையே' மிஞ்சிடுவிங்க போலிருக்கே?

    ReplyDelete
  16. adappawi ipadi oru padam oodichaa?

    ReplyDelete
  17. டேய் பரதேசி.... ஏண்டா மானத்த வாங்குர..... anyway.... sooper story.....
    யாரு நு தெரியுது ல....

    ReplyDelete