Saturday 14 June 2014

டுபாயில் ஒரு டுவிஸ்டு

டுபாயில் இருக்கும் போது,


வெள்ளிக் கிழமை விடுமுறை என்பதால், வியாழன் இரவே நண்பர்கள் அறைக்கு சென்று விடுவது வழக்கம்.

பகிஸ்தான் மெஸ்’ஸில் சாப்பிடுவது வழக்கம். அது என்னவோ தெரியல, ஓடியாடி வேலை செய்யும் பகல் நேர சாப்பாடு சுமாராகவும், தின்று விட்டு தூங்கப் போகும் இரவு சாப்பாடு தடபுடலாகவும் இருக்கும். அதற்கெல்லாம் காரணம் கேட்க எனக்கு ஹிந்தி, உருது தெரியாது.

ஒரு நாள், சாப்பிட்டு விட்டு ஒரு கையில் பையையும் எடுத்துக் கொண்டு வெளியே வருகிறேன்,  நம்ம ஆபீஸ் பாய், நேபாளி முன்னால கையை நீட்டிகிட்டு நிற்கிறான்.

இனிமேல் ஹிந்தியில் எப்படி பின்னுகிறேன்’னு பாருங்க.....

சார், வணக்கமுங்க.........

வணக்கம்....

சார், வணக்கம் சொன்னா மட்டும் போதுமா??? கை குடுங்க சார்....

வேணாம்னே!!!.. நான் போய்ட்டு வர்ரேன்..

சார், ஒருத்தன் கை குடுத்தா நாமளும் குடுக்கனும் சார்!!!!

டேய்.... முடியலடா.... போடா.....

சார், நான் ஒரு நேபாளி... அதுவும் அபீஸ் பாய்.. அதனாலதானே கை குடுக்க மாட்டீங்க.... சரி விடுங்க.....

(ஆஹா!!! கூட்டம் சேர்த்து நம்மள கும்மிருவானோ??) டேய்!! கை குடுக்கனும் அவ்வளவுதானே!!! கைய குடு......


ஆ.......ஆ......அய்யோ...... விடுங்க சார்..... விடுங்க சார்.....  என்ன சார்... கைல ரத்தம் வர வச்சிட்டீங்க..... அவ்வ்......

அதன் பிறகுதான்,என் கையில் விரல்களுக்குள் மறைந்திருந்த பல் குத்தும் குச்சியை (Tooth Pick) காட்டினேன்.



சார்!!!, கைல பல் குத்துர குச்சி (Tooth Pick)  இருக்குனு முதல்லையே சொல்ல வேண்டியதுதானே....!!!!

டேய்!!! அத ஹிந்தில சொல்ல தெரியாமல்தானே இவ்வளவு நேரம், கை குடுக்காத, குடுக்காத’னு கத்திகிட்டு இருக்கேன்.. தெரிஞ்சிருந்தா சொல்லியிருக்க மாட்டேனா???? இனிமேல் கை தருவியா???


மவனே... நாளை ஆபீஸ் வா.... காபில காரி துப்பி குடுக்குறேன்...


அவ்வ்............

1 comment: