Tuesday 21 December 2010

நாங்கெல்லாம் கணக்குல அனகோண்டா (Anagonda )


இது நண்பர் வெங்கட்'இன் உலகப் புகழ் பெற்ற பதிவான நாங்கெல்லாம் கணக்குல டைனோசர்!!! பதிவுக்கு எதிர் பதிவு கிடையாது... என்னா இது அந்த அளவுக்கு  மரண மொக்கையா இருக்காது..  
நாம் ஒன்று'க்கு "1 " என்றும், இரண்டுக்கு "2 " என்றும் எழுதுறோமே! (ஆஹா! என்னா கண்டுபிடிப்புய்யா!!! ) அது ஏன்னு எப்பவாவது சிந்திச்சிருக்கோமா? (ஆபீஸ்'ல வெட்டியா குந்திட்டு இருந்தா இப்படித்தான்ய யோசிக்க தோணும்...    புரிஞ்சுதுல்ல ...சரி விடு...) ஏற்கனவே நியூட்டன் புவி ஈர்ப்பு விசையையும் ஐன்ஸ்டீன் இன்னும் பலதையும் (அது என்ன'ன்னு  தெரிஞ்சா சொல்ல மாட்டோமா?)  கண்டு பிடுத்து விட்டதால் நாம நம்ம மூளையை..  அதாங்க "GRAINN "னும்பான்களே!  பாவிச்சு (இதுல காமெடி கீமெடி ஏதும் இல்லையே)  ஏதாவது கண்டு பிடிக்கலாம்'னு  யோசிச்சப்போ இந்த மேட்டர் மனதில் பட்டது.. ( மூளைய பாவிச்சா மூளைலதனே படனும். அது  எப்படியா மனசுல பட்டிச்சு..)அப்படின்னு சொன்ன நம்பவா போறீங்க...  எங்க இருந்து சுட்டா என்னங்க... மேட்டர் நல்ல இருந்தா சரிதானே! எந்தக் கோழி போட்ட முட்டையா இருந்தா நமக்கென்ன... ஆம்லேட்'தானே முக்கியம்...


இப்போ மேட்டர்'க்கு  வருவோம்... நாம் ஏன் ஒன்றை "1 " எனவும் இரண்டை "2 " எனவும் எழுதுகின்றோம். இதுல கூட லாஜிக் இருக்குங்க.... நாம் முன்னைய கால இலக்க வடிவங்களை (அது என்னங்க முன்னைய காலம் பின்னைய காலம்'ன்னு கேட்காதீங்க... எதை எதையோ மாத்துற நம்மாளுங்க, இலக்க முறையை மட்டும் சும்மா விடுவாங்களா?) பார்த்தோமானால், அதற்கு பதில் கிடைக்கும். ஆமாங்க... இந்த இலக்க உருக்களில் உள்ள கோணங்களின்  எண்ணிக்கையே அந்த இலக்கமாகும்... உதாரணமாக "1 " என்பதில் ஒரு கோணம் உண்டு..."2 " என்பதில் இரு கோணம் உண்டு.. "0" என்பதில் எந்த கோணமும் கிடையாது... இவ்வளவுதான்  மேட்டர்...


 இதை ஏற்கனவே E -mail 'ல  பார்த்திருந்தால் ஓட்டு, கருத்தையும் போட்டுட்டு போயிருங்க... பார்த்திருக்காவிட்டாலும் வாசிச்சுட்டு  ஓட்டு, கருத்தையும் போட்டுட்டு போயிருங்க... நீங்க ஓட்டு போட்டா போதும்... ஓட்டு போட்டா மட்டும் போதும்..

16 comments:

  1. //"0" என்பதில் எந்த கோணமும் கிடையாது..//

    மத்த கோணத்தில எல்லாம் இந்த கோணத்தைதானே உள்ளே போட்டிருக்கீங்க எப்பூடீ...

    ReplyDelete
  2. @ஜெய்லானி....
    ஆஹா! நீங்களும் ஒரு அனகோண்டா'தானுங்க...

    ReplyDelete
  3. சரி மரண மொக்கை இல்லைனு சொன்னீங்களே அந்த பதிவு எங்க?

    ReplyDelete
  4. @ அருண் பிரசாத்..
    //சரி மரண மொக்கை இல்லைனு சொன்னீங்களே அந்த பதிவு எங்க?//
    அதைதானுங்க நானும் தேடிட்டு இருக்கேன்.

    ReplyDelete
  5. அடடா... இப்புடியெல்லாம் விசயம் இருக்கிறதோ.. அருமைங்கோ...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

    ReplyDelete
  6. //( மூளைய பாவிச்சா மூளைலதனே படனும். அது எப்படியா மனசுல பட்டிச்சு..)/

    நல்ல கனி நல்ல கனி .. அட ச்சே ..
    நல்ல கேள்வி நல்ல கேள்வி ..!!

    ReplyDelete
  7. ஹி ஹி ஹி .. இது பத்தி எங்க வாத்தியார் சொல்லி கொடுத்திருக்கார் ..!!

    ReplyDelete
  8. @ம.தி.சுதா
    வாங்க ம.தி. சுதா.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  9. @ கோமாளி செல்வா
    //ஹி ஹி ஹி .. இது பத்தி எங்க வாத்தியார் சொல்லி கொடுத்திருக்கார் ..!!///

    உங்க வாத்தி படிச்ச ஸ்கூல்'ல நான் ஹெட் மாஸ்டர்'ங்கோ!

    ReplyDelete
  10. பூச்சியத்தையும் ஏனைய இலக்கங்களை எழுதியதுபோல சதுர வடிவில் எழுதினால் உள்ளே நான்கு கோணம் வரும் நண்பரே :-)

    ReplyDelete
  11. // இது நண்பர் வெங்கட்'இன் உலகப் புகழ் பெற்ற
    பதிவான நாங்கெல்லாம் கணக்குல டைனோசர்!!!
    பதிவுக்கு எதிர் பதிவு கிடையாது... என்னா இது
    அந்த அளவுக்கு மரண மொக்கையா இருக்காது.. //

    தகவல் சொல்லிவிட்டு கும்மவும்..
    அப்ப தான் ஊரை விட்டு " எஸ் " ஆக
    வசதியா இருக்கும்.. :)

    நல்ல பதிவு..!!

    ReplyDelete
  12. உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!
    http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

    ReplyDelete
  13. @எப்பூடி..
    /// பூச்சியத்தையும் ஏனைய இலக்கங்களை எழுதியதுபோல சதுர வடிவில் எழுதினால் உள்ளே நான்கு கோணம் வரும் நண்பரே :-) ///
    இப்படியெல்லாம் யோசிச்சு நம்ம பொழப்புல மண்ண போட்டுராதீங்க..பாஸ்

    ReplyDelete
  14. ஜப்பான் சுனாமி நேரடி படங்கள்
    http://www.spicx.com/2011/03/japan-tsunami-live-photos.html#axzz1GIkYZJ00

    ReplyDelete
  15. அடடா சூப்பர் கண்டு பிடிப்பு, கணித மேதை ஃபாயிக் அவர்களே :)

    ReplyDelete