Tuesday 14 September 2010

பட்டாளத்தானிடம் பட்டால்…….



ஒரு முறை கொழும்பிலிருந்து
பஸ்ஸில் வந்து கொண்டிருந்த போது
நம் பஸ்ஸிற்கும்
முன்னாள் சென்ற பஸ்ஸிற்கும் போட்டியாகி விட்டது.
முன்னாள் சென்ற பஸ் ஓட்டுனர்
மெதுவாக சென்றதுமல்லாமல்
நமக்கு முந்திச் செல்ல இடமும் குடுக்கவில்லை.
நம் பஸ்ஸின் ஓட்டுனரோ சத்தம் (Horn)
எழுப்பிக் கொண்டே செல்ல
(என்னையும் தூக்கத்திலிருந்து எழுப்பி விட்டானுங்க..)
அதில் கடுப்பான முன்னாள் பஸ்ஸின் ஓட்டுனர்
பாதையின் குறுக்காக பஸ்ஸை நிறுத்தி விட்டு
இறங்கி வந்து நம்ம நம் பஸ் ஓட்டுனரிடம்
சண்டையிட்டு அடிக்கவும் செய்தார்.

தமது ஓய்வுக் காலம் முடிந்து யுத்தக் களத்துக்கு
சென்று கொண்டிருந்த நான்கு படை வீரர்கள்
நம் பஸ்ஸில் வந்து கொண்டிருந்தனர்.
ஏற்கனவே கடுப்பில் இருந்தவர்கள்,
இதை பார்த்தவுடன் கோபத்தின் உச்சத்துக்கே சென்றனர்.
(எத்தனை மீட்டர் உயரம்?)
இறங்கிச் சென்று வசமாக மாட்டிய
அந்த ஓட்டுனரை கும்மு கும்மு என்று கும்மினர்.
தாம் படித்த எல்லா கலைகளையும் ஓட்டுனர் முகத்தில்
ஒத்திகை பார்த்தனர்…..
அவர் வந்த வேகத்திலேயே திரும்பி ஓட
இவர்களும் அடுத்த பஸ் வரை
விரட்டி விரட்டி உதைத்தனர்.

சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட ஓட்டுனர்
அதன் பின் நம்ம பஸ்ஸுக்கு வழி விட்டு விட்டு
வலியுடன் பின்னால் வந்தார்.
மீண்டுமொறு மீன் தன் மீதே மசாலாவை
தடவிக்கொண்டு எண்ணையில் குதித்தது…




(நான் தற்போது விடுமுறைக்காக இலங்கை வந்திருப்பதால், பதிவுலக நன்பர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட முடியவில்லை. மன்னிக்கவும். ஆனாலும் பதிவு போடாமல் உங்களை நிம்மதியாக இருக்க விடவும் மனமில்லை. அதனால்தான் இந்த திடீர் பதிவு........ )

11 comments:

  1. ஹாஹா.. சொந்த செலவில் சூனியம் எண்டுறது இதுதானா..;)

    ReplyDelete
  2. @ Bavan...
    பயங்கர alert'ஆ இருக்கீங்க....

    ReplyDelete
  3. கடுப்பு அடுப்பு போல இருந்தது... பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. ஃஃஃ...மீண்டுமொறு மீன் தன் மீதே மசாலாவை
    தடவிக்கொண்டு எண்ணையில் குதித்தது…...ஃஃஃ
    எல்லாம் எங்களால தானே.. திருந்த மாட்டானுகள்..

    ReplyDelete
  5. //தாம் படித்த எல்லா கலைகளையும் ஓட்டுனர் முகத்தில்
    ஒத்திகை பார்த்தனர்…..
    ///
    அட பாவமே .!! இப்படியா ஒரு அப்பாவிய போட்டு அடிக்கறது ..?

    ReplyDelete
  6. விடுமுறைக்கு போனமா, வேலைய பார்த்தமானு இருக்கனும் ஏன் இப்படி டிரைவரை அடிச்சிட்டு ராணுவத்து மேல பழிய போடுறீங்க

    ReplyDelete
  7. // மீண்டுமொறு மீன் தன் மீதே மசாலாவை
    தடவிக்கொண்டு எண்ணையில் குதித்தது… //

    ஹி., ஹி., ஹி..!!

    போன தடவை ஒரு மீன் குதிச்சதுக்கே
    இன்னும் ராயல்டி வரலை..
    இப்ப ரெண்டாவது மீனும் குதிச்சிடுச்சி..
    என்ன பண்ண போறீங்க..??

    சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்..
    அதுக்காக இந்த டயலாக் என்னோட
    Blog-ல எடுத்ததுன்னு நீங்க
    " நன்றி " கார்டெல்லாம் போட வேணாம்..

    நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதில்ல

    ReplyDelete
  8. நல்ல வேலை அந்த சாரதிக்கு ஒரு கலையும் தெரியாதது தெரிந்து இருந்தால் அவரும் ஒத்திகை பார்து இருப்பார்.....

    ReplyDelete
  9. //நம் பஸ்ஸிற்கும்//

    நமக்கு சொந்தமா பஸ் எல்லாம் இருக்கா?

    ReplyDelete
  10. காத்திருக்கிறேன்

    ReplyDelete
  11. kavithai nantru.
    mullaiamuthan.
    http://kaatruveli-ithazh.blogspot.com/

    ReplyDelete