கோலாகலமாக ஆரம்பித்த சுற்றுலா |
முந்தைய பதிவை படிக்க http://faaique.blogspot.com/2010/08/40.html
நம்ம நன்பன் பொப் 2007ம் வருடத்தின் மார்ச் மாதம் இந்த மலைக்கு போகலாம் என்று ஒரு கருத்தை முன் வைத்தான். நான் முதலில் முடியாது என்றுதான் சொன்னேன் ( நீ கேனயன் என்பது உனக்கே கன்போர்ம்`ஆ?) . அனாலும் நன்பர்கள் விடவில்லை. என் கன்னி மனதை கண்ணியை காட்டி கன்னி வைத்துவிட்டனுங்க… கடைசியில் நானும் போவதாக முடிவெடுத்தேன். (உனக்கு இதை விட்டால் வேறு என்னையா வேலை.. சும்மா எதுக்கு பில்ட் – உப் குடுக்குற) நான், பொப், க்ரேஸி, , முன்ஸில், அசின் ( stop imagination..அது நம்ம நன்பன்) மற்றும் கிளவுட் என நன்பர் பட்டாளம் ஒன்று சேர்ந்த்து போக முடிவெடுத்தால் வாகனக் கூலி நம்ம பல்சை எகிற வைத்தது. பட்ஜெட்`ஐ பல பக்கங்களிலும் உதைத்தால் அதை சமாளிக்க என்ன செய்யலாம் என்று யோசித்த போது, இதற்கு தீர்வாக நம்ம பொப்பின் பக்கத்து வீட்டில் இருந்த இருந்த இரு சிங்களப்பையன்களையும், ஊரில் வேலை வெட்டி இல்லமல் திரிந்த சிலரையும் (நீ மட்டும் உலக வங்கியிலா வேலை செய்கிறாய்) சேர்த்துக் கொள்ள முடிவெடுக்கப்பட்டது (நம்மளையும் இந்த லிஸ்ட்`டில்தான் சேர்த்திருபானுங்களோ!!) . கடைசி நேரத்தில் க்ரேஸியின் உறவுக்கார பையன் ஒருவனும் வந்து சேர்ந்து கொண்டான்.
போகும் வழியில் ஓரிடத்தில்.. |
பாட்டும் கூத்தும்மாக ஆரம்பித்த பயணம். எவ்வளவு இயலுமோ அவ்வளவு எல்லா பாடல்களும் கொலை செய்யப்பட்டது ( பயபுள்ளக……விளம்பரத்தில் வரும் பாடல்களை கூட விட்டு வைக்கவில்லை) வழியில் ஓரிடத்தில் நிறுத்தி இரவு சாப்பாட்டை சாப்பிட்டு விட்டுமீண்டும் பிரயாணம் ஆரம்பித்தது. (அங்கேயே தூங்கவா முடியும்)
வழியில் வண்டியின் டயரில் ஆணி துளைத்ததால் டயர் மாற்ற வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. நம்ம வண்டிக்காரனிடம் டயர் மாற்றுவதற்கான எந்த உபகரணமும் இல்லாததால் மறுபடியும் அவனுக்கு கெட்ட வார்த்தைகளால் (இப்போதும் தமிழில் மாத்திரமே) அபிஷேகம் செய்யப்பட்டது (அதே கெட்ட வார்த்த.. பாரபட்சம் பார்க்காம திட்டினாணுக... அவனுக்கு தமிழ் தெரிந்திருந்தால் நமக்கு கருமாதி பண்ணியிருப்பான் அல்லது அங்கேயே ஏதாவது ஒரு கிணற்றை தேடி குதித்திருப்பான்) பின்பு வந்த சிங்களப் பையன்கள் வந்த ஒரு வாகனத்தை உதவி கேட்ட போது அவர்களே டயரை மாற்றியும் தந்தனர்.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் |
மீண்டும் பயணத்தை ஆரம்பித்து இரண்டு சோதனைச் சாவடிகளையும் கடந்து சென்ற போது நம்மிடமிருந்த கத்தி போன்ற உபகரணங்களை கேட்டு வாங்கிக்கொண்டனர் (நம்ம முகத்தை பார்க்கும் போதே நாங்கெல்லாம் பெரிய ரவுடிகள் என்பது தெரிந்திருக்குமோ!!!) . நம்மிடம் இருந்தும் இல்லை என்று சொல்லி விட்டோம். மலைக்கு ஓரளவு அருகில் வந்ததும் வாகன நெரிசலினால் மிக நீண்ட நேரம் காத்துக்கொண்டு இருக்க வேண்டியதாயிற்று.
சொந்த வாகணங்கள் நல்லதண்ணி எனும் ஊர் வரையே போக முடியுமென்பதால் (நீ அடுத்தவன் வண்டிலதானே போனாய்) அங்கே வாகனத்தில் இருந்து இறங்கி பயணிகள் சேவைக்கென அமர்த்தப்பட்ட பஸ்ஸில் போக வேண்டியிருந்தது. நாம் பன்னிரண்டு பேர் வரை இருந்தாலும் பட்ஜெட்`டின் நலன் கருதியும் பொதுச் சொத்து எங்கள் சொத்து என்பதாலும் ஆறு பேருக்கெ டிக்கெட் எடுக்கப்பட்டது. பஸ் நடத்துனர் நன்றாக குடித்திருந்தார். இதை பார்த்து விட்ட நம்ம பசங்க ”ஆஹா ஊரு பேரும் ”நல்ல தண்ணி” நடத்துணரும் ”நல்ல தண்ணி” என்று கலாய்க்க ஆரம்பிக்க பஸ் மலையை நோக்கி புறப்பாட்டது.
பதினைந்து நிமிடத்தில் மலை அடிவாரத்தை அடைந்தோம். அங்கிருந்து இன்னும் 7-9 கி.மி போக வேண்டும் என்ற அறிவிப்பு பலகையும் அப்படியே மலையையும் பார்த்தவுடன் கிலி பிடித்தது. இருந்தாலும் பெண்களும், வயதாளிகளும், குழந்தைகளும் ஏறுவதை பார்த்தவுடன் நமக்கு முடியாதா? என ஏறத்தொடங்கினோம்.
(இங்கு நடை பாதயில் விற்கப்படும் “படையப்பா சுருட்டு” எனப்படும் பெரிய சுருட்டு மிகவும் பிரபலமானது - புகைத்தல் தற்கொலைக்கு சமம் )
ஏறத்தொடங்கியதும் பாட்டும் கூத்துமாக ஆரம்பித்த நம்ம பசங்க மேலே செல்லச் செல்ல சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சிறிது நேரத்தில் பெரும் ஒப்பாரியாக மாறியது. கொஞ்ச தூரம் சென்றவுடன் next-Rest எவனாவது ஒருத்தன் கீழே குந்தி விடுவான். பிறகு எல்லோருமாக கொஞ்சம் களைபாறிவிட்டு மீண்டும் ஆரம்பிப்போம் கொஞ்ச தூரம் சென்றவுடன் சொல்லிவைத்தாற் போல இன்னும் எங்கிருந்தாவது next-Rest என ஒரு சத்தம் வரும். பிறகென்ன?.... நம்மை நிறை மாத கர்பிணிப்பெண் முந்திச் சென்றாள். சிலர் தன் 3 வயது 4 வயது குழந்தையை தூக்கிகொண்டு நம்மை முந்திச் சென்றனர். சில குழந்தைகள் முந்திச் சென்றனர். ஒரு கால் இல்லாத வெளி நாட்டவர் நம்மை முந்திச் சென்றார். அறுபதுக்கும் மேற்பட்ட வயதுடையோரும் நம்மை முந்திச் சென்றனர். நமக்கு மட்டும் ரோஷம் என்பதே இல்லாமல் மெதுவாக ஏறிக்கொண்டிருந்தோம்.
Next -Rest |
வழி நெடுகிழும் பக்தர்களுக்கென ஓய்வெடுக்க கதிரைகளும் மற்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதி ஒன்றை கூட விடாமல் தங்கியதும் ஓய்வெடுத்ததும் நாமாகத்தான் இருக்கும். கீழே பத்து ரூபாய்க்கு கிடைக்கும் தேனீர் மேலே செல்ல செல்ல விலை கூடிக்கொண்டே செல்லும். அதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அவ்வளவு தூரம் பொருட்களை சுமந்து செல்வது என்பது இலகுவான காரியம் அல்ல.
ஒருவாறு காலை 3 மணியலவில் மலை உச்சியை நெருங்கினோம். எனக்கோ பயங்கர சந்தோசம். நான் நினைக்கவில்லை, இந்த வேகத்தில் வந்த நாம் சூரியோதயத்திற்கு முன் மலை உச்சியை அடைவோமென்று.. அப்போது கொஞ்சம் சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கலாமென ஒரு கடையில் ஒதுங்கினோம். அங்கு நன்பன் க்ரேஸியும் அவன் உறவுக்கார பையனும் நாம் இங்கே தங்கிவிடுகிறோம். நீங்கள் போய் வாருங்கள் என கெஞ்சியும் நாங்கள் அவர்களையும் கூட்டி சென்றோம். (விதி வலியது.. யாரை விட்டது)
Next - Rest மறுபடியும்.. |
இன்னும் கொஞ்சம் ஏறி மலையின் உச்சியை நெருங்கிய போது கொஞ்சம் பொழுது புலப்பட தொடங்கியது. இதுவே நமக்கு ஆப்படிக்கும் என நினைத்தும் பார்க்கவில்லை. வெளிச்சம் வர வர நாம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் எவ்வளவு செங்குத்தான மலை சரிவில் ஏறிக்கொண்டிருக்கிறோம் என விளங்கியது. (மலை உச்சியை நெருங்கும் போது மலையின் சரிவு கிட்டத்தட்ட 75 டிகிரியில் அதிகரிக்கும்) இதைப் பார்த்தவுடன் நன்பன் க்ரேஸி அங்கேயே மயங்கி சரிந்தான். இதைப் பார்த்த எல்லோருக்கும் வயிற்றில் புளி கரைத்தது. க்ரேஸியை ஒரு பாதுகாப்பான இடத்தில் உற்கார வைத்து விட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தோம்.
Next - Rest .......60506 வது முறையாக .... |
அனைவருடைய ஏகோபித்த முடிவின் படி நம்முடன் வந்த சிங்களப் பசங்க இருவரையும் மேலே அனுப்பிவிட்டு (நமக்கு இது வெறும் சுற்றுப்பயணம் அனால் பௌத்தர்களுக்கோ இது புனித யாத்திரை) நாம் க்ரேஸியை கைத்தாங்களாக பிடித்துக் கொண்டு கீழே இறங்கத் தொடங்கினோம். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது இதுதான். 9 கி.மி தூரத்தில் 8.5 கி.மி வரை ஏறியிருப்போம். இருந்தும் விதி விளையாடி விட்டது. மேலே சென்று வந்த சிங்கள நன்பர்களிடம் மேலே நடந்ததை நன்றாக கேட்டுக் கொண்டோம் (வீட்டில் போய் சொல்ல வேண்டுமே…) இன்றுவரை இந்த தேர் திரும்பிய கதை நம்மளை தவிர யாருக்கும் தெரியாது.( இப்போ மொத்தமா எல்லோருக்கும் சேர்த்து ஆப்பு வெச்சிட்டோமுள்ள..)
எப்படியிருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. |
நாம் இங்கு சென்ற வேளை டிஜிட்டல் கெமரா நமக்கு அறிமுகமான புதிது. க்ரேஸியின் அண்ணன் வெளிநாட்டில் இருந்து 6 mega pixel Canon camera அனுப்பியிருந்தான். அதை எடுத்து வந்த க்ரேஸி rechargeable batteryயை மறந்து விட சாதா battery உபயோகிக்க வேண்டியதாயிற்று. அதில் போட்டோ எடுப்பது யானைக்கு கட்டி தீனி போடுவதை விட கொடுமை. இரவில் சென்றதால் night mode எடுக்கத் தெறியாததால் எல்லா போட்டோக்களும் மங்களாகவே வந்தது (அதுவும் நல்லதாயிற்று). இது தெரியாமல் வீட்டுக்கு வந்து போட்டொவை பார்த்து விட்டு போட்டோ எடுத்தவனை கும்மு கும்மு என்று குமுறினோம்.
வரும் வழியில் நன்பன் க்ரேஸிக்கு வீட்டில் இருந்து அவசரமாக!!! வரும் படி தொலைபேசி அழைப்பு வர வழியில் இறங்கி விட்டான். தப்பிவிட்டான் இல்லவிட்டால் அவனுக்கும் கும்மாங்குத்து நிச்சயம்…..
வரும் போது கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து வரும் மகாவெளி கங்கையில் குளித்து விட்டு (ஹி…ஹி…. அனை மூடியிருக்கும் போது) வீடு வந்து சேர்ந்தோம்.
அட நான்தான் முதல் போல ..!! படிச்சிட்டு வரேன் ..!!
ReplyDelete//அசின் ( stop imagination..அது நம்ம நன்பன்)//
ReplyDeleteநல்லவேல சொன்னீங்க .. நான் வேற அசின நினைச்சுட்டேன் ..
//(அதே கெட்ட வார்த்த.. பாரபட்சம் பார்க்காம திட்டினாணுக... அவனுக்கு தமிழ் தெரிந்திருந்தால் நமக்கு கருமாதி பண்ணியிருப்பான் அல்லது அங்கேயே ஏதாவது ஒரு கிணற்றை தேடி குதித்திருப்பான்)///
ReplyDeleteஅட பாவமே ..!!
/இரவில் சென்றதால் night mode எடுக்கத் தெறியாததால் எல்லா போட்டோக்களும் மங்களாகவே வந்தது (அதுவும் நல்லதாயிற்று).//
அப்படியா ..??
//ப.செல்வக்குமார் ///
ReplyDeleteஇன்னும் 2 நாளு கழிச்சி வன்திருந்தாலும் நீங்கதான் முதல்...
அது சம்பவம் இல்ல செல்வ குமார்...சரித்திரம்
VERY FUNNY & INTEREST... KEEP IT UP FAAIQUE
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரியாஸ்
ReplyDeleteங்கொய்யால...என்னா நகைச்சுவை உங்ககிட்ட...கெளப்புங்க...சி்ன்ன வயசு...ஆனா பெரிய....ஸ்டாப்..ஸ்டாப்.. பெரிய காமெடி பீசுன்னு சொல்ல வந்தேன்... அதென்ன எந்த போட்டாவ பாத்தாலும் பெரிய பயில்வான் ரேஞ்சுக்கு போசு கொடுக்கிறீங்க... -;)
ReplyDeleteரகுநாதன் ///
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
antha போட்டோ'வில் இருப்பது நான் இல்லைங்க...
soopper nallathan suththi irukeenge
ReplyDeletenamalum ipidithan world end poittu oru kalai kalaichchuttu vanthomle
ஷ.மரிக்கார்
ReplyDeleteவருகைக்கு நன்றி..
சுற்றுலாவை எப்போதும் மறக்க முடியாது..
சுவாரசியாமாக சென்றது, வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருண் பிரசாத் //
ReplyDeleteசுவாரசியாமாக சென்றது, வாழ்த்துக்கள்//
என்ன சுவாரஸியம் சார்.. வீட்டில் வந்து சமாளிக்கும் போது பெண்டு நிமிர்ந்து விட்டது...
//antha போட்டோ'வில் இருப்பது நான் இல்லைங்க..//
ReplyDeleteஅப்படின நீங்க யாரு?