Thursday 5 August 2010

மீசையும்……. பந்தயமும்……



என் நன்பன் ஒருவன் பந்தயம் கட்டினான்.
தோற்றால் பாதி மீசையை எடுத்து விட வேண்டும்
என்பதே பந்தைய விதி.
நானும் தைரியமாக ஒத்துக்கொண்டேன்
ஹி...ஹி..... நமக்குத்தான் மீசையே கிடையாதே!
பந்தையத்தில் அவனுக்கு தோல்வி..
அடுத்த நாள் பாதி மீசையுடன்
அவனை பார்க்க காத்து இருந்தவனுக்கு
பேரதிர்ச்சி……..
(அடுத்தவை கேவலமாக பார்ப்ப்தில்தான் எத்தனை இன்பம்)
பயபுள்ள மீசையை மொத்தமாக மழித்து விட்டான்.
ஏனென்று சண்டை போட்டால்
”மீதிப் பாதி மீசைக்கு இன்னொரு நன்பனிடம் பந்தயம்
கட்டியிருந்தேன்” என்கிறான்.
(நம்மள தவிர எல்லாரும் விபரமாத்தான் இருக்கானுங்க)


7 comments:

  1. நண்பர் Faaique.. நானும் உங்கள் தேசம்தான்.. இப்பொழுதுதான் வலையுலக பிரவேசமா.. முடிந்தால என் தளத்திற்கும் வந்து பாருங்கள்..

    riyasdreams.blogspot.com

    ReplyDelete
  2. என்ன ஆரம்பமே பந்தயமா? பதிவுகள் அருமை... வாழ்த்துக்கள்
    சாகிர்.
    www.unmaiunarvugal.tk

    ReplyDelete
  3. Riyas,
    நான் முன்னாடியே உங்கள் பதிவுகளை வாசித்து வருகிறேன். தொடர்பவராய் ஆனதற்கு நன்றி. நானும் அபு தாபியில்தான் வேலை செய்கிறேன்.
    Zakir,
    நன்றி சாகிர், உங்கள் ஆதரவே எங்கள் பலம்

    ReplyDelete
  4. சூப்பர்,எனது அருமை நண்பா, உனது பனி தொடரட்டும்,மென்மேலும் முன்னேற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
    -அப்ராஸ்----

    ReplyDelete
  5. நன்றி.. நண்பா .... நன்றி..

    ReplyDelete
  6. This wonderful comedy....,,,,
    பாஇஃஉஏ வால்ஹா

    ReplyDelete