Wednesday 3 June 2015

வாய் மூடி பேசவும்




டுபாயில் இருக்கும் போது பொதுவாக வெள்ளிக் கிழமைகளில் எங்காவது வெளியில் செல்வது வழக்கம். அந்த வகையில் ஒரு முறை ஒரு நண்பனை பார்க்க அபூதாபிக்கு செல்வதாக முடிவு செய்தோம். போகுமிடமெல்லாம் சாக்கட சாமில் வாங்கிக் கட்டிக் கொண்டு வருவதால் அவனை மட்டும் தனியாக விடாமல் அவனையும் கூட்டிப் போகலாம்னு முடிவு செய்தோம்.

அபூதாபியில் நண்பன் ரூமுக்கு போய் பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு நேபாளி பையன் வந்து நல்ல முறையில் பேசிக் கொண்டிருந்தான். கையில் கட்டுடன் இருந்தவன், தான் வேலை செய்யுமிடத்தில் விழுந்து விட்டதாகவும் சொன்னான். இப்படியே கொஞ்ச நேரத்தில் சாக்கடைக்கும் நேபாளிக்கும் இடையில் நல்ல நற்பொன்று உருவாகிவிட்டது.

கொஞ்ச நேரத்துல தேனீர் குடிக்க’னு நண்பன் உள்ளே கூப்பிட, சாக்கடை மட்டும் தான் வரவிலையென்று சொல்லிவிட்டு, நேபாளி பையனுடன் தெரியாத ஹிந்தியில் ஏதோதோ கதைத்துக் கொண்டிருந்தான்.


தேனீர் அருந்திவிட்டு வெளியே வந்தபோது நேபாளி பையனின்முகத்தில் சிறு மாறுதல். நம்முடன் பேசவும் இல்லை, நமக்கு சந்தேகத்துக்கு இடமேயில்லை, சாக்கடை எதாவது செய்திருப்பான்னு தெளிவாக புரிந்தது.

டேய் சனியன் சாக்கட.. இந்தப் பையனுக்கு ஏதாவது பண்ணினியா???

ச்சே!! நான் நல்லாத்தான் பேசிக்கிட்டு இருந்தேன், திடீர்னு என் கூட பேச மாட்டேங்குறான்.

டேய்!! உன்ன நம்ப முடியாது.நீ என்ன பேசினேனு மட்டும் சொல்லு...
பெருசா ஒன்னும் பேசல, கைல அடி பட்டு கட்டு போட்டிருக்கியே, அதனால தப்பித் தவறியும் குளிச்சிடாதே’னு எனக்கு தெரிஞ்ச ஹிந்தில கொஞ்சம் இங்லீசும் கலந்து சொன்னேன். அவ்ளோதான்,அதோட அவன் முகமெல்லாம் மாறிடுச்சு. பேச மாட்டேங்குறான்.

ஹிந்திலயா??? போன வாரம்தானே ஹிந்தில பேசி ஒரு பாகிஸ்தானி உன்ன கொல்லப் பார்த்தான் (டுபாயில் சாக்கட). மறுபடியுமா??? ஆமா எப்படி ஹிந்தில சொன்னேனு கொஞ்சம் சொல்லு பாக்கலாம்.

முழுசா ஹிந்திலயே சொல்லத் தெரியாததால, ”Bath நெகி கரோ” அப்டினு சொன்னேன். இது தப்ப்பா???

டேய்!!@&$%^$&@#@(**@($&*$@)($@($(*@$&$%^ “பாத் நெகி கரோ”னு சொன்னா பேசாதே’னு அர்த்தம்டா பக்கி.

இல்ல மச்சான் ... அது வந்து....

டேய்!!! நீ கொஞ்சம் பாத் நெகி கரோ....

நான் குளிச்சு மூனு ஆகுதுடா..

அவ்வ்வ்வ்............


No comments:

Post a Comment