இலங்கையிலுள்ள
ஒவ்வொருவருக்கும் இலங்கையிலுள்ள பத்திரிகையை தெரிந்திரிக்கிறதோ இல்லையோ, ஆனந்த விகடனை
தெரிந்திருக்கும். அவ்வளவு பரிச்சயம். பத்திரிகையும் தரமாக இருக்கும். அதிலுள்ள விஷயங்களும்
தரமாக இருக்கும். எனக்கு இந்தியாவை தெரியுமுன்னே ஆனந்த விகடனை தெரியும். சின்ன வயசுல
ஆனத விகடனில் ஜோக்குகள்,ஹாய் மதன் பகுதி விடாமல் படிப்பது பழக்கம். 2000ஆம் ஆண்டு பிறக்கு
முன் மில்லேணியம்’னு ஒரு பகுதியில் முக்கியமான விஞ்ஞாசிகள், கண்டுபிடிப்பாளர்கள், தலைவர்கள்’னு
ஒவ்வொரு கட்டுரை வரும். அவற்றை எங்கேயாவது தேடி ஒன்று விடாமல் படித்து இருக்கிறேன்.
காலேஜ் போற கால்த்துல
கண்டி நகரத்துல சனி, ஞாயிறு மேலதிக வகுப்புக்கு போறது வழக்கம். ஞாயிற்றுக் கிழமை காலை
8.00 மணிக்கு வகுப்பு ஆரம்பம். ஆனால் நானும் பாப்’பும் 6.00 மணிக்கே கண்டி’க்கு(Kandy)
போய் விடுவோம். பேராதனை வீதியில் இந்துக் கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு கடையிலேயே ஆனந்த விகடன் கிடைக்கும்.
அதை வாங்குவதற்காக பாப்’பும் அதை ஓசி’யில் படிக்கும் உயர்ந்த எண்ணத்துடனும் அந்த அதி
காலை குளிரில் பார்வையை தாழ்த்திய வண்ணம் (நாம டீசண்டான பசங்க) பொடி நடையாக
(Because நாம பொடியனுங்க..)போவது வழக்கம்.
ஆனால், அப்பொழுது
ஆனந்த விகடன் வாங்க அதிலுள்ள ஜோக்குகளோ, கட்டுரைகளோ காரணமல்ல… அதற்கான ஒரே காரணம்
“தபூ சங்கர்”
2004,2005ம் ஆண்டுகளில்
தபூ சங்கரின் கவிதைகள் “தபூ சங்கர் பக்கம்”னு ஆனந்த விகடனில் வந்து கொண்டிருந்தது.
அவருடைய கதை போல் கவிதை சொல்லும் பாங்குக்கு நாம அடிமை. ஒவ்வொரு கவிதையிலும் காதல்
ரசம் சொட்டும்.
ஆனந்த விகடனை வாங்கி வரும் வழியிலேயே அதை படிப்பதற்கான சண்டையும் ஆரம்பித்து
விடும். வகுப்புக்கு போய் சேரும் போது, ஆ. விகடனின் கொஞ்சம் என் கையில், கொஞ்சம் பாப்’பின்
கையில், இன்னும் கொஞ்சம் ரோட்டு கூட்டுரவனிடம் திட்டு வாங்கிக் கொண்டும் இருக்கும்.
இவ்வளவு பெரிய போராட்டத்துக்கு பின்னர்தான் படிக்க கிடைக்கும்.
தபூ சங்கரின் கவிதைகளை படிச்சுட்டு நாமளும் யாரையாலும் காதலிச்சா நல்லாயிருக்குமே’னு
டிஸ்கஸ் பண்ணியிருக்கிறோம். நல்ல வேளை அது டிஸ்கஸாகவே முடிந்து விட்டதால், எந்தப் பெண்ணின்
வாழ்க்கையும் பாதிக்கப் படவில்லை.
சரி நாமளும் தபூ
சங்கர் போல் எழுதலாமே’னு எழுதிய கவிதைகள் என் பழைய டைரிகளில் இருக்கும். அது இப்பொது
ஊரில் இருப்பதால் அதை எழுத முடியவில்லை, எனவே யாரும் பீதி அடைய வேண்டியதில்லை. ஆனால்,
அடுத்த வாட்டி விடுமுறைக்கு போகும் போது வச்சுக்குறேன் கச்சேரி. என் கிட்ட இருந்து
யாரும் தப்ப முடியாது.
ஒரு நாள் பாப்
ரூமுக்கு போயிருக்கும் போது, நம்ம காமராசு ஆ.விகடனில் தபூ சங்கர் பக்கத்தை வலதும் இடதுமாக
மேலும் கீழுமாக புரட்டி புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆஹா!!! இவன் தபூ சங்கர்
கவிதைகளுக்கு பரம ரசிகனா இருப்பான் போலிருக்கு.. ஆனாலும் இப்படி புரட்டி புரட்டியா
பாக்குரது?? அப்படி’னு நம்மளுக்கெல்லாம் ஒரே யோசனை.
மச்சான்.. என்னடா
ரொம்ப டெரர்ரா பாக்குர. என்னாச்சு??
இல்ல மச்சான்…
ஆ.விகடன்’ல ஒரு பெரிய தவறு விட்டிருக்கான்யா… யார் கண்ணுக்குமே அது தெரியல பாத்தியா???
அடங்கொக்காமக்கா…
காமராசா??? கொக்கா??? (மைண்ட் வாய்ஸ்)
இங்க பாத்தியா??
தபூ சங்கர் பக்கம்’னு போட்டிருக்கு… ஆனால், இங்கு சங்கர்’னு யாரையும் பற்றி எழுதியில்ல..
தபூ’னும் யாரையும் பற்றி எழுதியில்ல.. சினிமா கிசு கிசு தலைப்பை போட்டு விட்டு சம்பந்தமே
இல்லாம ஒரு காதல் கவிதை எழுதி வச்சிருக்கு… எப்படி இவ்வளவு பெரிய பிழையை ஆனந்த விகடன்
பண்ணலாம்????
“கிர்ர்கிர்ர்ர்கிர்ர்ர்ர்ர்…………..” (நம்ம எல்லோருக்கும்
ஒரே சமயத்துல)
இதைக் கேட்டதுக்கு
பின்னாலயும் காமராசு’வை நாம கலாய்க்காம இருக்குறதுக்கு நாம ஒன்னும் நல்ல பசங்க கிடையாதே….!!
// படிச்சுட்டு நாமளும் யாரையாலும் காதலிச்சா
ReplyDeleteநல்லாயிருக்குமே’னு டிஸ்கஸ் பண்ணியிருக்கிறோம்.
நல்ல வேளை அது டிஸ்கஸாகவே முடிந்து விட்டதால்,
எந்தப் பெண்ணின் வாழ்க்கையும் பாதிக்கப் படவில்லை. //
பார்ரா... இவரு அப்ப ஐஸ்வர்யா ராயை
லவ் பண்ணியிருந்தா.. அவங்க வாழ்க்கை
பாதிச்சி இருக்குமாமாம்..!!
// அதை வாங்குவதற்காக பாப்’பும் அதை
ReplyDeleteஓசி’யில் படிக்கும் உயர்ந்த எண்ணத்துடனும் //
அடடடா... என்ன உயர்ந்த எண்ணம்..
ஆமா இன்னுமும் இதே மாதிரி உயர்ந்த
எண்ணத்தோட தான் இருக்கீங்களாமாம்..
# கேள்விப்பட்டேன்..
//நல்ல வேளை அது டிஸ்கஸாகவே முடிந்து விட்டதால், எந்தப் பெண்ணின் வாழ்க்கையும் பாதிக்கப் படவில்லை.// :) escape...
ReplyDeleteதபூசங்கர் பக்கம் - உண்மைதான் நண்பா! அப்போதுதான் நானும் அவரது ரசிகனானேன்
ReplyDeleteதபூசங்கர் பக்கம் போல, யூத் புல் விகடனும் கொஞ்சநாள் அச்சில் வந்தது. செம்ம ரகளையான இணைப்பு அது!
//ஆனால், அடுத்த வாட்டி விடுமுறைக்கு போகும் போது வச்சுக்குறேன் கச்சேரி//
ReplyDeleteஅய்யய்யோ யாராவது அந்த டைரிய தூக்கிக் கடாசிடுங்கப்பா...! :-)
எவ்வளவோ தாங்கிட்டோம் இதத் தாங்க மாட்டமா? நீங்க எழுதுங்க பாஸ்! எவன் தடுக்கிறான்னு பாத்திடுவோம்!
//ஒவ்வொரு கவிதையிலும் காதல் ரசம் சொட்டும்//
ReplyDeleteஐயோ அப்ப புத்தகம் நனைஞ்சிடாது?
- காமராசு வாசிச்சா இப்பிடிக் கேக்கமாட்டானா பாஸ்? :-)
Unga blog-i padikkiratha
ReplyDeletevidava.......,
unga kavithai
irunthuda povuthu ???
அதை ஓசி’யில் படிக்கும் உயர்ந்த எண்ணத்துடனும் அந்த அதி காலை குளிரில் பார்வையை தாழ்த்திய வண்ணம் (நாம டீசண்டான பசங்க) பொடி நடையாக (Because நாம பொடியனுங்க..)போவது வழக்கம்.//
ReplyDeleteஎது எப்படியோ ஆனால் கண்டிப்பாக உங்களின் எழுத்து மெருகேறியிருக்கிறது என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. போகிற போக்கில் நகைச்சுவை தாராளமாக வருகிறது. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குங்க.
// டிஸ்கஸாகவே முடிந்து விட்டதால், எந்தப் பெண்ணின் வாழ்க்கையும் பாதிக்கப் படவில்லை.//
இதெல்லாம் ரொம்பவே நல்லா இருக்கு :))
இந்த டெம்ப்ளேட்டும் நல்லா இருக்கு. இதுலயே இருக்கட்டுமே :))
ReplyDelete@ வெங்கட் said...
ReplyDelete//// படிச்சுட்டு நாமளும் யாரையாலும் காதலிச்சா
நல்லாயிருக்குமே’னு டிஸ்கஸ் பண்ணியிருக்கிறோம்.
நல்ல வேளை அது டிஸ்கஸாகவே முடிந்து விட்டதால்,
எந்தப் பெண்ணின் வாழ்க்கையும் பாதிக்கப் படவில்லை. //
பார்ரா... இவரு அப்ப ஐஸ்வர்யா ராயை
லவ் பண்ணியிருந்தா.. அவங்க வாழ்க்கை
பாதிச்சி இருக்குமாமாம்..!!.///
யாருங்க அவங்க.. முன்ன பின்ன பழக்கமே கிடையாதே....
கவிதைகள் அருமை கடைசியில் காமராசு கலக்கல்
ReplyDelete@ வெங்கட் said...
ReplyDelete/// // அதை வாங்குவதற்காக பாப்’பும் அதை
ஓசி’யில் படிக்கும் உயர்ந்த எண்ணத்துடனும் //
அடடடா... என்ன உயர்ந்த எண்ணம்..
ஆமா இன்னுமும் இதே மாதிரி உயர்ந்த
எண்ணத்தோட தான் இருக்கீங்களாமாம்..
# கேள்விப்பட்டேன்..///
என்ன வெங்கட் சார்?? நான் அன்று ஒரு கொள்கை , இன்று ஒரு கொள்கை’னு கொள்கை மாறுபவன்’னு நெனச்சீங்களா??? எப்பவுமே ஒரே கொள்கைதான்...
@ சேலம் தேவா said...
ReplyDelete/////நல்ல வேளை அது டிஸ்கஸாகவே முடிந்து விட்டதால், எந்தப் பெண்ணின் வாழ்க்கையும் பாதிக்கப் படவில்லை.// :) escape...//
யாரச் சொல்ரீங்க???
@ ஜீ... said...
ReplyDelete///தபூசங்கர் பக்கம் - உண்மைதான் நண்பா! அப்போதுதான் நானும் அவரது ரசிகனானேன்
தபூசங்கர் பக்கம் போல, யூத் புல் விகடனும் கொஞ்சநாள் அச்சில் வந்தது. செம்ம ரகளையான இணைப்பு அது!//
யூத் புல் விகடனெல்லாம் நான் படிச்சதில்ல ஜீ சார்.ஏனென்றால் நம்ம நண்பர்கள் யாருமே அதை வாங்குர்தில்ல...
@ ஜீ... said...
ReplyDelete// //ஆனால், அடுத்த வாட்டி விடுமுறைக்கு போகும் போது வச்சுக்குறேன் கச்சேரி//
அய்யய்யோ யாராவது அந்த டைரிய தூக்கிக் கடாசிடுங்கப்பா...! :-)
எவ்வளவோ தாங்கிட்டோம் இதத் தாங்க மாட்டமா? நீங்க எழுதுங்க பாஸ்! எவன் தடுக்கிறான்னு பாத்திடுவோம்!///
அவசரப்பாடதீங்க பாஸ்..அப்புறம் ரொம்ப ஃபீல் பண்ண வேண்டி இருக்கும்...
@ ஜீ... said...
ReplyDelete/// //ஒவ்வொரு கவிதையிலும் காதல் ரசம் சொட்டும்//
ஐயோ அப்ப புத்தகம் நனைஞ்சிடாது?
- காமராசு வாசிச்சா இப்பிடிக் கேக்கமாட்டானா பாஸ்? :-)///
வாசிக்க விட்டாத்தானே!!!
@ NAAI-NAKKS said...
ReplyDelete///Unga blog-i padikkiratha
vidava.......,
unga kavithai
irunthuda povuthu ???//
அப்போ..போட்டுரலாம்’னு சொல்ரீங்க...
@ Selvakumar selvu said...
ReplyDelete/// அதை ஓசி’யில் படிக்கும் உயர்ந்த எண்ணத்துடனும் அந்த அதி காலை குளிரில் பார்வையை தாழ்த்திய வண்ணம் (நாம டீசண்டான பசங்க) பொடி நடையாக (Because நாம பொடியனுங்க..)போவது வழக்கம்.//
எது எப்படியோ ஆனால் கண்டிப்பாக உங்களின் எழுத்து மெருகேறியிருக்கிறது என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. போகிற போக்கில் நகைச்சுவை தாராளமாக வருகிறது. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குங்க.
// டிஸ்கஸாகவே முடிந்து விட்டதால், எந்தப் பெண்ணின் வாழ்க்கையும் பாதிக்கப் படவில்லை.//
இதெல்லாம் ரொம்பவே நல்லா இருக்கு :))//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செல்வா.. உங்க கருத்தும் எனக்கு ரொம்ம்ப ரொம்ப புடிச்சிருக்கு..ஹி..ஹி
@ Selvakumar selvu said...
ReplyDelete/// இந்த டெம்ப்ளேட்டும் நல்லா இருக்கு. இதுலயே இருக்கட்டுமே :))//
ஆகட்டும். நன்றி
@ கவி அழகன் said...
ReplyDelete// கவிதைகள் அருமை கடைசியில் காமராசு கலக்கல்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
நல்லா தானே போய் கிட்டு இருக்கு... அப்புறம் ஏன் இப்படி? என்னவோ போங்க...
ReplyDeletenaan ungaludiya theevira rasigan............ superb story
ReplyDeleteVery funny ha ha ..
ReplyDeletei like penkal kallurikku 5 killo meters @ kavithei alla kadhal super
ReplyDelete