Saturday 20 August 2011

இஃப்தார் விருந்தில் வந்த இடியாப்ப சிக்கல்




காலேஜ் போற காலத்துல ரமழான் மாதத்துல எப்பவுமே வீட்டுக்கு கிளம்பிடுவோம்.ஆனால் ஒரு முறை ரமழான் மாதம் முடிய பரீட்சை வந்துடுச்சு. எனவே அந்தத் தடவை ரமழானில் காலேஜ் போற ஊர்லயே தங்க வேண்டி ஆயிடுச்சு.

நம்ம வகுப்புல “டட்ஸன்”ஐ தவிர எல்லோருமே வெளியூர் பசங்க. 100 கிலோ மீட்டருக்கு அப்பால இருந்து வந்தவனையே மடக்கி ஓ.சி சோறு சாப்பிட்டவங்க நாங்க (ரண் களத்திலும் ஒரு கிளு கிளுப்பு), எங்க கிட்ட “டட்சன்” மட்டும் தப்பிச்சிடலாமா???

இஃப்தார் பார்டி வைடா`னு கெஞ்சி, கால்ல விழாத குறையாக குடுத்த டார்ச்சர் தாங்க முடியாம, குறிப்பிட்ட ஒரு நாளில் “வந்து தொலைங்கடா”னு ஒரு பார்டி வச்சான்.

நம்ம பயலுகளுக்கு வாய திறந்தா வங்காள விரிகுடாவே இருக்கும்`னு தெரிந்தோ என்னவோ, விருந்து தட புடலாக ஏற்பாடு செய்திருந்தார்கள். நம்ம பயலுக சாப்பிட ஆரம்பிச்சா, ஏரியா`ல நாய். பூனை நக்கி சாப்பிடரதுக்கு கூட எதுவும் மிஞ்சுரதில்ல.. இங்க மட்டும் விதிட்விலக்காவா நடக்க போகுது??? விருந்து ஆரம்பமாகி கொஞ்ச நேரத்துல,  மோப்பம் பிடித்து, அள்ளி, கடித்து, பிசைந்து, மென்று, அமுக்கி, அடித்து, பிடித்து தின்று முடித்ததுல விரிப்பில் இருந்த மொத்த உணவும் சுனாமி வந்து போனது போல காலியாகி இருந்தது.  ஆனால்............................


ஆனால்........................... ஒரே ஒரு ஜூஸ் கிளாஸ் மாத்திரம் யார் கையும் படாமல் இருந்தது. நம்ம எல்லோர் மனசுலயும் “சோறா சொரணையா”னு ஒரே தடமாற்றம்.  எல்லார் கண்களும் கண்ணால் அந்த கிளாஸ்`ஐயே மொய்த்துக் கொண்டிருக்க, பொறுமையிழந்த நம்ம காமராசு “சொரணை எவனுக்குடா முக்கியம்” நினைத்த வாறு கிளாஸ்;ஐ எடுத்து பருக ஆரம்பித்து, நம்ம வயிற்றெரிச்சலை கிளப்பினான்.. ராஸ்கல்..

அந்த நேரத்தில் யாரும் எதிர் பார்க்காத ஒரு அதிர்ச்சி சம்பவம்.... கொஞ்சம் பருகிய காமராசு, கிளாஸை க்ரேஸியிடம் கொடுத்துவிட்டான். 3 மணித்தியாலமா சப்பிய Bubble Gumஐ கூட துப்ப மனசு வராத பய, இப்படி ஒரு காரியம் பண்ணியது பயங்கர அதிர்ச்சி. ஜூஸ் கிளாஸை மலர்ந்த முகத்துடன் வாங்கிய க்ரேஸி பருக ஆரம்பித்தான். இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.......

இரண்டு மிடரு மட்டுமே பருகிய கிரேஸி கிளாஸை என்னிடம் நீட்டி, “மச்சீ நீ குடிடா”ங்குறான். உலகத்துல எது வேணும்னாலும் தப்பிக்கலாம்.. ஆனால் இவன் கைல மாட்டின உண்ணுறது, பருகுறது எதுவுமே தப்பிச்சதே சரித்திரமே இல்ல. உனக்கு விருப்பமான சாப்பாடு எது?னு கேட்டா ”ஹலால் (இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்ட) எல்லாமே” அப்பிடிம்பான். அப்பிடிபட்டவன் கையால கெடச்சா எப்படியிருக்கும்?? இப்படியெல்லாம் யோசிச்சாலும், திடீர்னு மனசு மாறி, குடுத்ததை பறித்துடுவானோ`னு பயந்ததால ஃப்லாஷ்பேக்`அ ஒரு ஓரமா வச்சிடு ஜூஸ் குடிக்க தயாரானேன்.

ஜூஸ்`ஐ வாய்ல வச்சதும் அப்படியே ஷாக் ஆயிட்டேன். அப்பொழுதுதான் புரிந்தது, இவனுங்க குடுத்ததுல அன்பு இல்ல... ஆப்பு`னு.......

என்ன நடந்ததுன்னா.......அந்த ஜூஸ் டட்ஸனுடைய சக்கரை வியாதியுள்ள தாத்தாவுக்காக சக்கரையே போடாமல் தயாரிக்கப்பட்டது. அவரே அதை குடிக்க முடியாமல் அப்படியே வைத்துவிட்டு போயிருக்காரு. நாம ஆப்பை தேடிப் போய் உட்கார்ந்துவிட்டோம்.

மெதுவா, ஜூஸ்ஸை இருந்த இடத்திலேயே வைத்து விட்டு எஸ்கேப் ஆகலாம்`னு பார்த்தா, டட்ஸனின் அப்பா அதை பார்த்துட்டாரு....

ஏன் தம்பி ஜூஸை குடிக்காம வைக்குறீங்க... வெக்கப் படாம குடிங்க...
(ஹி..ஹி... வெக்கப்பட்டு வைக்கல.. வேதனைப்பட்டு வைக்கிறேன்..)

இல்ல.. பரவல்லங்க.... ஹி...ஹி....

இந்த வயசுல நல்லா சாப்பிடனும்..குடிக்கனும். வெக்கப்படாம அதை குடிங்க...
(இந்த ஜூஸ் இந்த வயசுல குடிக்கிரதில்லங்க... )

வேறு எவன் கைலயாவது குடுத்துடு எஸ்கேப் ஆகிடலாம்`னு பார்த்தா, அந்த கேப்`ல காமராசுவும், க்ரேஸியும் அடுத்த எல்லாரையும் உஷார் பண்ணிடானுங்க.... 
வேற வழி........

அவ்வ்வ்வ்வ்...............................


நீதி:
நம்ம கதைகளில் ஸ்டார்டிங் நல்லாத்தான் இருக்கும், ஆனால்      ஃபினிஷிங்;ல சந்தி சிரிச்சிடும்...









17 comments:

  1. ஹா..ஹா... இதே மாதிரி என்னிடம் ஒரு கதை இருக்கு ...படிச்சதும் அந்த நினைவு வந்திட்டது ஹா..ஹா.. :-)))


    ஏன் ஒரு வேளை பாகற்காய் ஜுஸா அது ஹி...ஹி..

    ReplyDelete
  2. சோப்பில ஆப்பு வச்சமாதிரி ( ஏறுறது தெரியாது ) உங்க கதை

    ReplyDelete
  3. சூப்பர் பதிவு

    ReplyDelete
  4. இடியாப்பத்தை ஆசையோடு தேடிவந்தால்.....

    ReplyDelete
  5. Salaam machchi, I have organized an ifthar celebration AS WE DID LAST YEARS,BY THE GRACE OF ALLAH.So I kindly
    invite you & your friends as usual.EVER DEAR ......

    ReplyDelete
  6. //நம்ம எல்லோர் மனசுலயும் “சோறா சொரணையா”னு ஒரே தடமாற்றம். ///

    சூப்பர்ங்க.. இந்த பஞ்ச் பிடிச்சிருக்கு :))

    ReplyDelete
  7. // 3 மணித்தியாலமா சப்பிய Bubble Gumஐ கூட துப்ப மனசு வராத பய, இப்படி ஒரு காரியம் பண்ணியது பயங்கர அதிர்ச்சி. //

    3 மணி நேரமாவா திம்பாரு ? :))

    ரொம்ப நல்லா இருக்குங்க.. சிரிச்சேன்.. பாவம் அடுத்தவங்களுக்கு இப்படி கஷ்டம்னா ஹி ஹி :)

    ReplyDelete
  8. அந்த ஜூஸ் டட்ஸனுடைய சக்கரை வியாதியுள்ள தாத்தாவுக்காக சக்கரையே போடாமல் தயாரிக்கப்பட்டது. அவரே அதை குடிக்க முடியாமல் அப்படியே வைத்துவிட்டு போயிருக்காரு. நாம ஆப்பை தேடிப் போய் உட்கார்ந்துவிட்டோம். ////

    ஆகா இப்புடி ஆப்பு வச்சுட்டானுகளே! பாவம் சார் நீங்க!

    ReplyDelete
  9. நீதி:
    நம்ம கதைகளில் ஸ்டார்டிங் நல்லாத்தான் இருக்கும், ஆனால் ஃபினிஷிங்;ல சந்தி சிரிச்சிடும்..

    ReplyDelete
  10. ஸ்டார்டிங் மட்டும் படிச்சிட்டு நின்னுக்குறோம்...

    ReplyDelete
  11. இந்த சிக்கல் எப்பதான் தீருமோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ஹா ஹா ஹா

    ReplyDelete
  12. ஹா....ஹா...போங்க பாஸ்...ப்ளான் பண்ணி ஜூஸ் இல் ஆப்பு வைத்து ஒரு சில நண்பர்களை கவிழ்த்திருக்கிறீங்களே...

    ReplyDelete