இங்கு உலகத்தரமான பதிவுகளை தேடாதீர்கள். என் சொந்த அனுபவங்களை கொஞ்சம் ரைமிங்’காகவும், டைமிங்காகவும் இருக்கட்டுமே என சிறிது கற்பனையும் கலந்து எழுதி வருகிறேன்.
Monday 6 December 2010
மச்சி........ எனக்கு கல்யாணம் ஆச்சுடா……….
நான் விடுமுறையில் இருந்த போது பழைய நன்பன் (ப்லாக் எழுத ஆரம்பிச்சதுல இருந்து எல்லானுமே பழைய நன்பன் லிஸ்ட்`ல சேர்ந்துட்டானுங்க.. எவனுமே நம்ம கூட கூட்டு வைக்கிறது கிடையாது) (”ஓட்டு போடு ஓட்டு போடு”னு நீ குடுக்குற டார்ச்சர எவன்யா தாங்குவான்) ஒருவனை சந்திக்க நேர்ந்தது. அவனுக்கு புதுசாத்தான் கல்யாணம் ஆச்சு. அவனுக்கும் எனக்கும் நடந்த சில உறையாடல்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். இதை வாசித்து நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்….
சந்திப்பு 1:
நன்பன் : டேய் மச்சி! முன்பு இங்குதானடா நாம கிரிக்கட் விளையாடுவோம்
நான் : ஆமா! அதுக்கென்ன? இப்பவும் விளையாடினா போச்சு!
நன்பன்: இப்பொ முடியாதுடா………
நான்: ஏண்டா? உடம்பு சரியில்லையா?
நன்பன்: இல்லடா, எனக்கு கல்யாணம் ஆச்சுள்ள…….
நான்:???????????????????????????????????????????
(பார்ரா….)
சந்திப்பு 2:
நன்பன்: ஞாபகம் இருக்காடா! முன்பு ஆற்றுக்கு குளிக்க போவோமுள்ள……
நான்: ஆமாண்டா! இன்றும் போவோமா?
நன்பன்: இல்லடா மச்சி! முடியாதுடா….
நான்: ஏண்டா? ஆத்துல தண்ணி இல்லயா?
நன்பன்: அது இல்லடா, எனக்கு கல்யாணம் ஆச்சுல்ல……….
(உன்னைய நம்பி எவன்யா ஆத்துல இறங்குவான்?)
நான்: ???????????????????????????????????
(சரி விடு)
சந்திப்பு 3:
நன்பன்: முன்பு க்ரேஸி வீட்டு மொட்ட மாடில இருந்து ராத்திரி பூரா பேசிட்டிருப்போமுள்ள…..
நான்: ஆமாண்டா…! இன்றும் SET ஆகுவோமா?
நன்பன்: முடியாதுடா! …………………………………..
(நீ கூப்பிட்ரதே ஓ.சி. டீ குடிக்கதான்னு அவனுக்கு தெரிஞ்சுரிச்சி போல…)
நான்:?????????????????????????????????????????
(ஷப்பா….. இப்பவே கண்ண கட்டுதே…)
சந்திப்பு 4:
நன்பன்: முன்பு விடுமுறை வந்தா சுற்றுலா போவோமுள்ள….
நான்: ஆமா! நானும் போகலாம்னு இருக்கேன்.வாரியா?
நன்பன்: நோ!!!!!!
நான்: ஏண்டா? உனக்கு வாந்தி பேதியா?
நன்பன்: மச்சி! கல்யாணம் ஆச்சுடா.. அப்படியெல்லாம் வெளில சுத்த முடியாதுள்ள…
நான்:??????????????????????????????????????????
(முடியல…..)
சந்திப்பு 5:
நான்: மச்சி! நம்ம நன்பன் xxx வீட்டுக்கு போரேன்… வாரியா?
நன்பன்:……………………………….
நான்: ஓ! ஸாரி…. உனக்கு கல்யானம் ஆச்சுல்ல………..
(என்ன கொடும சார் இது)
ஏனுங்க… கல்யாணம் என்பது இவ்வளவு பெரிய கொடுமையா? இல்ல, இவனுங்களே இப்பாடி ஆக்கிக் கொள்ரானுங்களா`ன்னு புரியல… யாராவது தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்கப்பா………
இதற்கு விளக்கம் சொல்வதால் வரும் முன் விளைவு, பின் விளைவு, பக்க விளைவு, மேல், கீழ் விளைவு என எதற்கும் இந்த ப்லாக் பொறுப்பேற்க மாட்டாது……
Subscribe to:
Post Comments (Atom)
யாரங்கே கல்யாணம் ஆன வயசான பன்னிகுட்டி, டெரர்(மாட்டுனியா), அருண் விளக்கம் தரவும்
ReplyDelete/ஏனுங்க… கல்யாணம் என்பது இவ்வளவு பெரிய கொடுமையா? இல்ல, இவனுங்களே இப்பாடி ஆக்கிக் கொள்ரானுங்களா`ன்னு புரியல… யாராவது தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்கப்பா………
ReplyDelete//
sorry எனக்கு கல்யானம் ஆகல்ல
பொண்ணு பார்க்க சொல்லி வீட்டுக்கு சொல்லனுமா..
ReplyDeleteஎல்லாப்பயலும் கல்யாணம் பன்னிட்டானும் எனக்குத்தான் ஒன்னும் சிக்கமாட்டிங்குதே சொல்லாம சொல்றிங்க அப்படித்தானே
ReplyDeleteஇப்பவே கண்ண கட்டுதே
ReplyDeleteஅப்ப அடுத்தமுறை நீங்களும் அப்படித்தான்....
ReplyDeletei mean
(அது இல்லடா, எனக்கு கல்யாணம் ஆச்சுல்ல……….)
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
ReplyDelete// யாரங்கே கல்யாணம் ஆன வயசான பன்னிகுட்டி, டெரர்(மாட்டுனியா), அருண் விளக்கம் தரவும்//
ஐ நான் சொல்லமாட்டேனே... ஏன்னா எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுல்ல
//நன்பன்: இல்லடா, எனக்கு கல்யாணம் ஆச்சுள்ள…….
ReplyDeleteநான்:???????????????????????????????????????????
(பார்ரா….)//
அதானே .!! பார்ரா..!!
/நன்பன்: மச்சி! கல்யாணம் ஆச்சுடா.. அப்படியெல்லாம் வெளில சுத்த முடியாதுள்ள…//
ReplyDeleteஹி ஹி ஹி ..
அப்ப உங்க குரூப்பிலையே நீங்கதான் ஒண்டிக்கட்டை என்று சொல்லுங்க :-)
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteஅட... அட.. அட...
ReplyDeleteஓ... கலியாணத்தின் FX
ReplyDeleteசூப்பர்.............
ReplyDelete