Monday 24 October 2011

ஆபிரிக்காவும் எயிட்சும்..... 13+



 எனது மூன்றரை வருட வெளி நாட்டு வாழ்க்கையில், நான் பார்த்து அதிசயித்த, பொறாமை பட்டவர்கள் என்றால் அது ஆபிரிக்கர்களாகத்தான் இருக்கும். அவர்களுக்குள் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும், அவர்களுக்கு ஒரு பிரச்சனை வரும் போது ஒன்று சேர்ந்து விடுகிறார்கள். அவர்களின் அசைக்க முடியாத ஒற்றுமை காரணமாக அவர்களை யாரும் அசைக்க முடியவில்லை.

அதற்கு நேர் எதிர்தான் நம்ம ஆட்கள். (இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை). நமக்குள் ஒற்றுமையாக இருந்தாலும் வெளியிடத்தில் இருந்து பிரச்சனை வரும் போது, எவனுக்கு வந்தா நமக்கென்ன`னு ஒதுங்கிப் போய் விடுவோம். அது நம் உற்ற நன்பனாயிருந்தாலும் சரியே..பிறகு ஒரு நாள் நமக்கு பிரச்சனை வரும் போதும் எவனுமே உதவுரதில்ல...

இப்படி காலம் போய்கொண்டிருக்கையிலே, 2 வாரம் முன்னாடி நம்ம கூட வேலை செய்யுர 2 ஆபிரிக்கர் (லைபீரியா)”அய்யோ...!!! குத்துதே குடையுதே’னு இருக்க, வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தோம். அங்கு போன ஆளுங்கள இரண்டு நாளா காணல.. எங்க போயிருப்பானுங்க’னு பார்த்தா.. வைத்திசாலையே அடச்சி வச்சிருக்காங்க... காரணம்.....
ஒருத்தனுக்கு எயிட்ஸ் இருக்கு.....
அடுத்தவனுக்கு மலேரியா...

இந்த நாட்டு சட்டப் படி, அந்தாளுங்கல வெளியே விட முடியாது, உடனே நாடு கடத்த வேணும்’னு சொல்லிட்டானுங்க. சரி. உடனே அனுப்பி வச்சுர்ரோம்’னு அவனுங்கள கூட்டி வர,ஒரு வகை விரக்தில இருந்தவனுங்க “நாம இந்த எடத்த விட்டு அசைய மாட்டோம்’னு அடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டானுங்க..

அந்த ரெண்டு பேரையும் மூட்டை முடிச்சுக்களை அனுப்பும் போது, திடீரென அபீஸுக்குல புகுந்தவன் “டேய்!!! உங்களையெல்லாம் விஷம் குடுத்து, குத்தி கொலை செஞ்சி, மர்டர் பண்ணி தூக்குல போட்டு நெத்தில சுட்டு கடல்ல வீசிடுவேண்டா.. நான் ஆபிரிக்க காரன்’டா...” தொடைய தட்டாமலே எல்லோரையும் பார்த்து (என்னைத் தவிர) சவால் விட, நம்ம டெமேஜரோட கால் ரெண்டும் Vibrate Mode’க்கு மாறினத நான் கவனிக்கத் தவறவில்லை.

உடனே விழித்துக் கொண்ட கம்பெனி, நம்ம எல்லோருடைய இரத்ததையும் சோதித்து பாக்குரதுனு முடிவு பண்ணி எல்லோரையும் ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சுடுச்சு.

அங்குதான் எனக்கு ஒரு பல்பு காத்து கிட்டு இருந்தது.

(இதுக்கு பின்னாடி பதிவு கொஞ்சம் காட்டமா இருக்கும். விரும்பினவங்க படிக்கலாம்)


எல்லோரும் ஹாஸ்பிட்டலுக்கு வெளில காத்துகிட்டு இருக்க,  நான் போய் இரத்தம் சோதிக்க, மாதிரி இரத்தம் குடுத்துட்டு வர்ரேன்.. அப்போ ஒரு நேபாளி ஓடி வர்ரான்.

தம்பி!!! யூரின் டெஸ்ட்டுக்கு யூரின் எங்க இருந்து அண்ணே எடுப்பாங்க...???

டேய்!!! என்கிட்டயேவா???? வேணாம் ஓடிடு..... 

ச்சும்மா சொல்லுங்க தம்பி !! நான் என்ன தப்பாவா கேட்டேன். 

டேய்!!! வயசுல மூத்தவனே’னு பாக்குறேன். எனக்கு கோவம் வர்ரதுக்குள்ள ஓடிடு....

என்ன தம்பி கேட்டுபுட்டேன். இந்த ச்சின்ன விசயத்துக்கு போயி இப்படி கோச்சிக்கிரீங்க...

டேய்!!! அவனா நீ..???... எதுக்குடா என்னையே தேடி வர்ரீங்க.... 

ஆமா... நீங்கதான் இப்ப போயி யூரின் குடுத்துடு வந்தீங்கள்ள...

டேய்!! சாக்கட வாயா.... அது யூரின் இல்லடா ”ப்லட்”

ஆமால்ல... இரத்ததுக்கு இங்லீஸ்’ல ப்லட்’னுதான் சொல்வாங்கள்ள... நான் யூரின்’னு நெனச்சிட்டேன்..

அடப்பாவி.... கொஞ்ச நேரத்துல, உன் பொண்டாட்டிய விதவையாக்கி, புள்ள குட்டிய அனாதையாக்கப் பார்த்தியேடா,.. போடா...!!! டேய்!!! போ.. போய்.. புள்ள குட்டிகளையாவது படிக்க வை...

ச்சே...ச்சே.... எவ்ளோ அலார்ட்’ஆ இருந்தாலும் எவன் கிட்டயாவது மாட்டிக்குறோமே!!!



15 comments:

  1. //
    ச்சே...ச்சே.... எவ்ளோ அலார்ட்’ஆ இருந்தாலும் எவன் கிட்டயாவது மாட்டிக்குறோமே!!!
    //

    இப்ப நாங்க மாட்டுன மாதிரி ...

    ReplyDelete
  2. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    ///
    //
    ச்சே...ச்சே.... எவ்ளோ அலார்ட்’ஆ இருந்தாலும் எவன் கிட்டயாவது மாட்டிக்குறோமே!!!
    //

    இப்ப நாங்க மாட்டுன மாதிரி ...///

    அது உங்க விதி... ஹி...ஹி...

    ReplyDelete
  3. நல்லவேள அவன் ஹாஸ்பிட்டல்ல போய் யூரின் எடுங்கன்னு சொல்லல.........

    ReplyDelete
  4. மாதிரி இரத்தம் //


    எந்த மாதிரி ?

    ReplyDelete
  5. @ பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ////நல்லவேள அவன் ஹாஸ்பிட்டல்ல போய் யூரின் எடுங்கன்னு சொல்லல.........///

    ஹி..ஹி.. சொல்லியிருந்தா?????

    ReplyDelete
  6. @ HajasreeN said...

    மாதிரி இரத்தம் //


    // எந்த மாதிரி ?///

    டில்லி’ல உங்க கிட்ட இருந்து பெரிய ஊசில எடுத்தானே... அதே மாதிரி

    ReplyDelete
  7. @ வெளங்காதவன் said...

    // :)///

    வெளங்காதவனுக்கு வெளங்கிச்சா, வெளங்களையா’னு வெளங்களையே!!!

    ReplyDelete
  8. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  9. உங்கள் கிட்ட மட்டும் எப்படி ஒருத்தன் கரேக்டா வந்து சிக்குரான்...............

    ReplyDelete
  10. // ச்சே...ச்சே.... எவ்ளோ அலார்ட்’ஆ இருந்தாலும்
    எவன் கிட்டயாவது மாட்டிக்குறோமே!!! //

    அலார்ட்டா இருக்கும் போதே இப்படின்னா..
    இன்னும் அசால்டா இருந்தா என்னென்ன
    நடக்குமோ..?!!

    ReplyDelete
  11. @ K.SS.Rajh.,

    // உங்கள் கிட்ட மட்டும் எப்படி ஒருத்தன்
    கரேக்டா வந்து சிக்குரான்............... //

    போஸ்டை நல்லா படிங்க சார்..
    சிக்குனது அவனா..? இவரா..?!!

    ReplyDelete
  12. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  13. இதுக்கு ஏன் பாஸ் 13+ (ஹிட்ஸ் வாங்கும் டிரிக்கா??).

    //ஆமால்ல... இரத்ததுக்கு இங்லீஸ்’ல ப்லட்’னுதான் சொல்வாங்கள்ள... நான் யூரின்’னு நெனச்சிட்டேன்..//
    செம காமெடி...

    ReplyDelete
  14. ஒற்றுமை விடயத்தில் சிங்களவர்களும் ஆபிரிக்கர்களைப் போலத் தான் பாஸ்.
    எல்லோரும் ஒன்றாகிடுவார்கள்.

    ரத்தம், யூரின் செம காமெடி பாஸ்..
    எப்படி உங்க கிட்ட மாத்திரம் இப்படியானவங்க மாட்டுறாங்க?

    ReplyDelete