நான் அமீரகத்துக்கு வந்த புதிதுங்க… அப்போ நம்மளுக்கு ஹிந்தி, உருது சுத்தமாக தெரியாது. (இப்பவும்தான்). இலவசமாக உருது படிக்க என்ன பண்ணலாம்’னு யோசிச்சு ஒரு பாகிஸ்தானியை நன்பனாக்கிக் கொண்டேன். சும்மா சொல்லக் கூடாதுங்க…. ரொம்ப நல்ல பையன்.
கொஞ்ச நாள் அவன் கூட கூட்டு வைத்ததில் எனக்கும் கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. நானும் எல்லோருடனும் பேசி சமாளிக்கிற (கேக்குறவனுக்கு புரியுமா?) அளவு உருது படித்தாகிவிட்டது. ஒரு நாள் வெயில் காலம்’ங்க….(வெயில் காலம் ஒரு நாள்’தானா?) ஏதோ பேசிக் கொண்டிருக்கும் போது பயபுள்ள ஒரு விஷயம் சொன்னானுங்க. அதாவது, “ கஞ்சா மாரேகாது அச்சாகே யார்” (கஞ்சா அடிச்சா சூப்பரா இருக்கும்ல,….) .அதை கேட்டதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.
ஆஹா!!! இப்படி பட்ட ஒருத்தன் கூடவா இவ்வளவு நாள் நட்பு வைத்திருந்தோம். (உன் கூட அவன் நட்பு வெச்சிருந்ததை விடவா….?) இதுக்கு தண்ணிய போட்டுடு மட்டையாகுற நம்ம பயபுள்ளைங்க எவ்வளவோ மேல் என்று நினைத்துக் கொண்டேன். ஆனாலும் அவனை அப்படியே விடக் கூடாது, எப்படியாவது திருத்த வேண்டும் (யாருய்யா அது கெக்கே பிக்கே’னு சிரிக்கிறது) என்றெண்ணி, பேச்சைத் தொடர்ந்தேன்.
மச்சி, கஞ்சா அடிக்கிறது நல்லமில்லையே.. அது பாவம்’டா..என்றேன். அதுல என்னடா பாவம் இருக்கு.. நம்ம நாட்டுல வெயில் காலத்துல எல்லொருமே வழமையா பண்ரதுதானே!! நம்ம வீட்ல ஆண்கள் எல்லோரும் வெயில் காலம் முடியும் வரை கஞ்சா அடிக்கிரது வழக்கம்’னு (நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்) பீதிய கிளப்பினானுங்க..
ஆஹா!!! இவன் மட்டும்தான் இப்ப்டி இருப்பன்னு பாத்தா மொத்த நாடே அப்பிடித்தான் இருக்கு போல இருக்கே!!! என்ன பண்ணலாம்னு யோசித்துக் கொண்டே வேறு ஒரு பிட்டை போட்டேன். “கஞ்சா அடித்தால், உடம்புக்கு நல்லதில்லையே.. பல நோய்கள் வருமே!! என்றேன். அதற்கு அவன் “ யோவ்!! அது குளிர் காலத்துல அடிச்சாதான் உடம்புக்கு ஒத்துக்காது. வெயில் காலத்துல அடிச்சா உடமுக்கு ரொம்ப நல்லது, உடம்புல உள்ள சூடு குறையும், தலைல A/C போட்ட மாதிரி இருக்கும்யா” (ஆமா.. தலைல A/C போட்டது மாதிரி இருக்கும் வயிதுல என்ஞின் போட்டது மாதிரி இருக்கும்) என்கிறான்.
எனக்கு தெரிந்த உருது’ல எவ்வளவோ சொல்லிப் பார்த்தெனுங்க… திருந்துற போல தெறியல..குடும்பத்தோடு கஞ்சா அடிக்கிறவன, நம்ம உடைந்த உருதுல (Broken Uruthu) திருத்த முடியுமா’னு நெனச்சி, இனி இவன் சகவாசமே வச்சிக்க கூடாதுன்னு அந்த இடத்திலிருந்து வந்துட்டேன்.
மாலையில் எதேச்சையாக அவனை சந்திக்க நேர்ந்ததுங்க.. அப்போ, அவன் ஓடி வந்து “கஞ்சா அடிச்சிடேன்யா” என்றான். எனக்கு ஒரே அதிர்ச்சி… அமீரகத்துல கஞ்சா விற்பனை நடக்குதா?’னு யோசிச்சுக் கொண்டே, எங்கே கஞ்சா அடிச்சே?’னு கேட்டதுக்கு பகக்துல உள்ள மளையால சலூன்’னை காட்டினானுங்க.
ஆஹா!! மலையாளி இப்போ கஞ்சாவும் விக்கிறானா?னு யோசிச்சுடு இருக்கும் போது, அந்த பாகிஸ்தானி தொப்பியை கலட்டி, “கஞ்சா எப்பிடி இருக்குனு பாரே” என்றான். அடப்பாவி அதை தொப்பிகுள்ள வச்சிருக்கானே1னு யோசித்துக் கொண்டு தலையை பார்த்தால், தன் மொடையடித்த தலையை தடாவிக்கொண்டிருக்கிறான். ”இந்த வெயிலுக்கு இப்போதுதான் சூப்பரா இருக்குள்ள…. தலைல A/C போட்ட மாதிரி” என்கிறான்.
அப்போதுதாங்க எனக்கு புரிஞ்சது, உருதுல ”கஞ்சா அடிப்பது” என்றால் ”தலையை மொட்டை அடிப்பது” என்று அர்த்தம்.
உண்மையிலே கஞ்சா அடிச்சுட்டநோன்னு பயந்தே போயிட்டேன்.... கடைசி வரைக்கும் படிச்ச பிறகுதான் தெரிஞ்சது கஞ்சன்ன உருதுல மொட்டை ன்னு தெரிய வந்தது..... ரொம்ப நல்லா இருக்கு உங்களோட பதிவு..
ReplyDeleteஅன்னபுஷ்பராஜா., துபாய்...
உங்களுக்கே கஞ்சா அடிச்சுட்டாரே..ச்சே மொட்டை அடிச்சுட்டாரே a அந்த பாகிஸ்தானிய நண்பர்
ReplyDelete@ ANNBHU &n டக்கால்டி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Hehhe <, Mr Faaique
ReplyDeleteUngalukkum Izu pola Willangamana Casw thann wandu mattuzu ena ???
As Like Wadivel
@ Anonymous//
ReplyDelete///Ungalukkum Izu pola Willangamana Casw thann wandu mattuzu ena ???///
இதெல்லாம் என்னா? இன்னும் எவ்வளவோ இருக்கு.. பாக்கத்தானே போரீங்க....
takooko bala namo kolili tololo asan k amo dira mga buya kayo san koto lamang lakoko...
ReplyDelete@Anonymous
ReplyDelete////takooko bala namo kolili tololo asan k amo dira mga buya kayo san koto lamang lakoko...//
katooo mang paoli karikaa'o dunaa menhga..
கடசீல (என்னமோ சொல்லப் போறீங்கன்னு பார்த்தா) எங்கள மொட்டை அடிச்சிட்டீங்களே!! ஹி..ஹி..
ReplyDelete