Sunday 5 September 2010

மான்புமிகு மன்னனும் மக்கு மங்குனியும்..


ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராஜ திலக etc….. பக்கத்து நாட்டு மன்னன் பரதேசி வந்து நம் மன்னனை சந்தித்து விட்டு போகிறார்….

அவர் போனதும் பராக்கு பார்த்துக் கொண்டிருந்த மங்குனி அமைச்சரை கூப்பிட்ட மன்னன்…..
மன்னன் : தற்பொழுது வந்து போவது யாரென்று தெரியுமா?
மங்குனி : அவனா? பக்கத்து நாட்டு பரதேசி
மன்னன் : யோவ்!!! மங்குனி %(&(*&&%*^$%#%^ (சென்ஸார்) ஒரு நாட்டு
          மன்னனை அப்படியா கூப்பிடுவது?
          ஒரு மரியாதைக்கு “திரு” என்று அழக்க வேண்டுமென்று உமக்கு
          தெரியாதா….
          (மன்னனின் கோபத்தை பார்த்த மங்குனி வேறு வழியில்லாமல்..)
மங்குனி  : புரிந்தது மன்னா..எல்லாம் நன்றாக புரிந்து விட்டது.

அடுத்த நாள்..
மன்னன் : மங்குனி… எனக்கு வைத்திருந்த பால் எங்கே?
மங்குனி : (எதையெல்லாம் அமைச்சரிடம் கேட்பது என்ற விவஸ்தையே
           இல்லையா?. மங்குனி…உஷார்.. நேற்று பட்ட அவமானம் இன்று                                                    
           படக்கூடாது…)
           மன்னா.. அதை ”திரு” பூனையார் குடித்து விட்டார்..

ஏற்கனவே பாலை இழந்த கடுப்பில் இருந்த மன்னனுக்கு இந்த பதிலை கேட்டதும் பல்ஸ் எகிறியது

மன்னன் : யோவ்!!! மங்குனி %(&(*&&%*^$%#%^ (சென்ஸார்)
          வாழ்க்கையிலேயே  “திரு” என்ற வார்த்தையை பாவிக்கக்
          கூடாது.
மங்குனி  : !!!!!!!!!!!
(மங்குனி இதற்கும் வழமை போல தலையாட்டுகிறார்.)

மூன்றாவது நாள்
மன்னன் : மங்குனி… என் வாள் எங்கே?
மங்குனி : (அதை பற்றி போருக்கு போகின்றவர்தானே கவலை பட    
          வேண்டும். நம் மன்னன் எதற்கு கவலைப் படுகிறார். ஒரு
          வேலை அதற்காக இருக்குமோ, ஒரு வேலை இதற்காக
          இருக்குமோ!! என்று யோசித்தவாறு…. தயக்கத்துடன்….)
          மன்னா சமையல் கட்டில் எதாவது அவசர தேவையா?

மன்னன் : யோவ்!!! மங்குனி %(&(*&&%*^$%#%^ (மீண்டும் சென்ஸார்)
          (கோவம் கொலை வெறியாக மாறினாலும் நிலைமையை
          கருத்தில் கொண்டு … மங்குனியின் காதருகில் சென்று )
          யோவ்! மங்குனி… முதுகு பயங்கரமா அரிக்குதுய்யா……..
          என்ன செய்வியோ.. ஏது செய்வியோ தெரியாது. அவசரமாக
          என் உடை வாள் வேண்டும்.
மங்குனி : (தயங்கியவாறே…)

          அது வந்து…….
         
          அது வந்து……..
         
          மன்னா.. உங்கள் வாளை நேற்று இரவு “டன் வந்து டிட்டுப்
          போய்விட்டான்”
மன்னன் : (ஒன்றும் புரியாத மன்னன்.)
          யோவ்… மக்கு மங்குனி நீர் என்னய்யா சொல்கிறீர்?
மங்குனி : (சென்ற முறை மாதிரி இந்த முறை பல்பு வாங்கக் கூடாது.
          உஷார்…..)
          ஆமாம் மன்னா.. உங்கள் வாளை நேற்று இரவு “டன் வந்து
          போய்விட்டான்”
மன்னன் கோபத்தில் மங்குவின் சங்கை கடிக்கிறார். நிலவரம்                               மோசமடைவதை உணர்ந்த மங்கு………. மீண்டும் கத்துகிறார்.
மங்குனி : மன்னா.. உங்கள் வாளை நேற்று இரவு “திரு”டன் வந்து                  
          ”திரு”டிட்டுப் போய்விட்டான்”

17 comments:

  1. ஒக்காந்து ஓசிச்சீங்களா :)

    செம காமெடி

    மங்கு சீக்கிரம் வாளை எடும் இந்த மானுடனை சீவிவிடும் :)

    ReplyDelete
  2. யப்பா....... நம்ம மங்குனிக்கும் இந்த மங்குனிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .........

    ReplyDelete
  3. Mohamed Faaique said...

    /// யப்பா....... நம்ம மங்குனிக்கும் இந்த மங்குனிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ......... ///

    அதெல்லாம் கிடையாது மங்கு மங்கு தான் :)

    ReplyDelete
  4. ஹிஹி.. முன்பே கேட்ட கதை என்றாலும் ரீமேக் நல்லாயிருக்கு.. கலக்கல்ஸ்...:D

    ReplyDelete
  5. "மக்கு" என்பதை தவிர வேறு எதுவும் ஒற்றுமை கிடையாதுப்பா.... சத்தியாமா... நம்புப்பா...

    ReplyDelete
  6. @ Bavan ..

    ஹிஹி.. முன்பே கேட்ட கதை என்றாலும் ரீமேக் நல்லாயிருக்கு.. கலக்கல்ஸ்...:///

    பழைய கதையாக இருந்தாலும் நாம கொஞ்சம் RIMMING & TIMMING உடன் சொல்லி இருக்கோம்...

    ReplyDelete
  7. @ வெறும்பய ...
    Ennaiyaa Nadakkuthu inke..///

    ஒரு கைப்புள்ள''க்கு எதிரா சதி நடக்குது.... ஜில்லு தலைமையில்...

    ReplyDelete
  8. ஒன்னாப்பு கதைய உல்டா பண்ணின உன்னை என்ன பண்ணலாம்?

    ReplyDelete
  9. @ ரமேஷ்...

    பாட்டி வட சுட்ட கதையையே ரீமேக் பன்ரானுங்க.... இதெல்லாம் மேட்டர்`ஏ கிடயாது..

    ReplyDelete
  10. " ஜீவன் பென்னி....

    நீங்க மட்டும்தான் சரியா வாசிச்சுருக்கீங்க பாஸ்....

    ReplyDelete
  11. பழைய கதைய தூசு தட்டி போட்டாலும்... நல்ல இருக்குங்க

    ReplyDelete
  12. ///மன்னனின் கோபத்தை பார்த்த மங்குனி வேறு வழியில்லாமல்..///
    அப்படின்னா திரு.பரதேசி அப்படின்னு சொல்லுவாரா ..?

    ReplyDelete
  13. அது சரி .. நல்லாத்தான் இருக்கு ..!! ஆனா மங்குனி கிட்ட இத சொல்லணுமே ..?

    ReplyDelete
  14. ம்ம்ம்ம் செம செம காமெடி

    ReplyDelete
  15. ஹாய்!

    உங்க ப்ளாகோடஃபர்ஸ்ட் ஃபாலோயர் மீ தான்
    ஆனா உங்க பதிவ நான் போன பிறகு போட்ருக்கீங்க

    anyhow, கலக்குங்க :)))

    ReplyDelete