Saturday 31 May 2014

அலோ!!!! டுபாயா???






இலங்கை ஒரு சிறிய நாடாக இருந்தாலும் ஊருக்கு ஊர், பேச்சு வழக்கிலும், பழக்க வழக்கங்களிலும் பாரிய வித்தியாசங்கள் இருந்து வருகின்றன. அதிலும் கிழக்கிற்கும் மற்றைய பகுதிகளுக்கும் பெரும் வித்தியாசம் காணப்படுகிறது.

வடக்கு, கிழக்கு மக்கள் பேசும் தமிழை புரிந்து கொள்வது கூட சில வேளை கடிமானதாகவே இருக்கும். அதிலும் முதியவர்கள் பேசினால்.... கேட்கவே வேணாம்...

நம்ம நண்பன் க்ரேஸின் பிறப்பிடம், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு ஊர். நான் இங்கு சொல்லப் போகும் சம்பவத்தை பொறுத்தவரை ஊர் பேர் சொன்னால் அடி வாங்க வேண்டி இருக்கும். சிறிய வயதிலேயே குடும்பத்துடன் வந்து நம்ம ஊரில் தங்கியவர்கள்.

ஒரு நாள் என் வீட்டுக்கு வந்த க்ரேஸி, மச்சி, என் அண்ணனுக்கு கல்யாணம் Fix ஆயிடுச்சுடா... பொண்ணு நம்ம ஊரு.. நான், நீ, பாப், டட்சன், புள்ளி ராஜா, காமராசு எல்லோரும் போயி ஒரு வாரமாவது தங்கனும்’னு சொல்லி என் அப்பா,அம்மாவையும் கன்வின்ஸ் பண்ணிட்டு போய்ட்டான்.

போகும் போதே வீட்ல அப்பா, அம்மா, பாட்டி வரைக்கும் எல்லோரும் சொன்ன ஒரு விடயம்,

”புதிய ஊருக்கு போரே!!! ரொம்ப கவனம்டா..... பேச்சு வழக்கெல்லாம் வித்தியாசமா இருக்கும்.. எதையாவது பேசப் போயி அடி வாங்காம வந்து சேருங்கடா......”

போயி இரண்டு மூனு நாளு சூப்பராக கழிந்தது. மக்களும், சாப்பாட்டுவகைகளும், பாரம்பரியங்களும் நமக்கு வித்தியாசமான ஒரு அனுபவத்தை தந்ததுடன், கடலோரப் பகுதியாகையால் இன்னும் சுவாரஸியமாக இருந்தது.

ஒரு நாள் நம்ம புள்ளி ராஜா, வீட்டுக்கு கால் பண்ணி 3,4 நாள் ஆவுதுடா... கட்டாயம் பேசியாகனும்’னு ஒரு Communication Centreஐ தேடினோம். கைப்பேசிகள் அதிகமில்லாத காலம் அது. கால் பண்ண வேண்டுமென்றால் Communication Centreக்கு போக வேண்டும்.

வீதிக்கு போயி, ஒரு முதியவரிடம்,

அய்யா.... இங்க Communication Centre எங்க இருக்கு பெரியவரே????

என்னது ???Communication Centre ஆ??? அப்டின்னா??  இரைச்சிக் கடையா???

இல்லங்க.....Communication Centre....

பல சரக்குக் கடையா???

இல்லங்க....

அப்போ.. மருந்துக் கடையா????

இல்லங்க....

டேய்!!! சாராயக் கடையா??? எங்க ஊர்ல வந்து என்னடா கேட்டீங்க... உங்கள வெட்டாம விட மாட்டேண்டா.....

அய்யா... அதில்லையா... வீட்டுக்கு கால் பண்ணனும்....Communication Centre எங்க இருக்குனு சொல்லுங்கையா....

ஆ.... தம்பி நீங்க கேக்குறது “ அலோ கடையா?????”

அடப்பாவிகளா... இந்த ஊர்ல அப்டியாடா சொல்வீங்க.... அவ்வ்வ்......

ஆமாங்க..ஆமா..... அந்த அலோ கடைதாங்க நாம தேட்றது.... வரட்டா.... ஆள விடுங்கையா....... அவ்வ்வ்.............

பாப்...நீ கூட சலூன் போகனும்னு சொன்னேல்ல.. அதுவும் எங்க இருக்குனு யார் கிட்டயாவது கேட்டுரலாமா???

வேணாம்டா.. வேணவே வேணாம்..... இவனுங்க சலூன்’னு சொல்லி எங்கையாவது தலையையே வெட்டுர இடத்துக்கு அனுப்பிர போரானுங்க...


2 comments: