Wednesday 20 August 2014

Moin Ali - பாவம்..... அவரே கன்பீஸ் ஆயிட்டாரு.....

நாமளே ஒதுங்கிப் போனாலும் சும்மா விட மாட்டான்ங்க போலிருக்கு...
செவ்வனே`னு போனவன கூப்பிட்டு தலைய தடவி குட்டுரானுங்க...

Bike'க்கு Petrol போடலாம்னு Petrol Shed'க்கு போனேன்....
அங்க வேல செய்யுர தமிழ் பையன் என்ன பாத்து சிங்களத்தில்...

  தம்பி!! நீங்க இங்கிலாந்து கிரிக்கட் டீம்`ல இருக்குற "மொயின் அலி" (Moil Ali) மாதிரி இருக்கீங்கண்ணே.... அப்டீன்னு சொல்ல... ஆகா நம்மள கலாய்க்கிறானோ??  அப்டீன்னு யோசிக்கும் போதே

பக்கத்தில் இருந்த சிங்கள பையன் ஆமா... நீங்க சரியா... அப்டித்தாண்ணே இருக்கீங்க`னு சொல்ல நானே என்னைப் பார்த்து பெருமையாக சிரித்துக் கொண்டேன்.

அதோடு இடத்தை காலி பண்ணியிருக்கணும். ஆனா... பயலுக இன்னும் நம்மளை புகழுவானுங்க... அதையும் கேட்டுட்டே போயிடலாம்`னு கொஞ்சம் பேச்சுக் குடுத்தேன்...

Moin Ali
சிங்களப் பையனைப் பார்த்து,

டேய் தம்பி!! நான் உண்மையிலேயே உனக்கு மொயின் அலி" (Moil Ali) போலவா இருக்கேன்???

ஆமாண்ணே!! அவரே மாதிரிதான் இருக்கீங்க...

உனக்கு அந்த ஆள தெரியுமா??? நல்லா பாத்திருக்கியா???

எப்படிண்ணே தெரியாம போகும்??? அவரு எவ்வளவு பெரிய பாக்ஸர்... (Boxer).

என்னது பாக்ஸரா??? தம்பி நீ யாரச் சொல்றே???

அந்த அமெரிக்கன் பாக்ஸர்(Boxer)`தானே!!! கருப்பா... குண்டா... முட்டக் கண்ணா இருப்பாரே!!! அந்த முகம்மத் அலி (Mohamed Ali)`ய எனக்குத் தெரியாதா???

கிர்ர்ர்ர்ர்.......

கிரிக்கட் பாக்காத பசங்களோட பேசினது ரொம்ப தப்பாப் போச்சே!!!!!!

Muhammad Ali


கிர்ர்ர்ர்ர்..........

Saturday 16 August 2014

அஞ்சான்...... அடி வாங்குறதுக்கு....




காலேஜில் படிக்கும் போது சனி ஞாயிறு தினங்களில் மேலதிக வகுப்புக்கள் நடக்கும். அதில் கணித வகுப்புகளும் அடக்கம். கணித ஆசிரியருக்கும் நமக்கும் எப்பவுமே ஏழாம் பொறுத்தம்தான். நம்ம நண்பன் க்ரேஸி ஒரு படி மேல்...... இவர்களைப் பற்றிய முன்னைய பதிவை பார்க்க.....

ஓவர் பேச்சு உடம்புக்கு ஆகாது


பொதுவாக க்ரேஸி வகுப்புகளுக்கே வருவதில்லை.. அப்புறம் மேலதிக வகுப்புக்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு திங்கட் கிழைமையும் கணக்கு ஆசிரியர் வந்ததும் முதல் வேலையாக மேலதிக வகுப்புக்கு வராதவர்களை வகுப்புக்கு வெளியே நிற்க வைத்து விடுவார்.

ஆனால், ஒரு முறை க்ரேஸி மேலதிக வகுப்புக்கு வந்து விட, அன்றைய நேரம் பார்த்து நண்பன் பாப் வகுப்புக்கு வரவில்லை. திங்கள் கிழமை வந்ததும், எல்லா நாளும் வெளியே நிற்கும் தான் உள்ளே இருக்கப் போவதையும், தன்னை கலாய்க்கும் பாப் வெளியே நிற்கப் போவதையும் நினைத்து க்ரேஸிக்கு சந்தோசம் அடக்க முடியவில்லை.

க்ரேஸி எதிர் பார்த்திருந்த கணிதப் பாடமும் வந்தது. கணக்கு ஆசிரியர் வகுப்பிற்குள் வரும் போதே, க்ரேஸி தன் சந்தோசத்தை அடக்க முடியாமல்...

சார்.......... பாப் வகுப்புக்கு வரல சார்... வெளியே அனுப்புங்க சார்..`னு உச்சஸ்தானியில் கதற..  கணக்கு சார் எந்த மூட்`ல வந்தார்னு தெரியல...வந்த கோபத்தில் க்ரேஸியின் காதை திருகி இழுத்து பளார்.. பளார்`னு ரெண்டு அரை விட்டு வகுப்பிற்கு வெளியே அனுப்பி விட்டார். நின்று கொண்டிருந்த பாப்`ஐ பார்த்து நீ எதுக்கு நிக்கிறே.... உக்காரு`னு அவனை உட்கார வைத்து விட்டு பாடம் நடத்த ஆரம்பித்தார்.

வகுப்புக்கே வராத பாப் உள்ளே.... வகுப்புக்கு வந்த க்ரேஸி வெளியே.... நமக்கு க்ரேஸியை பார்த்து சிரிப்பை அடக்க முடியல... ஆனால் சிரிச்சு மாட்டி கிட்டா நாமளும் வெளியே.... நமக்கு சந்தோசம் இல்லாவிட்டாலும் பரவாயில்ல... நம்ம எதிரி சந்தோசப் படக் கூடா.....


பாடம் முடிஞ்சதும் கணக்கு ஆசிரியர் ஒவ்வொருவரிடமும் வராததற்காண காரணம் கேட்டுக் கொண்டே வந்து, க்ரேஸியிடம் வந்து, நீ எதுக்குடா வகுப்புக்கு வரலை?னு கேட்க,

சார்,  நான் வந்தேனே!!!... நீங்க கூட எனக்கு ஒரு கணக்கு பிழையானதுக்கு கும்மு கும்முனு கும்மினீங்களே!!!! (ஒரு கணக்காடா பிழையாச்சு???? நீ போட்டதெல்லாமே பிழைதானே????)

டேய்ய்!!!!! அப்புறம் எதுக்குடா வெளியே போய் குந்திகிட்டு இருக்கே!!! நீயெல்லாம் எங்கடா உருப்படுவே!!!!

???????????????????????