Saturday 31 May 2014

அலோ!!!! டுபாயா???






இலங்கை ஒரு சிறிய நாடாக இருந்தாலும் ஊருக்கு ஊர், பேச்சு வழக்கிலும், பழக்க வழக்கங்களிலும் பாரிய வித்தியாசங்கள் இருந்து வருகின்றன. அதிலும் கிழக்கிற்கும் மற்றைய பகுதிகளுக்கும் பெரும் வித்தியாசம் காணப்படுகிறது.

வடக்கு, கிழக்கு மக்கள் பேசும் தமிழை புரிந்து கொள்வது கூட சில வேளை கடிமானதாகவே இருக்கும். அதிலும் முதியவர்கள் பேசினால்.... கேட்கவே வேணாம்...

நம்ம நண்பன் க்ரேஸின் பிறப்பிடம், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு ஊர். நான் இங்கு சொல்லப் போகும் சம்பவத்தை பொறுத்தவரை ஊர் பேர் சொன்னால் அடி வாங்க வேண்டி இருக்கும். சிறிய வயதிலேயே குடும்பத்துடன் வந்து நம்ம ஊரில் தங்கியவர்கள்.

ஒரு நாள் என் வீட்டுக்கு வந்த க்ரேஸி, மச்சி, என் அண்ணனுக்கு கல்யாணம் Fix ஆயிடுச்சுடா... பொண்ணு நம்ம ஊரு.. நான், நீ, பாப், டட்சன், புள்ளி ராஜா, காமராசு எல்லோரும் போயி ஒரு வாரமாவது தங்கனும்’னு சொல்லி என் அப்பா,அம்மாவையும் கன்வின்ஸ் பண்ணிட்டு போய்ட்டான்.

போகும் போதே வீட்ல அப்பா, அம்மா, பாட்டி வரைக்கும் எல்லோரும் சொன்ன ஒரு விடயம்,

”புதிய ஊருக்கு போரே!!! ரொம்ப கவனம்டா..... பேச்சு வழக்கெல்லாம் வித்தியாசமா இருக்கும்.. எதையாவது பேசப் போயி அடி வாங்காம வந்து சேருங்கடா......”

போயி இரண்டு மூனு நாளு சூப்பராக கழிந்தது. மக்களும், சாப்பாட்டுவகைகளும், பாரம்பரியங்களும் நமக்கு வித்தியாசமான ஒரு அனுபவத்தை தந்ததுடன், கடலோரப் பகுதியாகையால் இன்னும் சுவாரஸியமாக இருந்தது.

ஒரு நாள் நம்ம புள்ளி ராஜா, வீட்டுக்கு கால் பண்ணி 3,4 நாள் ஆவுதுடா... கட்டாயம் பேசியாகனும்’னு ஒரு Communication Centreஐ தேடினோம். கைப்பேசிகள் அதிகமில்லாத காலம் அது. கால் பண்ண வேண்டுமென்றால் Communication Centreக்கு போக வேண்டும்.

வீதிக்கு போயி, ஒரு முதியவரிடம்,

அய்யா.... இங்க Communication Centre எங்க இருக்கு பெரியவரே????

என்னது ???Communication Centre ஆ??? அப்டின்னா??  இரைச்சிக் கடையா???

இல்லங்க.....Communication Centre....

பல சரக்குக் கடையா???

இல்லங்க....

அப்போ.. மருந்துக் கடையா????

இல்லங்க....

டேய்!!! சாராயக் கடையா??? எங்க ஊர்ல வந்து என்னடா கேட்டீங்க... உங்கள வெட்டாம விட மாட்டேண்டா.....

அய்யா... அதில்லையா... வீட்டுக்கு கால் பண்ணனும்....Communication Centre எங்க இருக்குனு சொல்லுங்கையா....

ஆ.... தம்பி நீங்க கேக்குறது “ அலோ கடையா?????”

அடப்பாவிகளா... இந்த ஊர்ல அப்டியாடா சொல்வீங்க.... அவ்வ்வ்......

ஆமாங்க..ஆமா..... அந்த அலோ கடைதாங்க நாம தேட்றது.... வரட்டா.... ஆள விடுங்கையா....... அவ்வ்வ்.............

பாப்...நீ கூட சலூன் போகனும்னு சொன்னேல்ல.. அதுவும் எங்க இருக்குனு யார் கிட்டயாவது கேட்டுரலாமா???

வேணாம்டா.. வேணவே வேணாம்..... இவனுங்க சலூன்’னு சொல்லி எங்கையாவது தலையையே வெட்டுர இடத்துக்கு அனுப்பிர போரானுங்க...


Sunday 25 May 2014

தம்பி..... இது China Phone'ஆ????



சுமார் ஒரு 5 வருஷம் இருக்கும். Touch Phones Market'ல சூடு பிடிக்க ஆரம்பிச்சிருந்த நேரம்.. அதே வேளை சைனா போன்களும் வந்து குவிந்த நேரம்.

எனக்கும் Touch Phone ஒன்னு வாங்கனும்னு ரொம்ப நாள் ஆச.... எப்படா, எங்கடா  Offer போடுவாண்ணு காத்துகிட்டு இருந்து, Carrifour'ல ஒரு  Offer இருப்பதாக கேள்விப் பட்டு, போய் ஒரு Sony Ericsson G900 Phone ஒன்னு வாங்கியாச்சு......

Office'க்கு கொண்ணு வந்து Box'ஐ பிரிக்கிறேன், நேரம் பாத்து வந்த நம்ம ஆபீஸ் பாய் “நேபாளி”,

தம்பி, புது போன் வாங்கியிருகீங்களா??

பழைய போன்’ஐ Box'ல வச்சு பாவிக்க நான் ப(B)ங்காளியா???

அட.... என் ஐ போனை போலவே Touch Pen'லாம் இருக்கு...

என்னது??? ஐ போன்’ல  Touch Pen’ஆ?? எங்கண்ணே வாங்கினீங்க?? எவ்ளோ ஆச்சு????

பாக்கெட்ல இருந்து போனை எடுத்து காண்பிச்சாரு.... ஜிலு ஜிலு’னு ஒரு பொலிதீன் பையால பிரியாணி பொட்டலத்த போல கவர் பண்ணி வச்சிருக்காரு....  அப்டியே On பண்ணினா.. Twinkle Twinkle Little Star பாட்டுக்கு, நம்ம Montessori Teacher, பியானோ’ல மியூசிக் போட்றத விட கேவலமான ஒரு Starting Sound

சைனா மார்கெட்’ல வாங்கினேன் தம்பி... (நீ ஓப்பன் பண்ணும் போதே எனக்கு தெரியும்டா...)  பணம் பணம்’னு பார்த்து சரி வருமா தம்பி??? நாமளும் மத்தவங்கள மாதிரி இருக்க வேணாம்??? 150 AED’னு கூட பாக்காம வாங்கிட்டேன்!!!!!.

ஐ போன் சைனா மார்கெட்லயா?? அதுவும் 150 AEDயா????  யோவ்!!! அது ஐ போன் இல்ல.... பொய் போன்...

தம்பி, உங்க போன்ல கூடத்தான் Touch Pen இருக்கு...இதுவும் சைனா மார்கெட்லயா வாங்கினீங்க???

அண்ணே!!! வாய்ல எதாவது வந்துட போகுது.... இது Original Sony Ericsson போன்..

அப்போ!! எதுக்கு தம்பி Touch Pen இருக்கு.....

அண்ணே!!! Touch Pen சைனா காரன் வீட்டு சொத்தா??? மற்றைய போன்களில் இருக்க முடியாதா????

அப்போ!!!இது எங்க தயாரிச்ச போன் தம்பி.....

ஆஹா.... மடிக்கிட்டானே!!!! Original Sony Ericsson போன்கள் சைனாலாதானே தயாரிக்கிறாங்க... இவன எப்படி சமாளிக்கிறது??? - மைண்ட் வாய்ஸ்....

அண்ணே!!! தயாரிப்பு சைனா’தான்.. ஆனா.. இது நீங்க நெனக்கிறது மாதிரி இது 5,10க்கு விக்கிற சைனா போன் கிடையாது..

ச்சே!!! இவன் கிட்டயெல்லாம் குழைய வேண்டி இருக்கே!!!! - மைண்ட் வாய்ஸ்

அப்போ..... இது சைனால தயாரிச்சதுதானே!!!  சைனா போன்தானே!!!!

டேய்ய்!!!!! புது போன்’னும் பாக்காம அடிச்சு மண்டைய உடச்சுருவேன்... இது சைனா’ல தயாரிச்சதுதான்.... ஆனால் Original Sony Ericsson தயாரிப்பு. நம்பினா நம்பு... இல்லாவிட்டால் இடத்தை காலி பண்ணு...

சரி தம்பி நான் போய்ட்டு வர்ரேன்.. ஆனாலும் இது சைனா போன்’தானே தம்பி....

டேய்!!!!! இன்னுமாடா நீ இடத்த காலி பண்ணல...???? முடியலடா..... அவ்வ்வ்..........










Saturday 17 May 2014

அபீஸீலே ஒரு அப்பாடக்கர்...




ஆபீஸ்ல வேலை செய்ரவர்களில் மூனு குரூப் இருக்காங்க...
1. தீவிரமா வேலை செய்ரது.....
2. கொஞ்சம் வேலை செய்ரது, அப்புறம் வேலை செய்யுர மாதிரி நடிக்கிறது..
3. வேலையே செய்யாமல் வெட்டியா இருப்பது...

நாம இதுல 2ம் வகை. வேலை செய்யுரது ஒன்னும் கஷ்டமில்ல. வேலை செய்யுர மாதிரி நடிக்கிறது ரொம்ப கஷ்டம். அதுக்காக எத்தனை ப்ளானிங் பண்ண வேண்டி இருக்கு...

ஒவ்வொரு நாளும் நாம வேலை பண்ணும் போது, எப்படி நம்ம நடவடிக்கைகள் இருக்கு.. ஒரு நிமிடத்தில் எத்தனை தடவை மவுஸ் க்ளிக் பண்ணுறோம், எந்த கோணத்தில் பார்வை இருக்கு. கீ-போர்டை எப்படி யூஸ் பண்ணுரோம்..இதெல்லாம் சரியா நம்மளை நாமளே நோட்டம் விட்டு, வெட்டியா இருக்குற நேரத்துல இதையெல்லாம்  Follow பண்ணனும்.அப்போத்தான் நாம வேலை செய்யுரோம்`னு உலகம் நம்பும். அது எல்லாவற்றையும் விட நம்ம சீட்டை சரியான இடத்துல அமைச்சுக்கனும்.

நம்ம டேபிளுக்கு பின்னாடி நம்ம மானிட்டரை பிரதி பளிக்கக் கூடிய எதாவது, கண்ணாடி அல்லது அது போல பொருட்கள் இருக்கா`னு பாத்துக்கனும். இல்லைனா.. நம்ம முன்னாடி உள்ள ஆளுங்களுக்கு அதுவே நம்மள போட்டு குடுத்துடும். நாம ஒவ்வொருத்தனும் கம்ப்யூட்டர்`ல என்ன பண்ணுரான்னு 20 அடி தூரத்துல இருந்தே சொல்லிடுவோம்.. எல்லாம் அனுபவம் தந்த பாடம்.

அது போக, ஆபீஸ்ல உள்ள ஒவ்வொருத்தருடைய நடையையும் சரியாக நோட் பண்ணி வச்சிருக்கனும். அப்போதுதான் எந்தப் பக்கத்தில் இருந்து, யார் வரும் காலடி சத்தம் கேட்டாலும்,தலையை தூக்காமலே யார் வருகிறார்கள் என கண்டு பிடித்து அதற்கேற்ப நாம் ரெஸ்பான்ஸ் பண்ணலாம்.

நம்ம ஆபீஸ்`ல இவன் மட்டும்தான்யா கம்பனில ஒழுங்கா வேலை பாக்குரவன்`னு எனக்கு ஒரு நல்ல பேரு இருக்கு. எல்லாம் நம்ம ப்ளானிங்தான்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் ஈராக்கில் வேலை பார்த்த போது  நடந்த சம்பவம்.....

நம்ம டேபிளுக்கு முன்னாடி நம்ம டேமெஜர் உக்காந்துட்டு இருக்காரு.. நம்ம கம்பனில வேலை பாக்குர நேபாளி வர்ரான்.  இவனை பற்றிய முதல் இரண்டு பதிவுகள்  

1. கோ - இது அடுத்த நெக்ஸ்டு

 

2.  ஆபிரிக்காவும் எயிட்சும்..... 13+

சரி இவன் பார்த்தா ஒன்னும் பிரச்சனை இல்லையே`னு நானும் ப்லாக்கை திறந்து வச்சுகிட்டு ஒரு பதிவு எழுதிகிட்டு இருக்கேன். வந்த வேகத்துலயே...

தம்பி!!! இது என்ன பாஷை தம்பி இது???? எப்படி தம்பி இவ்வளவு வேகமா டைப் பண்ரீங்க???`னு போட்டான் பாருங்க ஒரு சத்தம்.. நான் திருட்டு முழி முழிக்கிறத பார்த்த டேமேஜர் ஒரே லுக்குல நாலு உதை விட்டாரு...

அடப்பாவி... ஒரு வருஷமா ஓட்டின ட்ராமாவுக்கு ஒரு நிமிடத்துல End Card  போட்டுட்டியேடா!!!! என்னை மாட்டி விடுரதுக்குன்னே உன்னைய நேர்ச்சை பண்ணி அணுப்பி வச்சிருக்கானுங்களா????


தம்பி!!! கோவிச்சுக்காதீங்க தம்பி.... எனக்கு ஒரு உதவி வேணும்....

டேய்!!! உபத்திரவம் பண்ணிட்டு இப்ப உதவி கேக்குறியா?? என் கொலைவெறி தலைக்கு ஏர்ரதுகுள்ள ஓடிடு....

தம்பி!!! என் பயோடேட்டாவை கொஞ்சம் சரி பண்ணி குடுங்க தம்பி!!!

ஆஹா!!! பயோடேட்டாவா??? அப்படி சொல்ல வேணாமா?? அத சரி பண்ணி உன்னைய வேறு கம்பனிக்கு அனுப்பினால்தான் எனக்கு நிம்மதி.. இது உனக்கு செய்யுர உதவி இல்ல.. எனக்கு நானே செஞ்சுக்குற உதவி...

தம்பி!! இந்த கம்பனி ஒரு நரகம். புதிய கம்பனிக்கு போயிடனும்`னு சொன்னீங்களே!!! என் புதிய கம்பனில உங்களுக்கும் வேலை இருக்கானு பாக்கவா???

அண்ணே!! நீங்கபொய்ட்டீங்க`னு வச்சிகங்க..  இந்த வேலையே எனக்கு சுவர்க்கம் மாதிரி ஆகிடும்..
எங்கண்ணே உங்க பயோடேட்டா???

நாலு A4 Paperஐ நீட்டினாரு..

அண்ணே!!! இத Edit பண்ணனும்னா, Soft Copy வேணும்னே!!!  Soft Copy இருக்கா???

இதுவும் Soft'ஆத்தானே இருக்கு.. இது போதாதா???

இல்லண்ணே!!! நான் கேக்குரது Soft Copy... அது இருக்கா??

இதவிடவும் Softஆன பேப்பர்லாயா வேணும்????

டேய்ய்ய்ய்!!!!!!!!.......