Friday 30 December 2011

என்னை Error ஆக்கிய Terror கும்மீஸ்..


ஒரு முக்கிய அறிவிப்பு...

என் கோடான கோடி ரசிகர்களுக்கு……

டேய்!!! இதெல்லாம் ரொம்ப ஓவர்…

என் லட்சோப லட்ச ரசிகர்களுக்கு

மவனே!!! செருப்ப சாணில முக்கி அடிக்க வேண்டி இருக்கும்….

என் ஆயிரக் கணக்கான ரசிகர்களுக்கு……

உன் ரேஞ்சுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர் கண்ணா.!!!!!

என் நூற்றுக் கணக்கான ரசிகர்களுக்கு……

இன்னும் அதே வட்டத்துக்குள்ளத்தான் சுத்திகிட்டு இருக்கே!!!! வேணாம்!!!!

ஆஹா!!! இதுக்கு மேலயும் அசிங்கப் பட முடியாது… உண்மையை சொல்லிட வேண்டியதுதான்.-மைண்ட் வாய்ஸ்

அஞ்சோ, பத்தோ வாங்கிட்டு என் ப்லாக் வரும் என் அஞ்சு பத்து ரசிகர்களுக்கு நான் இப்பதிவின் அறிவிப்பது என்னவென்றால், டெரர் கும்மி வலைத்தளத்தால் நடத்தப்படும் டெரர் கும்மி விருதுகள் 2011 பற்றிய நற்செய்தியே!!!

இந்த போர்டு எல்லோர் ப்லாக்லயும் தக தக’னு மினுங்குது.. நம்மளுக்கு மாத்திரம் செவ்வனே’னு இருக்கே..

போட்டி பற்றிய அறிவிப்பு வந்ததுமே, டெரர் கும்மி பசங்க (இதுல பசங்க’ங்குற வார்த்தைக்குள்ள 55 வயதைக் கடந்த பெரியவர் வெங்கட் சேர்க்கப் படவில்லை) ரொம்ப லொல்லு பார்ட்டியாச்சே’னு யோசிச்சு கிட்டே காலண்டரை பார்த்து அன்னைக்கு ஏப்பிரல் 1ம் தேதி இல்லைனு கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டேன்.

ஒருத்தனுக்குள்ள உள்ள மிருகத்த தட்டி எழுப்பிராதீங்க’னு சொன்னா அதுல ஒரு நியாயம் இருக்கு. ஆனா எனக்குள்ள உள்ள மிருகத்த மட்டும் கொஞ்சமாலும் தூங்கவே விடுரீங்க இல்லையே..!!! (யோவ்!!! உன் மூஞ்ச க்ளோச் அப்’ல பார்த்தா மிருகமத்துக்கு கூட தூக்கம் போகாதுய்யா....) 

ஒவ்வொரு மாசமும் ஏதாவது ஒரு போட்டி’னு உசுப்பேத்தி என்னை தீயா அழைய விட்டுர்ரீங்க… (எந்தப் போட்டிலயாவது பரிசு கெடச்சுதானு யாராச்சும் கேட்டா எனக்கு கெட்ட கோவம் வரும்.. ஜாக்ரத,..) 

நம்ம ப்லாக் சரத் குமார் படம் மாதிரி… பாட்டு இருக்கோ.. இல்லையோ.. பைட்டு இருக்கோ..இல்லையோ… கட்டாயம் ஒரு ஃப்லாஷ் பேக் இருக்கும். எனவே வந்தவங்க எல்லோரும் ஒரு சுருளி சுற்றி ஃப்லாஷ் பேக்’கு போக தயாராகுங்க….

போலாம்...ரைட்...


ஃப்லாஷ் பேக் 1 :- எங்க ஊருல எந்தப் போட்டி நடந்தாலும் நான் மைதானத்துல இறங்கினா எனக்கு ஈக்குவலா ஒரு பய இறங்கினது கிடையாது. (யோவ்!!! போட்டி முடிஞ்சதும் போய் இறங்கினா எவன்யா இருப்பான்???) 

ப்லாஷ் பேக் 2 :- நம்ம ஃபிரண்டு பாப்’க்கு ஒரு பெரிய கம்பனி’ல இண்டர்வியூ… நானும் கொழும்பை சுற்றிப் பார்க்க இத விட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது’னு அவன் கூட தொங்கிகிட்டேன். அந்த இண்டர்வியூல முக்கியமா கேட்டிருந்தது Sports Certificate.

மச்சான்!! உன் கிட்ட Sports Certificate இருக்குள்ள….??

ஒரு சட்டிபிக்கேட் இருக்குடா.. அத வச்சி இண்டர்வியூ பாஸாகிடலாம்..

 ஆஹா.. ரொம்ப பெரிய Sports Certificate வச்சிருக்கான் போல’னு நானும் கம்முனு இருந்துட்டேன். பயபுள்ள இண்டர்வியூ’லயும் பாஸ் ஆகிட்டான். அப்புறம்தான் கேட்டேன்.

மச்சான் உன் Sports Certificate தேசிய மட்டத்துலயா??? இல்ல மாகாண மட்டத்துலயா?? என்ன போட்டிக்கு கிடைச்சது?

அதுவா..வருசா வருசம் எங்க ஊர் வயல்’ல சிங்கள/ தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நடக்கும்’ல..அப்போ “வாய்ல கரண்டிய வச்சு அதுல தேசிக்காய வச்சுடு ஓடுர ஓட்டம்” இருக்கே. அதுல ச்சின்ன வயசுல நான் 3வது வந்திருக்கேன்ல. அதுக்கு கெடச்ச Certificate’றா….

கிர்ர்ர்க்ர்க்ரிரிர்ர்ர்ர்ர்ர்ர்…. டேய்!! இதப் பார்த்ததும் காரித் துப்பி இருப்பானுங்களே!!!!

ஆமா.. உன் கிட்ட எத்தனை Sports Certificate இருக்கு…

ஹி..ஹி.. ஒன்னும் கிடையாது….

கர்……….த்த்தூ……..

இதுக்கு மேலயும் சம்பந்தமில்லாம ஃப்லாஷ் பேக் சொல்லி அசிங்கப் பட முடியாது என்பதால மறு படியும்……………….



டெரர் கும்மி விருதுகள் 2011 இன் போட்டி விதிமுறைகள் பற்றி என் ப்லாக்கில் குறிப்பிட முடியாது. Because நம்ம ப்லாக்’ல எப்பவுமே

STRICKLY NO RULES

எனவே இங்கு க்ளிக் பண்ணி போட்டி விதிமுறைகள் பற்றி அறிந்து கொள்ளவும்.

இப்போ என்ன பிரச்சனைனா, பதிவுலகையே புரட்டிப் போட்ட என் பதிகளில் எதை போட்டிக்கு அனுப்பலாம்’னு என் வாசகர்களுக்கு ஒரே யோசனை. நான் என்ன பண்ண முடியும் கைய வச்சாலே காவியமா வருதே!!!. அதனால நானும் என் உலக மகா பதிவுகளில் என் தெரிவுகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். முடிவு உங்கள் கையில்….

நகைச்சுவைப்  பதிவுகள்.

கவிதைகள்


விழிப்புணர்வு

அனுபவம்/பயணக்கட்டுரை

டிஸ்கி For டெரர் கும்மீஸ்…
1.டெரர் கும்மி நண்பர்களிடம் இது சம்பந்தமாக தனிப்பட்ட முறையில் கேட்க முடியாது என்பதால், அவர்கள் ’அனானி’யாக வந்து தங்கள் கருத்துக்களை வாறி வழங்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.

2. அல்லது பெயரிலியாக அதாவது புனைப் பெயருடன் வந்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். ஏதும் பிரச்சனை வந்தால் உங்கள் கருத்துக்கும் டெரர் கும்மி நிறுவனத்துக்கும் எந்த சம்பதமும் இல்லை’னு காதுல பூ சுத்திடலாம்.


Wednesday 28 December 2011

தபூசங்கர் - ஆனந்த விகடன் செய்த தவறு

 
இலங்கையிலுள்ள ஒவ்வொருவருக்கும் இலங்கையிலுள்ள பத்திரிகையை தெரிந்திரிக்கிறதோ இல்லையோ, ஆனந்த விகடனை தெரிந்திருக்கும். அவ்வளவு பரிச்சயம். பத்திரிகையும் தரமாக இருக்கும். அதிலுள்ள விஷயங்களும் தரமாக இருக்கும். எனக்கு இந்தியாவை தெரியுமுன்னே ஆனந்த விகடனை தெரியும். சின்ன வயசுல ஆனத விகடனில் ஜோக்குகள்,ஹாய் மதன் பகுதி விடாமல் படிப்பது பழக்கம். 2000ஆம் ஆண்டு பிறக்கு முன் மில்லேணியம்’னு ஒரு பகுதியில் முக்கியமான விஞ்ஞாசிகள், கண்டுபிடிப்பாளர்கள், தலைவர்கள்’னு ஒவ்வொரு கட்டுரை வரும். அவற்றை எங்கேயாவது தேடி ஒன்று விடாமல் படித்து இருக்கிறேன்.

காலேஜ் போற கால்த்துல கண்டி நகரத்துல சனி, ஞாயிறு மேலதிக வகுப்புக்கு போறது வழக்கம். ஞாயிற்றுக் கிழமை காலை 8.00 மணிக்கு வகுப்பு ஆரம்பம். ஆனால் நானும் பாப்’பும் 6.00 மணிக்கே கண்டி’க்கு(Kandy) போய் விடுவோம். பேராதனை வீதியில் இந்துக் கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு கடையிலேயே ஆனந்த விகடன் கிடைக்கும். அதை வாங்குவதற்காக பாப்’பும் அதை ஓசி’யில் படிக்கும் உயர்ந்த எண்ணத்துடனும் அந்த அதி காலை குளிரில் பார்வையை தாழ்த்திய வண்ணம் (நாம டீசண்டான பசங்க) பொடி நடையாக (Because நாம பொடியனுங்க..)போவது வழக்கம்.

ஆனால், அப்பொழுது ஆனந்த விகடன் வாங்க அதிலுள்ள ஜோக்குகளோ, கட்டுரைகளோ காரணமல்ல… அதற்கான ஒரே காரணம்

“தபூ சங்கர்”

2004,2005ம் ஆண்டுகளில் தபூ சங்கரின் கவிதைகள் “தபூ சங்கர் பக்கம்”னு ஆனந்த விகடனில் வந்து கொண்டிருந்தது. அவருடைய கதை போல் கவிதை சொல்லும் பாங்குக்கு நாம அடிமை. ஒவ்வொரு கவிதையிலும் காதல் ரசம் சொட்டும். 


ஆனந்த விகடனை வாங்கி வரும் வழியிலேயே அதை படிப்பதற்கான சண்டையும் ஆரம்பித்து விடும். வகுப்புக்கு போய் சேரும் போது, ஆ. விகடனின் கொஞ்சம் என் கையில், கொஞ்சம் பாப்’பின் கையில், இன்னும் கொஞ்சம் ரோட்டு கூட்டுரவனிடம் திட்டு வாங்கிக் கொண்டும் இருக்கும். இவ்வளவு பெரிய போராட்டத்துக்கு பின்னர்தான் படிக்க கிடைக்கும்.

தபூ சங்கரின் கவிதைகளை  படிச்சுட்டு நாமளும் யாரையாலும் காதலிச்சா நல்லாயிருக்குமே’னு டிஸ்கஸ் பண்ணியிருக்கிறோம். நல்ல வேளை அது டிஸ்கஸாகவே முடிந்து விட்டதால், எந்தப் பெண்ணின் வாழ்க்கையும் பாதிக்கப் படவில்லை.

சரி நாமளும் தபூ சங்கர் போல் எழுதலாமே’னு எழுதிய கவிதைகள் என் பழைய டைரிகளில் இருக்கும். அது இப்பொது ஊரில் இருப்பதால் அதை எழுத முடியவில்லை, எனவே யாரும் பீதி அடைய வேண்டியதில்லை. ஆனால், அடுத்த வாட்டி விடுமுறைக்கு போகும் போது வச்சுக்குறேன் கச்சேரி. என் கிட்ட இருந்து யாரும் தப்ப முடியாது.


ஒரு நாள் பாப் ரூமுக்கு போயிருக்கும் போது, நம்ம காமராசு ஆ.விகடனில் தபூ சங்கர் பக்கத்தை வலதும் இடதுமாக மேலும் கீழுமாக புரட்டி புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆஹா!!! இவன் தபூ சங்கர் கவிதைகளுக்கு பரம ரசிகனா இருப்பான் போலிருக்கு.. ஆனாலும் இப்படி புரட்டி புரட்டியா பாக்குரது?? அப்படி’னு நம்மளுக்கெல்லாம் ஒரே யோசனை.

மச்சான்.. என்னடா ரொம்ப டெரர்ரா பாக்குர. என்னாச்சு??
இல்ல மச்சான்… ஆ.விகடன்’ல ஒரு பெரிய தவறு விட்டிருக்கான்யா… யார் கண்ணுக்குமே அது தெரியல பாத்தியா???

அடங்கொக்காமக்கா… காமராசா??? கொக்கா??? (மைண்ட் வாய்ஸ்)

இங்க பாத்தியா?? தபூ சங்கர் பக்கம்’னு போட்டிருக்கு… ஆனால், இங்கு சங்கர்’னு யாரையும் பற்றி எழுதியில்ல.. தபூ’னும் யாரையும் பற்றி எழுதியில்ல.. சினிமா கிசு கிசு தலைப்பை போட்டு விட்டு சம்பந்தமே இல்லாம ஒரு காதல் கவிதை எழுதி வச்சிருக்கு… எப்படி இவ்வளவு பெரிய பிழையை ஆனந்த விகடன் பண்ணலாம்????

 “கிர்ர்கிர்ர்ர்கிர்ர்ர்ர்ர்…………..” (நம்ம எல்லோருக்கும் ஒரே சமயத்துல)

இதைக் கேட்டதுக்கு பின்னாலயும் காமராசு’வை நாம கலாய்க்காம இருக்குறதுக்கு நாம ஒன்னும் நல்ல பசங்க கிடையாதே….!!

Saturday 24 December 2011

புலிகளும் சிங்கங்களும் மோதிக் கொள்ள நாம் ஏன் அகதியானோம்???


இலங்கை வட மாகாண முஸ்லீம்கள் புலிகளால் இனச்சுத்தீகரிப்பு செய்யப்பட்டு 21 வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கை முஸ்லீம் சம்மேளனமும் யாழ் முஸ்லீம் வலைத்தளமும் வைத்த கவிதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற எம் கவிதை.

 மூச்சுத்திணரும் விளக்குகள்

வருடங்கள் ஆயிரம் கடந்து போனாலும் 
நாம் வடித்த கண்ணீர்த்துளிகள் மட்டும்
கறைகளாய் படிந்து கிடக்கின்றன ....................
கடந்து வந்த மணற் சுவடுகள்....   
அழிந்து போனாலும் ......
ஆராது எம் மனச்சுவடுகள் .......

கூலாங்கட்களை பொரிக்கித்திரிந்த பிஞ்சுக்கைகளில்
உயிர் பிரிந்த தாயின் உடல் ..
பள்ளி வாசல் பாங்கொளி கேட்ட மண்ணில்
எங்கும் மரண வலிச்சத்தம் ...

வர்ணங்கள் பூசி அழகு பார்த்த வீட்டுச்சுவர்கள்
 எங்கும் இரத்தக்கறைகள் ....
அருவிகளின் ஓசையும் குருவிகளின் பாசையும்
கேட்ட காதுகள் எங்கும் வெடிச்சத்தங்களும்,மரண ஓலங்களும்
எம் வாழ்க்கையை பிய்த்தெறிந்து விட்டது .

பொத்திப்பொத்தி பாதுகாத்த சொத்துக்களை
விட்டு விட்டு உயிருக்காய் ஓடும் மக்கள் கூட்டம்.......
பிஞ்சுக் குழந்தைகளும் ,கர்ப்பிணித் தாய் மார்களும்
 கதறிய படி ஓடும் அந்த நினைவுகள்
கசக்கி பிழிகின்றது என் இதயத்தை.

முற்றத்து ஒற்றை பனை மரமும்
சாலை ஓர கொன்றை மரங்களும் .....
தளிர் விட்டல மனமின்றி காய்ந்து
சறுகாய் போனது.

அநாதரவாய் முகாம்களில் தள்ளப்பட்ட நாம்
விடியலின் பாதையை நோக்கி வாசலோரம் காத்திரிக்கிரோம் ....
ஆறாத வடுக்களாய் நெஞ்சைப் புண்பட வைத்த அந்த மரணயாத்திரை  
 நினைக்கையில் சுக்கு நூறாகும் என் இதயம்.

யுத்த போராட்டம் முடிந்து பலவருடமான போதிலும் .....
நம் வாழ்க்கை போராட்டம் மட்டும் தலை விரித்தாடுகின்றது .
அன்று தற்காலிகமாய் அமைக்கப்பட்ட கூடாரங்களே .....
இன்றும் எம் நிரந்தர வீடுகள் .

எம் வீட்டு அடுப்பு எரிகிறதோ இல்லையோ ...
அடிக்கும் வெயிலில் எரிகிறது எம் வீட்டு ஓலை கூரை
குடிநீர் இன்றி நாவரண்டு போனாலும் கொட்டும் மழை இரவில்
கரைகின்றது எம் வீட்டு மண் சுவர்கள் .

மூச்சுத்திணறும் விளக்கும் ,
ஓலை ஈர்க்குகளுக்கு இடையில்
 தெரியும் நிலவொளியும் தான் எம் வீட்டு மின்குமிழ்கள்.

முகாம்களின் முகடுகளை அன்னார்ந்து பார்த்த படி
         '' தொலைத்த நம் வாழ்க்கை என்றுதான் கிடைக்குமோ ? "
என்ற பெருமூச்சுடன் .......
                                                                         "இவள்".
 
டிஸ்கி: இவன் கவிதையெல்லாம் எழுதுவானா?’னு யோசிக்கிரவங்களுக்கு ஒரு முக்கிய விடயம் “இது நான் எழுதிய கவிதையல்ல.. என் மனைவி எழுதியது, அனுப்பியது என் பெயரில், பரிசை பெற்றது என் தம்பி.


பரிசு பெறும் என் தம்பி


Sunday 18 December 2011

அவனா நீயு!!! உண்மைக் கதை



எங்க ஊருல காலேஜ் போய்கிட்டு இருந்த நான் எங்கம்மா ஊர் காலேஜ்’ல போய் சேர்ந்த புதுசு. அங்க உள்ள ஆளுங்களையும் சரியா பழக்கம் இல்ல. நண்பர்கள்’னு சொல்லிக்கிரதுக்கும் யாரும் இல்ல. அது ஒரு இக்கட்டான கால கட்டம். அதுல நடந்த ஒரு கருப்பு சம்பவம்.

ஒரு நள் காலேஜுக்கு போய் கொண்டிருக்கிறேன். காலேஜ் முன்னாடி பசங்க ஒரு வயோதிபரை கிண்டலும் கேலியும் பண்ணிகிட்டு இருக்கானுங்க.. கிராமத்துல இருந்து நகரத்துக்கு போற ஹீரோவுக்கு அநியாயத்தை கண்டால் நரம்பு புடைக்கிரதும், முகம் சிவக்குரதும், கோவம் தலைக்கேறுரதும் இயற்கைதானே.. ஆனாலும் எனக்கு அப்படி நடக்கல.. ஹி..ஹி.. எதையாவது பண்ணிட்டு காலேஜ் ஆரம்பத்துலயே அசிங்கப் படனுமா’னு ச்சும்மா இருந்துட்டேன்.

ஆனாலும் இந்த எரிமைலைக்குள்ள இருந்து ஒரு குளிர் நீர் ஊற்று வெளியாகிடுச்சு.. யாரும் தப்பா நினைக்காதீங்க.. எனக்கு அந்த வயோதிகர பாத்து ரொம்ப பாவமாயிசுச்சு’னு சொல்ல வர்ரேன். நானும் பக்கத்துல போயி ரொம்ப பாவமா பாக்க, அவருக்கும் எனக்குள்ள உள்ள அன்பு, கருணை Etc....  வெளங்கி இருக்கும்’னு நினைக்கிறேன். அவரும் நம்ம தோலில் கையைப் போட்டுக் கொண்டு “பாருங்க தம்பி.. எல்லா பசங்களும் என்னைக் கேலி பண்ணுராங்கப்பா’னு சொல்ல என் கல் மனசும் கரைஞ்சு போயிடுச்சுப்பா.... கரைஞ்சு போயிடுச்சுப்பா!


அந்த நேரம் பார்த்து நம்மள யாரோ கூப்புடுர சத்தம். யார்’னு பார்த்தா, நம்ம நண்பன் க்ரேஸி. அப்போ க்ரேஸி நம்மளோட அவ்ளோ பழக்கம் கிடையாது. Fresh Friend.

டேய்!! அவன் கூட என்னய்யா பண்ரே!!!

இல்ல மச்சான். எல்லானும் அந்த ஆள கேலி பண்ரானுங்க.. பார்த்தா பாவமா இருக்குப்பா...

அடச்சே!!!! அவன் யாருனு தெரியுமா?? அவன் எங்க ஊரு பைத்தியம்’டா...

பார்த்தா அப்படி தெரியலயே!!!

பாத்தா தெரியுரதுக்கு பைத்தியங்களுக்கு கவர்மெண்ட் யுனிபார்ம்’ஆ குடுத்திருக்கு??? இல்ல, எங்கயாவது பைத்தியம் தன்னை பைத்தியம்’னு சொல்லி இருக்கா???

ஆமால்ல..

இன்னொரு மேட்டர் தெரியுமா??? அவனுக்கு பசங்க’ன்னா ரொம்ப புடிக்கும்...

அவ்வ்வ்வ்... அவனா இவன்????
மச்சான்!! இப்போ நடந்தத காலேஜ்’ல யாரும் பாக்கலையே!!!!

போடா...டேய்!! பக்கத்துல காலேஜ்’ல படிக்கிரவன் கூட பாதி பேரு பாத்துட்டு போய்டாண்டா....

ஆஆஆஆ.......................!!!!!

இந்த சம்பவத்தால நான் பட்ட அசிங்கமும் அவமானமும் வருடக் கணக்காக என்னை ரவுண்டு கட்டி தாக்கியது.

Thursday 8 December 2011

சிறந்த கம்ப்யூட்டரை தேர்வு செய்வது எப்படி??



நாம் வாழ்வில் படிக்கும் பாடங்களில் மிகச் சிறந்த, என்றும் மறக்காத பாடமென்றால் அது ”அனுபவம்”தான். அதனால நான் ஒரு சிறந்த கம்ப்யூட்டரை எப்படி தேர்வு செய்ரது’ங்குரதையும் என் அனுபவ வடிவமாகவே சொல்கிறேன்.

காலேஜ்’ல படிக்குர வயசுல எங்க கேங்’லயே நான், பாப், காமராசு, டட்சன், புள்ளி ராஜா, க்ரேஸி எல்லாருமே கம்ப்யூட்ட’ல புலிகள். புலிக்கு கம்ப்யூட்டர் எப்படி சுத்தமா தெரியாதோ,அது போலவே நம்மளுக்கும் கம்யூட்டர் சுத்தமா தெரியாது. ஆனால், நம்ம பக்கத்து வீட்டு பையன் ”மலை” கம்ப்யூட்டர் விசயத்தில் நம்ம எல்லோருக்கும் நேர் எதிர்.

எந்தவொரு திருட்டு விசிடி கெடச்சாலும் அந்த சிடி’ல எத்தனை குண்டும் குழியுமா இருந்தாலும், எழுத்து ஓடுர சீன்’ல இருந்து க்ளைமேக்ஸ் சீன் வர அந்தப்  படத்தை ஓட்டுரதுல நம்ம மலைக்கு நிகர் ஊர் உலகத்துலயே யாரும் இல்ல. அதுக்காக சிடிக்கு பவுடர் போடுரது. வெள்ளாவியுல வெளுக்குரது, ஷாம்ப்பூ போட்டு கழுவுரது’னு ஏகப்பட்ட வித்தைகளை தெரிந்த ஒரே ஆளு நம்ம மலை.

நம்ம ஏரியால யாரு கம்ப்யூட்டர் வாங்குரதா இருந்தாலும், நம்ம மலையை கன்சல்ட் பண்ணாம போனதா சரித்திரமே கிடையாது. நாமளும் இவன் கூட வெறும் மொக்கை போட்டுகிட்டெ திரியுரமே, நாமளும் ஏதாவது படிக்கனும்’னு யோசித்த நானும்  அடுத்த முறை யாருக்காவது கம்ப்யூட்டர் வாங்க போகும் போது, நம்மளையும் கூட்டி போகுமாறு மலை கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் எடுத்து வச்சிருந்தோம்.

கொஞ்ச நாள்’ல மலையோட உறவுக்கார பையன் கம்ப்யூட்டர் வாங்கனும்’னு மலையை தேடி வர, நாம வாங்க சிறந்த கம்ப்யூட்டரா’னு சோதிக்க தேவையான சில பொருட்களை எடுத்து பைக்குள் வைத்துக் கொள்ள, நானும் அவர்களுடன் சேர்ந்து கண்டி நகரத்துக்கு போயாச்சு. இதன் பிறகு வருவதெல்லாம் மலைக்கும், உறவுக்கார பையனுக்கும் நடந்த உறையாடல். நான் வெறுமனே பராக்கு பார்த்தது மட்டுமே!!


அண்ணே!!! அந்தக் கடையுல வாங்கலாமானே!!!!!

தம்பி!! அங்க வேணாம்ப்பா. இந்த கடைல வாங்கலாம். இங்கதான் சூப்பர் Wall Papers போட்டு குடுப்பானுங்க..

ஐ!! ஜாலி’ண்ணே... எங்க வீட்டு சுவர்'ல அழகா ஒட்டி வைக்கலாம்.

டேய்!! அதுல சுவர்ல ஒட்டுர Wall Papers இல்லடா.. Photo..Picture..

???????????

கடைக்குல நுளைஞ்சாச்சு.....

அண்ணே!! அந்த CPU'வ வாங்கலாமா???

டேய்!! அது ரொம்ப சின்னதா இருக்குடா??  பெருசா இருந்தாதானே, உங்க வீட்டுல கம்ப்யூட்டர் இருக்குறது 4 பேருக்கு தெரியும். பக்கத்துல இருக்குற பெரிய CPU'வை எடுப்பா.....

ஆஹா!!! அருமையான ஐடியாண்ணே!!!!
அண்ணே!!!  அந்த Mouse’ஐ வாங்கலாமா!!!

டேய்!! தம்பி!! நல்லா பாரு... அந்த Mouse’ல வெறும் சிவப்பு கலரு லைட்டுதான் இருக்கு.. இந்தப் பக்கம் உள்ள Mouse’ஐ பார்த்தியா??? சிவப்பு, நீலம், பச்சை’னு மூனு கலருல பல்பு இருக்கு. உன் கம்ப்ப்யூட்டரே ச்சும்மா கல கல கல’’னு கல்யாண வீடு போல இருக்கும்ப்பா....

சரிண்ணே!! இப்போ கம்ப்யூட்டர எடுத்துட்டு போகலாமா???

தம்பி!! நீ பச்ச மண்ணுப்பா....இதுக்கு பிறகுதான் ரொம்ப முக்கியமான இரண்டு டெஸ்ட் இருக்கு. அது OK’ன்னா கம்ப்யூட்ட்ர எடுக்கலாம்.

ஆஹா!! இதுதான் முக்கியமான கட்டம். நாமளும் நல்லா நோட் பண்ணிக்கனும்’னு அவதானிக்க ஆரம்பிக்க, மலை கம்ப்யூட்டரை செக் பண்ணவென தன் பையில் இருந்து இரண்டு சி.டி களை எடுத்தான்.  அதுல ஒன்னு வீடியோ சி.டி அடுத்தது ஓடியோ சி.டி.


முதலில் வீடியோ சிடியை போட்டு, Window Media Player’ஐ இயக்கிப் பார்த்து விட்டு, அடுத்து ஓடியோ  சி.டி யை போட்டு Window Media Player’ஐ இயக்கிப் பார்த்து விட்டு, தம்பி கம்ப்யூட்டர் சூப்பரா இருக்கு. இதை தைரியமாக வாங்கலாம்’னு திருவாய் மலர்ந்தார்.

நானும் ஆச்சரியம் தாங்க முடியாம,

என்ன தம்பி, அவ்ளோ சீக்கிரமா வாங்கிட்டீங்க...

அண்ணே!! படம் நல்லா ஓடுது, பாட்டும் நல்லா கேக்குது.. கம்ப்யூட்டர்’ல வேற என்னதான் சோதிக்க வேண்டி இருக்கு.. நீங்க இன்னும் வளரனும்ணே!!!!!


எனக்கு நம்ம மலையுடைய திறமையையும், சமயோசித அறிவையும் பார்த்து ரொம்ப பெருமையா இருந்தது. ஆனாலும் அந்தக் கடைல இருந்தவனுங்க ஒரு கேவலமான சிரிப்புடன் இருந்தானுங்க.. அது ஏன்’னு புரிய எனக்கு ரொம்ப காலம் ஆகவில்லை.












Sunday 4 December 2011

வெள்ளை மாளிகை விருந்துபசாரத்தில் நான்..




வெள்ளை மாளிகையை சுற்றிப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தாலே அனேகமானோர் முண்டியடிப்பர். வெள்ளை மாளிகையில் ஒரு விருந்துக்கு அழைத்தால் யார்தான் முடியாது என்பார்கள். எனக்கும் நண்பர்களுக்கும் சுமார் 7 வருடங்களுக்கு முன் அதற்கொரு சந்தர்ப்பம் கிடைத்தது. விடுவோமா நாங்க.... (நீ நாறின சோத்தையே ஓ.சி.ல கிடைச்சா விட மாட்டியே!!!)

நமது நண்பன், நல்லவன், வல்லவன் நம்ம கேங்’லயே பல சாகங்கள் புரிந்த நம்ம க்ரேஸியோட பிறந்த நாள். விட்ருவோமா???? ஒரு மாத்தத்துக்கு முன்னாடியே ட்ரீட் குடுடா’னு நச்சரித்ததுல, பைசா பைசா’னு பாக்காம நான், பாப், நம்ம ரெண்டு பேருக்கும் கண்டி நகரத்துல உள்ள பிரபல்யமான ஹோட்டலான White House’ல(வெள்ளை மாளிகை) விருந்து குடுக்குரதா சொல்லி காலம், நேரத்தையும் சொல்லிட்டான்.

White House Resturant'இன் வெளிப்புறத் தோற்றம்
குடுக்குர விருந்துல நல்லா சப்பிடாட்டி நண்பன் மனசு வலிக்குமுள்ள.. அதனால 2,3 நாளு பட்டினி இருந்து கொலைப் பசியோட உள்ள புகுந்தா, பாப் ஒரு மணித்தியாலம் கழிச்சு வர்ரான். நமக்கு பயங்கர கடுப்பு. வந்து சும்மா இருந்தாலும் பரவால,
”மச்சான்!! நான் லேட்டா வந்தாலும் எப்பவுமே பன்ச்சுவாலிட்டி மிஸ் பண்ணினது இல்லாடா’னு சொன்னான் பாருங்க ஒரு பன்ச் டயலாக்.... கர்ர்ர்கககக்கர்ர்ர்ர்ர்.....

சாப்பாடு வரும் வரை ஏதாவது செய்யனுமே!!! நாமளும் ச்சும்மா பேசிட்டு இருக்கும் போது, நாமளும் நம்ம கெத்’ஐ காண்பிக்கனுமே’னு....
க்ரேஸியை பார்த்து....

நான்: மச்சான்!! என்னடா பார்டிய இவ்ளோ சின்னதா குடுக்குரே!!!

பாப்: டேய்!! பரதேசி... அதைப் பற்றி நீ பேசாத..... நீ உன் பிறந்த நாளுக்கு 5/= சாக்லெட்தானே குடுத்தே!!!

க்ரேஸி:  உனக்கு அதையாவது குடுத்தான். என் கிட்ட அதுலயும் பாதிய புடுங்கி சாப்பாடான்யா இவன்..

ஆஹா!!! ஆரம்பத்துலயே அசிங்கப் பட்டுடியேடா !!! அந்த சம்பவத்தை இன்னும் மறக்காம இருப்பானுங்க’னு தெரிஞ்சிருந்தா கம்முனு இருந்திருக்கலாமே!!! - மைண்ட் வாய்ஸ்


அப்புறம் சாப்பாடு வந்து விட.. அதுக்கப்புறம் அசிங்கம், அவமானம் பத்தியெல்லாம் யாரு கவலைப் படுரது... செம கட்டு கட்டியாச்சு... பில் வந்ததும், நமக்கு ரொம்ப மென்மையான மனதுங்குரதால பில்லை பார்த்து நான் அதிர்ச்சியடைய விரும்பல. நம்ம க்ரேஸியே பில்லை செட்டில் பண்ணிட்டான். ஆனால்....

அதற்கு பிறகு அவன் செய்த வேலையை எனக்கும், பாப்’க்கும் தாங்க முடியல... ஆமாங்க, பயபுள்ள வெய்ட்டருக்கு 120/= டிப்ஸ் வச்சிட்டான்..

மச்சீ!! இவ்ளோ டிப்ஸ் எதுக்குடா????

டேய்!! இது பெரிய இடம். மத்த இடங்கள் போல 5, 10/= வைக்க முடியாது.

எனக்கு ரொம்ப ஃபீலிங் ஆயிடுச்சு. அதே ஃபீலிங்’கோடு கொஞ்ச தூரம் வந்து நாம சாப்பிட்ட மேசையை பார்க்கிறேன். வச்ச டிப்ஸ்’ல வெறும் 20/=தான் இருக்கு.. ஆஹா!!! அதுக்குள்ள என்னடா ஆச்சு’னு ஒரே குழப்பமா இருக்க ,  மெதுவாக என்னை சுரண்டிய பாப்,
“மச்சான்.. க்ரேஸி இந்தப்பக்கம் வந்ததுமே நான் 100/= சுட்டுட்டேன். வெளில வா.. 50+50 எடுத்துக்கலாம்’னு சொல்ல காதுல தேன் வந்து பாய்ந்தது’னு சொல்லவா வேணும்.

பார்டியும் குடுத்து பாக்கட் மணியும் குடுத்த நீ நண்பண்டா!!!!!!!





Saturday 3 December 2011

என்னைப் போல் ஒருவன்

இந்த மாதத்திற்கான பிட் புகைப்பட போட்டியின் தலைப்பு...... அதை எப்படி சொல்ரது’னு தெரியலயே..... அதாவது..... ஒரே போல் உள்ள இரண்டு பொருட்கள்.
நானும் வழமை போல பழைய அல்பங்களை புரட்டி, சில போட்டோக்களை போட்டிருக்கிறேன். போட்டோக்கள் வழமையை விட மோசமாகவே உள்ளது. இருப்பதில் எது உங்கள் தெரிவோ அதை கமெண்ட்டாக இடவும்.

1. Rolex Tower, Dubai

2. Sheik Zayed Masjid, Abu dhabi

3. Masjidul Haram - Makka, Saudi Arabia

4. Al-Kazim Towers, Dubai

5. Damas Tower, Dubai

6. Burj Khaleefa’க்கு பக்கத்துல உள்ள கட்டடம். பேரு தெரியல...

7. Masjidul Haram - Makka, Saudi Arabia

8. Al-Kazim Towers, Dubai

9. பேரு தெரியல..

10. Masjidul Haram - Makka, Saudi Arabia

11. நம்ம ஊரு...

12. Sheik Zayed Masjid, Abu Dhabi

13. Masjidul Haram - Makka, Saudi Arabia (பிறையுடன் சேர்த்து எடுத்தது. போட்டோ தெளிவாக வரவில்லை :-(  )