Saturday 26 November 2011

பனை மரத்துல வௌவாலா?? Face Book'க்குக்கே சவாலா???




ஒரு வாரத்துக்கு முன்னால நம்ம கம்பனி’ல இருந்த ரெண்டு பாகிஸ்தானிங்க, ரெண்டு Lap Top வாங்கிட்டு வந்துட்டானுங்க. ஷப்பா... முடியல.. எந்த பக்கம் திரும்பினாலும் அவனுங்கதான் Lap Top சகிதமாமுன்னாடி நிக்கிறானுங்க.

ச்சும்மா நின்னாலும் பரவாயில்ல. U Tube'ல உள்ள மொத்த வீடியோவையும் டவுன்லோட் பண்ணி இருப்பானுங்க’னு நினைக்கிறேன். எந்த Software இலவசமா கிடைக்குதோ, அதெல்லாம், இவனுங்க Lap Top’ல கட்டாயம் இடம் பிடித்திருக்கும். அந்த Software அவசியமா இல்லையா என்பதெல்லாம் யோசிக்கிரதே இல்ல.

ஒரு, சில நாட்களுக்கு முன்னாடி, நம்ம டேமேஜர் கூப்பிட்டு, ஒரு பாகிஸ்தானியை காட்டி, இவன் Lap Top’ல Password மறந்துடானாம். நானும் கடந்த 2 மணித்தியாலமா எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன். முடியல. நீயாவது முயற்சி பண்ணிப் பாரே’னு வழமை போல தன்னால முடியாத காரியத்தை நம்ம மேல போட்டுட்டு போயிட்டாரு.

எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு காண அதன் ஆரம்பத்திலிருந்தே பார்க்க வேண்டும்’னு நம்ம Physics ஆசிரியர் சொல்லி இருக்காரு (நான் Physics படிச்சிருக்கேன்-விளம்பரம்). எனவே நானும் ஆரம்பத்துல இருந்தே ஆரம்பிக்கலாம்’னு “அண்ணே!!! உண்மைய சொல்லுங்க!! தண்ணி அடிச்சிருக்கீங்களா’னு கேக்க, என் அறிவையும், தூர நோக்கையும் பார்த்து அசந்து போய்ட்டான்’னா பாத்துகங்களே!!!! (விட்ரா விட்ரா... விஞ்ஞானிங்க வாழ்க்கைல இதெல்லாம் சகஞம்- மைண்ட் வாய்ஸ்)

அண்ணே!! உங்க Password என்னதுண்ணே!!’னு கேட்க அவனும் *****’னு ஒரு Password’ஐ சொல்ல, இவன் எப்படியும் தண்ணிய போட்டுடு குப்புறப் படுத்துட்டு எதையாவது மாற்றி  மாற்றி எழுதியிருப்பான்’ன ஒரு ஓவர் கன்ஃபிடன்ஸ்’ல எப்படியெல்லாம் அந்த Password’ஐ மாற்றி அடிக்கலாமோ அப்படியெல்லாம் முயற்சி பண்ணியாச்சு. கிட்டத்தட்ட, நூறு Password எழுதியிருப்பேன். ஆனாலும் திறக்கவே மாட்டேங்குது.

இதுக்கு மேலயும் முடியாது, Format பண்ணிடலாம்’னு முடிவு பண்ணி, Windows 7 CD’ய போட்டு ஒரு மணித்தியாலம்  முயற்சி பண்ணியும் Boot ஆக மாட்டேங்குது. ரொம்ப பேஜார் ஆகிடுச்சு.... அண்ணே!!!!! நல்லா யோசிச்சு பாருங்க... எங்கேயோ தப்பு நடக்குது’னு அவனை குலுக்க, அப்போத்தான் சொன்னான்,

தம்பி..... நான் Language'ஐ Arabic'ஆக மாற்றி வச்சிருக்கேன். அது ஒன்னும் பிரச்சனை இல்லைதானே!!!!!


அட நன்னாரிப் பயலே!!! ... இதை ஏண்டா இவ்வளவு நேரமும் சொல்லல்ல.. அவனுக்கு புரியாத தமிழில் அவனை திட்டி விட்டு (புரிஞ்சா நம்மள கும்மிருவானோ’னு ஒரு பயம்) Language’ஐ English'ஆக மாற்றி விட்டு Password’ஐ குடுக்க, திறந்தது ஜன்னல் (Windows).

ஷப்பா.. பிரச்சனை முடிஞ்சது’னு பார்த்தா, அடுத்த பாகிஸ்தானி வர்ரான்.


தம்பி!!! எனக்கு Face book'ஐ Download பண்ணி குடுப்பா.......

என்னது???? Face book'ஐ Download பண்ணி குடுக்கவா????

ஆமா.. தம்பி... நானும் Face book’ல ஒரு Account திறக்கனும். நீங்க Download பண்ணிகுடுத்துட்டீங்கனா, மத்த வேலையெல்லாம் நான் பாத்துக்குறேன்.

ஆஹா...வந்துட்டான்ய்யா...வந்துட்டான்ய்யா... - மைண்ட் வாய்ஸ்

அண்ணே!! அது Software இல்லண்ணே!!! Website...

ஆமா... அந்த Website’ஐ Download பண்ணி குடுத்துடுங்க....

ச்சே!!! எல்லானுமே கேனயனா இருக்கானுங்களா??? இல்ல, எல்லோர் கண்ணுக்கும் நாம கேனயனா தெரியுரமா’னு தெரியலயே!!! - மைண்ட் வாய்ஸ்

சொன்னா புரிஞ்சுக்கங்க அண்ணே!!! Face book'ஐ Download பண்ணி குடுக்க முடியாது’னா முடியாது.

தம்பி!! உங்களுக்கு நான் எவ்ளோ உதவி பண்ணி இருக்கேன்.

டேய்!!! டெய்!!! நீ எப்படா எனக்கு உதவி பண்ணினே!!

இல்ல.. ஒரு பேச்சுக்கு சொன்னேன் தம்பி... இதுக்கு பிறகு தேவைப்பட்டா.......

அடப்பாவி, தன் சொந்த தேவைக்காக, இறந்த காலத்தையும், எதிர் காலத்தையும் முடிச்சு போடுரியேடா!!!! ஆமா... உனக்கு எத்தனை வயசாகுது??

27 வயசாகுது...

நான் 27 வயசுக்காரனுக்கெல்லாம் Face book'ஐ Download பண்ணி குடுக்குரதில்ல.. மரியாதையோட இடத்தை காலி பண்ணிடு....

ஒரு மாதிரியா முறைச்சிட்டே போனான். அடுத்த ஆப்பை எப்போ தரப்போறானோ!!!!






Saturday 19 November 2011

ஐ நோ ஒன்லி பிரிட்டிஷ் இங்லிஷ்



இது 2 நாளைக்கு முன்னாடி நடந்த சம்பவம்,
நல்லா தூங்கிகிட்டு இருக்கேன். (ரெண்டு நாளைக்கு முன்னாடி மட்டும்மா தூங்கினே??? எப்பவுமே அதுதானே பண்றே!!!) நம்ம கூட வேலை பாக்குர (நீ எங்கடா வேலை பார்த்தே??) சூடான் நாட்டு நண்பர் வந்து... தம்பி இங்க கொஞ்சம் வாயே!! அவசரமான ஒரு விசயம்’னு சொல்லி என்னை எழுப்ப, ஆஹா...ஆப்ரிக்கன்’னா ஆபிரிக்கன்’தான்யா... நைட்டுல கூட வேலை பாக்குரான்யா’னு எனக்கு ரொம்ப ஆச்சரியமாயிடுச்சு. நானும் தூக்க கலக்கத்துடனேயே என்ன மேட்டரா இருக்குமோ’னு (ஏதாவது கெடக்குமோ’னு)  ஓடினேன்.

அங்க போயி பார்த்தா, பய புள்ள ஒரு ஃபிகரோட Chat பண்ணிகிட்டு இருக்கான். (பிகரோட இல்லாம, அந்த அர்த்த ராத்திரில அம்மா, அப்பாவோடயா Chat பண்ணிட்டு இருக்க போரான்???)

அண்ணே!! என்ன எதுக்கு’ன்னே கூப்பிட்டீங்க????

தம்பி.. என் Girl Friend ஒரு message பண்ணியிருக்கா.. ஆனால் எனக்கு சரியா புரியல. நீதான் எனக்கு அதை வாசிச்சு வெளக்கமா, வெவரமா சொல்லனும்???
உனக்கு இங்கிலீசு தெரியுமுள்ள..... (வசமா மாட்னியா????)

என்ன அண்ணே.. இப்படி கேட்டுடீங்க.. (உன்ன பார்த்தவுடனேயே உன் இங்கிலிபீசு எப்படி இருக்கும்’னு புரிஞ்சிருக்கும்) நான் இங்கிலீசுல ......MBA... MA.. MBBAS அது வந்து...  அத விடுங்க..எனக்கு நல்லா இங்கிலீசு தெரியும்னே!! பிரிச்சு மேஞ்சிடலாம். (இங்கிலீசு என்ன புல்லு கட்டா??? பிரிச்சு மேடுரதுக்கு...)


அப்புறம்தான் அவன் Girl Friend என்ன எழுதி இருக்கானு பார்த்தேன்..
அய்ய்யோ!!! ச்ச்சே.... ரொம்ப பச்ச பச்சையா (இதுக்கு பச்சை கலர்’னு அர்த்தம் இல்ல...) எழுதி தள்ளி இருக்கா...

தம்பி.. வாசிச்சாச்சா.... இப்ப எனக்கு வெளக்கமா, வெவரமா சொல்லுங்க.....

ஆஹா... இத எப்படிடா  நான் வெளக்கமா சொல்றது... டேய்!!! வசமா மாட்டிகிட்டியேடா.... - மைண்ட் வொய்ஸ்..

நான் பேந்த பேந்த முழிக்கிறத பார்த்துவிட்டு,
தம்பி. உங்களுக்கு இங்க்லீசு தெரியுமா?? தெரியாதா?? ( A,B,C,D எழுதியிருந்தா கூட நீ அப்டிதானே முழிச்சிருப்பே!!!)

தெரியும்ணே..... ஆனால்....... ஹி...ஹி.....

இப்படி நெளிந்து கொண்டிருக்கும் போதே பயபுள்ள ஒரு பிட்;ஐ போட்டான்...

தம்பி.. என் Girl Friend அமெரிக்காவை சேர்ந்தவ தெரியுமா????

ஆஹா.... நல்ல மேட்டர் சிக்கியிருக்கு... இத வச்சே டெவலப் பண்ணிக்கடா’ - - மைண்ட் வொய்ஸ்..

ஹி..ஹி.. அண்ணே...  இது அமெரிக்கன் இங்லீசு. ஐ நோ ஒன்லி பிரிட்டிஷ் இங்லீசு.

ஓஹ்!!! ச்சே!! நம்ம ஆபீஸ்’ல யாருக்கு தம்பி அமெரிக்கன் இங்லீசு தெரியும்???

டேய்!! என் தூக்கத்தை கெடுத்தாய்’ல இருடீ வைக்கிறேன் ஆப்பு... - மைண்ட் வொய்ஸ்..

நம்ம டேமேஜர் கிட்ட காட்டிப் பாருங்கண்ணே!!! சூப்பரா விளக்கம் குடுப்பாரு...

தம்பி, உங்களுக்கு பிரிட்டிஷ் இங்லீசுக்கும் அமெரிக்கன் இங்லீசுக்கும் என்ன வித்தியாசம்’னு தெரியுமா??

அதுவா... எனக்கு புரிஞ்சா அது பிரிட்டிஷ் இங்லீசு. புரியலனா அது அமெரிக்கன் இங்லீசு. அவ்ளோதான் மேட்டர்.

ஆஹா!! சூப்பர். அப்போ, உங்களால வாசிக்கவே முடியலைனா??? (அதுக்கு பேருதான் இங்க்லீசு,...)

அது பிரெஞ்சு’ண்ணே!!!

ஆஹா!! நீங்க ஒரு வாழும் மேதை. தம்பி.. நீங்க எங்கயோ போய்ட்டீங்க.... (அவ்ளோ சீக்கிரமா எங்க போனே!!!!)

நீங்க என்ன ரொம்ப புகழ்றீங்கண்ணே!!!!

எனக்கு தன்னடக்கம் ரொம்ப ஜாஸ்தி என்பதால், அவர் என்னை புகழ்ந்த மற்ற வசனங்களை நான் இங்கு குறிப்பிடவில்லை...அவ்வ்வ்வ்)

டிஸ்கி: இதயத்தில் குறைபாடு உள்ளவர்களுக்கு கடைசி வரிகளை நம்புவது கஷ்டமாக இருக்கும்’னு கஸகிஸ்தானை சேர்ந்த ஒரு கசாயக் கடை டாக்டர் என்னிடம் சொன்னார். உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என சோதித்துக் கொள்ளுங்கள்.





கருப்பு இரவு - ஆக்‌ஷன்+த்ரில்லர்+உண்மைக் கதை


அன்று ஒரு நாள் நைட்டு 10.00 மணி... இன்னும் வெறும் 30 நிமிட அவகாசம்  மட்டுமே இருந்தது மணி 10.30 ஆவதற்கு... அந்த நேரம் பார்த்து கரண்டு கட் ஆயிடுச்சு.  அபீஸ்ல இருந்து (ஆஹா...10 மணிவரை வேலை செய்ரானே’னு நெனச்சா அதுக்கு நான் பொறுப்பில்ல.. பகல் நேரத்துலயே நாம வேலை செய்யுரதில்ல.. நைட்டுல... அய்யோ....அய்யோ...).தட்டு தடுமாறி போயி ரூம்’ல வேலையெல்லாம் முடிச்சுட்டு கட்டில்ல சாய்ந்து உட்கார்ந்தேன்.

கொஞ்ச நேரத்துல வெளியுல ஒரே சத்தம். என்னடா’னு பார்த்தா, எவனோ கள்ளன் புகுந்துட்டானாம். சரி நாமளும் வெளிய போயி பாக்கலாம்’னு வெளில வந்தா ஒரே இருட்டு. அந்த நேரம்தான் அந்த கொடூர அசம்பாவிதம் நடந்தது.

இருட்டுல தடமாறிட்டு இருக்கேன், எதோ ஒரு உருவம் என்னை நோக்கி வேகமாக வந்து என் ஆட்காட்டி விரலை கடித்துபிடித்து விட்டது. கடின்னா செம கடி.. நானும் எவ்ளோ முடியுமோ அவ்ளோ கத்தினேன், கதறினேன். விடவே இல்ல.

அப்போத்தான் மனசுல பட்டது, அந்த  நேபாளி பயபுள்ளயாத்தான் இருக்கும்னு.. டேய்!! ராஜேஸ் கைய விட்ரா’னு கத்திகிட்டே என்னால முடிந்த மட்டும் பலமாக 7,8 உதை குடுத்தேன். என் உதை தாங்க முடியாம அவனும் விரல விட்டுட்டான். ”நாங்கெல்லாம் மிகப் பெரிய ரவுடியாச்சே... எங்க கிட்டயேவா....” அப்டின்னு எனக்குள்ள ஒரே சந்தோசம்.

அப்புறம்தான் பாக்குறேன், கட்டில்ல இருந்துகிட்டு இருக்கேன். ஆஹா!!! கட்டில்ல இருந்த மாதிரியே தூங்கிட்டேனா???  நான் கண்டது கனவா??? அப்போ இவ்ளோ நேரம் நான் உதைத்தது?? அவ்வ்வ்வ்.... கட்டில்ல உள்ள இரும்பு கம்பிக்கா???? காலெல்லாம் ஒரே வலி. விரல கடிச்சது????? அடப்பாவமே.. விரல் என் வாய்க்குல இருக்கு.... அப்போ என் விரலை கடி கடி’னு கடிச்சதும் நானேதானா???  என்ன கொடும இது??????


புது புது ட்ரெண்டுல வந்து பல்பு தாரானுங்கப்பா.... இவனுங்க கிட்ட இருந்து தப்பிக்க வழியே இல்லயா?????


Sunday 13 November 2011

கோ - இது அடுத்த நெக்ஸ்டு



மூன்று நாளைக்கு முன்னாடி, Site’ல ஒரு போட்டோ எடுக்கனும். போட்டோ எடுக்க வேண்டிய இடம் ஒரு சந்துக்குல இருக்குரதால எப்படி எடுக்கலாம்’னு தடுமாறிக்கிட்டு இருக்கேன்,

தம்பி எதாவது உதவி வேணுமா? அப்டீன்னு உள்ளே இருந்து ஒரு குரல்...

அந்த சந்துல எவன்யா சிந்து பாடுரான்’னு பார்த்தா அன்று ஹாஸ்பிட்டல்ல என் பொறுமைய சோதிச்ச (ஆபிரிக்காவும் எயிட்சும்) அதே நேபாளி.

அடப்பாவி நீயா???? நான் ஆணியே புடுங்கல..’னு எஸ்கேப் ஆகலாம்’னு பார்த்தா விட்டானில்ல...

தம்பி.. கைல கேமரா இருக்கு... போட்டோ எடுக்கனுமா... நான் எடுத்துக் குடுக்குரேன்.. குடுங்க தம்பி...

வேணாம்’னே... நான் கொஞ்ச நேரம் கழிச்சு வர்ரேன்..

ச்சும்மா குடுங்க தம்பி.. இது என்ன பெரிய வேலையா???

அண்ணே!! உங்களுக்கு போட்டோ எடுக்கத் தெரியுமா’ண்ணே????

தம்பீ......!!!!!!!!
என்ன தம்பி இப்படி கேட்டுட்டீங்க... நான் இங்க்லீசுலதான் வீக். இதையெல்லம் சரியா செய்வேன். என்னைப் பார்த்து இப்படி கேட்டுட்டீங்களே’னு ரொம்ப ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டான்.

சரி.. போட்டோ எடுத்துக் குடுங்க அண்ணே!!’னு கேமராவ குடுத்துட்டேன்.
எனக்கும் ஏண்டா இப்படி கேட்டோம்’னு ஆயிடுச்சு... ஒரு வயசுல மூத்த ஆளிடம் இப்படி கேட்டிருக்கக் கூடாது’னு என்னையே நான் திட்டிக் கொண்டிருந்தேன். 

போட்டோ எடுத்துவிட்டு, கேமராவை குடுத்ததும், நானும் குற்ற உணர்வுடனே வந்து ஆபீஸில் போட்டோவை பார்த்தால்........
குற்ற உணர்ச்சியெல்லாம் மறந்து மறுபடி கொலை வெறியாகிடுச்சு.....
அந்த போட்டோ இதுதாங்க..............





............................................






............................................







பயபுள்ள கேமராவ அடுத்த பக்கம் திருப்பி எடுத்திருக்கான்.  இனி இவன் சகவாசமே கூடாது’னு முடிவெடுத்து இருந்தேன். ஆனால் மறுபடியும் அவன் விளையாட்டைக் காட்டிவிட்டான். அந்த கொடூர, குரூர சம்பவம் அடுத்த பதிவில்....  கட்டாயம் இழகிய மனமோருக்கு கிடையாது..




Saturday 12 November 2011

வெளிநாட்டு வாழ்க்கை


வேலை செய்யப் பிடிக்கவில்லை
உடன் வேலை செய்பவர்களையும் பிடிக்கவில்லை
தங்குமிடமும் பிடிக்கவில்லை
உடன் தங்குபவர்களையும் பிடிக்கவில்லை
பிரயாணம் செய்யவும் பிடிக்கவில்லை
உடன் பிரயாணம் செய்பவர்களையும் பிடிக்கவில்லை
சாப்பாடும் பிடிக்கவில்லை
சமைக்கவும் பிடிக்கவில்லை
காலநிலையும் பிடிக்கவில்லை
இங்குள்ள அரசியலும் பிடிக்கவிலலை
ஆட்சி செய்வோரையும் பிடிக்கவில்லை
இந்த நாட்டையே பிடிக்கவில்லை
இத்தனையும் பிடிக்காவிட்டாலும்
வருடக் கணக்காக 
இங்கே குப்பை கொட்டுகிறேன்
காரணம்
திர்ஹம்களை
ரொம்பப் பிடித்திருக்கிறது

Sunday 6 November 2011

பெருநாள் - கொண்டாட்டமும் திண்டாட்டமும்

அனைவருக்கும் இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்


நம்ம ஊர்கள் பொதுவாக பள்ளி வாயிலுக்கு கட்டுப் பட்டவையாகவே இருக்கும். நான் படித்த ஊர்ல, ஊரிற்கு பாதுகாப்பாக பள்ளிவாயிலால் சில இளைஞர்கள் இருப்பார்கள் . நாம செல்லமா “பள்ளி போலீஸ்”னு அவங்கள கூப்பிடுவோம்.

ஒரு பெருநாள் தினத்தில், சில ச்சின்ன பசங்க ஒரு வீட்டுல தண்ணியடிக்கிறானுங்க’னு ஒரு செய்தி வர, அவர்களை பிடிக்க பள்ளி போலீஸ் விரைந்தது.

நம்ம கூட O/L (Ordinary level)வரைக்கும் படித்தவன் நம்ம நண்பன் ”பப்பாளி”. அவனுக்கு எப்படியோ இந்த செய்தி கேள்விப்பட, அவன் நம்ம நண்பன் க்ரேஸி’யின் காதில் இந்த விசயத்தை போட, “எப்பவுமே நாமதாமே அடி வாங்குறோம். இன்னைக்கு வேறு ஒருத்தன் அடி வாங்றத பாக்கலாம்;னு 2 பேரும் ஆட்டோ பிடித்துக் கொண்டு சம்பவ இடத்தை அடைந்தனர்.

ஏதோ ஒரு கருப்பாடு, பள்ளி போலீஸ் வரும் விசயத்தை அந்தப் பசங்களுக்கு சொல்லிவிட, அவனுங்க எஸ்கேப் ஆகவும், நம்ம க்ரேஸி போய் அந்த இடத்தில் இறங்கவும், பள்ளி போலீஸ் வந்து சேரவும் நேரம் சரியாக இருந்தது.

நம்ம ஆளுங்கட லுக்’கே ஒரு மாதிரியா இருக்கும். பெருநாள் தினம்’ங்குரதால காலை சாப்பாடே செம கட்டு கட்டியிருந்ததால, பாக்குறவனுக்கு மப்புல இருக்குர மாதிரியே இருக்க, அப்படியே இரண்டு பேரையும் தூக்கிப் போட்டு ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து கும்மு கும்மு’னு கும்ம...விஷயம் கேள்விப்பட்டு க்ரேஸியோட அப்பா வந்து காப்பாற்றும் போது, சேதாரம் ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு..

நம்மளுக்கு அடி வாங்குரது புதுசல்ல.... ஆனால், ஆட்டோ புடிச்சு போய் அடி வாங்குரது புது அனுபவம்’னு நீங்க நினைச்சீங்கன்னா அந்த நினைப்ப அடியோட அழிச்சிருங்க..ஏன்னா,..... இதுக்கு முன்னாடியும் ஆட்டோ புடிச்சுடு போயி அடி வாங்கி இருக்கோம். அது வேற பதிவுல வரும்.


[க்ரேஸி என்பது குறிப்பிட்ட நபரை குறிப்பது அல்ல. நம்ம கேங்’ல  (Gang) யாராவது ஒருவராக இருக்கும். சில வேளை அது நானாக கூட இருக்கலாம்.]

அனைவருக்கும் இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்