Tuesday 30 August 2011

ஈத் நல்வாழ்த்துக்களும் சுய சொரிதலும்...


 அனைத்து இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு இனிய ஈத் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல் வருமா? (அப்போ நரகத்துக்கு போய் பாரு...) என்பார்கள். வெளியூரில் இருந்து கொண்டு ஈத் பெருநாள் கொண்டாடும்???? இன்று நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. வெளியிடத்தில் ஈத் பெருநாள் கொண்டாடுவது??? இது மூன்றாவது முறை. முன்பு நன்பர்களுடன் இருந்ததால் தனிமை அவ்வளவாக புரியவில்லை (அந்த நன்பர்கள் ரொம்ப பாவம்..) . ஆனால் இந்த முறை வேலை விடயமாக குவைட் எல்லை பகுதிக்கு வந்து தனியாக மாட்டிக் கொண்டதில் ஊர் போக முடியவில்லை.

ஒவ்வொரு முறையும் பெருநாள் தினம் கொஞ்சம் நீளமாக இருந்தால் நல்லா இருக்குமே`னு நினைக்கும்.(அதுக்கு காலையிலேயே எழுந்திருக்கனும் ) இந்த முறை மட்டும் அவசரமாக முடிந்து மறந்து போய் விடக்கூடாதா?னு  நினைக்கும் அளவு கொடுமையாக இருக்கிறது. (விடு..விடு ..ஊர்க்காரனாவது நிம்மதியா இருப்பானே!!!)



புத்தாடையில் குதூகளிக்கும் ஊர் மக்கள்,(எந்த வீட்டுக் கொடில எந்த dressஅ சுடலாம்`னு அன்றுதானே ப்ளான் பண்ணுவே!!) அனைவரினதும் புன்முறுவல் பூத்த முகங்கள், (ஊரே உன்ன பாத்து சிரிக்கும்`ங்குரத எப்படி சொல்ரான் பாரு..) எல்லோரிடமும் நட்பு பாராட்டி சுகம் விசாரித்தல்,(நீ கடன் வாங்கினத மறந்துட்டாங்களோ???)  வருடக் கணக்கில் காண முடியாத முகங்களை காணக்கிடைத்தல், (மற்றைய நாட்களில் அவங்க முகமில்லாத முண்டங்களா`னு கேக்க கூடாது..) சொந்தங்களின் வருகை, நன்பர்களின் வருகை, (நீ இருக்குரது தெரிஞ்சும் வர்ராங்களா??? ) நம்மை நீங்கிச் சென்றவர்களின் கப்ருஸ்தான் சென்று நினைவு கூறுதல், (இறந்து போனவங்கள கூட நிம்மதியா இருக்க விட மாட்டியா????) பெருநாள் அன்பளிப்பு கேட்டு துரத்தும் உறவுக்காக குழந்தைகள் (நீதான் இது வர 5 பைசா குடுத்தது இல்லையே.. இன்னுமா துரத்துதுங்க..????) போன்ற நிறைய விடயங்களை இந்த வருடம் இழந்து விட்டேன்.

சொந்தங்களை இழந்து வெளினாட்டில் வசிப்பவர்களுக்கு இந்தப் பதிவு??? சமர்ப்பணம். (ஏற்கனவே கவலையிலுள்ளவர்களுக்கு இப்படி ஒரு சோதனையா??)


Saturday 20 August 2011

இஃப்தார் விருந்தில் வந்த இடியாப்ப சிக்கல்




காலேஜ் போற காலத்துல ரமழான் மாதத்துல எப்பவுமே வீட்டுக்கு கிளம்பிடுவோம்.ஆனால் ஒரு முறை ரமழான் மாதம் முடிய பரீட்சை வந்துடுச்சு. எனவே அந்தத் தடவை ரமழானில் காலேஜ் போற ஊர்லயே தங்க வேண்டி ஆயிடுச்சு.

நம்ம வகுப்புல “டட்ஸன்”ஐ தவிர எல்லோருமே வெளியூர் பசங்க. 100 கிலோ மீட்டருக்கு அப்பால இருந்து வந்தவனையே மடக்கி ஓ.சி சோறு சாப்பிட்டவங்க நாங்க (ரண் களத்திலும் ஒரு கிளு கிளுப்பு), எங்க கிட்ட “டட்சன்” மட்டும் தப்பிச்சிடலாமா???

இஃப்தார் பார்டி வைடா`னு கெஞ்சி, கால்ல விழாத குறையாக குடுத்த டார்ச்சர் தாங்க முடியாம, குறிப்பிட்ட ஒரு நாளில் “வந்து தொலைங்கடா”னு ஒரு பார்டி வச்சான்.

நம்ம பயலுகளுக்கு வாய திறந்தா வங்காள விரிகுடாவே இருக்கும்`னு தெரிந்தோ என்னவோ, விருந்து தட புடலாக ஏற்பாடு செய்திருந்தார்கள். நம்ம பயலுக சாப்பிட ஆரம்பிச்சா, ஏரியா`ல நாய். பூனை நக்கி சாப்பிடரதுக்கு கூட எதுவும் மிஞ்சுரதில்ல.. இங்க மட்டும் விதிட்விலக்காவா நடக்க போகுது??? விருந்து ஆரம்பமாகி கொஞ்ச நேரத்துல,  மோப்பம் பிடித்து, அள்ளி, கடித்து, பிசைந்து, மென்று, அமுக்கி, அடித்து, பிடித்து தின்று முடித்ததுல விரிப்பில் இருந்த மொத்த உணவும் சுனாமி வந்து போனது போல காலியாகி இருந்தது.  ஆனால்............................


ஆனால்........................... ஒரே ஒரு ஜூஸ் கிளாஸ் மாத்திரம் யார் கையும் படாமல் இருந்தது. நம்ம எல்லோர் மனசுலயும் “சோறா சொரணையா”னு ஒரே தடமாற்றம்.  எல்லார் கண்களும் கண்ணால் அந்த கிளாஸ்`ஐயே மொய்த்துக் கொண்டிருக்க, பொறுமையிழந்த நம்ம காமராசு “சொரணை எவனுக்குடா முக்கியம்” நினைத்த வாறு கிளாஸ்;ஐ எடுத்து பருக ஆரம்பித்து, நம்ம வயிற்றெரிச்சலை கிளப்பினான்.. ராஸ்கல்..

அந்த நேரத்தில் யாரும் எதிர் பார்க்காத ஒரு அதிர்ச்சி சம்பவம்.... கொஞ்சம் பருகிய காமராசு, கிளாஸை க்ரேஸியிடம் கொடுத்துவிட்டான். 3 மணித்தியாலமா சப்பிய Bubble Gumஐ கூட துப்ப மனசு வராத பய, இப்படி ஒரு காரியம் பண்ணியது பயங்கர அதிர்ச்சி. ஜூஸ் கிளாஸை மலர்ந்த முகத்துடன் வாங்கிய க்ரேஸி பருக ஆரம்பித்தான். இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.......

இரண்டு மிடரு மட்டுமே பருகிய கிரேஸி கிளாஸை என்னிடம் நீட்டி, “மச்சீ நீ குடிடா”ங்குறான். உலகத்துல எது வேணும்னாலும் தப்பிக்கலாம்.. ஆனால் இவன் கைல மாட்டின உண்ணுறது, பருகுறது எதுவுமே தப்பிச்சதே சரித்திரமே இல்ல. உனக்கு விருப்பமான சாப்பாடு எது?னு கேட்டா ”ஹலால் (இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்ட) எல்லாமே” அப்பிடிம்பான். அப்பிடிபட்டவன் கையால கெடச்சா எப்படியிருக்கும்?? இப்படியெல்லாம் யோசிச்சாலும், திடீர்னு மனசு மாறி, குடுத்ததை பறித்துடுவானோ`னு பயந்ததால ஃப்லாஷ்பேக்`அ ஒரு ஓரமா வச்சிடு ஜூஸ் குடிக்க தயாரானேன்.

ஜூஸ்`ஐ வாய்ல வச்சதும் அப்படியே ஷாக் ஆயிட்டேன். அப்பொழுதுதான் புரிந்தது, இவனுங்க குடுத்ததுல அன்பு இல்ல... ஆப்பு`னு.......

என்ன நடந்ததுன்னா.......அந்த ஜூஸ் டட்ஸனுடைய சக்கரை வியாதியுள்ள தாத்தாவுக்காக சக்கரையே போடாமல் தயாரிக்கப்பட்டது. அவரே அதை குடிக்க முடியாமல் அப்படியே வைத்துவிட்டு போயிருக்காரு. நாம ஆப்பை தேடிப் போய் உட்கார்ந்துவிட்டோம்.

மெதுவா, ஜூஸ்ஸை இருந்த இடத்திலேயே வைத்து விட்டு எஸ்கேப் ஆகலாம்`னு பார்த்தா, டட்ஸனின் அப்பா அதை பார்த்துட்டாரு....

ஏன் தம்பி ஜூஸை குடிக்காம வைக்குறீங்க... வெக்கப் படாம குடிங்க...
(ஹி..ஹி... வெக்கப்பட்டு வைக்கல.. வேதனைப்பட்டு வைக்கிறேன்..)

இல்ல.. பரவல்லங்க.... ஹி...ஹி....

இந்த வயசுல நல்லா சாப்பிடனும்..குடிக்கனும். வெக்கப்படாம அதை குடிங்க...
(இந்த ஜூஸ் இந்த வயசுல குடிக்கிரதில்லங்க... )

வேறு எவன் கைலயாவது குடுத்துடு எஸ்கேப் ஆகிடலாம்`னு பார்த்தா, அந்த கேப்`ல காமராசுவும், க்ரேஸியும் அடுத்த எல்லாரையும் உஷார் பண்ணிடானுங்க.... 
வேற வழி........

அவ்வ்வ்வ்வ்...............................


நீதி:
நம்ம கதைகளில் ஸ்டார்டிங் நல்லாத்தான் இருக்கும், ஆனால்      ஃபினிஷிங்;ல சந்தி சிரிச்சிடும்...









Friday 12 August 2011

கிரீஸ் கள்ளன் - Sri lankan Super Hero


இன்றைய தினத்துல இலங்கைல ”புன்னகையே வாழ்க்கை” ப்லாக் ஓனருக்கு அடுத்த படியாக ஒரு பிரபல்யமான பெற்ற, எல்லா பத்திரிகைகளிலும் பெயர் அடி படக்கூடிய, எல்லோரும் தேடக்கூடிய ஒரு நபர் இருப்பாரு`னு சொன்னா, அது மஹிந்த ராஜபக்சயோ அல்லது குமார் சங்கக்காரவோ  கிடையாது. இந்த எல்லா புகலும் “கிரீஸ் கள்ளனையே” சேரும்.சிங்களவர்கள் மத்தியில் கிரீஸ் பேய் என அறிமுகம் ஆகியுள்ளது.

ஒவ்வொருத்தரும் பீதியில் வெடவெடத்துக் கொண்டிருக்க, நமக்கும் பயத்துக்கும் ரொம்ப தூரம்`குறதால, நமக்கு திருடன் பிடிக்க போன அனுபவமும் இருப்பதால (இரும்புக் கோட்டை கோழித் திருடன்), நாமும் கிரீஸ் கள்ளன் பற்றிய நம்ம அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம்னு....... (வெளி நாட்ல போய் குந்தினதும் எப்படிய்யா உங்களுக்கு இவ்ளோ தில் வருது??)



கிரீஸ் கள்ளன் பற்றிய கதைகள் இலங்கையில் ஒரு புதிய விடயமல்ல. கிரீஸ்`னு ஒரு Item இருக்கு, அது கருப்பா(பாவித்தது), வழுவழுப்பா இருக்கும்`னு தெரிஞ்ச காலத்துல இருந்து இது போன்ற கதைகளும் இருந்து வருகின்றன.

சுமார் 6 வருடத்துக்கு முன்னாடி கிரீஸ் கள்ளன் பீக் (Peak)'ல இருந்த சமயம், நானும் க்ரேஸியும் வீட்டு முன்னாடி இருந்து பேசிட்டு இருக்கோம்.(எவன் வீட்டுல ஆட்டைய போடலாம்னா???)  தூரத்துல நம்ம நன்பன் டோலா வருவது தெரிந்தது. இவன் ”இன்று வெள்ளிக் கிழமை”னா கூட கலண்டர கண்ணால பாத்து கன்பார்ம் பண்ணாம நாம நம்புரது கிடையாது. அவ்ளோ பெரிய அண்டப் புழுகன். பாடசாலை வளாகத்தில் சுற்றிய ஏகப்பட்ட கட்டுக் கதைகளுக்கு இவனும், க்ரேஸியும்தான் ஏக போக உரிமையாளர்கள்.

செவ்வனே`னு வந்தவன் நம்மள பார்த்ததும் உஷாராகி

”மச்சி...  மேட்டர் தெரியுமா????.. நம்ம ஏரியால ஒரு கிரீஸ் கள்ளனை புடிச்சிருக்கோம்ல... கருப்புனா அப்படி ஒரு கருப்புடா.... ”


”டேய்!! புழுகாத.. உண்மைய சொல்லு”


இதுக்கு பின்னாடி ஒரு கத சொன்னாங்க... ஷப்பா... முடியல....


”நான் எதுக்குடா புழுகனும்.. சும்மா இல்லடா... அடிச்சா கூட வலிக்குதே இல்லடா.. (உனக்கு எப்படிய்யா வலிக்கும்????.அவனுக்குள்ள வலிக்கும்)பப்பர் பந்து மாதிரி Bump ஆகுராண்டா”னு விட்டான் பாருங்க ஒரு பீலா......

நாம மேலும் கீழுமா, கேவலமா ஒரு லுக்கு விட, அவன் பாச்சா நம்ம கிட்ட பலிக்காது`னு புரிஞ்சுடுச்சு.. பிறகு,

”சரிடா மச்சி, சும்மாத்தான் சொன்னேன். அதுக்காக நீங்களும் ச்சும்மா இருக்காம நாலு பேரு கிட்ட போயி சொல்லுங்கடா.... அப்போதானே கதை காட்டுத்தீ போல பரவும்”

அடப்பாவிகளா!!!! இப்படி எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்கடா????

ஓட்டமாவடியில் பிடிக்கப் பட்ட கிரீஸ் கள்ளன் (அடின்னா அடி உஙக் வீட்டு எங்க வீட்டு அடி இல்ல...)


இது போல்தான் சின்ன சின்ன விடயங்களும் மக்கள் வாய் பேச்சு மூலமாகவே பெரிதாக்கப் படுகின்றது. அதில் பாதி கட்டுக் கதைகளாகவே இருக்கும். இன்னும் சிலர் இந்தக் கட்டுக் கதைகளை, மக்களின் பீதியை சாதகமாக பாவித்து கொள்ளையடிக்க  கிளம்பி விடுவர்.

இந்த கிரீஸ் கள்ளன் பெயரை பாவித்து தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வோரும், பகைகளை தீர்த்துக் கொள்வோருமே அதிகமாக இருப்பர்.

கண்டியில் பிடிக்கப்பட்ட கிரீஸ் கள்ளன்
இலங்கையின் பொலிஸ் மா அதிபர் வழங்கிய பேட்டியில், ஒரு பெண் கிரீஸ் பேயால் கழுத்து மிதிக்கப் பட்டதாக போலீஸில் புகார் குடுக்க, தீர விசாரித்ததில் தன் கனவனே குடித்து விட்டு கழுத்தை மிதித்ததாகவும், வெளியே சொல்ல முடியாததால் கிரீஸ் பேய் மிதித்தாக புகார் குடுத்தாகவும் வாக்களித்து இருக்கிறார்.

இன்னொரு இடத்தில், பிடிக்கப் பட்ட கிரீஸ் கள்ளனை பார்த்தால், அவன் பக்கத்து வீட்டுக் காரனாக  இருந்திருக்கிறான். வீட்டை விட்டு விரட்ட, இன்னும் பல தேவைகளுக்காகவும் கிரீஸ் பேய்கள், கள்வர்கள் உருவாகிறார்கள்.



இதே போல் சில கையில் வினோதமான கூரிய ஆயுதத்துடன் வருவதாகவும், பெண்களையே தாக்குவதாகவும் செய்திகள் பரவுகின்றன. இதைக் கேட்டு சாதாரண திருடன் கூட, கூரிய ஆயுதங்களை பாவித்து கிரீஸ் கள்ளன் வேடத்திலே திருட இதை சந்தர்ப்பமாக பயன்படுத்தலாம்.

மலையத்தில் சில இடங்களில் கொலைகளும் நடந்திருக்கின்றன என்பதும் மறைக்க முடியாத உண்மையே!! இப்போது அனேகமான ஊர்களில் முன்ஜாக்கிரதையாக இருப்பதால், கிரீஸ் கள்ளன் வேடமிட்டு வந்த அனேகமானோர் நையப் புடைக்கப் பட்டுள்ளனர். சில இடங்களில் மாட்டியவர்களை போட்டு கும்மியதில் On the spot ஆள் Out.

இது போக, FaceBook`லயும் நிறைய கிரீஸ் கள்ளன்கள் உருவாகி காமெடி பண்ண்ட்டு இருக்கானுங்க..

கடைசியா நான் என்ன சொல்ல வர்ரேன்னா, உங்களுக்கும் யார் மீதாலும் கோவம், கடுப்பு இருந்தா, பக்கத்து வீட்டு கொடில காயுர நல்ல ஷர்ட்`அ, ஜீன்ஸ்`அ ஆட்டைய போடனும்னு ஆச இருந்தா, உங்க போட்டோ உயிருடனோ, பிணமாகவோ, பத்திரிகைல வரனும்னு ஆச இருந்தா இந்த சந்தர்பத்தை நன்கு பயன் படுத்திக் கொள்ளுங்கள். இப்போதே பக்கத்திலுள்ள ஒரு மெக்கானிக் ஷாப்`கு போய் பழைய கிரீஸ் டப்பா`வ வாங்கி வந்து வேலைய ஆரம்பிங்க... (ஹி..ஹி... வெளி நாட்டுல இருக்கோம்`ல... அந்த தில்லு...)








Monday 8 August 2011

PIT புகைப்ப்ட போட்டி - August

இந்த மாத (August) PIT Photography  போட்டிக்கான தலைப்பு “சோகம்”. என்னிடமிருந்த போட்டோக்களில் ஒரு சிலதை தேடிப் பொறுக்கி எடுத்து அதில் ஒன்றை அனுப்ப முடிசெய்திருக்கிறேன். தெரிவு உங்கள் கையில்.....

உங்களுக்கு பிடித்த (தலைப்புக்கு பொறுத்தமான) போட்டோவை சொல்லவும்.

எல்லாமே நல்லா இருக்கு`னு சொல்லிராதீங்க... (அதுக்கெல்லாம் சான்சே கிடையாது ..Don't Worry)

சில வேளை தலைப்புக்கு பொருத்தமில்லாமல் இருக்கலாம். So, மன்னிச்சூ............


1. நம்ம ஊரு

2. ஆடு (பொது அறிவுக்காக..)

3. குளிர் காலத்தில் ஒரு நிர்வாண மரம்

4. டுபாய் கட்டுமானத் துறைத் தொழிளாளி

5. இலங்கையின் அம்பேவல பண்ணையில்..

6. இழையுதிர் காலம்.. - நுவரெலிய வீதியில்...

7. டுபாய் கட்டுமானத் துறைத் தொழிளாளி

8. டுபாய் கட்டுமானத் துறைத் தொழிளாளி

9. இலங்கையின் அம்பேவல பண்ணையில்..

10. இலங்கையின் அம்பேவல பண்ணையில்..

11. இலங்கையின் அம்பேவல பண்ணையில்..

12. இலங்கையின் அம்பேவல பண்ணையில்..

13. நம்ம ஊரு...

14. குளிர் காலத்தில் ஒரு நிர்வாண மரம்

15. டுபாய்`இல் கட்டுமானப் பணியில் காயத்திற்குள்ளான நிலையில் ஒரு சைனாக் காரர்

16. டுபாய் கட்டுமானத் துறைத் தொழிளாளி

17. டுபாய் கட்டுமானத் துறைத் தொழிளாளி

18. அடம்பிடிக்கும் சிறுவன்


Wednesday 3 August 2011

நிறுவப்பட்ட மென்பொறுளை மீண்டும் மென்பொருளாக (.exe) மாற்ற..

நாம் கம்ப்யூட்டரில் மென்பொருட்களை Install  செய்து விட்டு அதன் Setup.exe Fileஐ இடப் பற்றாக்குறையை எண்ணி அழித்து விடுவது வழக்கம். எப்பொழுதாவது, நண்பர்கள் கேட்கும் போதோ, நமக்கு தேவை ஏற்படும் போதோ அந்த மென் பொருளுக்காக அலைய வேண்டி இருக்கும். இது நம் ஒவ்வொருத்தரின் அனுபவத்திலும் கட்டாயம் நடந்திருக்கும். அந்த நேரங்களில் நாம் Install செய்த மென்பொருளையே Setup.exe Fileஆக (மென் பொருளாக) மாற்ற முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்று நினைப்பதுண்டு.

நாம் எதை Install செய்திருக்கிறோமோ, அதை Setup.exe Fileஆக மாற்ற ஒரு வழி உண்டு. அதற்காக பணம் செலவளிக்க தேவை இல்லை. உங்கள் எல்லா கம்ப்யூட்டரிலும் நாம் ஃபைல்களை சுருக்க, விரிக்க பயன்படுத்தும் WinRAR எனும் மென்பொருளாகும்.

WinRAR Software தரவிறக்க இங்கே கிளிக்குங்கள்.

இந்த மென்பொருளை கம்ப்யூட்டரில் பதிந்த பின் நமக்கு எந்த மென்பொருளை Setup.exe Fileஆக மாற்ற வேண்டுமோ அந்த பைல் மீது Right Click செய்து,  "Add to Archive"  என்பதை கிளிக்க வேண்டும்.

இங்கு என் கணணியில் பதிந்துள்ள NHM Writter"ஐ மீண்டும் மென்பொருளை மாற்றப் போகிறேன்.



 "Add to archive"ஐ கிளிக்கியதும் கீழுள்ளவாறு ஒரு Window திறக்கும்.


மேலுள்ள Window'இல் "general" Tabஇல் படத்தில் காட்டியுள்ளது போல் “Create SFX Archive" என்பதை தெரிவு செய்து "OK" ஐ தெரிவு செய்தால் உங்களுக்கு தேவையான மென்பொருள் நீங்கள் தெரிவு செய்த இடத்தில் உருவாக்கப் பட்டு விடும்.



படத்தில் உள்ளது போல “Advanced"என்பதை தெரிவு செய்து பாஸ்வேர்ட்’ம் குடுக்கும் வசதியும் இதில் உண்டு.
 

இந்தப் பதிவை படித்துவிட்டு நன்பர் ஞானசேகர் (புரியாத கிறுக்கல்கள்) சொன்ன கருத்து.

நானும் இரண்டு மென்பொருளை உபயோகித்து பார்த்தேன் நன்றாகவே இருக்கிறது ஆனால் இதில் ஒரு பிரச்சினை வரக்கூடும் அதாவது சில மென்பொருள்கள் நாம் பதிகிற இடத்திலேயே மொத்த பைல்களையும் வைப்பதில்லை சில காமன் பைல்களை விண்டோஸ் போல்டரில் வைத்து விடும் அந்த மாதிரியான மென்பொருளாக இருக்கும் பட்சத்தில் இந்த முறை பலனலிக்காது.மேலும் vb அடிப்படையான மென்பொருள்கள் நிச்சியம் இந்த பிரச்சினையை சந்திக்கும் .

--
வாழ்க வளமுடன்


என்றும் அன்புடன்
ஞானசேகர்




வலைத்தளம் : http://gsr-gentle.blogspot.com

(மனிதர்களை உயர்ந்த மனிதர்களாக்குவது சோதனை நேரம்தான். வெற்றி நேரமல்ல)

நன்றி திரு. ஞானசேகர்.