Saturday 28 May 2011

எங்கேயும் பல்பு


நமக்கு பல்பு வாங்குறது ஒன்னும் புதுசுல்ல... (அதுதான் உலகத்துக்கே தெரியுமே)
ஆனால், சின்ன பசங்க கிட்ட பல்பு வாங்கினா 
எப்படி இருக்கும்????? (வாங்குரதே பல்பு!!! அதுல சின்னது என்ன பெருசு என்ன???) எப்பவுமே அடுத்தவன் காலை வாரி விடுரதுல உள்ள இன்பமே தனி (நல்ல கொள்கை) . ஆனால், சமயத்துல பூமராங் போல் நம்மளுக்கு திரும்பி வந்து போட்டு தாக்கிடுது.... (எப்பவுமே அப்படிதானே நடக்குது??)


பல்பு I
தம்பியிடம் முகத்தை கர்ண கொடூரமாக வைத்துக்கொண்டு...(இயற்கையிலேயே அப்படித்தானே!!!)
(அப்படி பண்ணினால்தான் கொஞ்சமாலும் பயப்படுராணுங்க...)
நான்: ஏன்யா? அந்த இடத்துக்கு போனே???

தம்பி: என் ப்ரண்டு போனான், அதுதான் நானும் போனேன்.

நான்: ஆமா....அவன் கிணற்றுல பாய்ந்தால் நீயும் பாய்வாயா???
(வார்த்டையாலேயே மடக்கிய இருமாப்புடன் ஒரு லுக்கு.....ஹி..ஹி...) 

தம்பி: அமா!!! பாய்வேன்....

நான்: டேய்!!! என்னடா சொல்றே!!!!!

தம்பி: ஆமா!!!!! ஃப்ரண்டை காப்பாற்ற நானும் பாய்வேன்.

நான்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........................................


பல்பு II

இன்னொரு சமயம் தம்பியிடம்...
நான்: யோவ்!!! மூனு கழுதை வயசாகுது..... இப்படியா வேலை செய்யுரது????

தம்பி: அப்போ ஒரு கழுதையோட வயசு நாலு வருசமா????
                (அப்போது தம்பிக்கு 12 வயசு)

நான்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........................................

ஹி..ஹி...நம்ம பதிவு படிச்சா அறிவு வளரும்.....


இரண்டு பல்பு வாங்கின சம்பவங்களை போட்டுடா, இதுக்கு மேல பல்பு வாங்கியே இல்ல’னு நம்பிருவோமா???’னு வரும் கொம்மண்ட்’கள் மக்கள் பார்வைக்கு (இதையெல்லாம் எவன் பாக்குறான்???) வருமுன் வாண்டட்’ஆக அழிக்கப்படும்...


Friday 20 May 2011

ஓடு ராஜா ஓடு...



ச்சின்ன வயசுல கண்ணாமூச்சு விளையாடிக் கொண்டிருந்த காலம், ஒரு நாள் அண்ணன் ஒருவர் “இன்று கிரிக்கட் விளையாடலாமா?’னு கேட்க சந்தோசம் தாங்க முடியல. அந்த வயசுல கிரிக்கட் விளைய்யாடுரதுன்னா,  நாம வளர்ந்துட்டோமுன்னு அர்த்தம்...

ஆனாலும் நாம ஆழம் அறியாம காலை விட மாட்டோமுள்ள.. முதலிலேயே இரண்டு Condition போட்டேன்.
1. நான் துடுப்பாடும் போது பந்தை மெதுவாக வீச வேண்டும்.
2. எனக்கு துடுப்பெடுத்தாட 3 சந்தர்ப்பம் தர வேண்டும் (மொத்தம்3 பந்து போடனும்’னு சொல்லு)

கேலவலமாக ஒரு லுக்கு விட்ட அண்ணன் (எல்லோருமே உன்ன அப்பிடிதானே பாக்குராங்க..) சரி’னு சொல்ல விளையாட போயாச்சு... கொஞ்ச நேரத்தில் நாம துடுப்பாடும் சந்த்ர்ப்பம்மும் வர, அண்ணே!! மெதுவா போடனும்’னு நம்ம Condition'ஐ இன்னொரு முறை ஞாபகப்படுத்திக் கொண்டு, களத்தில் இறங்க.....

முதல் பந்தே மெதுவாக வந்தாலும் அடிக்க முடியல.. “அண்ணே!!! இன்னும் மெதுவாக போடுங்க”னு சொல்ல, ”யோவ் இன்னும் மெதுவா வீசினா, பந்து பாதி வழியிலேயே நின்னுரும்யா”னு சொல்லி முடிந்ததள்வு மெதுவாக போட நானும் முழுப்பலத்தையும் சேர்த்து துடுப்பை சுழற்ற பக்கத்து தோட்டத்தில் உள்ள புதர் காட்டுக்குள் விழ, பந்தை எடுக்க அண்ணனும் மற்றவர்களும் ஓடினர்.



சற்று நேரத்தின் பின், பந்தை எடுத்துக் கொண்டு வந்தவர்களை பார்த்து,
“ச்சே... இன்னும் கொஞ்சம் lateஆயிருந்தா Half Century (50 ரன்கள்) போட்டிருப்பேன். Just Miss”னு சொல்ல, ”டேய்!!! என்னடா சொல்கிறாய்’னு அவர்களும் புரியாமல் கேட்க,
”ஆமா.... பந்து தொலைந்த நேரம் பார்த்து 46 ரன் ஓடிட்டோமுள்ள... இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தா 50 ஓடி இருக்கலாம்’னு கவலையுடன் சொல்ல, “யோவ் ஒரு 4 ரன்னுக்கு மேலே ஓட முடியாதுய்யா.... அப்படி ஓடினாலும் அதற்கு ஓட்டம் கிடையாது’னு விளக்கப் படுத்த, “அய்யய்யோ!!!! இவ்வளவு நேரம் ஓடினதுக்கு வெறும் 4 ஓட்டம்தானா????  42 ஓட்டம் வீணாப்போச்சே’னு தலைல கை வைக்க, ”என்னது 4 ஓட்டமா???? அந்த ஏரியாவுக்கு பந்து போனா ஓட்டமே கிடையாது’னு முதல்லயே சொன்னேன்ல’னு அண்ணன் சொல்லும் போதுதான் அந்த மேட்டரும் நினைவு வந்திச்சு...


டிஸ்கி: உடற் பயிற்சி உடம்புக்கு நல்லது. ஓட்டம் நல்லதொரு உடற் பயிற்சி.


Thursday 12 May 2011

பிட் புகைப் பட போட்டி - மே மாதம்

இந்த மாத பிட் (Pit Photography in Tamil) புகைப்பட போட்டியின் தலைப்பு “உடைகள்”. என்னிடமிருந்த ஒரு சில புகைப்படங்களில் சல்லடை போட்டு தேடி வடித்தெடுத்து உங்கள் தேர்வுக்கு விட்டுள்ளேன். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.

அனேகமானவை பொறுத்தமில்லாதவையாக கூட இருக்கலாம். அதற்காக கெட்ட வார்த்தையெல்லாம் பாவிக்க கூடாது. வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றோம்......


1. திருகோணமலை கடற்கரயில்.......

2. இராக் பஸ்ரா நகரத்தில்......

3. திருகோணமலை கடற்கரயில்.......


4. எந்தன் சொந்த ஊரில்...ஒரு விடு முறையில்...

5. இராக் பஸ்ரா நகரத்தில்......

5. Adams peak போய் திரும்புகையில்......

6. Adams peak போய் திரும்புகையில்...... Hatton - Nawalapitiya road

7. எந்தன் சொந்த ஊரில்...ஒரு விடு முறையில்...

8. இராக் பஸ்ரா நகரத்தில்......

9. எந்தன் சொந்த ஊரில்...ஒரு விடு முறையில்...

10. மக்கா நகரத்தில் ...... (Near to Jabalur Rahma)

11. எந்தன் சொந்த ஊரில்...ஒரு விடு முறையில்...
12. நுவரெலியா, அம்பேவலையில்......

Friday 6 May 2011

கண்டி நகரத்திலே சில நாட்கள்.....


நானும் நன்பர்களும் கண்டி நகரத்துல தங்கி படித்துக் கொண்டிருந்த காலம், அப்போ, பேச்சுலருக்கு தங்க வீடு கிடப்பதென்பது குதிரைக் கொம்பை விட அபூர்வமாய் இருக்க,   நாம் ரொம்ப அலைந்து திரிந்து ஏகப் பட்ட கெடு பிடிகளுக்கு மத்தியில் ஒரு வீட்டில்  தங்க இடம் கிடைத்தது.

ஒரு மாதம் இருந்திருப்போம், அவ்வேளைகர்ப்பமாக இருந்த நம்ம வீட்டு ஓனர் அம்மாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க, அவர்களின் சொந்த பந்தங்களெல்லாம் வந்து வாழ்த்து சொல்லிக் கொண்டிருந்தது.

இதை பார்த்த நம்ம நன்பன் க்ரேஸி, ”வாங்கடா!!! நாமளும் ஏதாச்சும் Gift வாங்கிட்டு போய், வாழ்த்து சொல்லி, நம்ம வீட்டு ஓனரிடம் நல்ல பேரு வாங்களாம். அப்போதான் கொஞ்ச நாளுக்கு நிம்மதியா இருக்கலாம்’னு சும்மா இருந்த எங்களையும் இழுத்துக் கொண்டு போக, அங்கே குழந்தையை சுற்றி உறவினர் கூட்டம்.



நாமளும் அசடு வழிய கூட்டத்துடன் போய் சேர, வீட்டு ஓனர், நம்மளையெல்லாம் சொந்த பந்தங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். வந்திருந்த ஒவ்வொருத்தரும் “குழந்தை அப்பா போலவே இருக்கு, அம்மா போலவே இருக்கு’னு சொல்லிக் கொண்டிருக்க, அங்கிருந்த வீட்டு ஓனரின் பையன் தன் பங்குக்கு ஏதாச்சும் சொல்லனுமே’னு  “அப்பா.. தம்பிப் பாப்பா, க்ரேஸி மாமாவை போலவே இருக்குள்ள’னு எல்லோர் முன்னாடியும் சொல்லி சனியனை தூக்கி நம்ம பனியனுக்குள்ள போட, வீட்டு ஓனர் அய்யா முகமும், க்ரேஸியின் போன போக்கை பார்க்கனுமே!!!!!! நாம, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு Escape.....

க்ரேஸியின் ஏழரை சனி நம்ம எல்லோருக்கும் சேர்த்து ஆப்பு வைக்க,  அன்றே தங்க வேறு அறை தேட வேண்டியாகிவிட்டது.

Monday 2 May 2011

Dubai Mall (டுபாய் மால்)


உலகிலுள்ள மிகப் பெரிய Shopping Mallகளில் இதுவும் ஒன்று. உலகின் அதி உயரமான கட்டிடமான Burj Khaleefaவிற்கு அடுத்ததாக அமைந்துள்ளது. டுபாய் வருவோர் தவற விட முடியாத ஒரு இடமாக விளங்குகிறது. அது அறிந்தே, தனி Metro ரயில் நிலையமும் தனி பஸ் சேவையும் உண்டு. கிட்டத்தட்ட 4000இற்கு மேற்பட்ட கடைகளும் இன்னும் பல கேளிக்கை, பொழுது போக்கு, விளையாட்டு மையங்களும் அடங்களாக ஒரு மினி உலகமே உள்ளே அடங்கும்.
உள்ளே அமைக்கப் பட்டுள்ள ஒரு செயற்கை நீர் வீழ்ச்ச்சி


1. Dubai Aquariam & Under Water Zoo
இதை ஒரு தனிப் பதிவாக இட நினைக்கிறேன்.

2. Dubai Ice Rink
இதில் பழக்கமுள்ளோர் விளையாடும் போது ஆச்சரியமாகவும் அழகாகவும் இருக்கும். ஆனால் பழக்கமில்லாமல் போய் வழுக்கி விழுபவர்களை பார்ப்பதே ஒரு தனி சுகம்.

3. KidZania

4. Reel Cinemas

5. At the Top Burj Khaleefa
Burj Khaleefa மேல் மாடிக்கு செல்ல டிக்கட் எடுக்குமிடம். இன்று எடுத்தால் அடுத்த வாரம்தான் போகலாம்.

6. Sega Republic

7. The Dubai Fountain
இதை பற்றி முன்னைய பதிவில் இட்டிருக்கிறேன். அதை படிக்க இங்கே கிளிக்கவும்

8. Gold Souk

இன்னும் பல ஆச்சரியங்கள் இதனுள்ளே!!!
புகைப்படங்கள் அனைத்தும் என்னால் "கிளிக்"கப்பட்டவை


உள்ளே அமைக்கப் பட்டுள்ள ஒரு செயற்கை நீர் வீழ்ச்ச்சி




முற்பகுதியில் உள்ள அழகிய நீர்தடாகம்

முற்பகுதியில் உள்ள அழகிய நீர்தடாகம்