Saturday 24 December 2011

புலிகளும் சிங்கங்களும் மோதிக் கொள்ள நாம் ஏன் அகதியானோம்???


இலங்கை வட மாகாண முஸ்லீம்கள் புலிகளால் இனச்சுத்தீகரிப்பு செய்யப்பட்டு 21 வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கை முஸ்லீம் சம்மேளனமும் யாழ் முஸ்லீம் வலைத்தளமும் வைத்த கவிதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற எம் கவிதை.

 மூச்சுத்திணரும் விளக்குகள்

வருடங்கள் ஆயிரம் கடந்து போனாலும் 
நாம் வடித்த கண்ணீர்த்துளிகள் மட்டும்
கறைகளாய் படிந்து கிடக்கின்றன ....................
கடந்து வந்த மணற் சுவடுகள்....   
அழிந்து போனாலும் ......
ஆராது எம் மனச்சுவடுகள் .......

கூலாங்கட்களை பொரிக்கித்திரிந்த பிஞ்சுக்கைகளில்
உயிர் பிரிந்த தாயின் உடல் ..
பள்ளி வாசல் பாங்கொளி கேட்ட மண்ணில்
எங்கும் மரண வலிச்சத்தம் ...

வர்ணங்கள் பூசி அழகு பார்த்த வீட்டுச்சுவர்கள்
 எங்கும் இரத்தக்கறைகள் ....
அருவிகளின் ஓசையும் குருவிகளின் பாசையும்
கேட்ட காதுகள் எங்கும் வெடிச்சத்தங்களும்,மரண ஓலங்களும்
எம் வாழ்க்கையை பிய்த்தெறிந்து விட்டது .

பொத்திப்பொத்தி பாதுகாத்த சொத்துக்களை
விட்டு விட்டு உயிருக்காய் ஓடும் மக்கள் கூட்டம்.......
பிஞ்சுக் குழந்தைகளும் ,கர்ப்பிணித் தாய் மார்களும்
 கதறிய படி ஓடும் அந்த நினைவுகள்
கசக்கி பிழிகின்றது என் இதயத்தை.

முற்றத்து ஒற்றை பனை மரமும்
சாலை ஓர கொன்றை மரங்களும் .....
தளிர் விட்டல மனமின்றி காய்ந்து
சறுகாய் போனது.

அநாதரவாய் முகாம்களில் தள்ளப்பட்ட நாம்
விடியலின் பாதையை நோக்கி வாசலோரம் காத்திரிக்கிரோம் ....
ஆறாத வடுக்களாய் நெஞ்சைப் புண்பட வைத்த அந்த மரணயாத்திரை  
 நினைக்கையில் சுக்கு நூறாகும் என் இதயம்.

யுத்த போராட்டம் முடிந்து பலவருடமான போதிலும் .....
நம் வாழ்க்கை போராட்டம் மட்டும் தலை விரித்தாடுகின்றது .
அன்று தற்காலிகமாய் அமைக்கப்பட்ட கூடாரங்களே .....
இன்றும் எம் நிரந்தர வீடுகள் .

எம் வீட்டு அடுப்பு எரிகிறதோ இல்லையோ ...
அடிக்கும் வெயிலில் எரிகிறது எம் வீட்டு ஓலை கூரை
குடிநீர் இன்றி நாவரண்டு போனாலும் கொட்டும் மழை இரவில்
கரைகின்றது எம் வீட்டு மண் சுவர்கள் .

மூச்சுத்திணறும் விளக்கும் ,
ஓலை ஈர்க்குகளுக்கு இடையில்
 தெரியும் நிலவொளியும் தான் எம் வீட்டு மின்குமிழ்கள்.

முகாம்களின் முகடுகளை அன்னார்ந்து பார்த்த படி
         '' தொலைத்த நம் வாழ்க்கை என்றுதான் கிடைக்குமோ ? "
என்ற பெருமூச்சுடன் .......
                                                                         "இவள்".
 
டிஸ்கி: இவன் கவிதையெல்லாம் எழுதுவானா?’னு யோசிக்கிரவங்களுக்கு ஒரு முக்கிய விடயம் “இது நான் எழுதிய கவிதையல்ல.. என் மனைவி எழுதியது, அனுப்பியது என் பெயரில், பரிசை பெற்றது என் தம்பி.


பரிசு பெறும் என் தம்பி


19 comments:

  1. கவிதை கொஞ்சம் கணக்க வைக்கிறது மனதை!!!!!

    ReplyDelete
  2. // இலங்கை வட மாகாண முஸ்லீம்கள் புலிகளால்
    இனச்சுத்தீகரிப்பு செய்யப்பட்டு 21 வருட பூர்த்தியை //

    இது என்ன..? விளக்கம் ப்ளீஸ்..!

    ReplyDelete
  3. போரின் கொடூரத்தை.,வலியை., இழப்பை
    அழகாக சொல்லி இருக்கிறது கவிதை.!
    உங்கள் மனைவிக்கு வாழ்த்துக்கள்.!

    இந்த நிலையை கற்பனை பண்ணிபார்க்கும்
    போதே மனசு பதறுகிறது..

    ReplyDelete
  4. உண்மையிலேயே முதல்முறை படிச்சப்பவே எனக்குப் புரிஞ்ச கவிதைகளில் இதுவும் ஒன்று...பாராட்டுகள் உங்கள் மனைவிக்கு...

    //தொலைத்த நம் வாழ்க்கை என்றுதான் கிடைக்குமோ ?//
    சீக்கிரம் கிடைக்க இறைவனை வேண்டுவோம்.

    ReplyDelete
  5. ஆறாத வடுக்களாய் நெஞ்சைப் புண்பட வைத்த அந்த மரணயாத்திரை
    நினைக்கையில் சுக்கு நூறாகும் என் இதயம்.

    இதை படிக்கும்போதே இதயம் சுக்கு நூறாகித்தான் போகிறது சகோதரா.
    புண்ணகையையே பதிவிட்டநீங்கள் இன்று கண்ணீரையும் பதிவிட்டு ...

    ReplyDelete
  6. எழுதியர் எங்கோ இருக்க..
    வேறொருவருக்கு பரிசா..
    என்ன நியாயம் இது ?
    -- இவன் நவீன நக்கீரன்

    ReplyDelete
  7. superb.........nanba

    ReplyDelete
  8. ஸலாம் சகோ.ஃபாயிக்,

    ஒவ்வொரு வார்த்தையும்... வலி அனுபவித்த உள்ளத்தின் என்றும் ஆறாத ரணம்..! காரணம் : காயத்துக்கு யாரும் மருந்திடவில்லை.

    இப்பகிர்வுக்கு... என்னால் சொல்ல முடிந்த ஒன்றே ஒன்று... மறுமை நன்மைக்காக சபூர் செய்யுங்க சகோ.

    ReplyDelete
  9. இன்னொரு முக்கிய விஷயம் நான் கேட்கணும்...

    பேசும் மொழியாக மட்டுமின்றி.... தமிழை இனமாகவும் மதமாகவும் நினைத்துக்கொண்ட சில இனவெறிபிடித்தோர் உங்கள் (இலங்கை முஸ்லிம்கள்) மீது குற்றம் சொல்கிறார்கள்...

    அதாவது...

    தமிழை தாய்மொழியாக கொண்டு தமிழை சிறப்பாக நீங்கள் பேசினாலும் கவிதையாகவே எழுதினாலும்... விரட்டியடிக்கப்படுவதற்கு முன்பு ஈழத்தில் வாழ்ந்து வந்திருந்தாலும்...

    உங்களை (இலங்கை முஸ்லிம்கள்) நீங்கள் 'தமிழர்கள்' என்று சொல்லிக்கொள்வது கிடையாதாம்..!

    அதனால், "தமிழர்" என்றால் அதில் நீங்கள் வரமாட்டீர்களாம். இந்துக்களும் கிருதுவர்களும் மட்டுமே தமிழர்களாம். விக்கிபீடியாவிலும் கூட இப்படித்தான் எழுதி வைத்துள்ளார்கள்.(http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamil_people)

    இதற்கு உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்..!

    ReplyDelete
  10. @வெளங்காதவன் said...

    ///கவிதை கொஞ்சம் கணக்க வைக்கிறது மனதை!!!!!//

    உண்மைதான் நன்பா....

    ReplyDelete
  11. அப்புறம்...
    //////////////////////////////////////////////
    @வெங்கட் said...

    // இலங்கை வட மாகாண முஸ்லீம்கள் புலிகளால்
    இனச்சுத்தீகரிப்பு செய்யப்பட்டு 21 வருட பூர்த்தியை //

    இது என்ன..? விளக்கம் ப்ளீஸ்..!
    24 December 2011 18:49

    ////////////////////////////////////////////////

    ---என்னது..?
    இது பற்றி தங்களுக்கு ஏதும் தெரியாதா..?
    மறைத்த ஊடகங்களின் வெற்றியா இது..!?!

    ReplyDelete
  12. @ வெங்கட் said...

    //// இலங்கை வட மாகாண முஸ்லீம்கள் புலிகளால்
    இனச்சுத்தீகரிப்பு செய்யப்பட்டு 21 வருட பூர்த்தியை //

    இது என்ன..? விளக்கம் ப்ளீஸ்..!//

    இது சம்பவம் இல்லை.. சரித்திரம் சார்.. ஒரு காமெண்டில் சொல்வது கடினம்..

    ReplyDelete
  13. @ வெங்கட் said...

    ////போரின் கொடூரத்தை.,வலியை., இழப்பை
    அழகாக சொல்லி இருக்கிறது கவிதை.!
    உங்கள் மனைவிக்கு வாழ்த்துக்கள்.!///
    நன்றி

    ///இந்த நிலையை கற்பனை பண்ணிபார்க்கும்
    போதே மனசு பதறுகிறது..///

    நான் இதில் பாதிக்கப் பட்டவன் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்திருக்கிறேன்..

    ReplyDelete
  14. @ வெங்கட்
    முடிந்தால் இந்த லின்க்’களை படித்துப் பார்க்கவும்...

    1. http://yarlmuslim.blogspot.com/2011/10/blog-post_4912.html

    2. http://yarlmuslim.blogspot.com/2011/10/2_27.html

    3. http://yarlmuslim.blogspot.com/2011/10/3_28.html

    4. http://yarlmuslim.blogspot.com/2011/10/4_29.html

    5. http://yarlmuslim.blogspot.com/2011/10/6.html

    ReplyDelete
  15. /////டிஸ்கி: இவன் கவிதையெல்லாம் எழுதுவானா?’னு யோசிக்கிரவங்களுக்கு ஒரு முக்கிய விடயம் “இது நான் எழுதிய கவிதையல்ல.. என் மனைவி எழுதியது, அனுப்பியது என் பெயரில், பரிசை பெற்றது என் தம்பி.////

    இதுதான் குடும்ப கவிதை என்பதோ.
    வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete
  16. நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...www.rishvan.com

    ReplyDelete
  17. உங்கள் பதிவுகள் அருமை.....இனியும் இது தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்......
    அன்பு நண்பர்களே இஸ்லாத்திற்கு எதிரான பதிவுகளுக்கு பதில்தேட tvpmuslim.blogspot.com பாருங்கள்.அந்த தளத்தில் இணையுங்கள்....உங்கள் கருத்துகளை பதியுங்கள்....
    புதிய பதிவுகள்: நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 1), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி-சூடான விவாதம்

    ReplyDelete