Tuesday 30 November 2010

கல் நெஞ்சக்காரனின் காதல்


உன்னை பார்த்தால் 
கல்லுக்கும் காதல் வரும் 
இந்த கல் நெஞ்சக் காரனுக்கு 
வந்ததில் என்ன ஆச்சரியம்.. 




Sunday 28 November 2010

புகைப்பட துறையின் மைல் கற்கள்

எப்பவுமே மொக்கயாவே எழுதுறோமே(இப்பவாவது புரிஞ்சுதே) .... நாமும் ஒரு சீரியஸ் பதிவு எழுதலாமேன்னு ரொம்ப நாள் யோசிச்சிகிட்டே இருந்தேன் (அப்படியே இருக்க வேண்டியதுதானே). அதனால்தான் இந்த திடீர் சீரியஸ் பதிவு... 
புகப்படத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய "புகைப்படச் சுருளை" கண்டுபிடித்த Eastman's Kodak (இடது) மற்றும் தாமஸ் அல்வா எடிசன் (வலது) 

உலகில் புகைப்படத்துறை அறிமுகமாகி 150 வருடங்கள் தாண்டிவிட்டது. எத்தனையோ சிறந்த புகைப்படங்கள் பிடிக்கப் பட்டிருந்தாலும், எத்தனையோ சாதனைகள் படைக்கப்பட்டிருந்தாலும் இத்துறையில் மைல் கல்லாக இருக்கும் நான்கு சிறந்த புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். 


(நம்மாளுங்க சிந்திக்கிற & செயல் படுற ஸ்டைலே  தனிதான்ப்பா...)


ஆறுதல் பரிசு...
 

ஆஹா இதுதாண்டா ஸ்டைல் ...








மூன்றாம்  பரிசு 

என்னவொரு பொருத்தம் என்னவொரு expression ... ஷப்பா..







இரண்டாம்  பரிசு 


முடியல.... room போட்டு யோசிப்பாங்களோ!





முதலாம் பரிசு பெற்ற உலகின் மிகச் சிறந்த போட்டோ 


*******


*******


*******


*******

*******


*******


*******
என்ன கொடும சார் இது....




என்னது சீரியஸ் பதிவா? இன்னுமாய்யா இந்த உலகம் நம்மள நம்பிகிட்டு இருக்கு... ஐயோ!  ஐயோ! 

Wednesday 24 November 2010

வெளிநாட்டு வேலை




"உழைக்க வேண்டிய 
வயசு இதுதானடா"
என்று விமானம்
ஏறி வந்தோம்,
வாழ வேண்டிய வயதும் 
இதுதான் என்பதை 
மறந்து.....


Saturday 20 November 2010

நான்கு வேதங்களிலும் பெற்றுக்கொண்ட 12 விடயங்கள்..

கஹ்புல் அஹ்பார் (ரலி) அவர்கள் 4 வேதங்களையும் ஆராய்ந்து பெற்றுக்கொண்ட 12 விடயங்கள்..


1. ஆதமுடைய மகனே(மனிதர்களே)  சகல வஸ்துக்களும் உனக்காக படைத்துள்ளேன், உன்னை எனக்காக படைத்துள்ளேன்.

2. நான் உன்னை நேசிக்கிறேன், நீ என்னை நேசி.

3. என் ஆட்சி இருக்கும் வரை என் அல்லாத யாரையும் பயப்படாதே.

4. மேல் வானத்திலிருந்து கீழ் பூமி வரை சகல வஸ்துக்களும் என்னை தேடுகிறது, நானோ உன்னை தேடுகிறேன். ஆனால் நீயோ என்னை விட்டு விரண்டோடுகிறாய்.

5. உன்னை ஒரு இந்திரிய துளியால் படைத்தேன், உனது ரிஸ்கின்(உணவு மற்றும் தேவைகள்) ஏற்பாட்டயும் நானே செய்துள்ளேன்.

6. எனது கஸானா(பொக்கிஷம்) முடிவடைவதில்லை, எனது கஸானா(பொக்கிஷம்) இறுக்கும் வரை உனது ரிஸ்க்(உணவு மற்றும் தேவைகள்)  தவறிப்போகும் என்று பயப்படாதே.

7. என்னிடம் நாளைக்குறிய ரிஸ்க்கை(உணவு மற்றும் தேவைகள்) இன்றே கேட்காதே, ஏனெனில் நாளைய அமலை(நற்செயல்கள்) இன்றே உன்னிடம் நான் கேட்பதில்லை.

8. நீ எனது விதியை பொருந்திக்கொண்டால் உனது மனதுக்கு நான் நிம்மதியை அளிப்பேன், எனது விதியை பொருந்திக்கொள்ளாவிட்டால் உலகை உன் மீது ஏவி விடுவேன், அது மலையில் காட்டு விலங்குகள் திரிவதை போல் திரிவாய், எனினும் உனக்கு நான் விதித்ததை தவிர வேறெதையும் பெற்றுக்கொள்ள மாட்டாய்.

9. உனக்காக என் மீது கோபப்படாதே மாறாக எனக்காக உன் மீது கோபப்படு.

10. என் அல்லாதவர்களை நெருங்க முயலாதே, நான் உனக்கு அருகில் இருக்கிறேன். நீ எப்போது என்னை தேடினாலும் என்னை அடைந்துகொள்வாய்.

11. நீ சிராத்தல் முஸ்தகீம் பாலத்தை தாண்டி உனது இரு கால்களையும் சுவர்க்கத்தில் வைக்கும் வரை எனது வேதனையை விட்டும் அச்சம் தீர்ந்து விடாதே.

12. எனது விதியை பொருந்திக்கொள்ளாமலும், எனது வேதனையை சகித்துக்கொள்ளாமலும் எனது உபகாரங்களுக்கு நன்றி செலுத்தாமலும் இருப்பவன் எனது வானத்தின் கீழ் இருந்து வெளியாகி வேரொறு இறைவனை தேடிக்கொள்ளட்டும்.

குறிப்பு:-
மேற்கூறப்பட்ட இந்த ஸஹாபி(முஹம்மது நபியின் தோழர்)  இந்த 12 விடயங்களையும் ஒரு நாளைக்கு 3 தடவை வாசித்து விட்டு அவருடைய அலுவல்களுக்கு செல்வார்.